நீட் தேர்வு குறித்து இன்னமும் தங்கள் குரலை உயர்த்திக் கொண்டே இருக்கும் நம் சமூகநீதி காவலர்கள் இந்த ஆண்டு (2021) பொறியியல் கல்லூரி மாணவ மாணவியர்கள் சேர்க்கை குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். என்ன சாதித்து உள்ளோம்? என்பதனையும் புரிந்து கொண்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று தமிழ்ப்பிள்ளைகளின் சங்கம் சார்பாக கோரிக்கை வைக்க கடமைப்பட்டுள்ளோம்.
1. இந்த ஆண்டு 1, 51, 871 இருக்கைகளுக்கு நிரம்பிய எண்ணிக்கை என்பது 95,069. அதாவது 62.6 சதவிகிதம். 52,802 அரசு இருக்கைகள் நிரப்பப்படவில்லை என்பதனை விட இந்த முறை 7.5 சதவிகித இட ஒதுக்கீடு என்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என்ற அறிவிப்பு வந்தும் இந்த நிலைமை என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
2. கடந்த இரண்டு வருடங்களில் உள்ள எண்ணிக்கையை விட இந்த ஆண்டு 14.4 சதவிகிதம் அதிகரித்து உள்ளதற்கு ஒரே காரணம் மாமா நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வியாளர்கள் என்ற போர்வையில் வாழும் புலிகேசியின் புகழ்பாடிகளுக்குத் தான் அந்த பெருமை.
இன்ஜினியரிங் படிப்பில் 95,000 இடங்கள் நிரம்பின. கடந்த 5 ஆண்டுகளை விட மாணவர் சேர்க்கை அதிகம். சரி ஆனா 2016ல் 525 கல்லூரி 2021ல் 440 கல்லூரி தான் அதுவும் 71 கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை பாதியாக குறைத்துள்ளது.
No comments:
Post a Comment