Friday, June 05, 2020

ஐந்தாவது கொரானா ஊரடங்கு என்பது ...........



17 நாட்கள்  என்று இயல்பாகத் தொடங்கியது. அடுத்தடுத்து தொடர்ந்து இன்று ஐந்தாவது ஊரடங்கு தொடங்கியுள்ளது. மூன்று அட்டைப்படங்கள் உருவாக்கியிருந்தேன். கடைசியாக 68 நாட்கள்.  அறிவிப்பைக் கேட்டவுடன் எரிச்சலுடன் சிரிப்பு வந்து விட்டது.  ஆர்வம் போய்விட்டது.  அடுத்த மாதத்திற்குப் பின்பு இது தொடருமா? இல்லையா என்பது இப்போது உறுதிப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. காத்திருப்போம்?




ஐந்து ஊரடங்கு மொத்த நாட்களையும் சேர்த்தால் ஏறக்குறைய 98 நாட்கள்.  ஒரு வருடத்தில் மூன்றில் ஒரு பகுதி. சற்று கற்பனை செய்து பார்க்கவும். 130 கோடி மக்களில் ஏறக்குறைய 100 கோடி மக்கள் ( இன்று உழைத்தால் நாளை வாழ முடியும்.  இந்த வாரம் முழுக்க வேலை கிடைத்தால் அடுத்த வாரம் வாழ முடியும். இந்த மாதம் முழுக்க வேலை கிடைத்தால் அடுத்த மாதம் வாழ முடியும்) மிகச் சாதாரண மக்கள். முறை சாரத் தொழில் மற்றும் அமைப்பு சாராதத் தொழிலில் இருப்பவர்கள். இவர்களுக்கு அடுத்து 20 கோடி மக்கள் நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.  இவர்கள் எது குறித்தும் கருத்து தெரிவிக்க முடியாது.  அரசு ஊழியர்கள் இதில் வருகின்றார்கள். மிகச் சிறிய மற்றும் சிறிய நிறுவனங்கள் வைத்து வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இவர்கள் தங்கள் கையில் இருப்பதைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமா? என்று பயந்து பயந்து வாழ்பவர்கள்.  கடைசியாக மீதிம் உள்ள பத்துக் கோடி மக்களுக்காகத்தான் இந்திய அரசாங்கம் செயல்படுகின்றது.  இது தான் உண்மை.  இப்போது இதன் பாதிப்புகள் முழுமையாகத் தெரியாது. நல்லதும் கெட்டதும் அடுத்த வருடம் நமக்குத் தெரியும்.




ஜோதி கணேசனின் எழுத்து நடை எளிமையாகவும், சுவாரசியமாகவும் இருக்கும். (மற்றவர்களின்) அந்தரங்கம் கேட்பதற்கும்/படிப்பதற்கும் சுவாரசியமாகயிருக்கும், அதுவும் ஜோதிஜி எழுத்தில் இரட்டிப்பு சுவையாயிருக்கும். ஆரம்பமே, பாலுமகேந்திராவின் கதாநாயகி போலிருக்கும் நாகமணி அவர்களின் சுவரில்லாத சித்திரங்களின் கதை (நன்றி:K.பாக்கியராஜ்). 

அதில் நாகமணி, அவரது அம்மாவை கடலளவு நேசித்து பின்னர் மலையளவு வெறுத்தது (நன்றி: நா.முத்துகுமார்) முக்கிய கருவாயிருந்தாலும், இடையிடையே ஆசிரியர் கூற்றாக ஜோதிஜி சொல்லும் செய்திகள், அருமையான வாழ்வியல் உண்மைகள். உதாரணமாக, “இரு நபர்களை ஒன்று சேர்க்க ஓராயிரம் காரணங்கள் இருக்கலாம்... திரைப்படம், பாடல்கள், ... ஆனால் இருவரும் பிரிவதற்கு எப்போதும் பணமும் மனமும் தான் காரணமாகயிருக்கிறது” என்று இன்றைய உலகின் இயல்பை சொல்லுகிறார்.

ஆண்களுக்கான இவ்வுலகில் பெண்கள் தங்கள் உரிமைகளையும், வாய்ப்புகளையும் வென்றெடுத்தாலும், இன்னும் அவர்களின் நிலை போராட வேண்டியதாகவேயிருக்கிறது என்பதை நாகமணியின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.   இன்று இலவசமாக வாசிக்க அமேசான் சொடுக்க

சமூக ஊடகங்கள் வந்தவுடன் மக்கள் தங்கள் எண்ணங்கள், நோக்கங்கள், எதிர்ப்புகள் போன்றவற்றை அப்படியே வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார்கள்.  ஜூன் 3 அன்று கலைஞர் மு. கருணாநிதி 97வது பிறந்த நாள்.  எவருக்கும் இல்லாத எதிர்ப்புகள் என்பது இணைய தளங்களில் முக விற்கு உண்டு.  அதாவது ஆதரவுத் தளத்திற்கு இணையாக.  நேற்று ட்விட்,டரில் இரு விதமாக ட்ரெண்டிங் ஆகிக் கொண்டிருந்தது.  எதிர்ப்பு ட்ரெண்ட்டிங் அதிகமாகிக் கொண்டே இருந்தது.  என்ன நடந்து இருக்கும்? ட்விட்டர் தளம் எதிர்ப்புகளை நீக்கி விட்டது. அப்படியெனில் எந்த அளவுக்குத் தனிமனிதர்களின் செல்வாக்கு உள்ளது என்பதனை புரிந்து கொள்ளவும்.   ஆட்சி. அதிகாரம் என்பதனை விட இப்போது பணம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.
•••••

கொரானா என்பது நோய் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு கீழே உள்ள படம் மற்றும் ஐந்தாவது ஊரடங்கு ஏன் என்பதனை உணர்த்தும்.


வீட்டிலும் இணைய வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்றார்கள்.  பல ஆச்சரியங்கள். வித்தியாசங்களைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். சுதந்திரமாக எழுதிக் கொண்டிருந்த என்னை ஜும் வகுப்பு என்பது சிறையில் வைத்தது போல மாற்றிவிட்டது. இதிலும் டேக்கா கொடுக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் எப்படிக் கையாள்கின்றார்கள் என்பதனைப் பார்த்த போது இந்தப் படம் கண்ணில் பட்டது.

பட்டுக்கோட்டை பிரபாகர் முகநூல் பக்கத்தில் படத்துக்கு கவிதை எழுதும் போட்டி கவிஞர், எழுத்தாளர்,ஆவணப்பட இயக்குனர், இசைக் கலைஞர், ரவி சுப்பிரமணியன். அவர்களால் பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப் பட்ட கவிதைக்கான பரிசாக அவர் எழுதிய ”ஆளுமைகள் தருணங்கள்” நூல் நேற்று வாழ்த்துக் கையொப்பத்துடன் கிடைக்கப் பெற்றேன். இந்தக் ஊரடங்கு காலத்திலும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து புத்தகப் பரிசு அனுப்பியதற்கு . ரவி சுப்ரமணியன் அவர்களும் பிகேபி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.முதல் கட்டுரையில் எம்விவி பற்றிய அரிய தகவல்கள்-சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும் என்பது மட்டும் புரிகிறது.



6 comments:

வெங்கட் நாகராஜ் said...

மூன்று முறை மாற்றிய அட்டைப்படம் - :( எத்தனை நாட்கள் என அறுதியிட்டுக் கூற முடியாத நிலை தான்.

மற்ற தகவல்களும் நன்று. பரிசு பெற்றதற்கு பாராட்டுகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துகள்...

அந்தரங்கக் கதையை தரவிறக்கம் செய்து விட்டேன்... வாசிப்பு இனிமேல்... நன்றி...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கொரோனா அறிக்குறி 14 நாட்களுக்குப் பின்தான் தெரிய ஆரம்பிக்கும். ஊரடங்கின் பாதிப்பு எவ்வளவு நாட்களுக்குப்பின் தெரியப்போகிறதோ? சகஜநிலை விரைவில் திரும்பினால் நல்லது. சென்னையில் கொரோனா தாக்கம் அதிகரித்துக்கொண்டே போகிறது ஆனால் பிடிவாதமாக 10ம் வகுப்பு தேர்வு நடத்தியே தீர வேண்டும் என்று வாட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் மட்டுமல்ல அலுவலர்களும் வாயைத் திறக்க முடியாமல் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போது முகக்கவசம் வேறு அணிந்து கொண்டிருப்பது வசதியாகப் போய்விட்டது.
என்னைப் பற்றியும் குறிப்பிட்டமைக்கு நன்றி ஜோதிஜி சார்

ஜோதிஜி said...

என் மகள் ஒருவர் உங்களைப் போல திறன் அறிவு சோதனைகளில், அறிவு சார்ந்த நடவடிக்கைகளில் சிறப்பாக உள்ளார். அவர் செயல்பாடுகளும் உங்கள் புத்திசாலித்தனமும் ஒரே மாதிரியாக உள்ளது. நீங்கள் கல்லூரிக்கு ஆசிரியராக போய் இருக்க வேண்டும்.

ஜோதிஜி said...

நாகமணி இன்னமும் எங்கள் ஊருக்கு 60 கிமீ தொலைவில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்.

ஜோதிஜி said...

நன்றி