Friday, July 30, 2021

2029

கேள்வி...

இங்கு எல்லாமே பத்து ஆண்டுகளுக்குள் தனியார் மயம் ஆகும் வெளிப்படையாக. 




பரிசோதனை தடுப்பூசி ஒன்றே சான்று. தகவல் உரிமைச் சட்டத்தில் வெளிப்படையாக விருப்பத் தேர்வு என்று பதில் வருகிறது. ஆனால் ஊடகங்களில் எதற்கு எடுத்தாலும் பரிசோதனை தடுப்பூசி போட வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வது இன்னும் 5 ஆண்டுகளுக்குள் இது போல இன்னும் எத்தனை வர போகின்றன என்று தெரியவில்லை.. இன்னும் 5 ஆண்டுகளுக்குள் எத்தனை கோடி இழப்புகள் மறைக்கப் படும் என்றும் தெரியவில்லை.. மனிதர்கள் இங்கும் சோதனை எலி ஆகி விட்டார்கள்..அரசியல் சாசனப் படி விருப்பம் இல்லாமல் எதையும் திணிக்க கூடாது ஆனால் இங்கு நடப்பது அனைவரும் அறிந்ததே.. வரும்காலத்தில் நீங்கள் எழுதும் கட்டுரைகளைப் படிக்க வாசகர்கள் இருப்பார்கள் எப்போதும் போலப் பார்வையாளர்களாக.

Arul 

பதில்

0. கடந்த பத்து வாரங்களில் கொங்கு மண்டலத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் எத்தனை பேர்கள் என்ற கணக்கு யாரிடமும் இல்லை. கொத்து கொத்தாக இறந்தார்கள். திமுக அரசாங்கம் கண்டு கொள்ளவே இல்லை. கணக்கு எடுப்பதைத் தவிர்த்தனர். எங்கள் அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் ஊடக மௌனம் யாருக்கு லாபம்?


00. இறந்து போனவர்களின் பாதிப் பேர்களின் உயிருக்கு முக்கிய காரணம் திமுக. காரணம் தேர்தலுக்கு முன் தடுப்பூசி குறித்த சந்தேகத்தை வெளிப்படையாக அப்பட்டமாக பேசி அரசியல் செய்தது. மக்கள் முட்டாள்தனமாக நம்பினார்கள். ஆனால் ஏமாற்றி யார் ஆட்சிக்கு வந்து உள்ளார்கள்.

உங்கள் கேள்வியில் ஒரு புள்ளி மட்டும் வைத்து இருக்குறீங்க? நான் முழுமையாக கோலம் போடுகின்றேன். சரியாக உள்ளதா? என்று பார்க்கவும்.

1. 2024 பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்பு  2029 தேர்தல் நடக்கும். அப்போது மோடி என்ற பெயர் அரசியல் களத்தில் இருக்குமா? என்று எனக்குத் தெரியாது. அப்படிப்பட்ட சூழல் என்ன மாற்றங்களை இங்கே உருவாக்கும் என்பதனை வைத்து இங்கு என் தனிப்பட்ட எண்ணத்தை எழுதுகிறேன்.

தமிழக மத நல்லிணக்கம் + தமிழக இளைஞர்களின் தொழில் ஆர்வம் = 50 ஆண்டு கால ஆட்சி

2. 2021 ல் இந்திய மக்கள் மக்கள் தொகை 139 கோடி. ( நாம் இன்னமும் அதிகாரப்பூர்வமாக 2011 ஆம் மக்கள் கணக்குத் தொகையை வைத்தே இன்று வரையிலும் ஒப்பேற்றிக் கொண்டு இருக்கின்றோம். பலவிதக் காரணங்களால் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பதனை இன்னமும் அரசாங்கம் எடுக்காமல் இருக்கின்றது.  பாஜக வின் தேர்தல் அறிக்கையாக சொல்லப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டம் சார்ந்து மத்திய அரசாங்கம் செயல்படும் போது பல விசயங்கள் வேகம் எடுக்கும் என்று நம்புகிறேன்) 2029  ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை 160 கோடி இருக்க வாய்ப்புண்டு. இதன் மூலம் சந்து பொந்து களில் வாழ்ந்து கொண்டு இருக்கும் பெருச்சாளிகள், எலிகள், நாகம், கட்டுவிரியன் போன்ற பல ஆபத்தான மிருகங்கள்  அனைத்தும் வெளியே வரும். போராளிக்கூட்டங்கள், புளிய மர தரகர் கூட்டங்கள் அனைவரும் இருபத்தி நான்கு மணி நேரம் உழைக்க வேண்டியதாக இருக்கும். நாடு நல்ல பாதையை நோக்கி நகரும்.


3. இந்தியாவில் தற்போது கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள் மொத்தம் இருபது சதவிகிதம் இருக்கின்றார்கள். அது 2029 ல் 40 சதவிகிதமாக மாறும். அதாவது மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்காக இருவரும் இருப்பார்கள். ஆனால் 2029 ல் வாழும் மக்கள் தொகையில் 2000 க்குப் பிறகு பிறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்.  முதல் தலைமுறை மற்றும் இரண்டாவது தலைமுறை தோன்றியிருக்கும்.  இதில் தான் நல்லது தொடங்கவும் வாய்ப்புள்ளது. நாம் நம்பவே முடியாத, நினைத்துப் பார்க்காத பல விசயங்களும் நடந்தேறும்.  நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக ஓட்டுப் போடும் இஸ்லாமிய இளைஞர்கள் திமுகவிற்கு ஓட்டுப் போடவில்லை. போட விரும்பவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள உண்மையாகும். அடுத்த இரண்டு தேர்தல்களில் மாற்றங்கள் இன்னமும் விரிவடையும்.


4. மத்திய அரசு மாநில அரசு பணி சார்ந்த வேலைகள் பெரும்பாலும் தனியார் வசம் அவுட் சோர்சிங் மூலம் பெறப்படும்.  அரசாங்கம் தனியார் நிறுவனம் போல இயங்கத் தொடங்கும். அதன் தொடக்கப்புள்ளிகள் 2029 காலகட்டத்தில் தொடங்கி இருக்க வாய்ப்புண்டு என்று நம்புகிறேன்.


5. இந்திய மக்கள் தொகையில் 2029 ல் படிப்பறிவு சதவிகிதம் உறுதியாக 70 சதவிகிதத்திற்கு அருகே வந்து நிற்கும்.  இப்போது போலக் கையெழுத்துப் போடத் தெரிந்தவர்கள் படித்தவர்கள் என்ற பட்டியல் என்பது போல் இல்லாமல் அடிப்படைக்கல்வி, கல்லூரி, உயர் படிப்பு என்று கலந்து கட்டி உச்சத்தில் மக்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக இருப்பார்கள்.


6. 2029 ல் மக்களுக்கும் அரசாங்கத்திற்கு இருக்கும் தொடர்பு பாதிக்குப் பாதி குறைந்து இருக்கும். தேவைகள் மாறியிருக்கும். இணையம் பூர்த்தி செய்யும். தொழில் நுட்பம் மாற்றுப் பாதையை உருவாக்கியிருக்கும். விரும்பிய இடத்தில் இருந்து வாக்குப் பதிவு செலுத்தும் வசதி வந்து இருக்கும். களப் பிரச்சாரம் 25 சதவிகிதம் தான் இருக்கும். இந்தியாவில் உள்ள அனைத்து நிலங்களும் இணையம் வழியே தனிநபர்களின் கணக்கோடு இணைக்கப்பட்டு இருக்கும். பினாமி என்ற சொல் அழித்து ஒழிக்கப்பட்டு இருக்கும் என்பதற்கான ஆரம்பப்புள்ளியை இந்த காலகட்டத்தில் நாம் வெற்றிகரமாக கடந்து இருக்க வாய்ப்பு உண்டு. சேமிப்பு என்ற பழக்கம் பத்து சதவிகித மக்களிடம் இருந்தால் ஆச்சரியமே. தலைமுறை முரண்பாடுகளினால் வயயோதிகர் நல வாழ்வு காப்பகம் பெரிய தொழிலாக மாறி இருக்கும். அரசுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும்.


7. மத்திய மாநில அரசுகளில் வாரிசுகள் முழுமையாக மக்கள் தலைவர் போலவே உருமாறியிருப்பார்கள். இந்திய அரசியலைத் தீர்மானித்த (இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்ற) 100 பேர்கள் நிச்சயம் காலத்தோடு கரைந்து போய் இருப்பார்கள். 


8, வசதிகளுக்காகவே வாழ்க்கை என்பது கொள்கையாக மாறியிருக்கும். சமூகம் என்பது வேட்டைக்காடு போல மாறியிருக்கும். முந்தியவனுக்கு முன்னுரிமை என்பதே வாழ்வதற்கான முக்கிய தகுதியாக இருக்கும். உறவுகள் மெய்நிகர் உலகில் (மட்டும்) பாசத்தை அளிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். காணொளியில் தெரியும் முகத்திற்கு வழங்கப்படும் முத்தங்களும் ஒன்று தான். கோபங்களும் ஒன்று தான். தகுதி இருந்தும் விருப்பமின்றி பிள்ளை பெற்றுக் கொள்ளாமல் இருக்கும் கூட்டமென்பது அதிகமாக இருக்கும். பிள்ளை பெற ஆண்மை இல்லாத கூட்டமும் அதிகமாகவே இருக்கும்.


9. தொற்று நோய் இருக்கும். வரும். உருவம் மாறியிருக்கும். இந்தியப் பத்திரிக்கையாளர்கள் மாறியிருக்க மாட்டார்கள்.


10. டாடா, ரிலையன்ஸ், அமேசான் மூன்று பேர்களின் கண்காணிப்பில் கவனிப்பில் இந்திய விவசாயம் இருக்கும்.


11. மின் சாதனக் கழிவுகள், மின்கலம் கழிவுகள் உருவாக்கப்போகும் விளைவுகள் உலகம் முழுக்க புதிய பாதையை உருவாக்கும். பெட்ரோல், டீசல் தேவை என்பது தொழிற்சாலைகளுக்கு மட்டுமே என்பதாக நிலைமை மாறி இருக்கும். இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சூரிய ஒளி மற்றும் பேட்டரி மூலம் இந்திய சாலைகளை அலங்கரிக்கும். கார்பன் மற்றும் தூசி இல்லாத இந்தியாவை நம் தலைமுறை அனுபவிப்பார்கள்.

நிலம் வைத்து இருந்தும் செயல்படமுடியாமல் இருப்பவர்கள் என் நிலத்தில் வந்து உங்கள் கழிவுகளைக் கொட்டுங்கள் என்று புதிய வியாபாரம் உருவாக வாய்ப்புண்டு. கழிவு எண்ணங்கள் மக்களை வளர்க்கும். வாழ வைக்கும்.


12. நீங்கள் குறிப்பிட்டு உள்ளதைப் போல 2029ல் வாசிப்பார்கள். 60 வயதுள்ள மூத்த தலைமுறை எப்போதும் போலப் பொறுமையாக வாசிப்பார்கள்.  பின்னால் உள்ள மற்ற தலைமுறைகள் இவர்கள் ஏன் இன்னமும் சாகாமல் இருக்கின்றார்கள் என்று யோசிப்பார்கள். 

30 July 1.30 p.m. முதல் 

இலவசமாக தரவிறக்கம் செய்ய முடியும். வாசிக்க... யோசிக்க... 

தேதி போட்டு கொடுத்துருக்கோமா?: ஜுலை 2021 (ஜோ பக்கம் 3) (Tamil Nadu Political History) (Tamil Edition) Kindle Edition

தேதி போட்டு கொடுத்துருக்கோமா?: ஜுலை 2021 (ஜோ பக்கம் 3) (Tamil Nadu Political History) (Tamil Edition)

காரணம் மனிதாபிமானம் பற்றாக்குறையாக இருக்கப் போவதும், அதன் மூலம் உருவாகப் போகும் பிரச்சனைகளும் தான் இனி வரும் காலங்களில் பெரும் சவாலாக இருக்கப் போகின்றது.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒரு சில உண்மைகள்...

M.RAVINDRAN said...

Modern Nostradamus of 21st Century 👏🤔😥