Thursday, February 06, 2020

காரணம் இது ஜனநாயக நாடு.

வருமான வரிச் சோதனை என்பது அரசியல் சார்புடையது, சார்பற்றது என்பதற்கு அப்பாற்பட்டு அந்தத் துறை இயங்கும் விதங்களைத் தணிக்கையாளர் நண்பர் சொன்ன போது வியப்பாகவே இருந்தது. பழநி பஞ்சாமிர்த முதலாளியின் நிறுவனங்களில் நடத்தப்பட்ட ரெய்டுகள் மற்றும் அதற்காக அதிகாரிகள் கடைப்பிடித்த வழிமுறைகளைக் கேட்ட போது மனதிற்குள் கிலியடித்தது.  




குறிப்பிட்ட தகவல்கள், வந்து சேரும் தகவல்கள், பத்திரிக்கை செய்திகள், அறிவிப்புகளிலிருந்து திரட்டப்படும் தகவல்கள் என்று நான்கு திசைகளையும் பார்த்து, சோதித்து, படிப்படியாக வட்டமாக்கி, வட்டத்தைச் சுருக்கிக் கொண்டே வருதல் என்பது முதல்படி. 

நேரிடையான களப்பணி இரண்டாவது படி.

மறைமுகமாகத் துப்புத் துலக்குதல், இதற்காகக் குழுவினர் பல மாதங்களாக சம்பந்தப்பட்ட இடத்திற்கே சென்று ஆதாரப்பூர்வமான தகவல்களைத் திரட்டுதல் என்பது மூன்றாவது படி.

நான்காவது படியாக அதிகாரவர்க்கத்தின் உச்சத்தின் பார்வைக்குச் செல்கின்றது. 

அதிகாரவர்க்கம் எப்படிச் செயல்படுகின்றார்கள் என்பது தான் பொதுவில் விமர்சனத்திற்கு உள்ளாகின்றது. அதன் பிறகு எடுக்கப்படும் நடவடிக்கைகள் மறைபொருளாக மாறுகின்றது. சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று எளிதான தத்துவம் மூலம் மடை மாற்றப்படுகின்றது.

கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியனைத் திரை உலகத்தில் வெறுக்காதவர்கள் எவருமே இருக்க முடியாது. ஆனால் அவரை விரும்பித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தான் இருக்கின்றார்கள். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தென்னக ராஜாதி ராஜா தான்.

ஏஜிஎஸ் நிறுவனம் ட்விட் தான் இந்த வருமானவரிச் சோதனைக்கு அடித்தளம். சும்மா கிடங்கை ஊதிக் கொடுத்துள்ளார்கள்.

தான் சம்பாரிக்கும் மொத்தத் தொகையில் 30 சதவிகிதத்தை அரசாங்கத்திற்குக் கொடுத்தாக வேண்டும் என்பதனை எம்ஜிஆர் முதல் இன்றைய விஜய் வரைக்கும் கடைப்பிடிக்க வாய்ப்பே இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை என்றாலும் இன்று வரையிலும் இது போன்ற உளுத்துப் போன சட்ட வரைவுகளை எவரும் மாற்ற முன்வருவதே இல்லை.

நடிகர்களுக்கு அறக்கட்டளை சேவை பிடிக்காது. ஆனால் அறிவுரை சொல்ல மட்டும் பிடிக்கும்.

அரசாங்கத்திற்கு பிரபல்யம் பொதுவிடங்களில் அளவுக்கு மீறிப் பேசக்கூடாது.
படம் ஓட எதையாவது பேசித்தான் ஆக வேண்டும் என்பது நடிகர்களுக்குப் பிடிக்கும்.

சிக்கல் ஒரு பக்கமில்லை. ஒவ்வொரு அடியிலும் சிக்கல் தான்.

இதைத்தான் மகான் வடிவேல் "செதில் செதிலா செதச்சுப்புட்டான்யா" என்றார்.

விஜயகாந்த் க்கு ஒரு பிரேமலதா.
விஜய்க்கு ஒரு சந்திரசேகர்.

அள்ளிக் கொண்டு போவார்கள்.
இரு பக்கமும் அமைதியாக இருந்து விடுவார்கள்.

காரணம் இது ஜனநாயக நாடு.

-----------------

இன்றைக்குச் சூடான செய்தியில் இடம் பெறும் பிரசாந் கிஷோர் முதலில் (2010) ராகுலைத் தான் முதல் முதலில் சந்தித்துள்ளார். இந்தியா குறித்த தன் எண்ணங்கள், முன்னேற்றங்கள் குறித்த பார்வை, சுகாதார வசதிகள் எங்கெங்கு குறைவாக உள்ளது என்பதனை சுட்டிக்காட்டி அவரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

மன்மதன் மறுத்துவிட்டார் என்பதனை விட அந்த உரையாடலில் பின்வருமாறு சொல்லியுள்ளார்.

அமேதி தொகுதியில் ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி (11.58 கவனிக்கவும்) மருத்துவமனை கட்டினால் போதாதா? என்று திருப்பி அனுப்பி விட்டார்.
மனம் தளராத விக்கிரமாதித்தன் போல அதே கடிதத்தை ஆட்சியிலிருந்து உலகப் பொருளாதார மேதை என்று இன்று வர்ணிக்கப்படும் 😂மன்மோகன்சிங் இடம் அனுப்பி உள்ளார். குப்பைத் தொட்டிக்குக் கடிதம் போய்விட்ட பின்பே மோடியைச் சந்தித்து உள்ளார். அதன் பிறகு நடந்தது ஊர் உலகமே அறியும்.

இரும்பும் காந்தமும் ஒன்றாகப் பார்த்தால் என்னவாகும்?

நீதி

காங்கு என்பதற்கு நாடு முக்கியமல்ல.

நவீன சாணக்கியன் பிரசாந்த் கிஷோர்


20 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

#எங்கபாட்டிசொத்து என்பதற்குமேல் இந்திராவின் வாரிசுகளுக்கும் ஜனநாயகத்துக்கும் என்ன சம்பந்தம்?

G.M Balasubramaniam said...

இதைப்பார்த்ததும் நண்பர் செல்லப்பா யங்ஞ சாமி எழுது இருந்த பதிவு ஒன்று நினைவுக்குவந்தது நண்பர் வங்கிவேலையில் இருந்தவர் விஷயம்தெரிந்தவராய்த்தான்இருக்க வேண்டும்

வருண் said...

30% இன்கம் டாக்ஸ் ஏன் கட்ட முடியாது னு சொல்றீங்க? எனக்குப் புரியவில்லை. இப்போ விஜய்க்கு 50 கோடி சம்பளம்னா 13 கோடி போக 35 கோடி கையில் வரும். அதே நல்ல அமவ்ன்ட் தானே? நிச்சயம் பே பண்ண முடியும். நம்ம ஊரில் காலங்காலமாக ஏமாத்தி வருவதால் இது முடியாத விசயமாகிவிட்டது.
அன்உ செழியன், ஏ ஜி எஸ் எல்லாம் சரியான டார்கெட்தான்.

வருண் said...

* 15 கோடினு வாசிங்க

ஸ்ரீராம். said...

பழைய சட்டங்களைக்கையில் வைத்துள்ளார்கள் என்பதும் சரி..   அதை மாற்ற முன்வருவார்களா?  அரசங்கம் நடக்கவேண்டும், ஆனால் அதற்கு வரி கட்டமாட்டேன் என்பது என்ன நியாயம்?!

Rathnavel Natarajan said...

மிக்க நன்றி

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பதிவு.

பலரும் வரி ஏய்ப்பு செய்வதையே பெருமையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சட்டங்களைத் திருத்தும் வாய்ப்பு இருந்தும் திருத்த முடிவதில்லை - ஏகப்பட்ட முட்டுக் கட்டைகள்!

ஜோதிஜி said...

பிரதமர் ட்யூப்லைட் என்கிற அளவிற்கு பையன் அறிவு மிளிர்கின்றது. வாரிசுகள் திறமைகளை வளர்த்துக் கொள்வதைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் கில்லாடியாக இருக்கின்றார்கள்.

ஜோதிஜி said...

சுருக்கமாக இவ்வளவு தான் எழுத முடிந்தது. நீங்கள் சொல்வது உண்மை தான்.

ஜோதிஜி said...

வரி ஏய்ப்பு என்பதனை விட இது வேறுசில விசயங்களையும் கொண்டு வந்துள்ளது. இப்போது இது குறித்து பரபரப்பாக சொல்லப்படும் சில தகவல்கள். இது முழுமையாக இருக்கும் என்பதில் சந்தேகம் உண்டு. ஆனால் நிச்சயம் இது இங்கே நடந்து கொண்டு இருக்கின்றது. கீழே கொடுத்துள்ளேன் பாருங்க.

ஜோதிஜி said...

இது வாசித்த செய்தி.

ஜோதிஜி said...

கோடி கோடியாய் கொட்டும் பணம்... ஜேப்பியார் மகளுடன் மதமாற்றத்தில் ஈடுபட்ட விஜய்..? அதிர வைக்கும் ஐடி ரெய்டு பின்னணி..!

வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக நடிகர் விஜய்யை அவரது காரிலேயே அழைத்துச் சென்றதால் மாஸ்டர் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் இறுதிகட்ட படப்பிடிப்பு நெய்வேலி சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக நடிகர் விஜய்யை அவரது காரிலேயே அழைத்துச் சென்றதால் மாஸ்டர் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி சென்னை தி.நகரில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம், வில்லிவாக்கத்தில் உள்ள தியேட்டர் அலுவலகம் உள்பட 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரி ஏய்ப்பு புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்படியே விஜயையும் தூக்கி வந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த ரெய்டு, விஜயிடம் விசாரணை என பின்னணியில் அதிரடி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த நவம்பர் மாதம், ஜேப்பியார் குழுமத்திற்கு உள்பட்ட 32 இங்களில் கடந்த 7-ஆம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் இரவு, பகலாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த அதிரடி சோதனைகளில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் அப்போது கசிந்தன. ரூ.1200 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கணக்கில் காட்டப்படாத பல நூறு கோடிகள் ரொக்கம், கணக்கில் காட்டப்படாத ரூ.350 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க – வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜேப்பியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் நன்கொடை மற்றும் கட்டணங்கள் ரொக்கமாகவே அதாவது கணக்கில் காட்டாத கருப்பு பணமாகவே வசூல் செய்துள்ளனர்.

இந்த பணங்களை பல்வேறு அறக்கட்டளைகள் மூலமாக வெள்ளையாக மாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

நரேந்திர மோடி அரசு, ரொக்க பண பரிவர்தனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருந்த போதிலும், தனியார் கல்வி நிறுவனங்கள், எதுவும் இதை பின்பற்றவில்லை.

ஜேப்பியார் குழும கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல, எஸ்.ஆர்.எம், ஸ்டெல்லா மேரிஸ், லயோலா உள்பட பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம், கட்டணம் மற்றும் நன்கொடை என்ற பெயரில் வாங்கும் தொகைகள், ரொக்க பணமாகவே அதாவது கருப்பு பணமாக வாங்கியது வெளிச்சத்துக்கு வந்தன.

இது ஒருபுறம் இருக்க, என்ஜிஓ என்ற பெயரில் காலம் காலமாக வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கி வந்த பல்வேறு மத மாற்ற கும்பல்கள், பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகளின் பினாமி அமைப்புகள் போன்றவற்றுக்கு, மோடி அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளதால், அவர்கள் இப்போது கல்வி நிறுவனங்கள் நடத்தும் அறக்கட்டளைகள் மூலமாக தங்களின் வெளிநாட்டு பணங்களை கொண்டு வரும் வேலையில் இறங்கி உள்ளன.

ஜோதிஜி said...


மதமாற்ற கும்பல்கள், ஜேப்பியார் கல்வி குழுமத்தின் அறக்கட்டளைகள் மூலமாக, முறைகேடாக வெளிநாட்டு பணத்தை இங்கு கொண்டு வந்துள்ளதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர்.

இது தவிர, மதமாற்ற கும்பல்களுக்கு பின்புலத்தில் இருந்து ஜேப்பியார் குழுமம் இயங்கி வந்துள்ளதையும் அந்த சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்காக சினிமா பிரபலங்களை கொண்ட நெட்வொர்க், கல்வியாளர்களை கொண்ட நெட்வொர்க், பாதிரியார்களைக் கொண்ட நெட்வொர்க், அரசியல்வாதிகளை கொண்ட நெட்வொர்க் போன்றவை இயங்கி வந்ததும் வருமான வரித்துறை கண்டு பிடித்தது. இதில் முஸ்லிம் நண்பர்களையும் இணைத்துள்ளனர். சென்னை லயோலா கல்லூரி இதற்கு வழிகாட்டியாக இருந்ததாகவும் கூறப்பட்டது.

இவர்களில் சினிமா துறையில் உள்ள விஜய், ஆர்யா, இயக்குனர்கள் அட்லி, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரபு சாலமன், இசையமைப்பாளர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், விஜய் ஆண்டணி போன்றவர்கள் முக்கியமாக இருந்து இயங்கி வருவதையும் வருமான வரித்துறை ஸ்மெல் செய்தது.

ஜேப்பியாரின் இரண்டாவது மகள் ரெஜினா இதனை செயல்படுத்தி வந்தது அந்த விசாரணையில் வெளியானது. சினிமா துறையை சேர்ந்த ஒரு பெரும் பட்டாளமே ரெஜினாவின் பின்னால் உள்ளதையும் அறிந்து கொண்டார்கள்.

இவர்களின் மூலமாக ஆண்டுதோறும் சினிமா கலைஞர்களுக்கு என்று சிறப்பு கிறிஸ்தவ ஆராதனை கூட்டம் என்ற பெயரில் வடபழனியில் உள்ள இசையமைப்பாளர்கள் சங்க வளாகத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

இதில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்களை கலந்துகொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் மத்தியில் பிரபலமான மதமாற்ற பாதிரியார்களைகொண்டு மூளைசலவையை அரங்கேற்றி வந்துள்ளனர்.

இதன் மூலம், நடிகை ஆர்த்தி, ரமேஷ் கண்ணா போன்ற ஏராளமான சினிமா பிரபலங்களை மதம்மாற்றி வந்துள்ளனர். இதற்காக பெரிய பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்தது.

இதேபோல, சினிமாவிற்கு மறைமுகமாக பைனான்ஸ் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. நடிகர் விஜயின் பிகில் படத்தை கல்பாத்தி அகோரம் தயாரித்திருந்தாலும் ஜேப்பியார் மகள் ரெஜினாதான் பைனான்ஸ் செய்து கொடுத்துள்ளார்.

அதோடு அந்த படத்தின் மூலம் கிறிஸ்தவ ஜெப மாலை, சிலுவை போன்றவற்றை விஜயின் இந்து ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து, அவர்களை மூளைசலவை செய்யும் ஐடியாவும் ரெஜினாவின் மூளையில் உதயமானதும் அறிய வந்தது. இதற்காக பெரும் தொகை இறைக்கப்பட்டதாக ரகசிய தகவல்.

விஜய் அணிந்திருந்த உடை, சிலுவை, ஜெபமாலை ஆகியவற்றை இலவசமாக வழங்கியதாக கூறப்படுகிறது.

இதனால்தான், விஜயின் பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டபோது, அதில் சிலுவையும், ஜெபமாலையும் இடம்பெற்றதாகவும் ஒரு பேச்சு அடிபட்டது.

ஜேப்பியாரின் மகள் ரெஜினாவின் பங்களாவில் சினிமா பிரபலங்களுக்காக அடிக்கடி பார்ட்டிகளும் நடத்தப்பட்டுள்ளன. இதில் நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குனர் அட்லி, நடிகர் ஆர்யா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டதும் அப்போது வெளிச்சத்துக்கு வந்தது.

இது தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் வருமான வரித்துறையினரிடம் அப்போதே சிக்கி விட்டதாம். நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குனர் அட்லி ஆகியோருக்கு அப்போதே குறி வைக்கப்பட்டு விட்டது. அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் தக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் தான் விஜயை அவரது காரிலேயே வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கையோடு அழைத்து சென்று கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விசாரணையில் இன்னும் என்னென்ன பூதங்கள் கிளம்ப இருக்கிறதோ என இதில் தொடர்புடைய மேலும் பலர் கிலியடித்துக் கிடக்கின்றனர்.

ஜோதிஜி said...

ஆசைகள் வெட்கமறியாது.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

இப்போது கால்பங்கு மாறியுள்ளது.

வருண் said...

***இவர்களில் சினிமா துறையில் உள்ள விஜய், ஆர்யா, இயக்குனர்கள் அட்லி, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரபு சாலமன், இசையமைப்பாளர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், விஜய் ஆண்டணி போன்றவர்கள் முக்கியமாக இருந்து இயங்கி வருவதையும் வருமான வரித்துறை ஸ்மெல் செய்தது.***

இதென்னவோ சுத்தமான கட்டுக்கதை மாதிரி இருக்குங்க. சினிமால உள்ள கிருத்தவர்கள் எல்லாரையும் ஒன்ணா சேர்த்துட்டான் கதை எழுதியவன்.

நான் விஜய்க்கு சொல்வது ஒண்னே ஒன்னுதான். அவர் மதத்தை, அவர் விரும்பும் சாமியை வணங்கலாம். அது அவருடைய ரிலிஜியச் ஃப்ரீடம். இவர் நினைப்பதுபோல் சரியாக வருமான வரி கட்டுவது எல்லாம் பெரிய கஷ்டமில்லை. அதைமட்டும் இவர் ஒழுங்கா செய்தால், யாரும் இவரை எதுவும் செய்ய முடியாது. Honesty is the best policy as well as best politics. It is very easy to do that. இல்லைனா ஒரு பொய்ய சரி செய்ய 100 பொய் அப்புறம் ஆயிரம் பொய் சொல்ல வேண்டிய நிலை வரும். நம்ம ஒழுங்கா இருந்தா எவனுக்கும் பயப்பட வேண்டியதில்லை.

எனக்கென்னவோ அன்புச் செழியன் சவகாசம் இவருக்கு எதுக்குனு புரியவில்லை??? ஊர் உலகத்திலே ஃபைனான்சியரா கிடைக்கலை??

ஜோதிஜி said...

அன்புச் செழியன் மேல் தவறில்லை. அவர் யாரையும் கையைப் பிடித்து என்னிடம் வந்து வாங்கு என்று அழைப்பதில்லை. அவரிடம் உள்ள பலம் 50 கோடி என்றாலும் அப்படியே அந்த நிமிடத்தில் பணமாக கொடுக்கும் வல்லமை உடையவர். பணம் கொடுத்தவன் போடும் சட்ட திட்டத்திற்கு நடந்து தான் ஆகனும். விஜய் அப்பாவுக்கு அளவு கடந்த ஆசை. ஆனால் தைரியமாக களத்தில் இறங்கவும் பயம். மீசைக்கும் ஆசை. கூழுக்கும் ஆசை. இது தவிர அவர் அடிப்படையில் பிள்ளைமார். மனைவி மூலம் மதம் மாறியவர். அவர் மதம் என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு லாபி திரட்ட ஆசைப்படுகின்றார். அது எதிர்வினையாக போய்விடுகின்றது. பாஜக ஆட்சிக்கு வந்ததும் மொத்தமும் எல்லாப் பக்கமும் அடைபட்டு விட்டது.

வருண் said...

***அவர் மதம் என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு லாபி திரட்ட ஆசைப்படுகின்றார்.***

என்னவோ போங்க. ரிலிஜன் கடவுள் வந்து ஒரு பர்சனல் மேட்டர். அதற்கும் பணத்துக்கோ அல்லது அதை வைத்து பணம் திரட்டுவதோ எனக்குப் புரியாத ஒன்னு. இன்னக்கு விஜய்க்கு உள்ள மார்க்கட்டுக்கு இதெல்லாம் தேவையில்லாதது. படத்துக்கு 50 கோடி வாங்கி 35 கோடியை கையில் பெற்று அழகா வாழலாம். இவர்கள் ஆசை அல்லது பேராசை எனக்கு புரிந்து கொள்ள இயலாத ஒண்ணு.

இவர் பி ஜே பி, ஏ டி எம் கே யை விமர்சிப்பதில் (படங்களில் அல்லது தன் கருத்தை முன் வைப்பதில்) தப்பே இல்லை. அப்படி செய்யும்போது தன்னை வரி சம்மந்தப் பட்ட விசயத்தில் "சுத்தமாக" வைத்துக் கொள்வது நலம்.

ஜோதிஜி said...

அரசியல் என்பது படிப்படியாக உணர்ந்து உள்வாங்கி எதார்த்தத்தைப் புரிந்து முன்னேற வேண்டிய துறையது. ஆனால் நம்மவர்களுக்கு வாசிப்பு இல்லை. கற்றுக் கொள்ள ஆர்வம் இல்லை. பொது மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள விரும்பம் இல்லை. மிதமிஞ்சிய செல்வத்தை பகிர்ந்து கொடுக்க மனமில்லை. ஆனால் எளிதாக அதிகாரம் வேண்டும். அதாவது காலையில் எழுந்து குளிர்சாதன வாகனத்தில் சென்று நடிக்கும் போது குளிர்சாதன வசதி உள்ள கேரவன் ல் உட்காரந்து கோப்பு பார்க்க வேண்டும் என்றே அரசியலை கருதுவதால் உருவாக்கும் பிரச்சனையிது.