Tuesday, November 02, 2021

தளபதிகள் நண்பர்களாக , நண்பர்களே தளபதி

நன்றி விசுவாசம் இல்லாதவர்கள் தான் அரசியல் தரும் பரிசு என்பார்கள்.  

ஆனால் மோடி அவர்களுக்கு தளபதிகள் நண்பர்களாக இருக்கின்றார்கள். நண்பர்களே தளபதியாகவும் உடன் பயணிக்கின்றார்கள்.  கடந்த 7 வருடங்களில் மோடி அவர்களின் ஒவ்வொரு வெளிநாட்டு பயணங்களிலும் நடந்த, நடக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன நிகழ்வுகளை கவனித்து வருகிறேன்.

நிர்வாகம் தெரிந்தவர்களுக்குத் தான் தெரியும். 

திட்டமிடுதலின் உச்சம்.  

பார்த்துப் பார்த்து அலங்கரிக்கும் சிற்பி யாரோ  இருக்கின்றார்கள் என்றே நினைத்துக் கொள்வதுண்டு.  

இதற்கு முன்னால் இப்படி நடந்ததே இல்லை.  மன்மோகன் சிங் அரசாங்கத்தில் கொத்து கொத்தாக கொத்தவால்சாவடிக்கு டவுன்பஸ் ல் செல்லும் கூட்டம் போலவே சென்று வந்தார்கள்.


@annamalai_k  எழுதும் கடிதம் ஒலி வடிவில் கேட்க சொடுக்கவும்.

இது கூடத் தெரியலையா?

பெயர் வைத்த நாள் எப்படிப் பிறந்தநாளாகும்! - 39

1953-ல் பிறந்த தமிழகத்திற்கு, 1967ல் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாட்டின் பிறந்தநாள் தற்போது சர்ச்சையாக்கப் பட்டுள்ளது. வரலாற்றுப்படி பார்த்தால் தமிழ்நாடு உருவாக்கப்படவே இல்லை. தென்னக மாநிலங்கள் ஒன்றாக மதராஸ் ராஜதானியாக தொடர்ந்தபோது,  ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகள் இணைந்த மாநிலமாக இருந்தது. 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி, அவை மொழிவாரியாக பிரிக்கப்பட்டபோது சென்னை மாகாணம் பிறந்தது.

தமிழகம் தனியாக வரையறுக்கப்பட்ட நாள் (01.11.1956.) 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி, என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அப்படியாக வரையறுக்கப்பட்ட நாளை அனைத்து மாநிலங்களும் நவம்பர் ஒன்றாம் தேதியைக் கொண்டாடும் போது பெயர்மாற்றம் செய்த நாளை பிறந்தநாளாகக் கொண்டாடு வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது, வரலாற்றுப் பிழை.




No comments: