Wednesday, November 25, 2020

சசிகலா மற்றும் சோனியா

 சசிகலாவும் சோனியாவும் பல விதங்களில் ஒன்று தான்.

ஒருவர் அதிகாரத்தின் பின்னால் இருந்து ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தார். மௌனி ஒருவர் சிக்கிவிட பத்து வருடங்கள் காலம் இழுத்துக் கொண்டே சென்றது.


மற்றொருவர் அதிகாரத்தை தன்னுடையதாக மாற்றிக் கொண்டு டம்மியை வைத்துக் கும்மி தட்டிக் கொண்டிருந்தார். 33 வருடங்கள் திகட்டத் திகட்ட உறிஞ்சு உண்டு கொழுத்து எத்தனை லட்சம் கோடிகள் என்று எண்ண முடியாத அளவிற்குச் சூறையாட முடிந்தது.

என்ன பலன்?

ஒருவர் இத்தாலி வாழ்க்கையை நான்கு சுவற்றுக்குள் இருந்து கொண்டு மீட்டிக் கொண்டிருக்கிறார். 

மற்றொருவர் கம்பிக்குள் இருந்து கொண்டு கன்னடம் கற்று விட்டேன் என்று அரசிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

திருமணம் நடந்து ஆறு மாதங்களில் விவகாரத்து கேட்டு குடும்ப வாழ்க்கை பணால் ஆன அண்ணன், நோயுடனும் வழக்குடன் சிறைக்குள் போராடும் அப்பா, அரசியலை விட கிரிக்கெட் மேல் பற்று கொண்ட, துணை முதல்வராக இருந்தாலும் பீகாரிகள் துன்பப்பட்ட போதெல்லாம் எட்டிப் பார்க்காத அக்மார்க் இந்திய அரசியல் வாழ்க்கையை வாழ்ந்த தேஜஸ்வி யாதவ் வை நம்பும் பீகாரிகள் ஏன் காங்கிரஸை வெறுக்கின்றார்கள்?

பீகார் தேர்தலில் இவ்வளவு பெரிய சேதாரம் நடந்துள்ளது. மூச். ஒரு பேச்சில்லை. காங்கிரஸ் ல் இருந்து எவரும் அது குறித்துப் பேசத் தயாராக இல்லை.

என்ன காரணம்?

கட்சியில் அடுக்கு என்பது இல்லை. படிப்படியான கட்டமைப்பு இல்லை.

அவர்களை அப்படியான அமைப்பைத் தொடக்கம் முதல் விரும்பவே இல்லை.

குடும்ப ஆதிக்கத்தை ஆராதிக்கத் தெரிந்தவனும், குடும்பம் இடும் கட்டளைகளை நிறைவேற்றத் தெரிந்தவன் அமைச்சர்.

அதனை மகன் பேரன் வரைக்கும் கொண்டு வந்தவன் கட்சியில் வெற்றிகரமான அரசியல்வாதி. இது தான் கடந்த அரை நூற்றாண்டு காங்கிரஸ் ன் ஜாதகம். 

ஓர் இடத்தில் பலவீனமாக இருந்தால் மற்றொரு இடம் தாங்கும் என்பது இயற்பியல் விதி. ஆனால் இங்கு அதற்கும் வாய்ப்பில்லை.  அதிகாரத்திற்குப் பின்னால் இருந்து சுவைத்தவர்கள், அனுபவித்தவர்கள், அட்டகாசம் செய்தவர்கள் அதிகாரம் தங்களை விட்டுச் செல்லும் போது என்ன நடக்கும்?

ஒன்று வீட்டுக்குள் சிறைபோல வாழ வேண்டும். அசந்தர்ப்பவசமாக அரசியல் சூழல் பொறுத்துப் பல சமயங்களில் இபிகோ பேசும்.

மற்றொரு வகையில் பார்த்தால்

ஒன்று சிறை பயத்தில் உணவுக்காக மட்டும் வாய் திறக்கும்.

அல்லது வாய்க் கொழுப்பில் சிறைக்குள் வாட வேண்டும். 

சோனியாவும் சசிகலாவும் ஒரே புள்ளியில் சேரும் கோலம். மொத்தத்தில் அலங்கோலம்.

இவர்களால் தங்கள் ரத்த உறவுகளுக்குக்கூட நிர்வாகத்தின் பால பாடத்தை கற்றுத் தர முடியாது. காரணம் அது எவையும் இவர்களைக் கவர்வதில்லை. கற்றுக் கொள்ள விரும்புவதும் இல்லை. 

வாழும் உதாரணம் ராகுல். தினகரன்.

பணப்பேய்களுக்குச் சுடுகாடு தான் வாழ வசதியாக இருக்கும். சுதந்திரக் காற்று மூச்சு முட்டும்.  இருட்டுக்குள் வாழ்ந்த மிருகங்களுக்கு வெளிச்சத்தைக் கண்டாலே மிரட்சியில் உயிர் பயத்துடன் ஓடி ஒளியும். அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

உங்கள் மேல் பரிதாபப்பட எங்களிடம் எவ்வித முகாந்திரமும் இல்லை. இந்தப் பக்கம் வந்து விடாதே? என்று ஒரு கூட்டமே ஒதுக்குகிறது என்றால் என்ன அர்த்தம். கடந்து வந்த பாதை முழுக்க ரத்தச்சுவடுகள் என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும். படிப்பறிவு இல்லாத மக்களே இந்த அளவுக்கு யோசித்து இருக்கின்றார்கள்? எந்த அளவுக்கு நோக்காட்டில் வெந்து வாழ்ந்து இருக்க வேண்டும்?

நல்லதோ கெட்டதோ எந்தவொரு அமைப்பிற்கும் சித்தாந்தம் கொள்கைகள் இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால்?

வாழும் போது நரக வாழ்க்கை.

வாழ்ந்து மேலே சேர்ந்த பின்பு அசிங்கம் அனைத்தும் அம்பலத்திற்கு வந்து விடும்.

அசிங்கத்தின் அடையாளமாக வரலாற்றுப் பக்கங்களில் வாழ்வார்கள்.

50 வயது காதல் தரும் அவமானங்கள்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பணப் பேய்களுக்கு மருந்து உண்டு...

மதப் பேய்களுக்கு மருந்து உண்டா...?

ஜோதிஜி said...

மனமே மருந்து