ஐரோப்பாவிலிருந்து பேசும் தமிழ் நண்பர் இவரின் அதி தீவிர ரசிகர் & பக்தர். பேசத் தொடங்கும் போது இவர் அப்போது போட்ட வீடியோ விமர்சனத்தைப் பற்றிச் சொல்லி விட்டு அதன் பிறகே மற்றதைப் பேசத் தொடங்குவார். அவர் தவறாமல் ஒன்றைச் சொல்வார். பாரம்பரிய கை வந்த கலையான 'பெண்கள் குற்றச்சாட்டு' 'பண மோசடி', 'மிரட்டிப் பார்த்தல்' "அவதூறுகள் மூலம் மடைமாற்றுதல்" என்று இன்னமும் கையில் எடுக்காமல் இருக்கின்றார்களே? உயிரோடு விட்டு வைத்திருப்பார்களா? என்று என்னிடம் கேட்டதுண்டு.
கடைசியில் இவரின் சாதி வரைக்கும் நைஸாக உள்ளே கொண்டு வந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. எறியப்பட்ட பந்து அனைத்தும் சிக்ஸராக மாற இனி என்ன செய்வது? என்று யோசித்து இப்போது அமைதியாகவே இருக்கின்றார்கள். அடுத்த நாலைந்து மாதங்களில் இறுதிக் காட்சிகள் இன்னமும் விறுவிறுப்பாக இருக்கப் போகின்றது என்பது மட்டும் நிச்சயம்.
