Friday, November 03, 2023

தேசிய கட்சி தொண்டரும் மாநில கட்சி அடிமைகளும்

 தேசிய கட்சிகளில் செயல்பட உங்களுக்குத் தனித் திறமை வேண்டும்.  

சாதி, பணம், திறமை என் இந்த மூன்றுக்கும் அப்பாற்பட்ட விசயங்களில் உங்கள் பெயர் டெல்லி வரைக்கும் எட்டியிருக்க வேண்டும். முகங்களின் அறிமுகம் வேண்டும். அறிமுகமான முகங்கள் முக்கியமான முகமாக இருக்க வேண்டும். உங்களுக்கு நிஜமான வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும்.  அப்பன் மகன், தாத்தன் பேரன் என்ற எல்லையைக் கடப்பது கடினம் தான். வாரிசு அரசியல் இல்லாத இடமேது?  இந்தக் கொள்கை தமிழகத்தில் இங்கே வர வேண்டும் என்று நம் திருப்திக்காகக் கடைசி வரைக்கும் செயல்பட்டால் எந்த ஏமாற்றமும் இருக்காது. 




இவற்றை இந்த இடத்தை நாம் இந்தக் கட்சியில் அடைய வேண்டும் என்று கருதிச் செயல்படுவது தனிக்கலை. 

மயக்கும் கருவிழிகளில் தொடங்க வேண்டும்.  மன்னா உனக்குச் சாமரம் வீசச் சம்மதம் என்று காலில் விழும் கலையை கற்று இருக்க வேண்டும். தமிழக அரசியல் என்பது ஒரு மாநகராட்சி சார்ந்த அரசியல் போன்றது. ஆனால் டெல்லி அரசியலில் நடப்பது வேறு.

ஹிந்தி பெல்ட் அரசியல், வடகிழக்கு அரசியல், மாநில வாரியான தொழிலதிபர்கள் சார்ந்த அரசியல் என்று பல அரசியல்கள் உண்டு. இத்துடன் நாடுகள் சார்ந்த சர்வ தேச அரசியல், வணிகம் சார்ந்த நாடுகள் சார்ந்த அரசியல்.  கண்கள் திருகி விடும்.  மோடி தாக்குப் பிடிப்பது ஆச்சரியமல்ல. உடல் ஆரோக்கியத்தையும் சரியாக வைத்துள்ளார் என்பது தான் அவரின் தனிச் சிறப்பு.   மனோகர் பாரிக்கர், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி மூவரும் இறந்ததற்குக் காரணம் அதிகப்படியான வேலைப்பளுவை அவர்கள் உடல் உறுப்புகளால் தாங்க முடியவில்லை.  சிறுநீரகமும், கல்லீரல் கணையமும் கதறத் தொடங்கி விட்டது.  இதை எழுதக் காரணம் இப்போது மோடியின் தனிப்பட்ட ஆரோக்கியப் பழக்க வழக்கம் எப்படியிருக்கும் என்பதனை யூகித்துப் பார்க்கலாம்.  தொடர் பயணங்கள் உருவாக்கும் களைப்பு தீர்வதற்குள் பிசாசு போல அடுத்தடுத்த பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது என்பது சாதாரணமானது அல்ல.

நாம் வட இந்திய அரசியலைக் கவனிப்பதே இல்லை. பல லட்சம் கோடி தொடர்பானது. பயம் தரக்கூடியது. ராகுல் முன்னால் அற்புத வாய்ப்புகள் அணிவகுத்து நின்றது. அவரால் அழுத்தங்களைத் தாங்க முடியவில்லை என்றே நினைத்துக் கொண்டேன். 

மொத்தத்தில் டெல்லி அரசியல் என்பது ஒரு புதைகுழி.  உதறி நடக்கப் பயிற்சி இருந்தால் மட்டுமே அரசியல் வாழ்க்கை நிலைக்கும். உயர்வு என்பது சாத்தியம்.

ஏன் பீட்டர் அல்போன்ஸ் இப்படி மாறினார் என்று ஆச்சரியப்பட வேண்டாம். துரைமுருகன் போலவே பீட்டர் கூச்சப்பட மாட்டார். இன்ப நிதிக்கும் நாங்கள் அடிமையாக வாழ ஆசைப்படுகின்றோம் என்பதனை அவர்களே பொதுவெளியில் பேசிவிட்டார்கள்.  இவர்களைப் போல காங் தலைவர் அழகிரி வெளியே காட்டிக் கொள்வதில்லை. பாஜக வை அதிகப்படியாக எதிர்க்க மாட்டார். பல கேஸ்கள் உள்ளது. அத்தனையும் கேவலமான கேஸ்கள். படிக்காமல் சான்றிதழ் வழங்கிய கல்வித்தந்தை இவர். அடுத்து ஐந்து கட்சிகள் கடந்து வந்த செல்வப் பெருந்தகை கூச்சப்படுவதில்லை.  அதனால் தான் இன்று பீட்டருக்கு அரசு பதவியும் அங்கீகாரமும் அலங்காரமும் கிடைத்துள்ளது.  அழகிரி தான் இதுவரை வந்த காங்கிரஸ் தலைவர்களில் அதிர்ஷ்டசாலி.  கூட்டணி காரணமாக வென்றது அனைத்தும் இவர் கணக்கில் வந்தது. இன்று வரையிலும் இவரை நகர்த்த முடியாமல் ஜோதிமணி என்ற பாப்பாத்தி தடுமாறி நிற்கின்றார்.  செல்வப் பெருந்தகைக்குப் பதவி என்பது பொருட்டல்ல. சேர்த்து வைத்த அனைத்தும் சிந்தாமல் சிதறாமல் அப்படியே இருக்க வேண்டும். வளர்க்க வேண்டும்.  உள்நாடு வெளிநாடு என்று அவர் ஒரு சர்வதேச வர்த்தகர். செல்வமும் உள்ளது. பெருந்தனக்காரராகவும் உள்ளார். 

திபாஜக என்று பாஜக வில் உள்ள பலரையும் நாம் அழைத்தாலும் உண்மையான வலியும் வேதனையும் அவர்களுக்குத் தான் தெரியும்.  நான்கு முறை டெல்லிக்குச் சென்று வர நேர்ந்தால் பருத்த பர்ஸ் காலியாகி விடும். மீண்டும் நிரப்ப என்ன செய்ய வேண்டும்.  அப்படியெனில் அங்காளி பங்காளியாகத் தொழில் முறை நட்புகளை வளர்த்தே ஆக வேண்டும்.  அது தான் இங்கே கடந்த 50 வருடங்களாக நடந்தேறியது.

ஆனால் அருகே உள்ள கேரளா அரசியல் வித்தியாசமானது. கம்யூ கட்சிக்காகப் பணிபுரிகின்றவர்களுக்கு ஒரு வலைபின்னல் அமைப்பு உருவாக்கி அரசு ஊழியராக மாற்றி வாழ்நாள் முழுக்க ஓய்வூதியம் வாங்கும் வண்ணம் தில்லாலங்கடி செய்ததை ஆளுநர் ஆப்படிக்க அந்தக் கில்லாடி கிரிமினல் தனமும் அடிவாங்கி விட்டது.   அவர்கள் இப்போது இனி எதை எப்படித் தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் இங்கே அரசுப் பணத்தில் கட்சி வேலை என்ற திட்டம் இன்று தொடங்கியுள்ளது. இலை மறை காயாக இருந்தது. இன்று அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாகவே உருவாக்கப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன்.  மாநிலக் கட்சிகளில் உங்கள் உழைப்பு வீணாகாது. ஏதோவொரு பலனைத் தரும்.  ஆனால் அது உங்கள் மனசாட்சிக்குப் பதில் அளிக்க வேண்டிய சங்கடமான சூழலை உருவாக்கும்.  என்னால் அது முடியாது. அசிங்கத்தை மிதித்தது போல உணர்வேன். 

உணராதவர்கள் பல காரணங்கள் வைத்துள்ளார்கள். வாழ்த்துவேன். பணம், பதவி, புகழ் மூன்றுக்கும் தேவையான பல குணங்கள் உள்ளது. அதனைக் கல்யாண குணங்கள் என்று சொல்லலாம். நமக்குக் கருமாதி செய்யும் வரை வந்து தொலைக்காது.

கீழே படத்தில் உள்ளவர்கள் இரண்டரை ஆண்டு காலத் தமிழகம் வளமுடன் வாழ உழைத்தவர்கள். தங்கள் அறிவை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வழங்கியவர்கள். வழங்கிக் கொண்டு இருப்பவர்கள்.

இவர்களுக்கு என் வாழ்த்துகள்.

மின் புத்தகம் பெற இணைப்பு சொடுக்க

இது குஷ்பூ சாமியார் ஆன கதை அல்ல: ஜோ கட்டுரைகள் (செப்டம்பர் 2023) (Tamil Nadu Political History

எத்தனையோ பார்த்துவிட்டும் அடை மழையில் நனைந்தாலும் சிலிர்க்காத உடல் அமைப்பைக் கொண்டுள்ள எருமை போலவே வாழப் பழகிய நமக்கும் இது ஆச்சரியமல்ல. அடுத்த 24 மாதங்களில் இன்னும் பல பெசல் ஐட்டங்களை அய்யாமாருங்க காட்டுவார்கள்.

காத்திருப்போம்.

No comments: