Tuesday, February 18, 2020

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

OALP அறிமுகம், பொதுமக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு, திட்ட வகையை Aவீலிருந்து B2விறகு மாற்றியது எனப் பல வகையில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகளுக்கு மத்திய அரசு உதவி வரும் நிலையில் அதை நேரடியாக எதிர்க்கும் முடிவு மிகவும் துணிச்சலானது.

ஆனால்.........

இது சர்வதேச அரசியலுடன் தொடர்புடையது.

மாநில அரசு ஆசைப்படலாம். முயற்சி செய்யலாம்.

முடிவு சாதகமாக முடிய வாய்ப்புகள் மிகவும் குறைவு.






பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்றால் என்ன?

2010க்கு முன்பு மரபு சார்ந்த கச்சா எண்ணெய் எடுக்கும் வழக்கம் இருந்தது. 2010க்கு பிறகு மீத்தேன் எடுக்கும் திட்டம் உருவானது.

2016க்கு பிறகு எண்ணெய் எடுக்கும் கொள்கை மாற்றமானது.

ஒற்றை உரிமம் என்பது உருவானது.
(என்ன வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்)

ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை அடர்த்தி இல்லாத இடங்களில் மட்டுமே எடுக்கப்படும். அப்படித்தான் செயல்படுத்துகின்றார்கள்.

இப்போது 21 லட்சம் ஹெக்டர் அளவுகளிலிருந்து காவேரி டெல்டா மண்டலம் 17 லட்சம் ஹெக்டர் ஆக வேளாண்மை மண்டலம் குறைந்துள்ளது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்றால் விவசாயம் சார்ந்த வேலைகள், தொழில்கள் தவிர வேறு எதற்கும் அனுமதியில்லை.

எடப்பாடி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆனால் எந்த அளவுக்குச் சாதகத்தை உருவாக்கும் என்பது நிச்சயமில்லை.

தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவன உதவியோடு காவேரி டெல்டா மண்டலத்தில் எரிவாயு முதல் மற்ற அனைத்தையும் எடுக்கத் தயாராக இருக்கின்றார்கள். செயல்பட்டுக் கொண்டும் இருக்கின்றார்கள்.

அவர்களுக்குத் தேவை லாபம்.

அரசுக்குத் தேவை அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்த வேண்டும்.

தமிழக அரசியல்வாதிகள் அனுமதி கொடுத்து விட்டு இன்னமும் பித்தலாட்டத்துடன் லாவணி பாடிக் கொண்டேயிருக்க வேண்டும். கூச்சமில்லாமல் இன்னமும் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எதற்கும் ஒரு முடிவு காலம் வரும்... ஆனால் அனைத்தும் "முடிந்தபின்"

கரந்தை ஜெயக்குமார் said...

என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம் ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இதனை வைத்து அரசியல் செய்யப்போகின்றார்களா என்று காத்திருந்து பார்க்கவேண்டும்.

மெய்ப்பொருள் said...

இதை வைத்து கட்சிகள் அரசியல் செய்யலாம் .
மீத்தேன் , ஆயில் என்றெல்லாம் எடுப்பதற்கு பிராக்கிங் (fracking )
பயன்படுத்தபடும் .
உதாரணம் - நைஜீரியா .
ஆயில் எடுத்த கம்பெனிகள் நல்ல லாபம் ஈட்டின .
அதன் பிறகு மக்கள் உயிர் வாழ தகுதி இல்லாத இடம் என்று ஆகிவிட்டது .
மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து செல்கிறார்கள் .
இப்போது தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோடி பேர் கதி என்ன ஆகும் ?

ஆயில் ஒரு முப்பது ஆண்டுகள் எடுக்கலாம் - அதன் பிறகு ?
இல கணேசன் நாடு முன்னேற வேண்டுமானால் சில தியாகம்
செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் . அதாவது இன்னொரு நைஜீரியா !

மக்கள் விழிப்பு அடைந்தால் ஒரு வேளை இதை நிறுத்த முடியும் .
கட்சிகள் , பத்திரிகைகள் போன்றவை அதற்கு விடமாட்டார்கள் .
எதுக்கு எடுத்தாலும் போராட்டம் என்றால் நாடு சுடுகாடு ஆகிவிடும்
என்ற அறிவுரையும் தரப்படும் .