Sunday, October 02, 2022

ஜெயமோகன் ஏன் பாம்பு புற்றுக்குள் கையை வைக்கின்றார்?

 கடந்த ஒரு மாதத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசிய பேச்சுகளை ஒன்று விடாமல் தொடர்ந்து முழுமையாக கவனித்த போது ஒன்றைப் புரிந்து கொண்டேன்.  அவர் தமிழக அரசியல் களத்தை 1990 என்பதாகவே கருதிக் கொண்டு இருக்கின்றார் என்றே நினைக்கின்றேன்.  


அதாவது  பிறவி கிரிமினல் கருணா வும் கருவில் ஆணவத்துடன் சேர்ந்து வளர்ந்த ஜெயா வும் செய்த அரசியல் போல நாம் செய்து விடலாம் என்று மனதிற்குள் கற்பனை செய்து வைத்திருப்பார் என்றே நினைக்கின்றேன்.  

இவர்கள் இருவரும் சமூக வலைதளத்தில் அதிக அளவு மிதிபடாமல், கேவலப்படாமல் சென்று சேர்ந்து விட்டார்கள்.  செயல்பட முடியாத ஆரோக்கியம் வேறு   அவர்களுக்கு அதிர்ஷ்டமாக வழங்கி விட்டது. 

அப்படியே இருவரும் சமூக வலைதளத்தில் அசிங்கப்பட்டு இருந்தாலும் இன்று திருமா படும் அசிங்கம் எவரும் கண்டதில்லை என்றே நினைகின்றேன்.

 கருணா மூன்று வருடங்களும் ஜெயா ஆறு வருடங்களும் என அவர்கள் உடம்பே அவர்களுக்கு தண்டனையளித்த நீதிபதியாக இருந்து கடைசியில் சாவைக் கொடுத்தது.

கருணா கடைசிக் காலத்தில் புகழ் போதைக்கு அடிமையான மாதிரி இன்று திருமா தன் போதை பாதையைத் தொடங்கியுள்ளார்.  ஜெயா ஆணவம் தான் என் அடையாளம் என்பது போலவே திருமா தான் சார்ந்துள்ள சாதிக்கார இளைஞர்களின் ஒருவன் கூட எக்காரணம் கொண்டும் நல்ல சிந்தனைகளுடன் முன்னேறி விடக்கூடாது என்பதற்காக 100 ஆண்டு கதைகளைக் காதைகள் போலவே உளறித் தள்ளிக் கொண்டு இருக்கின்றார்.  

நான் சொல்வது பொய் சென்றால் யாராவது ஓர் ஊடகம் தமிழகம் எங்கும் ஆயிரம் பெண்கள் ஆயிரம் ஆண்கள் திருமா உங்களுக்கு என்ன செய்தார் என்று கேட்டு வெளியே கொண்டு வரச் சொன்னால் தெரியும்?

மேலிருந்து கீழ் வரைக்கும் தரகர் தொழில் தான் நம் அடையாளம் என்பதனை ஒரு கட்சி அப்படியே தன் கொள்கையாக வைத்திருக்குமா? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு திருமா தன் வலைப் ன்னலை மிக அழகாக பின்னி பெடல் எடுத்துக் கொண்டு இருக்கின்றார்.  ஜெயமோகன் தகவல் கேட்டால் நான் தரத் தயாராக இருக்கின்றேன். ராஜமாணிக்கம், ராஜகோபால் போன்றவர்கள் என் ஆதங்கத்தை அவரிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்று நம்புகின்றேன்.

வைகோ நடைபயண காட்சி போலவே திருமா தற்போது தன் கட்சியை நடத்திக் கொண்டு இருக்கின்றார்.  உரத்துப் பேசுகின்றார். கோர்வையாக பேசுகின்றார். நெகிழ்ச்சியை உருவாக்குகின்றார். நெஞ்சை விட்டு அகலாது என்று பல உதாரணம் காட்டி கூடியிருப்பவர்களிடம் குரளி வித்தை காட்டுகின்றார்.  கேட்பதற்குச் சுவராசியமாகவே உள்ளது.  அவருக்கென்று கூடிய கூட்டமும், கூட்டி வரப்பட்ட கூட்டமும் சேர்ந்து அவரை மகிழ்ச்சிப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட இளைஞர்களையும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதை நான் பார்த்து வருகின்றேன்.

திருமாவுக்குப் பின்னால் உள்ள அவர் கட்சியில் இருப்பதாக சொல்லப்படுகின்ற ஒவ்வொரு நபரும் ஓராயிரம் கிரிமினல்களுக்கு சமமானவர்கள். என்னால் பெயர் குறிப்பிட்டு அவர்கள் சொத்து விபரங்கள், அவர்கள் செய்த கட்டைப் பஞ்சாயத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் என்று சொல்ல முடியும்.  பிசிஆர் கேஸ் என்பதனை வைத்து அத்தனை பேர்களையும் மிரட்டி காரியம் சாதித்துக் கொண்டுருக்கும் கும்பலை பாஜக வில் உள்ள அதே சாதியைச் சேர்ந்தவர்கள் கூட கண்டு கொள்வது இல்லை என்பது தான் வருத்தமாக உள்ளது.

இன்று இந்த கும்பல் சென்னை முதல் கன்யாகுமரி வரை இண்டு இடுக்கு விடாமல் காவல்துறையை மிரட்டி, சட்டம் ஒழுங்குக்குச் சவால் விட்டு, பிசிஆர் கேஸ் என்ற ஒற்றை வாக்கியத்தை வைத்துக் கொண்டு செய்யும் ஒவ்வொரு செயல்களும் அந்த ஆண்டவனுக்கே பொறுக்காது.

இந்த திருமா வைத்தான் எழுத்தாளர் ஜெயமோகன் இப்போது சம்பந்தம் இல்லாமல் பாராட்டித் தள்ளிக் கொண்டு இருக்கின்றார்.  அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்கின்றார்.  ஆன் லைன், ஆஃப் லைன் என்று அவரின் கருத்துக்களை அறிந்தவன் என்ற முறையில் அவரைச் சுற்றியுள்ள எவரும் அவருக்கு அறிவுரை சொல்லித் திருத்த முடியுமா? என்பது எனக்குச் சந்தேகமாக உள்ளது.

எழுத்தாளர் சுஜாதாவிற்குப் பிறகு தமிழ்த் திரைப்பட உலகம் அங்கீகாரம் கொடுத்த எழுத்தாளர் என்றால் திரு. ஜெயமோகன் அவர்கள். அவர் எல்லாவிதங்களில் எல்லா காலங்களிலும் தகுதியானவர்.  

ஆனால் சமீப காலமாக திரைப்படம் சார்ந்து பேட்டி அளித்து அபத்த மொக்கையைப் பார்த்து ஏற்கனவே கொலைவெறியில் இருக்கின்றேன்.  

இப்போது திருமா மணிவிழா என்ற பெயரில் கருப்பு வெள்ளை கணக்கு விளையாட்டு குறித்து அறியாதவர் போல ஜெயமோகன் ஏன் பாம்பு புற்றுக்குள்  கையை வைக்கின்றார்?


No comments: