இந்த நிமிடம் வரைக்கும் பயணித்த, வாசித்துச் சென்ற, இணைந்த அத்தனை இதயங்களுக்கும் நன்றி. தமிழனின் வாழ்க்கையான " மூவாயிரம் ஆண்டு பெருமை " என்பதன் முதல் பாகம் இத்துடன் முடிவடைகின்றது.
நண்பர் சொன்னது போது " மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் வளர்ந்ததாக சொல்லப்படும் இன்றைய காலகட்டத்தில் மனிதம் இல்லை" .
இது குறித்து எழுதுவது, பேசுவது, பின் ஊட்டம் இடுவதற்கு மனமில்லை. அதனால் படித்துக்கொண்டு மட்டும் வருகின்றேன்.
உண்மை.
ஏற்றுக்கொள்ள வேண்டிய வார்த்தைகள் தான். மறுப்பதற்கு இல்லை. அன்றாட நிகழ்ச்சிகளை கருத்தாய் மாற்றி படைக்கும் போது எழுதும் பயிற்சியை நமக்குத் தருகிறது. வளர்க்கிறது. சற்று மேம்பட்ட சிந்தனைகளை உலகுக்கு கூறும் போது ஓகோ இப்படியெல்லாம் சிந்திக்க முடியுமா? என்பதை உணர்த்துகிறது.
ஆனால் அவலத்தை படைக்கும் போது மட்டும் தான் அத்தனை " மனிதர்களின் தராதரமும் தகுதியும்" நமக்கு புரிய வைக்கின்றது. வரலாற்று காவியங்களை , படிக்காத எந்த மனிதருக்குள்ளும் தான் எப்படி வாழ்ந்து கொண்டுருக்கிறோம்? நம்முடைய வழித்தோன்றல்களை எப்படி வாழ வைக்க வேண்டும்? என்பதை உணர்வதற்கு வாய்ப்புகள் குறைவு.
அவரவருக்கு தெரிந்த வரையில், அவரவர் மனசாட்சி தான் கோயில் தெய்வம் எல்லாமே.
"நான் என்ன செய்ய முடியும்? நம்மால் என்ன பண்ண முடியும்? " இரண்டு கேள்விகளில் அத்தனை மனிதமும் ஒவ்வொரு தலைமுறையிலும் மண்ணில் புதைந்தே போய்விடுகின்றது.
குறிப்பிட்டுக்கொண்டு வரும் ஓட்டு என்பது பிட்டு துணி கூட கிடைக்க வழி இல்லாமல் வலியுடன் வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் முந்தைய, இன்றைய, எதிர்கால சிந்தனைகளை யோசிக்க நம்மை முன் தள்ளினாலும் சரி. எழுத்து, படங்கள், வாசிப்பு, உள்வாங்கல் எதுவும் சாதிக்காது. அவர்களின் உண்மையான பழைய வாழ்க்கை சீக்கிரம் தந்து விடாது,
சாதி மதம்,பொறாமை, உணர்ச்சிகள், போல நிறைய சாத்தான்கள் இன்றுவரையிலும் நம்மிடம் உண்டு. வளர்ந்தவர்கள் கூட இன்றைய கால கட்டத்தில் மற்றவர்கள் வளராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள்.
ஆனால் அத்தனையிலும் மீறி வாழ்க்கை குறித்து "ஒரு நம்பிக்கை வெளிச்சம் எனக்குள் தோன்றுகிறது" என்ற வார்த்தைகள் எந்த எழுத்துக்கள் தருகிறதோ அது இந்த இல்லம் மட்டுமல்ல? அத்தனை எழுத்துக்களும் நீக்கமற நம் அத்தனை உள்ளத்தில் ஒளிவிளக்காய் இருக்கும்.
உணர்ந்து கொண்ட விசயங்கள் என்றாவது ஒரு நாள் பாதை காட்டும். நகர்த்த நாம் உதவியாய் இருக்கும் போதுதான் சேர வேண்டியவர்களுக்கு நாம் காட்டும் மனிதாபிமானம் அல்லது நம்பிக்கையை இழந்து விடாதே? இதற்காக மட்டுமே " உலகத்தீரே இதையும் கேளீர்".
கடந்த பல இடுகையில் பகிர்ந்து கொள்ளப்படாத விசயங்கள் பல.
தமிழன் வரலாற்றில் முன் எடுத்துச் சென்ற அத்தனை மூதாதையர்களும் எந்த பிரதிபலன்களையும் எதிர்பார்க்கவே இல்லை. முக்கியமானவர்கள் அத்தனை பேரும் வறுமையும், வளமையும் இல்லாத வாழ்க்கையில் உழன்று இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் சிந்தனையில் இல்லாத சுருக்கம் மட்டுமே உங்களையும் என்னையும் இன்று சேர்த்து இருக்கிறது. தமிழ் இன்றும் கூட வாழ்ந்து கொண்டுருக்கிறது.
நம்பிக்கை தான் வாழ்க்கை. நம்பியவர்களால் மட்டும் தான் நாட்டில் இத்தனை வளர்ச்சியும் வீழ்ச்சியும் ஒருங்கே வந்துள்ளது.
இதுவரையிலும் "முன் தோன்றா மூத்த குடி" என்ற பெருமையாய் "நாம்" மட்டும் வெறும் வார்த்தைகளால் தோரணம் கட்டி வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழனத்தின் சங்க காலம் முதல் இன்றைய சங்கட காலம் வரைக்கும் பார்த்தாகி விட்டது.
மன்னர்களின் வீரம் என்ற ஆளுமை ஆச்சரியம் தந்தது. அவர்களின் ஒற்றுமையின்மை என்பது இன்றும் வாழ்ந்து கொண்டுருக்கும் தமிழனத்தின் சாட்சியாய் இருந்து தொலைக்கின்றது. தமிழ் முதல் இன்றைய டமில் வரைக்கும் படித்து பார்த்து வந்தாலும் இன்று வரையிலும் ஏதோ ஒரு வகையில் உங்களையும் என்னையும் இணைத்துக்கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் மொத்தமாய் எத்தனை சிரிப்பு, சிந்திக்ககூடிய ஆற்றாமை சமாச்சாரங்கள் இருந்து தொலைத்து போதிலும் காலம் காலமாக நம் தமிழனத்தை தனி மனித (தமிழனின்) ஆளுமைத்திறன் தான் இன்று வரையிலும் இந்த தமிழினத்தை சிறிதாவது நகர்த்திக்கொண்டு வந்து கொண்டே இருக்கிறது.
மன்னர்கள். அவர்களின் வாழ்க்கை நமக்கு வெறும் சரித்திர சான்றுகள். ஆனால் அத்தனையும் நீங்கள் இன்று எந்த நூலகத்தில் போய் தேடினாலும் சரி, ஓலைச்சுவடி சான்றுகள் கிடைக்குமா என்று அலைந்தாலும் சரி உங்கள் கைக்கு இன்றைய நிலைமையில் இவை எதுவுமே கிடைக்காது.
மின் ஆளுமை நிறைந்த சொடுக்கினால் நம்மை வந்து சேரும் சென்னை கட்டுமான நூலகத்தில் கவனமாய் இருப்பவர்கள் கூட, வரலாற்று ஆவணத்தில் அத்தனை அக்கறை இருப்பதாக தெரியவில்லை. உ.வெ.சா
பச்சத்தண்ணி கூட குடிக்காமல், அலைந்து திரிந்து உ.வே. சாமிநாதய்யர் சேகரித்த பல ஓலைச்சுவடிகள் இன்று வரையிலும் சேகரிக்கப்படாமல், சரியான முறையில் பராமரிக்கப்படாமல் செல்லரித்துக் கொண்டுருக்கிறது. இருப்பதை விட்டு பறப்பதற்கு நம்மை ஆள்பவர்கள் மொழியை செம்மு செம்முன்னு செம்மிக்கொண்டு இருக்கிறார்கள்.
புதிய வளர்கல்வி திட்டத்தில் கூட முக்கியத்துவம் ஆங்கிலத்துக்கு தான். காரணம் ஆங்கிலம் என்பது கவுரத சமாச்சாரம்.
தமிழ் என்பது தமிழன் பொருளாதார வாழ்க்கையை கவுக்கும் சமாச்சாரம்.
எப்போதும் போல தமிழனுக்கே உரித்தான தனி மனித ஆளுமைத்திறனின், ஒவ்வொரு தமிழனும் அவனுக்கே உண்டான கடமைகள், வாய்ப்புகள், விருப்பங்கள் என்று தன்னால் முடிந்த வரைக்கும் எவர் துணையுமின்று முன்னெடுத்து சென்று கொண்டு இருக்கின்றான்.
தலைவர்கள் என்பவர்கள் வங்கி கணக்கில் கவனமாக இருப்பவர்கள். தமிழன் என்பவன் சொங்கிக் கொண்டு சுகமாய் வாழ விரும்புவன். முடியாத போது முன்னேற்றத்தில் கவனம் வைத்து ஜெயித்தும் விடுபவன்.
நாம் வாழ்ந்து கொண்டுருக்கும் தமிழ்நாடு உருவான கதையும், அதன் பின்னால் இருந்த ஒற்றுமை இன்மையையும் ஒருங்கே இங்கு பார்ப்பது அவஸ்யம். காரணம் அக்கறையுடன் நீங்கள் அக்கரைக்கு பயணிக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.
சுதந்திரம் வாங்கிய பிறகு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, அப்போது சென்னையில் பெரும்பான்மையாக தெலுங்கு மக்கள் வாழாத போதும் கூட சென்னை என்பது ஆந்திராவுடன் சேர வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியோடு ஒரே அணியில் ஒற்றுமையாக இருந்த தலைவர்களின் வரிசைப்பட்டியல் இது.
அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் பட்டாபி சீதாராமையா, டி.பிரகாசம், அல்லாடி கிருஷ்ணசாமி, நீலம் சஞ்சிவரெட்டி, டாக்டர் இராதகிருஷ்ணனன், என்.ஜி.ரங்கா, பொப்பிலி அரசர், பனகல் அரசர், விஜயநகர அரசர், பசவ பொன்னையா.
இவர்கள் யார்? இவர்களின் பெருமை என்ன? என்பதும் நமக்குத் தேவையில்லை. காரணம் இவர்கள் அத்தனை பேரும் தான் கேட்டுக்கொண்டுருப்பது சுத்த அநியாயம் என்று தெரிந்த போதிலும் அத்தனை சுருதி சுத்தமாய் ஒரே அணியில் நின்றனர்.
நம்முடைய தலைவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?
கர்மவீரர் காமராஜ், பக்தவச்சலம், கம்யூனிஸ்ட் தலைவர் ராமமூர்த்தி இவர்கள் செய்த காரியங்களும், நீதிக்கட்சியில் இருந்தவர்கள் என அத்தனை பேர்களும் முழுமையாக இங்க விவாதித்தால் அந்த விசயங்கள் இலங்கை வரலாறு என்பதில் இருந்த மாறி தமிழ்நாடு வரலாறு போல் மாறி விடும்.
ஆனால் இன்றைய சிங்காரச் சென்னை, சீர்மிகு சென்னை நம்மிடம் இருப்பதற்கு பல முக்கிய காரணங்களில் பலர் என்ற போதிலும் முதன்மையான காரண தலைவர்கள் இருவர் மட்டும் என்றால் அதில் சந்தேகம் வேண்டாம். ஆமாம்.
ராஜாஜியும். ம.பொ.சிவஞானம் அவர்களும்.
அன்று மட்டும் அணைத்து தலைவர்களும் ஒன்றாக இணைந்து இருந்தால் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்த தமிழர்களைக் கொண்ட பெங்களூர் தமிழகத்துடன் இணைத்து இருக்க வாய்ப்பு அதிகமாக இருந்தது.
கன்னியாகுமரியை தங்களுடன் இணைத்துக்கொள்ள கேரளா அதிகமாக போராடிய போது திரு. நேசமணி அவர்களால் காப்பாற்றப்பட்டது.
நாணயமான நல்ல மனிதர் காமராஜர் எந்த சூழ்நிலையில் அவ்வாறு செயல்பட்டார்? பின்புலம் என்ன என்பதை வேறொரு?.
அது இப்போது தேவையில்லை. ஆனால் தமிழகத்தின் தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகளை கேரளாவிற்கு வழங்கினார்.
இந்த சமயத்தில் தந்தை பெரியார் கூறிய கருத்து மிக முக்கியமானது.
"தேவிகுளம், பீர்மேடு, நெய்யாயிற்றின் கரை, கொச்சி, சித்தூர் ஆகிய பகுதிகள் பற்றி எனக்குக் கவலையில்லை. அவற்றை மலையாள நாட்டுடன் சேர்க்க வேண்டியது தான். சமீபத்தில் சர்தார் பணிக்கர் (மாநில எல்லைக்குழு உறுப்பினர்) சென்னை வந்து இருந்தார். அவரை நான் சந்தித்துப் பேசினேன். தொழிலுக்குத்தான் தமிழர்கள் அங்கு வந்தார்களேயொழிய நிலம் மலையாளிகளைச் சேர்ந்தது தான் என்று பணிக்கர் சொன்னார். நானும் சரி என்று சொல்லி விட்டேன்"
இதே போல் தமிழகத்துக்கு வரவேண்டிய சித்தூரை (முன்னாள் குடியரசுத்தலைவர்) இராதகிருஷ்ணனன், முன்னேற்பாடுகளால் ஆந்திராவிற்குள் போனது. ஆனால் அவரைவிட நம்முடைய தமிழர் முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் வார்த்தைகள் உன்னதமானது.
சித்தூர் மாவட்டம் ஆந்திராவில் சேர்க்கப்பட்டு விட்டது. இனிமேல் தமிழர்கள் அதன் மீது உரிமை கொண்டாடக்கூடாது"
அப்போது இவர் இருந்த பதவி அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர்.
மேலும் ஒற்றமை என்பதை நமக்கு அருகில் இருந்தவர்கள் எவ்வாறு உணர்த்தினார்கள்?
விசால ஆந்திரா, சம்யுக்த கர்நாடகா, ஐக்கிய கேரளா என்று ஒரே அணியில் மாநில வளர்ச்சிக்கு போராடினார்கள். ஆனால் இங்கு இன்று வரையிலும் நீதிக்கட்சியில் தொடங்கி நேற்று வரையிலும் க கட்சி வரைக்கும் ஏராளமான மக்கள் "நலன்" கொண்ட சமூக ஆர்வலர்கள்?
இடையே வந்து ஆட்சியில் அமர்ந்தவர்களால் பக்கத்து மாநிலங்களை விட நல்ல முன்னேற்றம். தொடக்கத்தில் வழிகாட்டியாய் இருந்தோம். இன்று கச்சத்தீவு, முல்லை, தொடங்கி பல விசயங்களில் வலிகாட்டியாய்.
இடையே வந்து ஆட்சியில் அமர்ந்தவர்களால் பக்கத்து மாநிலங்களை விட நல்ல முன்னேற்றம். தொடக்கத்தில் வழிகாட்டியாய் இருந்தோம். இன்று கச்சத்தீவு, முல்லை, தொடங்கி பல விசயங்களில் வலிகாட்டியாய்.
ஒரே காரணம் அன்று முதல் இன்று வரையிலும் பெரும்பான்மையான தமிழன் என்பவன் தலைவன் என்பவனை எத்தனை தூரம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினாலும் "நாம் தான் நம்முடைய வாழ்க்கை" என்பதை உணர்ந்தவன்.
வளர்ச்சி வேகமாக இருக்காது. ஆனால் மொத்தத்தில் விவேகமாக இருக்கும். இரண்டாவது தலைமுறையாக வாழ்ந்து கொண்டுருக்கும் நாற்பது சதவிகிதம் கொண்ட தமிழர்களைக் கொண்ட அதிக அமெரிக்க நிறுவனங்களை முக்கிய சாட்சியாக எடுத்துக்கொள்ளலாம்.
உள்ளே இருந்தால் ரசிகர் மன்றம், கட்சி உறுப்பினராக வாழ வேண்டும். கடல் கடந்து போய் தமிழ் மன்றம் வைத்து தமிழனாக வளர்ந்து கொண்டுருப்பவர்கள்.
கூட்டம் கூட்டினார்கள். குதுகலத்தை தருவதாக உறுதி மொழி கொடுத்தார். அலங்கார மொழியில் அச்சத்தை போக்கினார்கள். தொடர்ந்து போனவன் தொலைந்தும் போனான். கேட்டு திரும்பியவர்கள் மட்டும் திசையெங்கும் பறந்தான்.
அரசியல் பிரச்சனைகள், ஆள்வோரின் இயலாத்தனத்தை பார்த்துக் கொண்டுருப்பது, திரைப்பட மயக்கம், உணர்ச்சி பூர்வ உள்வாங்கல், ஒன்றினைந்து சேர விருப்பமின்னமை என்று மைனஸ் பல இருந்தாலும் எந்த ப்ளஸ் ப்ளஸ் குடிக்காமலே எப்போதும் நல்ல அறிவுடையவன் தமிழன்.
எல்லா இடங்களிலும். ஆமாம். ஓபாமா ஊடகத் தொடர்பாளர் (தேவகோட்டை) வரைக்கும்.
ஆனால் இறுதியில் ஜெயிப்பவன்? தன்னால் தன் உழைப்பால் மட்டுமே உருவான வாழ்க்கையை தகுதியில்லாத தலைவனை தேர்ந்தெடுத்து தன் தலையிலேயே அள்ளி போட்டுக்கொள்பனும் தமிழன்.
படகில் பயணம் செய்வதற்கு ஒரே ஒருவருக்கு மட்டும் கடிதம் மூலம் பயணத்தை தெரிவித்து பயணிப்பபோம். காரணம் அவர் தான் தமிழர்களுக்கு கடித கலாச்சாரத்தையே உருவாக்கியவர். மற்ற நபர்களுக்கு இடையிடையே நலம் விசாரித்துக்கொள்ளலாம்.
உங்களுடைய ஒத்துழைப்பு என்பது உண்மையான இலங்கை வரலாற்றை படைக்க உதவட்டும். இன்று வரையிலும் புரியாத இதன் உள்ளே நடந்து கொண்டுருக்கும் நிகழ்வுகள் இனிமேலாவது உணர்ச்சியை குறைத்து,உண்மையான உணர்வுகளை உருவாக்கட்டும்.
வாழ்ந்து வந்த வாழ்க்கையில் அவரவர் வாழ்விடங்கள் பொறுத்து குளம், ஏரி, கண்மாய், ஆறு, கடல் என்று பார்த்து வாழ்ந்து வந்தாலும் எந்த ஜீவ நதியும் உங்களை கேட்டு ஓடவும் இல்லை. அதே போல் நிற்கவும் இல்லை. அது போலத்தான் இந்த தமிழும், தமிழன் வாழ்வும். வெளியில் இருந்து பார்த்தவர்கள், உள்ளே கால் மட்டும் நனைத்தவர்கள், முடிந்த வரை நீச்சல் அடித்தப் பார்த்தவர்கள், முடியாமல் மூழ்கியும் போனவர்கள் என்ற போதிலும் வற்றாத ஜீவநதியாக அதன் பாதையில் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது.
வாழ்ந்து வந்த வாழ்க்கையில் அவரவர் வாழ்விடங்கள் பொறுத்து குளம், ஏரி, கண்மாய், ஆறு, கடல் என்று பார்த்து வாழ்ந்து வந்தாலும் எந்த ஜீவ நதியும் உங்களை கேட்டு ஓடவும் இல்லை. அதே போல் நிற்கவும் இல்லை. அது போலத்தான் இந்த தமிழும், தமிழன் வாழ்வும். வெளியில் இருந்து பார்த்தவர்கள், உள்ளே கால் மட்டும் நனைத்தவர்கள், முடிந்த வரை நீச்சல் அடித்தப் பார்த்தவர்கள், முடியாமல் மூழ்கியும் போனவர்கள் என்ற போதிலும் வற்றாத ஜீவநதியாக அதன் பாதையில் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது.
காதும் கண்களையும் திறந்து வைத்துக்கொண்டால் உங்கள் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இதயத்தை எப்போதும் திறந்து வைத்து இருந்தால் மொத்த மனித வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.
முயற்சித்தவர்கள் சொல்லியுள்ளார்கள். முடியுமா? என்று இனிமேலாவது முயற்சித்து பார்க்கலாமே?
இந்த தலைமுறைக்கு பயன் இல்லை எனறாலும் வரும் தலைமுறையாவது டமிலான இல்லாமல் தமிழனாக வாழ வழிசெய்யட்டும்.
17 comments:
உங்களின் ஒத்துழைப்பும் உள்வாங்கிய சிந்தனைகளும் மேலே உள்ள கருவிப்பட்டையில் இரண்டு விரல்களில் ஒன்றை தொட்டு தொடரட்டும்.
நமக்கு இது எழுத்து அல்லது படைப்பு.
வலியுடன் வாழ்பவர்களுக்கு ஒரு நம்பிக்கை வெளிச்சத்தை கொடுக்கும் ஒரு மருந்தாக கசியும் மௌனம்.
/உள்ளே இருந்தால் ரசிகர் மன்றம், கட்சி உறுப்பினராக வாழ வேண்டும். கடல் கடந்து போய் தமிழ் மன்றம் வைத்து தமிழனாக வளர்ந்து கொண்டுருப்பவர்கள்.
கூட்டம் கூட்டினார்கள். குதுகலத்தை தருவதாக உறுதி மொழி கொடுத்தார். அலங்கார மொழியில் அச்சத்தை போக்கினார்கள். தொடர்ந்து போனவன் தொலைந்தும் போனான். கேட்டு திரும்பியவர்கள் மட்டும் திசையெங்கும் பறந்தான்./
சரியாச் சொன்னீங்க தேவிஜி.
/இதயத்தை எப்போதும் திறந்து வைத்து இருந்தால் மொத்த மனித வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.
முயற்சித்தவர்கள் சொல்லியுள்ளார்கள். முடியுமா? என்று இனிமேலாவது முயற்சித்து பார்க்கலாமே?/
நல்ல கருத்து
ஆகா, அருமை ஜோதிஜி,
//தலைவர்கள் என்பவர்கள் வங்கி கணக்கில் கவனமாக இருப்பவர்கள். தமிழன் என்பவன் சொங்கிக் கொண்டு சுகமாய் வாழ விரும்புவன். முடியாத போது முன்னேற்றத்தில் கவனம் வைத்து ஜெயித்தும் விடுபவன்.//
ரொம்ப நல்லா இருந்தது விவரித்த விதம்.
இந்த தலைமுறைக்கு பயன் இல்லை எனறாலும் வரும் தலைமுறையாவது டமிலான இல்லாமல் தமிழனாக வாழ வழிசெய்யட்டும்//
பன்ச் சூப்பர்.
ஓட்டுக்கள் போட்டாச்சு
தினம் ஒரு பதிவரின் பெயரில் இடுகையிட்டு அவர்கட்கு மறைமுகமாக கவுரவிக்கும் உங்க மனசு சூப்பர். எங்க ஐயாவின் பதிவின் பெயரா இன்று? சூப்பர்
சீக்கிரமே தமிழ்மணம் நட்சத்திரம் ஆக வாழ்த்துக்கள்
நன்றி வானம்பாடிகள். நீங்கள் தேவிஜி என்று சொன்னாலும் ஜோதிஜி என்று கூறினாலும் இரண்டுமே பொருத்தமாகத்தான் இருக்கிறது.
நன்றி கார்த்திகேயன். விசாலமான மனம். விளக்கமான தேடல். வெகுளியான எதிர்பார்ப்பு.
ஆதங்கமும்,எதிர்பார்புமாய் உங்கள் எழுத்து பய்ணிக்கிறது.எவ்வளவு தகவல்கள்.நன்றி ஜோதிஜி.
ஆதங்கத்தில் தங்கத்தை காண விழையும் முயற்சி இது, நன்றி ஜெயபேரிகை விஜி. மிக நல்ல கவிதைகளுக்கு நன்றி.
//விசால ஆந்திரா, சம்யுக்த கர்நாடகா, ஐக்கிய கேரளா என்று ஒரே அணியில் மாநில வளர்ச்சிக்கு போராடினார்கள். ஆனால் இங்கு இன்று வரையிலும் நீதிக்கட்சியில் தொடங்கி நேற்று வரையிலும் க கட்சி வரைக்கும் ஏராளமான மக்கள் "நலன்" கொண்ட சமூக ஆர்வலர்கள்?
//
:)
ஒரு திரைப்பட நடிகர் சங்கத்தையே 'தமிழ்நாடு நடிகர் சங்கம்' என்று மாற்றத் திணறிக் கொண்டு இன்று வரை தென்னிந்திய நடிகர்ர் சங்கம் என்று போட்டு வருகிறார்கள். தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்ற தெலுங்கு பேசும் அல்லது தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட 'தமிழ்' நடிகர்கள் எதிர்ப்பாம்.
நாம என்னதான் நான்கு மாநிலத்தையும் சேர்த்து 'திராவிட' பேசினாலும் மற்ற மூன்று மாநிலத்தினர் அதை காதில் போட்டுக் கொண்டது போல் தெரியவில்லை. கேரள மலையாளிகள் தமிழக நகரம் தோறும் தேனீர் கடைகள் நடத்துகிறர்கள், நம்ம தமிழ்நாட்டு ஆட்கள் கேரளாவில் பல இடங்களில் தள்ளு வண்டியில் வடை சுட்டு விற்கிறார்கள். அதுதான் அவர்கள் பிழைப்பதற்கும் நம்ம மக்கள் பிழைப்பதற்கும் உள்ள வேறுபாடு. நம்ம ஆட்கள் கூலி தொழிலாளியாக வெளிமாநிலங்களுக்கு செல்லும் நிலையில் பல்வெறு மாநிலத்தினர் தமிழகத்தில் கடை திறந்து வைத்து தொழிலே செய்கிறார்கள். என்னத்த சொல்வது ஜோதிஜி :(
இந்த தலைமுறைக்கு பயன் இல்லை எனறாலும் வரும் தலைமுறையாவது டமிலான இல்லாமல் தமிழனாக வாழ வழிசெய்யட்டும்.//
உணர்வு பூர்வமான,அறிவு பூர்வமான உங்கள் கட்டுரைகளுக்கு இன்றுதான் இங்கே பின்னூட்டமிட முடிந்தது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி,ஜோதிஜி.
உங்கள் தமிழுணர்வுகளுக்கு இறையருள் நல்வழி காட்டட்டும்.
பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்,ஜோதிஜி.
கோவி கண்ணன் அவர்களுக்கு, மற்ற மாநிலங்களில் அன்று முதல் இன்று வரை முன்னேற்றம் என்ற வார்த்தைகளில் பல சித்து விளையாட்டுகள் விளையாடினார்களே தவிர இங்கு போல் சின்னத்தனமான வேலைகள் போல் பின்னோக்கி செய்யவில்லை. அதையும் மீறி இன்று பெற்றுள்ள வளர்ச்சிகள் வியப்புக்குரியது என்றாலும் முதல் மதிப்பெண் வாங்க வேண்டிய மாணவன் பரவாயில்லாப்பா என்று ஆசிரியர் சொல்வது போல.
மாறும். மாற்ற வேண்டும். அப்போது தான் கசங்காத சட்டை போட்டு சேவகம் செய்பவர்களின் அத்தனை அழுக்கும் வெளியே வரும்.
நன்றி ஐயா. அருள் பெற்ற தேவியர்கள் என்னுடன் இருக்கும் போது உங்கள் ஆசியும் சேர்ந்து விடுவது பெருமையாய் இருக்கிறது.
அருமையான பதிவு, அர்த்தமுள்ள , ஆழமான வார்த்தைகள்., கசக்கும் உண்மைகள் , நீங்கள் எனது நண்பர் என சொல்வதில் பெருமை கொள்கிறேன்
வணக்கம் ஜோதிஜி
ஆற்றாமையும், ஏக்கமும் சேர்ந்து ஏதும் எழுத முடிவில்லை.
படித்து தமக்குள் எது சரி என யோசிப்பது செயலாற்றுவதே நாம் சார்ந்திருக்கும் இந்த இனத்தை அர்தமுடையதாக்கும்
இராஜராஜன்
உங்கள் இருவருக்கும் நன்றி சொல்வதோடு எனது இடுகையில் முதல் முதலாக விமர்சனம் ஏதும் இல்லாமல் தவறான வழிகாட்டி என்று விரல் சொடிக்கி சென்று விட்டு சென்றுள்ள அந்த தமிழனுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
voted...
நன்றி ரவி. சூரியன் இன்னமும் இங்கு அஸ்தமிக்கவில்லை. உணர்வு இருக்கிறது. ஆனால் அங்கும் இங்கும் சிதறி.
Post a Comment