Monday, March 02, 2020

சாந்தி சோஷியல் சர்வீஸஸ்


கோவை சிங்காநல்லூரில் இயங்கும் ’சாந்தி சோஷியல் சர்வீஸஸ்’ பற்றி லதானந்த்

சாதம், முருங்கை சாம்பார், ரசம், கீரைக்கூட்டு, முள்ளங்கிப் பொறியல், கோவைக்காய்ப் புளிக்குழம்பு, பாசிப்பயறு குருமா, சப்பாத்தி, ஜவ்வரிசிப் பாயாசம், தயிர் இந்த மெனு கொண்ட அன்லிமிடட் மீல்ஸ் இன்றைய தேதியில் எவ்வளவு விலை இருக்கும்? அதுவும் மிக உயர்ந்த சுகாதாரச் சூழலில், சுவையோடு வழங்கப்படும்போது? நூறு அல்லது நூற்ற்றிருபது ரூபாய் இருக்கும்தானே? வெறும் இருபதே ரூபாய்தான்! நம்புங்கள். எங்கே? கோவை சிங்காநல்லூரில் இருக்கும் சாந்தி சோஷியல் சர்வீஸ் நடத்தும் உணவகத்தில்தான்!

பெட்ரோல் விலை நள்ளிரவு முதல் அமலுக்கு நடைமுறையாகும் என்ற அறிவிப்பு வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த நாள் விடியற்காலையில் பெட்ரோல் போட்டாலும் அதிகரிக்கப்பட்ட விலையில்தானே கிடைக்கும்? ஆனால் இப்படி ஓர் அறிவிப்பைப் பார்த்திருக்கிறீர்களா?

“பழைய ஸ்டாக் இருக்கும்வரை பழைய விலையிலேயே (அதாவது விலையேற்றத்துக்கு முந்தைய குறைந்த விலையிலேயே) விற்கப்படும்.” ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? எங்கே இந்த அதிசயம்? கோவை சிங்காநல்லூரில் இருக்கும் சாந்தி சோஷியல் சர்வீஸ் பெட்ரோல் பங்கில்தான். தரமான பெட்ரோல் போடுவதுடன் தேவைப்படும் வாகனங்களுக்குக் கட்டணம் இல்லாமல் நைட்ரஜன் கேஸ் பிடித்தும் தருகிறார்கள்.

இவைமட்டும் அல்ல… இன்னும் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியது இந்த நிறுவனம்.



ஆரம்பத்தில் ‘சாந்தி கியர்ஸ்’ என்றபெயரில் கியர்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகத் துவங்கிக் கோவையில் கொடிகட்டிப்பறந்ததுதான் இன்று முழு நேர சமூக சேவை அமைப்பாக மாறியிருக்கிறது.

இங்கே இருக்கும் பிரம்மாண்டமான ஃபார்மசி பல சிறப்புகளை உள்ளடக்கியது. வாங்கும் மருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்பத் தனி தனிக் கவுன்டர்கள் இருப்பது முதல் சிறப்பு. உதாரணமாக உங்களுக்கு மூன்று வகை மருந்துகள் வேண்டும் என்றால் அதற்கென இருக்கும் கவுன்டரில் மருந்துச்சீட்டைக் கொடுத்துதால் போதும்.

இதே போல ஒரே மருந்து, ஐந்து வகை மருந்து என எண்ணிக்கைக்குத் தகுந்தபடி பல கவுன்டர்கள் உண்டு. டோக்கன் ஒன்று தருவார்கள். கால்கடுக்க நிற்கத் தேவையில்லை. வசதியான பெரிய ஹாலில் உட்கார்ந்திருக்கலாம். உங்கள் முறை வந்ததும் எலக்ட்ரானிக் அறிவிவிப்புப் பலகையில் உங்கள் டோக்கன் எண்ணும் மருந்தைப் பெறவேண்டிய கவுன்டரின் எண்ணும் தெரியும். போய் வாங்கிக்கொள்ளலாம். இன்னொரு வசதியும் உண்டு. போன் மூலம் முன்கூட்டியே தெரிவித்துவிட்டால் குறிப்பிட்ட நேரத்தில் போய்த் தயாரக வைக்கப்பட்டிருக்கும் மருந்துகளை உடனடியாக வாங்கிக்கொண்டு திரும்பலாம்.

கோவை மற்றும் புறநகர்வாசிகளுக்கு இன்னும் ஒரு வசதியும் உண்டு. போன் செய்து தேவைப்படும் மருந்துகளையும், உங்கள் முகவரியையும், செல்ஃபோன் எண்ணையும் கொடுத்துவிட்டால் சில மணி நேரங்களில் வீடு தேடி மருந்துகள் சரியாக வந்து சேரும். இதற்கெனக் கூடுதல் கட்டணம் எதுவும் கிடையாது! வாங்கும் அனைத்து மருந்துகளுக்கும் 15% தள்ளுபடியும் உண்டு.

இந்த மருந்தகத்தில் பணிபுரிபவர்கள் அனைவரும் முறையான தகுதி பெற்ற மருந்தாளுநர்கள். மருத்துவரின் பரிந்துரை இன்றி எந்த மருந்தையும் இங்கே விற்பனை செய்வதில்லை.

சரி… அடுத்து இந்த வளாகத்திலேயே இயங்கும் மிகப் பெரிய மருத்துவ ஆய்வகத்தைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். சர்க்கரை நோய்ப் பரிசோதனையில் இருந்து சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், டயாலிஸிஸ் என அனைத்து நவீனப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மிகக் குறைந்த கட்டணத்தில் இங்கே செய்யப்படுகின்றன.

அதி நவீனக் கருவிகளுடன், தேர்ச்சிபெற்ற பணியாளர்கள் மூலம் இந்தச் சேவை அளிக்கப்படுகிறது. இரத்த வங்கி திறம்படச் செயல்பட்டுப் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றி வருகிறது. ஆம்புலன்ஸ் சேவையும் உண்டு.

இங்கே இருக்கும் உணவகத்தின் மெனுவைத்தான் கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தீர்கள். நாளொன்றுக்குக் குறைந்தது இருபத்தைந்தாயிரம் பேர் இங்கே உணவருந்திச் செல்கிறார்கள். மதிய உணவு மட்டும் அல்ல சிற்றுண்டிகளும் மிக சுகாதாரமான முறையில், மிகக் குறைந்த விலையில்! சீருடையில் வரும் பள்ளி மாணவர்களுக்குப் பார்சலும் உண்டு! 5 ரூபாய்க்கு ருசியான ஐஸ்கிரீம் போன்ற ஆச்சரியங்களுக்கும் குறைவில்லை. ஏழை எளியோர்க்குப் பணம் ஏதும் பெறாமல் இலவசமாக உணவளிக்கும் கூடமும் செயல்படுகிறது.

கண் பரிசோதனை நிலையத்தில் மிகக் குறைந்த கட்டணத்தில் பரிசோதனை செய்து, மலிவான விலையில் தரமான கண்ணாடிகளும் அளிக்கப்படுகின்றன.

குழந்தைகள் விளையாடத் தனிப் பூங்கா, வழி சொல்ல உதவியாளர்கள், ஆங்காங்கே செக்யூரிடிகள், பரந்துபட்ட வாகன நிறுத்துமிடங்கள் வளாகம் முழுவதும் கண்காணிப்புக் கேமராக்கள் என நேர்த்தியாக ஒவ்வொரு விஷ்யத்தையும் பார்த்துப் பார்த்துச்செய்திருக்கிறார்கள்.

வருகையாளர்களின் கருத்துக்களைப் பதிவு செய்யப் பதிவேடு ஒன்றும் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் கூறப்படும் ஆலோசனைகள் பலவும் உடனுக்குடன் அமல்படுத்தப்படுகின்றன. இந்தச் சேவையில் பங்குபெறும் விதமாக நன்கொடை அளிக்க முன்வருபவர்களிடம், எந்த விதமான நன்கொடையும் பெறுவதில்லை என்பதில் நிர்வாகம் உறுதியாக இருக்கிறது.

இத்தனையும் செய்யும் அந்த மாமனிதரின் பெயர் சுப்ரமணியம். பெயர் மட்டும்தான் தெரிந்துகொள்ள முடிந்தது. மற்றபடி அவர் பேட்டி தரவோ விளம்பர வெளிச்சத்துக்கு வருவதையோ துளியும் விரும்புவதில்லை! இப்படியும் சிலர்!


15 comments:

KILLERGEE Devakottai said...

இதனை அனுபவித்தவன் நான் இதனைக் குறித்து பதிவு எழுத வேண்டுமென்று நினைத்து இருந்தேன்.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான ஒரு நிறுவனம். இங்கே இருக்கும் உணவகம் பற்றி அறிந்திருக்கிறேன்.

ஜோதிஜி said...

நான் மூன்று முறை இங்கே சென்று உள்ளேன். திரு சுப்ரமணியம் அவர்கள் சந்திக்க விருப்பம் தெரிவித்தேன். முடியாது என்று சொல்லிவிட்டார்கள். மனிதன் தெய்வமாகலாம் என்பதற்கு இவரே உதாரணம்.

ஜோதிஜி said...

நன்றி

Avargal Unmaigal said...

சிறப்பு

ரா.சிவானந்தம் said...

இங்கே நான் வாங்கும் (தமிழ் டிபன் சர்வீஸ்) சாப்பாடு ஒரு வேளை 70 ரூபாய். சாம்பார், ரசம், ஒரு பொரியல். (இதே கட்டணத்தில் வாரம் ஒரு முறை நான் வேஜ்.)

அதனால, உடனடியா அவங்கள இங்கே பிரான்ச் ஆரம்பிக்க சொல்லுங்க, நான் அவங்களுக்கு இங்க கோவில் கட்டறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பு... சென்றுள்ளேன்...

ஜோதிஜி said...

மோடி ஆட்சியில் அதற்குப் பின்னும் பாலும் தேனும் குஜராத்தில் ஓடுகின்றது என்றார்களே சிவா.

G.M Balasubramaniam said...

சாந்தி கியர்சில் என் நண்பர் ஒருவர் வேலயில் இருந்தார் இவர்களால் இத்தனை சலிசாக விற்பனை செய்ய முடிந்தால் சாதாரண்மாகவிற்பனை செய்யும்போது கொ ள்ள் ஐலாபம் வருமோ என்னும் சந்தேகம் வருகிறது

Unknown said...

இந்த பூமி பந்து சுழல இது போன்ற மனித தெய்வங்கள் இருப்பதால் தான்.

Unknown said...

If you're trying to lose weight then you absolutely have to start using this totally brand new custom keto diet.

To create this service, licensed nutritionists, personal trainers, and chefs have united to provide keto meal plans that are powerful, convenient, cost-efficient, and fun.

Since their grand opening in 2019, 1000's of individuals have already remodeled their figure and health with the benefits a professional keto diet can give.

Speaking of benefits: in this link, you'll discover 8 scientifically-tested ones given by the keto diet.

கிரி said...

நான் கோவை சென்று போது பார்த்தேன். பெட்ரோல் பங்க் போனோம் ஆனால், கூட்டம் அதிகம் இருந்ததால், வேறு இடம் சென்று விட்டோம்.

ஒரு நாள் இங்கே சாப்பிட்டு பார்க்க வேண்டும். தற்போது கொரோனா சமயத்தில் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கணும்.

ஜோதிஜி said...

gst வந்தவுடன் அதனை இவர்கள் கட்டுகின்றார்கள். மக்களுக்கு அதே பழைய விலை கிரி.

ஜோதிஜி said...

உண்மை. மனித தெய்வங்கள். சரியான வார்த்தை.

ஜோதிஜி said...

உணவகம் சிறப்பாக நடத்தினால் 50 சதவிகிதம் லாபம்.