இந்திய அரசின் மொத்த கடன் : ரூ.91,01,484 கோடி (30.9.2019 வரையில்)
2019-20இல் இதற்கு அரசு செலுத்திய வட்டி : ரூ.6,25,105 கோடி
2019-20இல் மத்திய அரசின் பட்ஜெட்டில் விழுந்த துண்டு ; அதாவது வரவுக்கு மேல் ஏற்பட்ட செலவுகளினால் ஏற்பட்ட பற்றாகுறை : ரூ.7,66,846 கோடி
இந்த பற்றாகுறையை ஈடுகட்ட, 2019-20இல் மத்திய அரசு புதிதாக வாங்கிய கடன் : ரூ.7,66,846 கோடி
அதாவது புதிதாக வாங்கும் கடன்களில் 81 சதவீதம், பழைய கடன்களுக்கான வட்டியை கட்டச் செல்கிறது.
2019-20இல் ராணுவ செலவுகள் : ரூ.4,48,820 கோடி
2020-21 பட்ஜெட்டில் ராணுவத்திற்கு ஒதுக்கீடு : ரூ.4.71 லட்சம் கோடி
2020-21 பட்ஜெட்டின் மொத்த அளவு : ரூ.26,98,552 கோடி
நான் கல்லூரியில் எடுத்த தாவரவியல் பாடத்திற்கு விலங்கியல் மற்றும் வேதியியல் துணைப்பாடங்களாக உண்டு என்பதனை கல்லூரிக்குள் நுழைந்த பின்பே அறிந்து கொண்டேன். இனி சுவர் ஏறிக்குதித்து ஓடி விட வாய்ப்பில்லை என்று இரண்டாம் நான் வேதியியல் கட்டிடத்திற்கு உள்ளே சென்றோம்.
ராமசாமி என்ற துறைத்தலைவர் வகுப்புக்குள் வந்தார். கசங்கிய பேண்ட். தேய்க்காத சட்டை. படிய வாரிச் சீவாத சிகை. ஏறக்குறைய சாலைப்பணியாளயர் போலத்தான் எனக்கு முதல்ப் பார்வையில் எனக்குத் தெரிந்தார். அவர் ஓட்டைச் சைக்கிள் ஒன்று வைத்திருந்தார். மெதுவாக நிதானமாக ஓட்டிக் கொண்டு வருவார். அவர் அப்போது வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்திற்கும், அவர் குடும்ப பின்புல வசதி வாய்ப்புகளுக்கும் தொடர்பு இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்.
முதல் வகுப்பில் யார்? எங்கேயிருந்து வந்து இருக்கிறீர்கள்? என்ன பின்புலம்? அறிமுகம் செய்து கொள்ளுங்கள்? போன்ற எவ்விதச் சம்பிரதாயமான கேள்விகளையும் கேட்கவில்லை. ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார். எத்தனை பேர்கள் தமிழ் மீடியத்திலிருந்து வந்து இருக்கிறீர்கள்? என்றார். இரண்டு பேர்களைத் தவிர மற்ற அத்தனை பேர்களும் கையைத் தூக்கினார்கள்.
ஏற்கனவே ஒவ்வொருவரும் ஆர்கானிக், இன் ஆர்கானிக் என்ற பேதி மாத்திரையைப் பார்த்துப் பயந்து போய் இருந்தனர். நாலைந்து கலர் சாக்பீஸ் வைத்திருந்தார். ஒன்றும் பேசாமல் மூலக்கூறுகளை விதவிதமான கலர் சாக்பீஸ் ல் படமாக வரைந்து விட்டு தமிழில் பாடம் நடத்தத் தொடங்கினார்.
மொத்த மாணவர்களும் மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு போல நிசப்த உணர்வோடு ஒன்றாகக் கலந்து அவர் பின்னால் அடுத்த இரண்டு வருடமும் ஓடிக் கொண்டேயிருந்தனர். அன்று முதல் அவரைப் பார்த்த பார்வை என்பதே வேறு.
11,12 வகுப்பில் விபி என்ற வி.பரமேஷ்வரன் என்ற ஆசிரியர் வேதியில் பாடத்திற்கு வருவார். பாடப் புத்தகத்தைத் திறப்பார். முதல் வரியிலிருந்து வாசிக்கத் துவங்குவார். கடைசி வரியில் முடிப்பார். பெல் அடிக்கும். போய் விடுவார். யாருக்குப் புரிந்தது? யாருக்குப் புரியவில்லை? என்ற கேள்விகளுக்கே இடமிருக்காது. பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் ஒற்றை இலக்கம் தான். எப்படி பாஸ் ஆகி வந்தோம் என்றே இன்றைக்கும் ஆச்சரியமாக உள்ளது.
மூன்று நாட்களாக பட்ஜெட் 2020 குறித்த விவாதங்களைத் தொடர்ந்து கண்காணித்த போது, கவனித்த போது, கேட்ட போது எனக்கு ஜெயரஞ்சன் முனைவர் ராமசாமி போலவே தெரிகின்றார்.
என் மகளின் இஷ்ட தெய்வமாக மாறியுள்ளார்.
4 comments:
பட்ஜெட், இஷ்ட தெய்வமானதெல்லாம் இருக்கட்டும்! கடன் வாங்கிக் கல்யாணம் என்கிற மாதிரியான கீனீஷியன் கொள்கையைத் தெரிந்து கொண்டார்களா? பட்ஜெட் பற்றி என்ன சொல்கிறார்கள் ?
அந்தநாள் நகரத்தார் நிதியைக் கையாண்டவிதம் பற்றிக் கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள்!
இவர்கள் இன்னமும் கொண்டாட்ட மனநிலையில் தான் இருக்கின்றார்கள். முழுமையாக மாற்ற முடியவில்லை. நானும் விட்டுப் பிடிக்கிறேன். எந்த சமூக தாக்கமும் இவர்களைத் தாக்குவதில்லை. விரும்புவதில்லை. என்னவொன்று மற்றவர்களை ஒப்பிடும் போது நாட்டு நடப்புகள் அன்றாட நிகழ்வுகளை உள்வாங்கும் அளவிற்கு செய்தித்தாள்கள், முக்கியமான நிகழ்வுகள் அனைத்தும் பார்க்கின்றார்கள். இது போதாது என்று புரிகின்றது. அவர்கள் வயது என்பதனையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதாக உள்ளதே.
ஜெயரஞ்சைன்
தெளிவான பேச்சு
எளிமையான விளக்கம்
அனைவருக்கும் எளிதாக புரியும்படி பேசுவது ஜெயரஞ்சன் அவர்களின் சிறப்பு...
Post a Comment