Tuesday, October 26, 2021

இதுவரை எழுதப்பட்ட புத்தகங்களின் விபரம்

2009 முதல் 2021 வரை இணைய தளத்தில் செயல்பட்டு வருகின்றேன். தொடக்கத்தில் நண்பர் சீனிவாசன் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் இலவச மின் நூல் தளத்தில் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டு வந்தேன்.  கூகுள் ப்ளஸ் ல் விமலாதித்த மாமல்லன் மூலம் அமேசான் அறிமுகம் ஆனது.  அதில் புத்தகமாக வெளியிட்டு வந்தேன்.  




இதில் உள்ள புத்தகங்களில் கிண்டில் மொழி மற்றும் 1400 பக்கங்கள் அடங்கிய தமிழக அரசியல் வரலாறு புத்தகத்தை மட்டும் இலவசமாக வாசிப்பவர்களுக்கு வழங்கவில்லை.  மற்ற 34 புத்தகங்களையும் பல முறை இலவசமாக வழங்கியுள்ளேன்.  உலகம் முழுக்க சென்று சேர்ந்து உள்ளது.

சமீபத்தில் ஒரு நிறுவனம் நான் எழுதிய புத்தகம் குறித்த தகவல்களைக் கேட்டது. 

அதற்காகத் தொகுத்து (முதல்முறையாக) அனுப்பி வைத்தேன்.  

சில வாரங்களுக்கு முன்பு கற்றுக் கொள் களத்தில் இறங்கு தளத்தில் இதுவரை வெளியான யூ டியூப் நிகழ்வுகளை இணைப்பு கொடுத்து ஆவணப்படுத்தும் பொருட்டு இங்கே வெளியிட்டு இருந்தேன். சிலர் மின் அஞ்சல் வாயிலாக இது போல ஒவ்வொன்றையும் ஒரே பக்கத்தில் தொகுத்து வெளியிடுங்கள் என்று சொல்லி இருந்தார்கள். 

நான் எழுதியவற்றில் 60 சதவிகிதத்தை மட்டும் தான் மின்னூலாக மாற்றியுள்ளேன்.  

இந்த 36  மின்னூல் தவிர தனியாக மூன்று மின்னூல் விமர்சனங்கள் அடங்கிய தொகுப்பு தனியாக உள்ளது. நான் அவற்றைப் பட்டியலில் கொண்டு வரவில்லை. மொத்தம் அமேசான் தளத்தில் 39 மின்னூல் வெளியாகி உள்ளது. 

டாலர் நகரம் என்று நூல் மட்டும் அச்சுப் புத்தகம் மின்னூல் என்று இரண்டு விதமாகவும் உள்ளது.  மற்ற அனைத்தும் அமேசானில் மட்டுமே.  சென்ற வாரம் வரைக்கும் பலரும் அச்சுப் புத்தகம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். 

திடீரென்று என் மனம் மாறும் போது அதற்கான வேலைகளைத் தொடங்கும் என்று நம்புகிறேன். நன்றி.

*****

இப்போது இந்த தகவல் உங்கள் பார்வைக்கு.  

அரசியல் குறித்து எழுதப்பட்ட புத்தகங்கள்

1. ஜோ பக்கங்கள் - 2 (Tamil Nadu Political History) (Tamil Edition)

2. தேதி போட்டு கொடுத்துருக்கோமா?: ஜுலை 2021 (ஜோ பக்கம் 3) 

3. திராவிட வெள்ளை அறிக்கை: ஜோ பக்கம் - 1

4. ஆகஸ்ட் 2021 (Tamil Nadu Political History) (Tamil Edition)

5. ஒன்றியம் என்ற அரசியல் நாடகம்: ஜுலை 2021 - ஜோ பக்கம்  - 4 (Tamil Nadu Political History) (Tamil Edition)

6. மரண பயத்தை காட்டிய தேர்தல் (Tamil Nadu Political History) (Tamil Edition)

 7. அ என்றால் அரசியல்: Tamil Nadu Corruption Politics (23) (Tamil Edition)

8. ராபின்சன் பூங்கா முதல் திருக்கழுக்குன்றம் வரை: Tamil Nadu Political History 1921-2020 (30) (Tamil Edition) (1400 பக்கங்கள் முழுமையான புத்தகம்)

9. கு.காமராஜர்-காங்கிரஸ்: 1921-1967 Tamil Nadu Political History (Tamil Edition)

10. அண்ணா - கலைஞர்: 1967 - 2018 Tamil Nadu Political History (Tamil Edition)

11. எம்.ஜி.ஆர். - ஜெ. ஜெயலலிதா: 1970 - 2016 Tamil Nadu Political History

12. இங்கே அரசியல் பேசாதீர்: அரசியலும் அரசியல் சார்ந்த நிலமும்  (Tamil Edition)

*****

இந்திய இராணுவத்தின் வியத்தகு வளர்ச்சி - மேஜர் மதன் குமார் (பணி ஓய்வு)

Tiruppur Related Books

13. டாலர் நகரம் (DOLLAR NAGARAM): A Tamil book about the history of Tirupur city and auto biography (ISBN-10: 2839911736) (Tamil Edition)

14. 5 முதலாளிகளின் கதை (திருப்பூர் கதைகள்   (Tamil Edition)

15. பஞ்சு முதல் பனியன் வரை: Cotton up to Banian (4) (Tamil Edition)

*****

16. ஈழம் - படிக்க மறந்த வரலாற்றுக் குறிப்புகள்: Ceylon Geo Politics  (Tamil Edition) (500 Pages)  Sri Lanka 7000 years History upto 2009

******

17. அதிகார அடிமைகள்: (ஆங்கிலேயர்களின் ஆட்சியில் தமிழகத்திலிருந்து பஞ்சம் பிழைக்கச் சென்றவர்களின் கண்ணீர்க் கதை)

******

18. மின்சார வாரியம் - மின்சார ஆணையமாக மாறிய (கண்ணீர்) கதை: கொள்ளையடிக்கப்பட்ட தமிழ்நாடு மின்சார வாரியம்.  (Tamil Edition)

*****

தொழில் முனைவோர் சிந்தனைகளை ஊக்குவிக்க அதன் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகங்கள்

19, வணிகம் பழக சமூகம் பழகு (Tamil Edition)

20. Amazon - 2025 இந்தியா மாற்றம் முன்னேற்றம்: 1 Billion Investment 

21, வணிக அரட்டை (2020 Book 2) (Tamil Edition)
******

22. ஜெ. ஜெயலலிதா என்னும் நான்: அதிர்ஷ்டமும் ஆளுமையும் (10) (Tamil Edition)

••••

வலைபதிவில் எழுதிய சமூகம் சார்ந்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு புத்தகங்கள்.

23. பயணிகள் கவனிக்கவும்: (முகவரியில்லா முகங்கள்) (Tamil Edition)

24, ஊரெங்கும் மலர்வனம்: Native Special  (Tamil Edition)

25, 2019  (வருடத் தொகுப்பு அடங்கிய கட்டுரைகள்) (Tamil Edition)

26, 2020 (வருடத் தொகுப்பு அடங்கிய கட்டுரைகள்) (Tamil Edition)

27. செல்பி சமூகத்தின் ஊர்க்கதைகள்: 2018 (Tamil Edition)

28, அந்தரங்கக் கதைகள்: பாலியல் தொழிலாளியின் பாசப் போராட்டம். (Tamil Edition)

29, அந்த 68 நாட்கள்: Corona 2020 

30, 5 முதல் 50 வரை: ஐம்பது என்பது வயதல்ல. (Tamil Edition)

31, காசிருந்தால் கல்வி: குழந்தைகளின் டைரி (3) (Tamil Edition)

32, 8 புத்தகங்களின் விமர்சனம்: வாசித்தே ஆக வேண்டிய புத்தகங்கள் (14) (Tamil Edition)

33, உண்மைத்தமிழன் 2.0: 2000 வருடத் தமிழ், தமிழர்கள் (Tamil Edition)

34, ஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி!: அஞ்சலிக் கடிதங்களின் தொகுப்பு

35, அந்த 42 நாட்கள் (2020 கொரோனா கால நிகழ்வுகள்)

*****

அமேசான் நிறுவனம் நடத்திய உலகளாவிய போட்டிக்காக எழுதப்பட்ட புத்தகத்திற்காக வழிகாட்டி. அமேசான் எழுத்தாளர் போட்டியில் கலந்து கொள்ள அது சார்ந்த தொழில்நுட்பம் சார்ந்த விசயங்களை வைத்து எழுதப்பட்டது.

36, கிண்டில் மொழி: Kindle Pen to Publish 2019 (Tamil Edition)

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு தொகுப்பு. தொடர்ந்து உங்கள் மின்னூல்கள் வெளிவரவும், வெற்றி பெறவும் வாழ்த்துகள் ஜோதிஜி.

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துகள் ஐயா