Sunday, October 30, 2022

டாஸ்மாக் விற்பனை

 உ

சிவமயம்

2022 October 24

மதிப்பிற்குரிய அய்யா

(தீபாவளி மது விற்பனை கணக்கு தங்கள் மேலான பார்வைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது. எந்த அளவுக்கு விற்பனை நடந்தாலும் தமிழக அரசுக்குப் பல ஆண்டுகளாக நஷ்டம் என்பதனை தங்கள் அன்பான கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றோம்)
1. டாஸ்மாக் விற்பனை என்ற அளவில் வெளிவந்த தொகை 464 கோடியே 21 லட்சம்.  இது அரசாங்க கணக்குக்குச் சென்றது என்று நம்பிக் கொள்ள வேண்டும்.  சிஐஏ கணக்காய்வு இதற்கு இல்லை என்பதனை பக்கவாட்டில் வைத்துள்ளோம். டாஸ்மாக் மேலாளர் முதல் மண்டல அதிகாரி வரைக்கும் ஒரு வழித்தடம்.   அமைச்சர் முதல் வார்டு கவுன்சிலர் வரைக்கும் அடுத்த வழித்தடம்.  இந்த இரண்டு பிரிவுகளும் சேர்ந்த தமிழன் தமிழச்சியைப் புணர்ந்து தங்கள் தலைமுறைகளைப் பெற்றெடுக்கக்கூடாது என்ற முக்கிய வேலையில் ஈடுபட்டு எரி சாராயத்தைத் தமிழகத்தில் வழங்கிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதனை தங்கள் மகன் மகளிடம் இவர்களைப் பற்றி தயவு செய்து அறிமுகமாக சொல்லி வையுங்கள்.


2. இதன் மூலம் இரண்டு பங்காளிகளும் கடந்த 20 வருடங்களாக என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள்? என்பதனை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.


3. இவர்கள் இருவரும் நாங்கள் பங்காளிகள் என்று பேட்டிகளில் சொல்வதை நீங்கள் கேட்டு இருக்கக்கூடும்.  பன்றிக்குட்டி சாக்கடையில் வாழும்.  மலம் புழுக்களில் மட்டுமே வாழும். ஆனால் இரண்டும் எப்படி ஒரே விதமாக வாழும்? என்ற எண்ணம் உங்களுக்கு வரக்கூடும்?


4. விலங்குகள் தங்கள் கழிவுகளை தாங்களே உண்ணும் என்ற ஒரு விசயத்தை மட்டும் யோசிக்கத் தெரிந்தால் இந்த இரண்டு விலங்கினங்களைப் பற்றிக் கூடுதலாக யோசிக்கத் தேவையில்லை.  இப்போது விசயத்திற்கு வருவோம்.


5.  சசியக்காவ் ஆட்சி நிர்வாகத்தைத் தன் கையில் வைத்திருந்தது முதல் தற்போதைய இடைக்கால பொதுச் செயலாளர் முன்பு ஆட்சியிலிருந்து இறங்கியது வரை சாதாரண நாட்களில் முன்பு டாஸ்மாக் நிர்வாகம் மூலம் அறுபது சதவிகிதம் ரசீது போட்டு அதன் பிறகு கடைகளுக்கு விநியோகம் செய்து கொண்டு இருந்தார்கள். எனவே இறக்கப்பட்ட சரக்குகளின் கலால் வரி அரசாங்கத்தின் கஜானாவிற்குச் சென்றது.  மீதம் இவர்கள் சரக்குகளை டாஸ்மாக் கணக்குக்குக் கொண்டு செல்லாமல் கடைகளுக்குக் கொண்டு சென்ற காரணத்தால் வரி அரசாங்கத்திற்குக் கொடுக்கத் தேவையில்லை.  


6. மொத்த விற்பனையாகும் பணமும் சிலரின் பைகளுக்குச் சென்று கொண்டு இருந்தது.  அதாவது நீங்கள் எளிமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு குவாட்டர் சரக்கு பாட்டி தொழிற்சாலையிலிருந்து அதிகபட்சம் இருபது ரூபாய் வாங்குகின்றார்கள் என்றால் விற்பனை என்பது உத்தேசமாக 130 ரூபாய் என்று வைத்துக் கொள்ளுங்கள். யாரோ ஒருவருக்கும் ஒரு பாட்டில் மூலம் 110 ரூபாய் செல்கின்றது.  இதில் மற்றொரு ஆச்சரியம் கடைகளில் எம்ஆர்பி விலைக்கு மேல் இந்த சரக்கின் மூலமும் கூடுதலாக பத்து ரூபாய் கிடைக்கின்றது.  


7. கடைசியாக கொடுமை என்னவெனில் மதுபானத் தொழிற்சாலைகளில் வாங்காமல் இவர்கள் தனியாக தொழிற்சாலை வைத்து உள்ளனர்.  எசன்ஸ் மட்டும் போதும்.  அதாவது கரும்பு ஆலைகளிலிருந்து மொலாசஸ் என்று சொல்லப்பட்டும் எரிசாராய அடிப்படையை பெற்று அதில் தங்கள் விருப்பப்படி கலக்க வேண்டியதைக் கலக்கி கடைக்குக் கொண்டு வந்து விடுகின்றார்கள்.  குடித்தவன் செத்தால் அது பொதுக் கணக்கில் வந்து விடும்.  தப்பித்து ஓடும் வரைக்கும் பணம் கோடி கோடியாக கொட்டிக் கொண்டேயிருக்கும்.  ஆனால் ஆட்சி மாறியதும் எந்த உண்மை எது பொய் என்பதனை கண்டு பிடிக்க முடியாது திருப்பதியில் வாழும் தெய்வம் அருள் பாலித்து அள்ளி குவித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.  உங்கள் மகன் மகளுக்கு திருமணத்திற்கு என்று வரன் பார்க்கும் போது குறிப்பிட்ட டெஸ்ட் எடுத்து நின்று பேசுமா என்று உறுதிப்படுத்தி மற்ற பொருத்தங்களை அப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள்.


அப்படித்தான் இன்று இவர்கள் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வது வரைக்கும் வந்து நிற்கின்றார்கள்.


ஒரு வேளை எதிர்காலத்தில் மத்திய அரசு ஆன் லைன் வியாபாரம், அமேசான், ப்ளிப்கார்டு மூலம் வீட்டுக்கு வழங்க முடியும் என்று மட்டும கொண்டு வந்தால் போதும்.  பாதிப் பேர்களுக்கு தங்கள் வப்பாட்டிக்கு பணம் கொடுக்க முடியாத அளவுக்கு ஏழையாக மாறிவிடுவர்.

No comments: