நெருங்கிய நண்பர்கள் பழகிய பழக்கத்திற்காக அமைதியாக இருக்கின்றார்கள். என் தொடர்பில் தொடர்ந்து பேசிய நண்பர்கள் தடுமாறுகின்றார்கள்.
எப்போதும் பேசும் நண்பர்கள் என்னைச் செல்லமாகக் கடிந்து கொள்கின்றார்கள். காரணம் நான் பா.ஜ.க வை ஆதரிப்பது என்பது அவர்களுக்கு ஆடையில் பட்ட நெருஞ்சி முள் போலத் தெரிகின்றது.
நண்பர்கள் தங்கள் பெயரை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாமல் இல்லாமல் என்னிடம் மல்லுக்கட்டத் தயாராக இருக்கின்றார்கள்.
எந்தப் பக்கம் திரும்பினாலும் பாஜக எதிர்ப்பு என்பது ஏதோவொரு ரூபத்தில் என்னைத்தாக்கிக் கொண்டேயிருக்கிறது. தவறில்லை. இது ஜனநாயக நாடு. அவரவருக்குச் சொந்தக் கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் என்னுடைய கருத்துக்களையும் வெளிப்படுத்துவது என் உரிமை என்று ஏன் எதிரணியர் எடுத்துக் கொள்ள மறுக்கின்றார்கள் என்றே புரியவில்லை.
என்னுடைய நோக்கம் ஒன்றே ஒன்று தான். இன்று ஆண்டு கொண்டிருக்கும் பாஜக ஆட்சியை விட்டுச் சென்றாலும் கவலைப்பட மாட்டேன். ஆனால் இந்தியாவில் இனிவரும் எந்த காலத்திலும் காங்கிரஸ் மட்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதனை மனதார விரும்புகிறேன்.
காரணம் அவர்களின் வழித்தடங்கள் அப்பேற்பட்டது. அது குறித்து பிறகு நாம் பேசுவோம்.
அது கட்சி அல்ல. நிறுவனம்.
நிறுவனத்திற்குக் கொள்கைகள் தேவையில்லை. லாபம் தான் முக்கியம். அந்த லாபமும் குறிப்பிட்ட சிலருக்குத் தான் சென்று சேரும். அவர்களின் வாரிசுகள் மட்டும் தான் அனுபவிக்க முடியும்.
மதச்சார்பின்மை என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இந்த நாட்டை புதைகுழிக்குள் தள்ளிய பெருமை காங்கு என்ற நிறுவனத்தையே சாரும். இஸ்லாமியர்கள் இன்று வரையிலும் கல்வி ரீதியான பெரிய வளர்ச்சி அடையாமல் இருந்ததற்கும், கிறிஸ்துவம் சேவை மனப்பான்மை விட்டு விலகி இன்று கிறிஸ்துவ சமூகத்தில் உள்ள குறிப்பிட்ட தனிநபர்கள் மூலம் மொத்த கிறிஸ்துவ சமூகமும் மனநோயாளியாக மாற்றியதற்கும், இந்திய வெறுப்பை முக்கியமாக்கி மத விருப்பை முன்னிலைப்படுத்தி இன்று புற்று நோய் போலப் பரவியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் காங்கு என்ற கொடிய மிருகம் தான் என்பதனை என்னால் ஆணித்தரமாக எடுத்து வைக்க முடியும்.
பாஜக எதிர்ப்பு குறித்துச் சொல்பவர்களை இப்படி சில வகையாக என்னால் பிரிக்க முடியும்.
1. சிறு, குறு தொழில் செய்தவர்கள். தங்கள் தொழிலில் பாஜக அரசு கொண்டு வந்த சட்ட திட்டங்களினால் பாதிக்கப்பட்டு நட்டம் அடைந்தவர்கள். மீளவே முடியாத துயரத்தில் இருப்பவர்கள்.
2. எல்லாவிதமான சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் பணத்தைச் சம்பாதித்து அரசாங்கத்தின் பார்வைக்குக் கொண்டு போகாமல், காட்டிக் கொள்ளாமல் தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டவர்கள்.
3. அதிகாரத்தைக் கைப்பற்றி, அந்த அதிகாரத்தை வேறு எவரும் கைப்பற்றி விடாமல் இருக்க சகலவித்தைகளையும் கொண்டு கண்கட்டி வித்தைகளாக காட்டிக் கொண்டிருப்பவர்கள். மாநில சுயாட்சி என்ற வார்த்தைக்குள் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருப்பவர்கள்.
4. காலம் காலமாகச் சாதி என்ற இழிவைச் சுமந்து வாழ்ந்து அதிலிருந்து மீண்டு வந்த போதும் பாஜக கொண்டு வர நினைக்கும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற பாசிச நடவடிக்கைக்குள் சிக்கி மீண்டும் நாம் பழையபடி இந்தியா என்ற தேசம் 2000 ஆண்டுகளுக்குப் பின்னால் போய் நின்று விடுமோ? என்று யோசிப்பவர்கள்.
5. இனி நாம் இங்கே வாழ்ந்தால் சாதி மூலம் இழிவைத்தான் சுமக்க வேண்டியிருக்குமோ என்று அஞ்சிக் கொண்டிருப்பவர்கள்.
6. செத்துப் போன சமஸ்கிருத மொழியை உயிர்ப்பிக்க நினைத்து மற்ற அனைத்து மாநில மொழியையும் நசுக்கி விடுவார்களோ என்று பயப்படுபவர்கள், எங்கும் ஹிந்தி எதிலும் ஹிந்து என்று தொடங்கி இந்தியாவின் பன்முகத் தன்மையைக் காவு வாங்கத் தொடங்குகின்றார்களே? என்று ஆதங்கப்படுபவர்கள்.....
7. காலம் காலமாக இங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் வாழ முடியாத சூழலும், அச்சத்திலேயே வாழ்ந்தாக வேண்டிய சூழலை உருவாக்கி விடுவார்கள் என்று அக்கறையுடன் சமூகத்துடன் பார்ப்பவர்கள்.
8. வெளிப்படையான நிர்வாகம் என்ற பெயரில் ஆட்சி புரிகின்றேன் என்று சொன்னாலும் தமிழகத்தில் கடந்த சில வருடங்களில் கைப்பற்றப்பட்ட தொகையும், சோதனைகளும் இன்று என்ன ஆனது? எங்கே போனது? என்று சந்தேகத்துடன் கேள்வி கேட்பவர்கள்?
9. நம் பிரதமர் என்பவர் மொத்த மக்களின் பிரதிநிதி. அவரை மக்களின் சார்பாக ஊடகங்கள் தான் கேள்வி கேட்க முடியும். பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் கேள்வி கேட்ட முடியும்? ஆனால் இவை இரண்டையும் புறக்கணிக்கின்றாரே? என்று யோசிப்பவர்கள்?
இந்த ஒன்பது தவிர வேறு ஏதும் இருந்தால் தெரியப்படுத்துங்கள். நானும் உரையாடத் தயாராக இருக்கின்றேன்.
உங்கள் பெயரில் வாருங்கள். நாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். உங்கள் கருத்துக்கள் எந்த அளவுக்குக் குத்திக் கிழிப்பதாக இருந்தாலும் பரவாயில்லை. ஒவ்வொரு கேள்விக்கும் நான் பதில் அளிக்கத் தயாராக உள்ளேன்.
மோடி போன்ற மன்னாதி மன்னர்களையும் இந்த பூமி பார்த்து விட்டது.
அவர்களின் வாரிசுகள் கூட இருக்கின்றார்களா? இல்லையா? என்று காலம் துடைத்து எறிந்து காணாமல் ஆக்கி விட்டது. அதனால் பயம் கொள்ளத் தேவையில்லை. காலம் மாறிக் கொண்டே தான் இருக்கும்.
முன்பு எங்கும் நடந்த சம்பவங்கள் குறித்து அறிய முறைப்படியான ஆவணங்கள் இல்லை. இப்போது எழுத்து வடிவில், காட்சி வடிவில் ஆவணங்கள் நொடிக்கு ஒரு முறை இங்கே உருவாகிக் கொண்டே தான் இருக்கிறது. மனிதர்கள் மறைந்து விடுவார்கள். ஆனால் உருவான ஆவணங்கள் நிச்சயம் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றும்.
மேலை நாடுகள் அப்படித்தான் வளர்ந்தது. வளர்ச்சி பெற்ற நாடுகளாகவும் மாறியது. நிச்சயம் இந்தியா இப்போது சரியான பாதையை நோக்கித்தான் செல்லத் துவங்கியுள்ளது. சென்று கொண்டேயிருக்கிறது என்ற நம்பிக்கை எனக்குண்டு.
இப்போது நம் முன்னால் இருப்பது இரண்டே கேள்விகள் தான்.
இந்திய நாடு என்பது தனி மனிதர்களின் சொத்தா? இல்லை 130 கோடி மக்களின் வளர்ச்சிக்குப் பாடுபடத் தயாராக இருப்பவர்களை ஆதரிப்பதா?
53 comments:
இங்கே காங்கிரஸ் எதிர்ப்பையே உறுதியாகச் சொல்வதற்கு பிஜேபி ஆதரவு நிலைதான் வழி என்றால் அதைச் செய்வதில் தவறென்ன இருக்கிறது?
பிஜேபிக்கு ஆதரவோ எதிர்ப்போ எதுவானாலும் அது சரியான காரணங்களில் சொல்லப்படவேண்டும் என்பது தான் முக்கியமே தவிர நண்பர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்களோ என்கிரா கவலை அல்ல. நண்பர்கள் புரிந்துகொள்வார்கள்! புரிந்துகொள்ளாதவர்கள் நண்பர்களாக இருக்க லாயக்கானவர்கள் தானா என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும் ஜோதிஜி!
****நண்பர்கள் தங்கள் பெயரை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாமல் இல்லாமல் என்னிடம் மல்லுக்கட்டத் தயாராக இருக்கின்றார்கள். ****
மானுடன் அல்லது தேனுடன் என்றோ அல்லது அனானியாக வருகிறார்கள் போல உங்க நண்பர்கள்.. :)
இரண்டு மனம் வேண்டும்னு கண்ணதாசன் இறவனிடம் வேண்டினார். இப்போ உங்க நண்பர்கள் இரண்டு ஐ டி வேணூம்னு வேண்டி, செயல் படுத்துறாங்க போல.
ஒரு காலத்தில் கருணாநிதியை ஈழத்தமிழர்கள் துரோகினு சொன்னாங்க. ராஜிவை கொன்னதுக்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், ராஜிவை கொன்னதுக்கப்புறம், எம் ஜி ஆர் உயிருடன் இருந்து இருந்தாலும் ஈழத்தமிழர்கள கழட்டி விட்டு இருப்பார் என்பதே உண்மை. இதெல்லாம் தெரிந்து இருந்தாலும் ஈழத்தமிழர் போக பல தமிழ் பற்றாளர்கள் கருணாநிதியை இன துரோகினு சொல்லத் தயங்கவில்லை.
உங்களூடைய பா ஜ க சப்போர்ட்டால் உங்கள சங்கினு சொன்னால ஆச்சர்யப் பட எதுவும் இல்லை.
//இது ஜனநாயக நாடு. அவரவருக்குச் சொந்தக் கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் என்னுடைய கருத்துக்களையும் வெளிப்படுத்துவது என் உரிமை என்று ஏன் எதிரணியர் எடுத்துக் கொள்ள மறுக்கின்றார்கள் என்றே புரியவில்லை. //
ஆம். உண்மை.
//நாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். //
ஆம்.. ஆம்..
இவை இரண்டையும்தான் நானும் சொல்லியிருந்தேன். அல்ப காரணங்களால் நட்பு கெடக்கூடாது என்பதும் என் கருத்து.
இது ஜனநாயக நாடு. அவரவருக்குச் சொந்தக் கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும்.
உண்மை
உண்மை
//எந்தப் பக்கம் திரும்பினாலும் பாஜக எதிர்ப்பு என்பது ஏதோவொரு ரூபத்தில் என்னைத்தாக்கிக் கொண்டேயிருக்கிறது. தவறில்லை. இது ஜனநாயக நாடு. அவரவருக்குச் சொந்தக் கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் என்னுடைய கருத்துக்களையும் வெளிப்படுத்துவது என் உரிமை என்று ஏன் எதிரணியர் எடுத்துக் கொள்ள மறுக்கின்றார்கள் என்றே புரியவில்லை. //
உண்மை அண்ணா.
அவர்கள் நினைப்பதையே நாமும் நினைக்க வேண்டும் என்பது முட்டாள்தனம். அதை இங்கு நிறையப் பேர் செய்கிறார்கள்.
நல்ல பகிர்வு.
// இந்த ஒன்பது தவிர வேறு ஏதும் இருந்தால் தெரியப்படுத்துங்கள். நானும் உரையாடத் தயாராக இருக்கின்றேன் //
பத்து : மனிதம் என்பது எது...? (இது தாங்கள் குழம்(ப்)பிக் கொண்ட ஒன்பதின்(ல்) இருக்கிறதா...?
பத்து +1 : மனி... (விடை வரட்டும்... பிறகு இந்த கேள்வி முழுமையாகலாம்...)
நன்றி...
//உங்கள் கருத்துக்கள் எந்த அளவுக்குக் குத்திக் கிழிப்பதாக இருந்தாலும் பரவாயில்லை.//
ஏற்கனவே எனது தளத்தில் கிட்டத்தட்ட கடைசி 12 பதிவுகளில் குத்தி கிழிப்பது மட்டுமல்ல, குத்தி விழிப்பது எப்படி என்று சொல்லியுள்ளேன்...
உங்கள் பாணியில் அதை சொல்வதென்றால், அதன் 12 பகிர்வுகளை உள்வாங்கினால் உண்மை புரியும்...
புரிந்தால் தொடர்வோம்...
//காங்கு என்ற கொடிய மிருகம் தான் என்பதனை என்னால் ஆணித்தரமாக எடுத்து வைக்க முடியும்...//
அதைவிட ஒரு (பிJP - இது நிறுவனம் இல்லையாம்... ! ஹா...ஹா...)
வெயிட்...
அதைவிட ஒரு பிJP என்ற மிக கொடிய ஜந்து தான் என்பதனை என்னால் ஆணித்தரமாக எடுத்து வைக்க முடியும்...!
எப்படி அண்ணே வசதி...? தொடர்வோமா...?
மறக்காதீர்கள் காங்கு ஒரு போங்கு என்றால்,பிJP அதன் வழியே சென்று நம்மை ஆக்கும் backயு.....!
தொடருங்க. எந்தந்த வழியில் பாஜக ஆட்சிக்கு வந்தபின்பு நீங்கள் பாதிக்கப்பட்டீர்கள்? அல்லது இந்த நாடு பாதிக்கப்பட்டது? ஒன்றன் பின் ஒன்றாக எழுதுங்க. நானும் மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும்.
நான் தனிபட்ட முறையில்(பாஜகாவை)நம்பினேன்,நான் என் வாழ்நாளில் காங்கிராசுக்கு வாக்கு அளிக்க முடியாது தான், ஆனால் எந்த காரணங்களுக்காக காங்கிராசுக்கு வாக்கு அளிக்க முடியாதோ,அதைவிட பாஜகா மோசம்,இந்த ஆட்சியின் அவலம் பின் வரும் காலத்தில் நீங்களும் ஒத்துகொள்வீர்கள், ஒன்றே ஓன்று மக்கள் ஆட்சியில் ஜனநாயகம் கழுத்து நெறிக்கபடுவது உண்மையில் மக்கள்நலன் அல்ல,இங்கு எப்படி எடப்பாடி ஆட்சி தொடருது, உங்கள் மேல் இருக்கும் மதிப்பு மிக அதிகம், உங்கள் மனம்(தரம்)உங்கள் பதிவில் தெரியும்,உங்கள் கருத்து உங்களுக்கு சரி என்பதால் ஒன்றும் தவறு அல்ல, இது ஒன்றும் நாம் நம்மை ஆள முற்றிலும் தவறான ஆட்களையே தேர்வு செய்வதை விட ....
எந்த காரணங்களுக்காக காங்கிராசுக்கு வாக்கு அளிக்க முடியாதோ,அதைவிட பாஜகா மோசம்...........
நான் காங்கு வை வெறுக்கக் காரணம்
1. தங்கள் கட்சியிலே மாநிலத்தில் எவரையும் வளர அனுப்பதில்லை.
2. எந்த மாநிலக் கட்சியும் வளர்ந்து விடக்கூடாது என்ற அக்கறை.
3. சோனியா என்பவர் இந்த நாட்டுக்கு தொடர்பு இல்லாதவர். இந்த நாட்டின் மக்களை கலாச்சாரத்தை வாழ்க்கை முறையை புரிந்து கொள்ள முடியாதவர், விரும்பாதவர்.
4. அவர் ராஜீவ் காந்தியை உணவகத்தில் முதல் முறையாக சந்தித்து தன் காதலை படிப்படியாக வளர்த்து இந்திரா குடும்பத்தில் இடம் பிடித்து, சஞ்சய் குடும்பத்தை படிப்படியாக நகர்த்தியது வரைக்கும் மர்மம் நிறைந்த நிகழ்வுகள்.
5. பத்து வருடம் ஆட்சியில் இருந்த போதிலும் தன் கணவருக்கு நடந்த கொடுமையான நிகழ்வுக்கு உறுதியான இறுதியான முடிவு எடுத்து சம்மந்தப்பட்டவர்களை, சட்டத்தின் பார்வையில் இருந்து தப்பியவர்களை தண்டிக்காமல் விட்டது. அது குறித்து கவலைப்படாமல் இருந்தது.
6. தன் மாமியார், கணவர், தான், தன்னுடைய மகன் என்று அத்தனை பேருக்கும் வாழ்க்கை கொடுத்த தொகுதிகள், உபி என்ற மாநிலம் எந்த நிலையிலும் வளர அனுமதிக்காமல் மக்களை மாக்கள் போல நினைத்துக் கொண்டது. இன்று வரையிலும் அப்படியே இருப்பது.
7. இரண்டாவது ஐந்தாண்டு காலத்தில் தொட்ட அனைத்தும் ஊழல், தொடங்கிய அனைத்தும் ஊழல், என்று எங்கு திரும்பினாலும் கட்சி முழுக்க ஊழல் பெருச்சாளிகளுக்கு தலைவியாக இருந்து வழிநடத்தியது. தானும் அதில் ஒரு அங்கத்தினராக இருந்தது. தன் மருமகனை திடீர் பணக்காரராக மாற்றியது.
8. ஈழ விவகாரத்தில் கையாண்ட அப்பட்டமான துரோக அரசியல்.
9. ஜார்ஜ் புஷ் காலத்தில் அவரின் நாய் போலவே மன்மோகன் சிங் செயல்பட்டது. அவரை அப்படி செயல்பட வைத்த சோனியா. குறிப்பாக அணுவுலை ஒப்பந்தத்தில் கீழ்மட்ட நிலைக்கு கீழிறிங்கி கம்யூனிஸ்ட் எதிர்ப்புகளையும் மீறி பணம் கொடுத்து ஓட்டுப் போட வைத்து ஜனநாயக மாண்புகளை தூக்கி எறிந்து பாதள படுகுழியில் கொண்டு போய் நிறுத்தியது.
10. வடகிழக்கு மாநிலங்களில் எந்த வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்றாமல் அதிகார ஏவல்படைகளை ஏவி காலம் முழுக்க அவர்கள் தீவிரவாதம் பின்னால் சென்றே ஆக வேண்டும் என்று சூழலை உருவாக்கியது.
11. உள்கட்டமைப்பு விசயங்களில் கவனம் செலுத்தாமல் இருந்தது.
12. ஆட்சியை விட்டு வெளியே போன போது எரிபொருள் வாங்கிய வகையில் இரண்டரை லட்சம் கோடி ரூபாயை அப்படியே வைத்து விட்டு கஜானாவை துடைத்து விட்டு சென்றது.
13. 2ஜி ஊழல் முழுக்க திமுக தான் காரணம் என்று கார்னர் செய்தது தாங்கள் தப்பித்துக் கொண்ட புத்திசாலித்தனம்.
இன்னும் என்னால்தொடர முடியும். ஆதி நீங்களும் தனபாலனும் இதே போல எனக்கு அறியத் தாருங்கள்.
உங்களது கருத்தை மனம் திறந்து கூறி, விவாதித்ததை வரவேற்கிறேன்.
கடந்த 5 ஆண்டுகளாக நடந்தவைகளை தான் குறள்களின் துனணயோடு எழுதினேன்... அது போகட்டும்... அவை எக்காலத்திற்கும் பொருந்தும்...
நிகழ்காலத்திற்கு வருவோம் :-
அடிமைகளுக்கு மட்டும் அல்ல இந்த முதல் கேள்வி, அவர்களுக்கு அடிமையாக போகும் அறியாமையாளர்களுக்கும்...
புதிய கல்விக்கொள்(ல்)கை குறித்து...?
() இதுவே என் பதில்...
புரிந்தால் நன்றி...
// நான் காங்கு வை வெறுக்கக் காரணம் //
காங்கு வை அல்ல... பிJP யை
// 1. தங்கள் கட்சியிலே மாநிலத்தில் எவரையும் வளர அனுப்பதில்லை... //
உண்மை... எடுத்துக்காட்டு : பிJP by நம் தமிழ்நாடு
// 2. எந்த மாநிலக் கட்சியும் வளர்ந்து விடக்கூடாது என்ற அக்கறை. //
இதுவும் உண்மை... பிJP by அடிமை மட்டுமே தேவை...
// 3. சோனியா என்பவர் இந்த நாட்டுக்கு தொடர்பு இல்லாதவர். இந்த நாட்டின் மக்களை கலாச்சாரத்தை வாழ்க்கை முறையை புரிந்து கொள்ள முடியாதவர், விரும்பாதவர். //
தறுதலை மட்டும் நம் (தமிழ்நாடு உட்பட) நாட்டிற்கு தொடர்பு கொண்ட மகானா..? மக்களை கலாச்சாரத்தை வாழ்க்கை முறையை புரிந்து கொள்ள - என்ன யோக்கியதை இருக்கிறது...? நேரம் தான் இருக்கிறதா...?
// 11. உள்கட்டமைப்பு விசயங்களில் கவனம் செலுத்தாமல் இருந்தது... //
சூப்பர்... இப்போ இங்கு இந்த உள்ளாட்சி தேர்தல் என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் என்ன ஜி...?
// 12. ஆட்சியை விட்டு வெளியே போன போது எரிபொருள் வாங்கிய வகையில் இரண்டரை லட்சம் கோடி ரூபாயை அப்படியே வைத்து விட்டு கஜானாவை துடைத்து விட்டு சென்றது. //
RBI கஜானாவை அப்படியே கைப்பற்றி விட்டால் (விட்டபின்) சரியாகி விடுமோ...?
// 13. 2ஜி ஊழல் முழுக்க திமுக தான் காரணம் என்று கார்னர் செய்தது தாங்கள் தப்பித்துக் கொண்ட புத்திசாலித்தனம். //
கேள்வியே முட்டாள்களின் அறிவாளி(த்)தனம்...!
மற்றவை (4 to 10)) கதை என்பது உங்களுக்கும் தெரியும்... அதனால் இவை போதும் என்று நினைக்கிறேன்...
நன்றி...
புதிய கல்வி கொள்கையில் பாஜக அரசு வலியுறுத்துவது தொழில் கல்வி மாணவர்களுக்கு வேண்டும் என்கிறார்கள். இதை வரவேற்கிறேன். ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்க முயல்கின்றார்கள். இதை பாரபட்சமில்லாது எதிர்க்கின்றேன். இந்த நாட்டில் கல்வி என்பதனை முற்றும் முழுதாக மாற்ற வேண்டும். இதில் பல சீர்சிருத்தங்கள் கொண்டு வந்தே ஆக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் இவர்கள் அதற்குள் இவர்களுக்கு தேவையான பலவற்றை நாசூக்காக உள்ளே கொண்டு வருவது ஆபத்து. தெரிந்தே பலவற்றை செய்கின்றார்கள். ஆனால் இது வரைவு நிலையில் உள்ளது. முழுமை அடையும் போது அதைப் பற்றி பேச முடியும்.
நீங்கள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருப்பீங்க போல. நாம் உரையாட விரும்புவது இந்தியாவிற்கான பிரதமர் என்ற பதவியையும், அதை ஆளும் பாஜக குறித்து மட்டுமே. இந்தப் பதிவில் மாநில அரசு அதன் நிர்வாகம் குறித்து எந்த இடத்திலும் பேசவே இல்லை. நீங்கள் அதையும் இதையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று பதினெட்டு ஊர் நாட்டார்கள் சார்பாக வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
நீங்க பூடகமா சிலவற்றைப் பேசியிருக்கீங்க. நீங்க தொட்ட விசயங்கள் சரி தான். ஆனால் கேட்ட விதம் வேறுவிதமாக இருக்க வேண்டும். நானாகவே நீங்க சொன்ன சில பாயிண்ட் கள் வைத்து அதன் அடிப்படையில் உங்களுக்கு எடுத்து தருகிறேன். இது சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு.
// 11. உள்கட்டமைப்பு விசயங்களில் கவனம் செலுத்தாமல் இருந்தது... //
சூப்பர்... இப்போ இங்கு இந்த உள்ளாட்சி தேர்தல் என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் என்ன ஜி...?
ஒவ்வொரு வருடமும் மத்திய அரசாங்கம் 3000 கோடிக்கு மேல் ஒவ்வொரு மாநில அரசாங்கத்திற்கும் தனிப்பட்ட முறையில் சில திட்டங்கள் அடிப்படையில் வழங்குகின்றது. அதாவது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு உள்ளாட்சி அமைப்புகள் ஒழுங்காக செயல்படுத்தும் மாநில அரசுக்கு அந்தத் தொகை நிலுவையின்று வந்து சேரும். ஆனால் அதிமுக ஆட்சியில் அந்தத் தொகை வருடந்தோறும் திருப்பி அனுப்பப்படுகின்றது. இது மாநில அரசின் கொள்கை சம்மந்தப்பட்டது. மத்திய அரசு ஒன்றுமே செய்ய முடியாது. பாதிப்பு தமிழக மக்களுக்கு மட்டுமே.
// 13. 2ஜி ஊழல் முழுக்க திமுக தான் காரணம் என்று கார்னர் செய்தது தாங்கள் தப்பித்துக் கொண்ட புத்திசாலித்தனம். //
கேள்வியே முட்டாள்களின் அறிவாளி(த்)தனம்...!
இந்தக் கேள்வி எனக்கு சுத்தமாக புரியவில்லை. என்னைச் சொல்றீங்களா? சோனியாவா? கலைஞரையா? கனிமொழியா? ராஜாவா? ப.சிதம்பரமா? இல்லை இதற்கும் மோடி தான் காரணம் என்று சொல்ல வர்றீங்களா?
// 12. ஆட்சியை விட்டு வெளியே போன போது எரிபொருள் வாங்கிய வகையில் இரண்டரை லட்சம் கோடி ரூபாயை அப்படியே வைத்து விட்டு கஜானாவை துடைத்து விட்டு சென்றது. //
RBI கஜானாவை அப்படியே கைப்பற்றி விட்டால் (விட்டபின்) சரியாகி விடுமோ...?
பாஜக அரசின் சிறப்பான சாதனை என்று நான் கருதுவது. காங் மேல் பழியைப் போடாமல் வெளிநாட்டு கடன் முழுமையும் கட்டி முடித்தது. ஒரு பீப்பாய் 40 டாலருக்கு வந்து போதும் இவர்கள் ஏன் விலையை குறைக்காமல் இருந்ததற்கு இது தான் முக்கிய காரணம். இரண்டாவது அமெரிக்கா மிரட்டலையும் மீறி ஈராக், ஈரானுடன் நம் நாட்டு பணத்தில் பரிவர்த்தனை செய்து கொண்டிருப்பது. இது வரை வந்த எந்த அரசாங்கமும் இது போன்ற காரியங்களில் ஈடுபடவில்லை. ஆர்பிஐ சமாச்சாரம் வேறு. எப்போது அங்கு சர்ப்ளஸ் தொகை என்று தனியாக வைத்திருப்பார்கள். அதை எந்த மத்திய அரசாங்கமும் வாங்க முடியாது. ஆனால் இவர்கள் அதிலும் கை வைத்தார்கள். காரணம் இவர் கனவுத் திட்டமான முத்ரா வங்கி கடன் திட்டத்திற்கு அதில் இருந்து கொடுக்க வேண்டும் என்பதற்காக. இதில் பாதி சுயநலம். தன் ஆட்சி நல்ல பெயர் வர வேண்டும் என்பது. பாதி பொது நலம். கந்து வட்டி கொடுமையில் சிறிய வியாபாரிகள் வெளியே வந்து இந்த கடன் தொகையை பயன்படுத்த வேண்டும் என்பதே. இத்துடன் மற்றொன்று. எப்போதும் எல்ஜசி யில் தனியாக பல லட்சம் கோடி ரூபாய் அனாமத்தாக அப்படியே கிடந்து கொண்டேயிருக்கும். ஆனால் பாஜக அரசு அதில் கை வைத்தார்கள். கடந்த ஐந்தாண்டுகளாக நின்று போன மீட்டர் கேஜ் பிராட் கேஜ் ரயில்வே தடங்களை போட்டார்கள். செப்பனிட்டார்கள். உருவாக்கினார்கள். தெற்கு ரயில்வே மேலாளருக்குதனி அதிகாரம் கொடுத்தார்கள். 500 கோடி வரைக்கும் அவரே எல்லா வேலையையும் எடுத்து செய்ய முடியும். டெல்லி வர வேண்டிய தேவையில்லை. ஆனால் எல்ஜசி யில் வாங்கிய கடனை வட்டியோடு ரயில்வே கட்ட வேண்டும். தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளாக முடிக்கப்படாத பல ரயில்வே திட்டங்கள் நூறு சதவிகிதம் முடிந்துள்ளது.
மீதி கேள்விகள் தர்க்க பூர்வமானவை அல்ல. தனிமனித தாக்குதல்கள்சம்மந்தப்பட்டது. நன்றி வணக்கம்.
சாதாரணமாக நீங்கள் எந்த காரியத்திலும் நடு நிலையில் நின்று இரண்டு பக்க நன்மைகளை தீமைகளை ஆராய்ந்து பதிவு எழுதுபவர். ஆனால் இந்த பாஜக விஷயத்தில் உங்கள் அனுமானங்களை வைத்து காங்கிரஸ் ஆட்சி சரியில்ல. பாஜக மட்டுமே சரியான ஆட்சி நடத்துகிறது என்று தீவிர ஆதரவு பிரச்சாரம் செய்கிறீர்கள். திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம். எனக்கு தோன்றுவது ஒன்றே.
தனிப்பட்ட முறையில் நீங்கள் தற்போதைய அரசின் நெருக்கடியில் மாட்டி இருக்கிறீர்கள். அரசை எதிர்த்தால் வேண்டாத விளைவுகள் வரும். ஆகவே நன்றாக ஆதரித்து அரசின் நட்பெயர் பெற்று சமாதானமாக வாழ இதுவே வழி. நல்லது நடக்கட்டும்.
Jayakumar
நான் பாஜக கட்சி உறுப்பினர் அல்ல. எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. ஓட்டு போடும் சமயத்தில் நிற்பவர் பார்த்து முடிவெடுத்து எப்போதும் தவறாமால் ஒட்டு போடுகின்றேன். மோடி குறித்து அவரின் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள், எண்ணங்கள் செயல்பாடுகள் எதிர்கால நோக்கங்கள் குறித்து நிறைய சந்தேகங்கள் உண்டு. நானும் கவனித்தே வருகிறேன். ஆனால் ஒரு இடத்தில் மாற்றங்கள் உருவாகும் போது, உருவாக்கப்படும் போது பல எதிர்ப்புகள், பல சந்தேகங்கள் உருவாகும். அப்படிப்பட்ட நிகழ்வுகள் இப்போது பாஜக ஆட்சி குறித்து வைக்கப்படுகின்றது. இது என் தனிப்பட்ட எண்ணம். மற்றபடி ஜிடிபி, வேலைவாய்ப்பு, வெளிநாட்டுக் கொள்கை, விலைவாசி ஏற்ற இறக்கம் போன்ற எந்த விசயத்திலும் நான் இன்னமும் கருத்து சொல்லவில்லை. ஒரு விசயத்தில் இந்த ஆட்சி சிறப்பாக செயல்படுகின்றது. தீவிரவாதம் அதனை வளரவிடாமல் தடுப்பதில், கூண்டோடு அழிப்பதில், உருவாக்கும் நாடுகளை உண்டு இல்லை என்று படுத்தி மிரட்டி வைப்பதும், உலக அரங்கில் இந்தியா ஒரு நாடு என்று மதிக்கும் அளவிற்கு மாற்றியது போன்றவற்றில் பாஜக அரசு சிறப்பாக செயல்படுகின்றது. பாஜக வை சுற்றியுள்ள மதவாத அமைப்புகள் எப்போதும் போல மூடத்தனமாக கிறுக்கர்களாக பேசுவதும், உரையாடுவதும், அதையே சரியன்று வாதிடுவதும், மூளை கழன்ற கேசுகள் என்று எளிதாக நான் கடந்து செல்வதுண்டு. அதற்கும் ஆட்சி அதிகாரத்திற்கும் நான் தொடர்பு படுத்திப் பார்ப்பதில்லை. அரசும் அதனை எப்போது எங்கு பயன்படுத்திக் கொள்ள முடியுமோ? அப்போது அதனை பயன்படுத்திக் கொள்ளும். கடைசியாக உங்கள் பார்வைக்கு காங்கிரஸ் என்றாலும் பாஜக என்றாலும் திருபபூர் வளர்ச்சி குறித்து ஏற்றுமதி வளர்ச்சி குறித்தும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை. எடுத்து வைக்கவும் மாட்டார்கள். அவர்களுக்கு வட இந்தியர்கள் தான் அவர்களின் தொழில் தான் எப்போதும் முக்கியம். இந்த நிமிடம் வரைக்கும் திருப்பூர் வளர்ச்சி என்பது கடந்த 20 ஆண்டுகளாக தனி நபர்கள் சார்ந்து தான் உள்ளது. இனியும் அப்படித்தான் இருக்கும். இங்கிருந்து பிடிங்கித் திங்கத்தான் மத்திய மாநில அரசாங்கம். அவர்களால் ஒரு சுக்கும் லாபமில்லை.
31-7-2019 வரை தான் நீட்டிப்பு... ஆனால் அதைப் பற்றி யாரும் எங்கும் எதிலும் சரிவர பேசுவதேயில்லை...
இதனால் வரப்போகும் ஆபத்து, அணுஉலை ஆபத்தை விடப்பெரிது...
இதனால் தான் வெளிப்படையாக அதிகம் விவாதம் செய்வதில்லை... அதே சமயம் மத்திய மாநில அரசுகளைக் குறித்து, குறள்கள் வழியே சொல்லியுள்ளேன்... அதன் ஒவ்வொரு வரிக்கும் கடந்தகால நிகழ்வுகளை (நடந்த +நடந்து கொண்டிருக்கிற + நடக்கப்போகிற அநியாயங்களை) என்னால் சுட்டிக்காட்ட முடியும்...
தாக்குதல்...? ம்ஹிம்...
இப்போதைக்கு நட்பிற்கு முதலில் முக்கியத்துவம்...
எனக்கொரு சின்ன சந்தேகம்...
பாஜக எதிர்ப்பு குறித்துச் சொல்பவர்களைப் பற்றி வகை வகையாக பிரித்து சொன்னவைகள் அனைத்தும் சரி என்றே வைத்துக் கொள்வோம் ...
அவைகளில் எது உண்மை...? எது பொய்...? என்று நீங்கள் சொல்லவில்லை...
அவைகளில் (4 to 9) நடந்து விட்டால், அதற்கான உங்களின் பதில் என்ன...?
1. மேலை நாடுகளில் இரண்டே இரண்டு கட்சிகள் தான் இருக்கின்றது. ஒன்று வலது மற்றொன்று இடது. அதன் கொள்கைகளும் இதற்குள் தான் இருக்கும். இந்தியாவில் அப்படி அல்ல. சிறிய பெரிய என்று ஆயிரம் கட்சிகள் இருக்கும். இது தவிர சாதிக் கட்சிகள் தனியாக இருக்கும். இப்படிப்பட்ட இடியாப்பச் சிக்கலில் 25 வருடங்களுக்குள் ஒரு பெரிய ஆலமரத்தை சாய்த்து ஆட்சியைப் பிடிப்பதும் அவற்றை மீண்டும் தக்க வைப்பதும் சாதாரண காரியமா? திருகுதாள வேலைகள் செய்து தான் மேலே வரமுடியும். அப்படித்தான் பாஜக வந்தது. ரத யாத்திரையை தொடங்கினார்கள். கோத்ராவில் முடித்தார்கள். வந்தார்கள். மீண்டும் வென்றார்கள். தர்மம் நியாயம் அது எங்கோ?
2. நீங்க குறிப்பிட்ட இரண்டு எண்களும் சோனியா தொடர்பானது. அது முடிந்து விட்டது. மன்மோகன் செய்த ஒப்பந்தம் வாழ் நாள் முழுக்க அமெரிக்காவின் கைப்பிடிக்குள் தான் இந்தியா இருக்கும். இருக்க வேண்டும். அணுவுலை விபத்து நடக்காதவரைக்கும் நம் மக்கள் செய்த புண்ணியம்.
3. உங்களிடம் சொல்ல வேண்டிய மற்றொரு விசயம் உள்ளது. நம்மவர்கள் தகுதி என்பது அதன் மூலம் உங்களுக்கு புரிய வாய்ப்பு இருக்கும் என்றே நம்புகிறேன்.
4. பாஜக வின் சென்ற முறை ஆட்சிகாலத்தில் கடைசி ஆறு மாதத்தில் பக்காவாக கல்வி திட்டத்தை உருவாக்கி இப்போது வரைவு என்கிற ரீதியில் வெள்ளோட்டம் விட இப்போது வெளியிட்டு உள்ளனர்.
எந்த அரசியல் கட்சி இதன் சாதக பாதக அம்சங்களை கொண்டு சேர்த்துள்ளது?
எந்த தொலைக்காட்சி ஊடகம் பொது விவாதமாக மாற்றியுள்ளது?
எந்த பத்திரிக்கை தினமும் கட்டுரை வடிவில் கொடுத்து மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்தி உள்ளது?
எந்த கல்விக்கூடங்கள் இதனைப் பற்றி பேசுகின்றது?
எந்த கல்வியாளர்கள் இதனைப் பற்றி பேட்டி மூலம் பேசுகின்றார்கள்?
எந்த ஆசிரியர் சங்கம் இதனைப் பற்றி பேசுகின்றது?
எந்த ஆசிரியருக்காவது எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் இந்த திட்டங்கள் குறித்து தெரியுமா?
ஆங்கிலத்தில் வந்த இந்த வரைவுக் கொள்கையை ஒரு பயலும் தமிழில் மொழி பெயர்க்கவே இல்லை.
தனி நபர்கள் 30 பேர்கள் சேர்ந்து அக்கறையுடன் தமிழிலில்மொழி பெயர்த்து இணையத்தில் கொண்டு வந்து சேர்ந்து மனிதவளத்துறையிடம் இன்னும் பத்து நாட்கள் கொடுங்கள். எங்கள் கருத்தைச் சொல்கின்றோம் என்று கதறிக் கொண்டு இருக்கின்றார்கள்.
இது தான் தமிழகம்
இவர்கள் தான் தமிழர்கள்.
நமக்கு நாம் தான் எதிரிகள்.
அதற்குப் பிறகு தான் பாஜக மோடி ஆர்எஸ்எஸ் இன்ன பிற.
நண்பர்களுக்கு வணக்கம்,
தேசிய கல்விக்கொள்கை 2019 (வரைவு) தமிழில் வெளியிட்டுள்ளோம். சுமார் ஐம்பதிற்கும் மேற்கொண்ட நண்பர்களின் கூட்டு முயற்சியில் இந்த புத்தகம் வெளியாகி உள்ளது. தமிழில் வெளிவந்தால் மட்டுமே இது வெகுவாக சென்றடையும் என்ற நோக்கத்தில் விரைவாக (இரண்டு வாரங்களில்) இந்த முயற்சியினை மேற்கொண்டோம்.
NEP – Tamil – PDF – Download Version 1
நன்றி ,
விழியன் & நாகராஜன் (பாரதி புத்தகாலயம்)
(மொழிபெயர்ப்பு குழு சார்பாக)
http://bookday.co.in/nep_tamil/?fbclid=IwAR0Fg0pjmNT97ZpS2pN6bhgbNjbZX1Q5yQXj3XYUzqjyUghJ2WwvbvEX158
https://bookday.co.in/wp-content/uploads/2019/06/NEP-2019-TAMIL-V01.pdf
அ. ராமசாமி
தேசியக்கல்விக்கொள்கை-2019 -சில குறிப்புகள்
============================== ================
கல்வி அறிவின் அளவுகோலாகத் தேர்வுகள் இருக்கின்றன. தேசியக் கல்விக்கொள்கை -2019 - இந்தப் பொருளில் உருவாக்கப்பெற்றுள்ள வரைவுத் திட்டமும் கல்வியில் அடுத்தடுத்துத் தேர்வுகளைப் பரிந்துரைக்க விரும்புகிறது.
இப்போதிருக்கும் பள்ளிக் கல்வி தமிழ்நாட்டில் 10 +2 என்பதாக இருக்கிறது. சில மாநிலங்களில் 8 +2+2 என்பதாக இருக்கிறது. தமிழ்நாட்டிலும் கூட இப்படி இருந்ததுண்டு. நானெல்லாம் 8+3 என்ற அமைப்பில் பள்ளிக்கல்வியை முடித்தவன். இப்போது அளிக்கப்பட்டுள்ள வரைவு அறிக்கை பள்ளிக் கல்விக்கு 5+3+3 எனப்புதிய அமைப்பைப் பரிந்துரைக்கப்போகிறது. இந்தக் கல்வித்திட்டம் அமைப்பு இந்தியா முழுக்க ஒன்றுபோல இருக்க வேண்டுமெனப் பரிந்துரைக்கின்றது. ஒற்றை இந்தியாவில் ஒரே பண்பாட்டைக் கல்வி மூலம் உருவாக்க முடியும் என நம்புவதின் வெளிப்பாடு இது. அத்தோடு இப்போதிருக்கும் கல்வித்திட்டமும் நடைமுறைகளும் தரப்படுத்துதலைக் கைவிட்டுவிட்டுத் தாராளவாதத்தோடு அனைவரையும் உயர்கல்விக்குரியவராக மாற்றுகிறது என்ற நம்பிக்கையும் இத்திட்ட வரைவை உருவாக்கியவர்களுக்கு இருக்கிறது. இவ்விரு நம்பிக்கைகளையும் பொய்யெனவும் தவறான நம்பிக்கைகள் எனவும் சொல்லிவிட முடியாது.
இந்தியாவை ஒரே பண்பாடுகொண்ட நாடாக ஆக்க வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பலாம். தேவையில்லை; வேண்டாம் எனப் பதில் சொல்லலாம். ஆனால் தரமில்லாத கல்வியைப் பெற்றவர்கள் உயர் பட்டங்களைப் பெற்றுவிடலாமா? என்று கேள்வி எழுப்பினால் அதே போல் "தேவையில்லை; வேண்டாம்" என்று சொல்ல முடியாது. சொல்லமாட்டோம். அங்கிருந்துதான் தரப்படுத்துதல் வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது.தரப்படுத்துதல் என்பதை இந்தியக் கல்வியாளர்கள் - திட்டமிடல் குழுக்களில் இருக்கும் கல்வியாளர்கள் - தேர்வுகள் நடத்தி வடிகட்டுதல் என்பதாகப் புரிந்து வைத்திருப்பதால் வெவ்வேறு நிலையில் தேர்வுகளைப் பரிந்துரைக்கிறார்கள்.
இப்போது இருக்கும் கல்வித்திட்டத்திலும் தேர்வுகள் இருக்கின்றன. ஆனால் ஏறத்தாழ எட்டாம் வகுப்புவரைத் தேர்வில் தோல்வி என யாரையும் நிறுத்துவதில்லை. இந்நிலை காரணமாகத் தேர்வுத்தாள்கள் கவனமாகத் திருத்தப்படுவதில்லை. அதனால் வகுப்பிலுள்ள மாணாக்கர்களுக்கு என்னவகையான உதவிகள், பயிற்சிகள் தேவைப்படும் என்பதும் கண்டறியப்படுவதில்லை. அனைவரும் வெற்றி; அடுத்த வகுப்புக்குப் போகலாம் என்பதால் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனும் நோக்கங்களும் சிதறுகின்றன என்ற வாதங்களில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. எனவே இந்நிலையை மாற்றவேண்டும். ஆசிரியர்களின் பொறுப்புணர்வைக் கூட்டவேண்டும்; திறனை வளர்த்தெடுக்கவேண்டும். அதற்கேற்ற தேர்வு முறைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
இப்போது கொண்டுவரப்பட்டுள்ள கல்விக் கொள்கை புதிய தேர்வுமுறைகளைப் பரிந்துரைக்காமல் புதியபுதிய பாடங்களைப் பரிந்துரைக்கிறது.புதிய பாடங்களில் மொழிப்பாடங்களும் இருக்கின்றன. அறிவுத்துறைப் பாடங்களும்உள்ளன. அறிவுப்புலப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிடத் தூண்டும் தொழில் பாடங்களும் இருக்கின்றன. அவை மரபான குலக்கல்வி மாதிரிகளோடும் இருக்கும்.வரைவு அறிக்கைகளில் சொல்லப்படும் வெளிப்படையான நோக்கங்களும் விளைவுகளும் எப்போதும் ஒன்றுபோல நடப்பதில்லை. மறைக்கப்பட்ட நோக்கங்களே விளைவுகளாக ஆகிவிடுகின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்புவரை கல்வி மறுக்கப்பட்ட மக்கள் திரளைக் கொண்ட இந்த நாட்டில் ‘நானும் படிக்கலாம்’ என்பதை உணர்ந்து விட்ட நிலையிலேயே மறுக்கும் நிலையைத் தரப்படுத்துதலின் பேரால் திசைமாற்றம் செய்வது அவசியமா என்பதையும் நாம் யோசிக்கவேண்டும்.
பள்ளிக்கல்வியிலேயே பல கட்டத் தேர்வுகளை வைத்து வடிகட்டும் நோக்கம் இக்கல்வித் திட்டத்திற்கு இருக்கிறது. அடித்தள மக்களைத் திசை திருப்பும் நோக்கம் அவர்களின் பால் உண்டாகும் கரிசனத்தால் உருவாகவில்லை.. எல்லோரும் உயர்கல்விக்கு உரியவர்கள் அல்ல என்ற நிலைபாட்டிலிருந்து உருவாகியுள்ளது. - புலங்கள் சார் நுட்ப அறிவைப் பெறும் கூட்டம் எனவும் உடல்சார் உழைப்புக்குப் பதிலாக மூளையால் உழைக்கவேண்டியவர்கள் எனவும் வரையறைகளை உருவாக்கிய கோட்பாடுகள் நம்பிக்கை கொண்டவர்கள் அதனைத் திருப்பிக் கொண்டுவர நினைப்பதின் விளைவு இது. தேர்வுமுறைகளில் மாற்றங்களைப் பரிந்துரைக்காமல், வெளிப்படையாகத் தரப்படுத்துதல் நடக்காமல் அடுத்தடுத்து தேர்வுகளை எழுத வைப்பதின் மூலமும் தோல்வி எனச் சொல்வதின் மூலமும் ஒருவரை அறிவுக் குறைவானவர் என நம்பச் செய்துவிடமுடியும்.
அதன் மறுதலையாகப் பெரும்பான்மை மக்களைத் தொழில்சார் அறிவின் பக்கம் திசைதிருப்பும் நோக்கத்தை இக்கல்வித்திட்ட வரைவறிக்கை கொண்டிருக்கிறது.இதனைத் திசைதிருப்பல் என்ற கெட்ட வார்த்தையால் சொல்லாமல் வளர்ச்சிக்கான மனிதர்களை உருவாக்கும் நோக்கம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த முறை பல நாடுகளில் இருக்கும் முறைதான்.ஆனால் அங்கெல்லாம் பிறப்பின் அடிப்படையிலான சாதியின் பெயரால் - மனிதர்களைப் பிரிப்பதும், வாய்ப்புகளை மறுப்பதும் நடப்பதில்லை. இந்தியாவில் அதுமட்டுமே நடந்தது. திரும்பவும் நடக்கும். அத்தோடு அங்கு நடக்கும் தேர்வுகள் முழுமையும் எழுத்துத்தேர்வுகள் அல்ல. தேர்வுகள் மாணாக்கர்களின் திறன்களை அறியும் வாய்மொழித் தேர்வுகளாகவும் குழு விவாதங்களாகவும் இருக்கும். தேர்வுக் கூடங்களுக்கு அப்பால் மேற்கொள்ளும் திட்டப்பணிகளாகவும் இருக்கும். .
இந்தியாவில் இந்தத் தேர்வுகள் பெரும்பாலும் எழுத்துத் தேர்வுகளாக இருக்கின்றன. கல்லூரிக் கல்வியில் தான் திட்டப்பணிகள், வாய்மொழித் தேர்வு போன்றன இருக்கின்றன. அப்படியான தேர்வுகளில் இருக்கவேண்டிய நிபுணர்கள் பற்றிக் கறாரான வரையறைகள் இல்லை. இங்கே எழுத்துத் தேர்வுகளை முடித்து விட்டால் வாய்மொழித் தேர்வுகள் பெரிதாக எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. இப்போது வந்துள்ள பாடத்திட்டம் விவாதப்புள்ளிகள் மட்டும் தந்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் முறைமைக்கு மாறாக இந்தியா முழுமைக்குமான நூல்களையும் உருவாக்கித்தரும். அதனால் மாநில அறிவும் உள்ளூர் அறிவும் பாடங்களில் இடம்பெறாமல் போகும் வாய்ப்புகளே அதிகம். கல்லூரி, பல்கலைக்கழகம் போன்றவற்றின் பாடங்களிலும் பொதுப் பாடத்திட்டங்களைப் பரிந்துரை செய்ய உள்ளார்கள்.
மொழிக்கல்வி, மொழிவழிக் கல்வி இரண்டையும் வேறுபடுத்திப்பார்க்கவில்லை. மொழி என்பது தகவல் தொடர்புக்கான கருவியாக - அமைப்பாக - இருக்கிறது என்பது முதல் புரிதல். அதோடு மொழிதான் ஒருவரது எல்லாவகையான அடையாளத்தையும் உருவாக்குகிறது.தமிழர்களின் இருப்பும் அடையாளமும் அவரது மொழியில் - தமிழ்நாட்டில் தமிழ் வழியாகவே - உருவாகிறது. தமிழைத் தாய்மொழி என்பதைவிடத் தமிழ் நாட்டின் புழங்குமொழி எனலாம். அதன்வழியாக உருவான அடையாளத்தையும் இருப்பையும் வெளிப்பாட்டையும் உலகத்திற்குச் சொல்ல ஒரு மொழி வேண்டும். அது ஆங்கிலமாக இருப்பதில் தமிழர்களுக்கு லாபம். மத்திய இந்தியாவில் இருப்பவர்களுக்குப் புழங்குமொழியாக இருக்கும் இந்தியே இரண்டுமாக இருக்கிறது . அதன் வழியாகத் தொடர்புகொள்ளுதலே போதும் என்பதால் அதை வைத்துக்கொள்கிறார்கள். அதனால் கற்பிக்கும் மொழியாகப் புழங்குமொழி-மாநில மொழி இருப்பதை முக்கியமாகக் கருதவில்லை. அத்தோடு இந்தியை தேசத்தின் அரசு மொழியாகவும் சம்ஸ்க்ர்தத்தை தேசத்தின் பண்பாட்டு மொழியாகவும் நினைப்பதால் அவ்விரண்டையும் அனைவரும் கற்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
இலக்கு, திட்டமிடல், விளைவுகள், பரிந்துரைகள், பற்றிக் கனவுகளை முன்வைத்துக் கவித்துவத்தோடு விரிவாகப் பேசியுள்ள புதிய கல்வித்திட்டம் நடைமுறையைப் பற்றி அதிகம் பேசவில்லை. இவற்றையெல்லாம் மைய அரசின் வசம் வைத்துக்கொண்டு நடைமுறைப் படுத்துவதை மட்டும் மாநில அரசுகளிடம் தள்ளிவிடும் வாய்ப்பிருக்கிறது. இதனை மாநில அரசுகள் புரிதுகொண்டுள்ளனவா? என்று தெரியவில்லை. அவை தான் எல்லாவற்றிற்குமான கட்டமைப்புகளை உருவாக்கவேண்டும். ஆசிரியர்கள் வேண்டும்; பயிற்சிகள் நடத்தவேண்டும்; தேர்வுகள் நடத்தவேண்டும்.
இத்திட்டத்தை மறுதலிக்கும் -எதிர்க்கும்போது ஒவ்வொரு மாநிலமும் அவற்றிற்கான கல்வித் திட்டத்தை உருவாக்கும் விதமாகச் செயல் திட்டத்தை முன்வைக்கவேண்டும். அதற்குக் கல்வி பொதுப் பட்டியலில் இருந்து நீக்கப்படவேண்டும். மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
இதையெல்லாம் சொல்வதற்கு முதலில் கால நீட்டிப்பு வேண்டும். காலநீட்டிப்பைப் பெற நமது நாடாளு மன்ற உறுப்பினர்கள் நாளைக்கே முன்னெடுப்புச் செய்யவேண்டும். வரைவுத்திட்டம் அமுலுக்கு வரும்போது தடுத்து நிறுத்திவிடலாம் என நினைப்பது தும்பைவிட்டு வாலைப்பிடிப்பதாக ஆகிவிடும்.
புதிய தேசிய கல்விக் கொள்கை
- தமிழரை சூழும் ஆபத்து...
ஜாக்டோ- ஜியோ போராட்டங்களின்போது
பொதுவெளியில் ஆசிரியர்கள் குறித்த மிக மோசமான அபிப்ராயங்கள் பரவியிருந்தன. பொதுமக்களின் ஆதரவின்மையால், அரசு அந்தப் போராட்டத்தை மிக எளிதாக ஒடுக்கியது. சமூகத்திலிருந்து ஆசிரியர்கள் தனிமைப்பட்டு நின்ற அவலம் நிகழ்ந்தது.
இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை பதவியேற்ற அவசரத்தில் மோடி அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான உரையாடல்களை ஆசிரியர் சங்கங்கள் நிகழ்த்தி தமிழர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
மாநில சுயாட்சி, சமூகநீதி, மதச்சார்பின்மை, பெண்விடுதலை, இந்தி எதிர்ப்பு என்கிற அரசியல் பாரம்பரியமும், தமிழ கல்வித் துறையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது.
ஆனால் புதிய கல்விக் கொள்கையோ மேற்குறிப்பிட்ட அனைத்து அரசியல் கொள்கைகளையும் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
ஆகவே, ஜேக்டோ ஜியோ புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்த முழுமையான விழிப்புணர்வை ஆசிரியர்களிடம் ஏற்படுத்தவேண்டும். அதன் அடுத்த நிலையாக சமூகத்திடம் கொண்டு
செல்ல வேண்டும்.
தே.க.கொ யின் முதன்மையான நோக்கம் கல்வியை கார்ப்ரேட் மயமாக்குவது, மற்றும் இந்துத்துவா மயமாக்குவது. இதற்குமுன் இந்தியாவில் வெளியிடப்பட்ட இரண்டு தேசிய கல்விக் கொள்கைகள் முக்கியமானவை. ஒன்று ஆங்கில ஆட்சியில் வெளியான மெக்காலே கல்விக் கொள்கை. இது இந்தியர்களை மன அளவில் ஆங்கிலேயர்களுக்கு அடிமையாகத் தயாரிக்க உதவிய கல்விக் கொள்கை. அடுத்தது கோத்தாரி கமிஷன். இது நவீன இந்திய தேசிய கட்டமைப்பை வலுப்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டது.
இப்போதைய தேசிய கல்விக்கொள்கையோ உலகமயம், தாராளமயம் போன்றவற்றிற்கு இசைவாக கல்வியை சேவைத்துறை என்கிற நிலையிலிருந்து நகர்த்தி சந்தைப் பொருளாக்குவது. இந்தியாவெங்கும் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் அடையாளங்களை அழித்து ஒற்றை இந்திய தேசியத்தை (இந்து, இந்தி, இந்தியா) ஏற்றுக் கொள்ளும் சிவிலியன்களாக மாணவர்களைத் தயாரிப்பது என்கிற விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக இதன் ஆபத்துக்களை அறிந்து கொள்வோம்.
1. இப்புதிய கல்விக் கொள்கை மிக அவசரம் அவசரமாக மோடி அரசு பதவியேற்ற சில தினங்களிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. கடந்த பிஜேபி ஆட்சியில் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் அமைந்த குழு தயாரித்த அறிக்கை பிற்போக்கானது எனும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் கஸ்தூரிரங்கன் தலைமையில் இவ்வரைவறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
பழைய அறிக்கையின் அதே சாராம்சங்களை தற்போதைய கஸ்தூரிரங்கன் குழு புதிய சொற்களில் தயாரித்திருக்கிறது. இவ்விரு குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் அபிமானிகள்...
2. இந்திய அறிவுப் பாரம்பரியத்தை மறுகட்டுமானம் செய்வது, துடிப்பான இந்தியாவை உருவாக்குவது, இந்திய மரபை மீட்டுருவாக்கம் செய்வது எனும் அடிப்படையில் தே.க.கொள்கை உருவாக்கப்பட்டிருப்பதாக இவ்வரைவு
அறிக்கை கூறுகிறது. இந்திய சனாதன, வைதீக மரபை உருவாக்குவதையே, இப்படி வெவ்வேறு சொல்லாடல்களில் அறிக்கை தெரிவிக்கிறது. வேத , இதிகாசங்களே இந்திய மரபு என நிறுவ விரும்புகிற அறிக்கையிது.
3. மேலும் எல்கேஜி முதல் இரண்டாம் வகுப்புவரை முன்தொடக்கக் கல்வி. மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை தொடக்கக் கல்வி. ஆறு முதல் எட்டு வரை நடுநிலைக் கல்வி. ஒன்பது முதல் பன்னிரண்டு வரை உயர்நிலைக் கல்வி என தே.க.கொள்கை பரிந்துரைக்கிறது. மூன்று வயதில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது உளவியல் , உடலியல் ரீதியாகக் பாதிக்கக் கூடியது. ஒன்பதாம் வகுப்பிலேயே ஒரு மாணவர் தனது எதிர்காலத்தைத் தேர்ந்தெடுப்பது என்பதெல்லாம் குருவித் தலையில் பனங்காயைத் தூக்கி வைக்கும் செயல்.
4. 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு தேசிய பொதுத்தேர்வை தே.க.கொள்கை பரிந்துரைக்கிறது. இது மாணவர்கள் இடைநிற்றலை மறைமுகமாக ஊக்குவிப்பதாக அமையும் செயல்.
இந்தியா முழுமைக்கும், அறிவியல், கணிதம் போன்ற பாடங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனமே (NCERT) தயாரிக்கும் என்பது மாநிலங்களின் கல்வி உரிமையை காலில் போட்டு மிதிக்கும் செயலாகும். மாநிலப் பட்டியலில் கல்வி எனும் நிலையை தே.க.கொ அழிக்க வழி கோலுகிறது.
5. இப்போது எட்டாவதுவரை கட்டாயத் தேர்ச்சி என்கிற நிலை உள்ளது. இது ஐந்தாம் வகுப்போடு கட்டாயத் தேர்ச்சி என குறைக்கப் பரிந்துரைப்பதோடு, எட்டாவது தவறிய மாணவர்கள் தொழிற் கல்வியில் சேரலாம் எனவும் அறிவுறுத்துகிறது. இது குலக் கல்வியை மறைமுகமாகத் திணிக்கும் செயலாகும்.
6. மாற்றுத் திறனாளிகளின் கல்வி குறித்த சிந்தனை, தொடக்க நடுநிலைக் கல்வியைத் தாண்டி இவ்வரைவு
அறிக்கையில் விவாதிக்கப்படவில்லை.
7. கல்வியைச் சமூகத்தோடு இணைப்பது என்கிற சொற்றொடர் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. பன்மைத்துவம் வாய்ந்த இந்தியச் சமூகம் என்பதன் பொருளில் இச்சொல்லாடல் கையாளப்படவில்லை. இந்துத்துவா மேட்டிமைச் சமூகம் என்னும் மறைபொருளிலேயே இப்பதம் ஆளப்படுகிறது.
8.உயர்க் கல்வியை நவீனப்படுத்துவது எனும் பெயரில் யூ.ஜி.சி, எம்.சி.ஐ போன்ற உயர் கல்வி நிறுவனங்களை ஒழிப்பது. மாறாக கார்ப்ரேட்டுகள் உள்ளே நுழைய ஏதுவாக உயர் கல்வி ஆணையம், உயர் கல்வி கட்டுப்பாட்டு ஆணையங்களை உருவாக்க வழிவகை செய்யவும் தே.க.கொ பரிந்துரைக்கிறது.
9. அறிக்கையில் பாலியல் சமத்துவம் கூடிய சொல்லாடல்கள் இல்லை. Manpower , chairman இப்படி ஆண் பாலாதிக்க சொல்லாடல்கள் கையாளப்பட்டிருப்பதை கல்விப்புலம் சார்ந்த அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
10. கல்வியை சர்வ தேசியமயமாக்குவது எனும் அபிலாஷை, வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆன்- லைன் படிப்புகளை ஊக்குவிக்கின்றன. பெருமளவு கிராம சமூகம் சார்ந்த இந்தியாவின் 80% சதவீத ஏழைகளைப் பாதிக்கக் கூடிய முடிவிது.
11.இட ஒதுக்கீடு குறித்து மௌனம் சாதிக்கும் இவ்வறிக்கை தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தேவை இல்லை என்கிறது. உயர் கல்விக்கு மாணவர்களை சேர்ப்பதில் , ஆசிரியர்களை நியமிப்பதில் தகுதி, திறமை (merit) குறித்தும் போதிக்கிறது.
12. பாலியல் கல்வி சார்ந்த நவீனப் பார்வை வரைவறிக்கையில் இல்லை.
13. அனாதைக் குழந்தைகள், ஊட்டச்சத்துக் குறைந்த குழந்தைகள், விளிம்பு நிலைக் குழந்தைகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டு அக்கறையோடு விவாதிக்கும் தன்மை இவ்வறிக்கையில் சொற்பமாக உள்ளது.
14. குழந்தைகள் பள்ளி வரத் தடையாக இருக்கும் சூழலை அடையாளம் கண்ட அளவு, அவற்றை களைவதற்கான தீர்வுகள், இவ்வரைவு அறிக்கையில் முன்வைக்கப் படவில்லை.
15. மேட்டிமைத் தன்மையோடு 21 ஆம் நூற்றாண்டுக்கு இந்தியக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் நோக்கில் தே.க.கொ தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்து உயர்சாதி நலன்களை, ஏகாபத்திய இந்திய நலன்களை வலிமைப்படுத்துவது, என்பதை முனைப்பாகக் கொண்டிருக்கிறது
இந்த தே.க.கொள்கை.
16. மிகச் சுருக்கமாக சொன்னால் சூத்திரனுக்கு படிப்பு எதற்கு? என்பதை சுற்றி வளைத்துக் கேட்கிறது தே.க.கொ!
17. அறியாமை இருளகற்றி தலித்துகளுக்கு, பின்தங்கியோருக்கு, பெண்களுக்கு கல்வி! என நிமிர்ந்த தமிழகப் பெருமிதத்தை
அழிக்கப் பார்க்கிறது இப் புதிய தேசிய கல்விக் கொள்கை...
தமிழர்கள் விழிப்பதும் மீண்டும் தலை நிமிர்வதும் அவசியம் !
- கரிகாலன்
மாநில சுயாட்சி, சமூகநீதி, மதச்சார்பின்மை, பெண்விடுதலை, இந்தி எதிர்ப்பு என்கிற அரசியல் பாரம்பரியமும், தமிழ கல்வித் துறையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது.
இதில் உள்ள எதையாவது நம் மாநிலக் கட்சிகள் பின்பற்றுகின்றதா?
கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தில் எஸ்டி வகுப்பினருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுவதே இல்லை. இழுத்தடிக்கின்றார்கள். கொடுப்பதே இல்லை. அப்படி கொடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அரசு வேலை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் வந்து விடும் என்பதால்.
பிரபல்யமான குஷ்பு கூட இவர்களிடம் வெல்ல முடியவில்லை. தமிழகத்தில் கனிமொழி தவிர திமுக வில் வேறு பெண்களே இல்லையா. ஜோதிமணி கூட ராகுலின் தனிப்பட்ட பிடிவாதம் காரணமாகவே சீட்டு பெற முடிந்தது. இவர்கள் கடைபிடிக்கும் பெண் விடுதலை என்பது இது தான். இவர்கள் எப்படி பாடத்திட்டத்தை வடிவமைக்க தகுதியானவர்கள்.
கல்வியை கார்ப்ரேட் மயமாக்குவது, மற்றும் இந்துத்துவா மயமாக்குவது. இதற்குமுன் இந்தியாவில் வெளியிடப்பட்ட இரண்டு தேசிய கல்விக் கொள்கைகள் முக்கியமானவை. ஒன்று ஆங்கில ஆட்சியில் வெளியான மெக்காலே கல்விக் கொள்கை. இது இந்தியர்களை மன அளவில் ஆங்கிலேயர்களுக்கு அடிமையாகத் தயாரிக்க உதவிய கல்விக் கொள்கை. அடுத்தது கோத்தாரி கமிஷன். இது நவீன இந்திய தேசிய கட்டமைப்பை வலுப்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டது.
இது தான் உண்மையான நிலவரம். இவர்கள் கொள்கை என்ற பெயரில் அப்படியே சொல்லி உள்ளார்கள். ஆனால் இப்படி எதுவும் சொல்லாமல் எல்லாக்கட்சிகளும் கல்வியை காசாக்கும் கலையை கற்று வைத்து தானே சந்துக்கு நாலு கல்லூரிகள் பள்ளிகள் கட்டி சேவை செய்து கொண்டு இருக்கின்றார்கள். சமூகநீதி பற்றி பேசும் தனியார் பள்ளி கல்லூரிகள் நடத்தும் அரசியல்வாதிகள் ஏன் தங்கள் பள்ளி கல்லூரிகளில் நிறைவேற்ற முன் வருவதில்லை.
இந்திய சனாதன, வைதீக மரபை உருவாக்குவதையே, இப்படி வெவ்வேறு சொல்லாடல்களில் அறிக்கை தெரிவிக்கிறது. வேத , இதிகாசங்களே இந்திய மரபு என நிறுவ விரும்புகிற அறிக்கையிது.
பாஜக எதிர்காலத்தில் அழிந்தால் இந்தக் கொள்கை தான் காரணமாக இருக்கும். மறுக்க முடியாத உண்மையிது.
ஒரு மாணவர் தனது எதிர்காலத்தைத் தேர்ந்தெடுப்பது என்பதெல்லாம் குருவித் தலையில் பனங்காயைத் தூக்கி வைக்கும் செயல்.
இவர்கள் குருடர்கள் தான். இப்போது தான் தெரிகின்றதா? என் மகள் பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் படிக்கின்ற பாடங்கள் அனைத்தும் நான் கல்லூரியில் கூட கற்றுக் கொள்ளாத பாடங்கள். இது தான் கடந்த சில வருடங்களாக உள்ளது. அப்போதே இவர்கள் பொங்கியிருக்க வேண்டுமே? இப்போது தான் தனியார் பள்ளிகள் தனியான பாடத்திட்டம் என்கிற கொடுமையான நிலையில் இருந்து இப்போது வெளிவந்துள்ள புதிய பாடத்திட்ட கொள்கைக்கு வந்துள்ளார்கள். இதுவே அதிகம் தான். ஆனால் நுழைவுத்தேர்வு என்ற மாயமானை துரத்த இதற்குள் நுழைந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் தான் ஒவ்வொரு மாணவர்களும் இருக்கின்றார்கள்.
4. 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு தேசிய பொதுத்தேர்வை தே.க.கொள்கை பரிந்துரைக்கிறது. இது மாணவர்கள் இடைநிற்றலை மறைமுகமாக ஊக்குவிப்பதாக அமையும் செயல்.
இதில் நல்லதும் உள்ளது. கெட்டதும் உள்ளது. ஆல் பாஸ் என்கிற ரீதியில் ஒன்பது வகுப்பு வரைக்கும் மாணவர்களால் எழுத படிக்க வாசிக்க முடியாத அளவுக்கு பத்தாம் வகுப்பு உள்ளே வருகின்றார்கள். மாணவர்கள் தங்கள் அறிவை வளர்க்க வாய்ப்பில்லை. ஆசிரியர்கள் தங்கள் கடமையைச் செய்யத் தவறி விடுகின்றார்கள். ஐந்தாம் வகுப்பு வரைக்கும் எழுத படிக்க என்கிற ரீதியில் இருக்க வேண்டும். மொழியறிவு அடிப்படைக் கணிதம் புரிதல் போன்றவற்றை சோதிக்க இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வந்தே ஆக வேண்டும்.
இந்தியா முழுமைக்கும், அறிவியல், கணிதம் போன்ற பாடங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனமே (NCERT) தயாரிக்கும் என்பது மாநிலங்களின் கல்வி உரிமையை காலில் போட்டு மிதிக்கும் செயலாகும். மாநிலப் பட்டியலில் கல்வி எனும் நிலையை தே.க.கொ அழிக்க வழி கோலுகிறது.
அனைத்து நுழைவுத் தேர்வுகளும் என்சிஆர்டி பாடத்திட்டத்தின் அடிப்படையில் தான் தற்போது உருவாக்கப்படுகின்றது. ஆனால் இதில் உள்ள பாதகம் என்னவென்றால் அந்தந்த மாநில விபரங்கள் சேர்க்கப்படாமல் குழுவினர் விரும்பும் அளவிற்கு மாற்றி திருத்தி வரலாற்றை மாணவர்களிடம் கொண்டு சேர்த்து விடக்கூடிய அபாயம் உள்ளது. எந்த மாநில அரசும் இதனை ஏற்காது. எப்படி சட்டமாக்க மாறப் போகின்றது என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இது குறித்து நம் கல்வித்துறை வாய் திறக்காமல் இருக்கின்றது. உலகளாவிய தேசியத் தேர்வுகளுக்கு இது உதவக்கூடியதாக இருக்கும். இன்னமும் 60 சதவிகித கிராமப்புற மாணவர்களுக்கு அடிப்படைக் கட்டமைப்பு கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இது சாவு மணி அடிக்கும்.
5. இப்போது எட்டாவதுவரை கட்டாயத் தேர்ச்சி என்கிற நிலை உள்ளது. இது ஐந்தாம் வகுப்போடு கட்டாயத் தேர்ச்சி என குறைக்கப் பரிந்துரைப்பதோடு, எட்டாவது தவறிய மாணவர்கள் தொழிற் கல்வியில் சேரலாம் எனவும் அறிவுறுத்துகிறது. இது குலக் கல்வியை மறைமுகமாகத் திணிக்கும் செயலாகும்.
குலக்கல்வி என்ற வார்த்தையை வைத்து இங்கே பலரும் கும்மி அடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஒரு பொறியியல் கல்லூரி மாணவர் வெளியே வரும் போது அவனுக்கு கற்ற கல்விக்கும் அவன் செயல்முறையில் கற்றுக் கொள்ள வேண்டிய நடைமுறைக்கும் தொடர்பு இல்லாமல் குப்பை போலவெளியே வருகின்றான். அவன் எப்படி சந்தையில் விலை போவான். 77 ஆண்டு கால இந்தியாவின் வளர்ச்சியில் இப்போது வீடு கூட்டும் விளக்குமாறு கூட சீனாவில் இருந்து வரத்துவங்கியுள்ளது. 60 சதவிகித வெளிநாட்டு பொருட்கள் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகிறோம். காரணம் இங்கே தொழில் கல்வியை நாம் முறைப்படுத்தவில்லை. நீங்களும் நானும் பத்தாம் வகுப்பு முடித்த போது ஐடிஐ படிப்பு எவ்வளவு மதிப்பு மிக்கதாக இருந்தது. தனியார் வியாபாரிகள் வந்தார்கள். எல்லாவற்றையும் ஒழித்துக் கட்டினார்கள். 90 சதவிகித குப்பைகளை உருவாக்கி வெளியே தள்ளினார்கள். பத்து சதவிகிதமும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்கள். பத்தாம் வகுப்பு முடித்தவுடன் மற்ற நாடுகள் போல தொழில் கல்வி, கட்டாய ராணுவ சேவை, சமூகத்துடன் தொடர்பு உருவாக்கும் கட்டாய நிகழ்வில் பங்கேற்றுதல் இது போன்ற பலவற்றை இங்கே உருவாக்கியே ஆக வேண்டும். நாம் நீதிக் கதைகள் படித்து வந்தோம். இன்னமும் கொஞ்சம் பயத்துடன் தான் வாழ்கிறோம். இப்போது உள்ள மாணவர்களுக்கு எந்த நீதிக்கதை தெரிகின்றது? அவர்கள் காலம் வேறு? என்று எளிதாக கடந்து போவதால் பத்தாம் வகுப்பு மாணவி காதலிக்க சம்மதிக்க மறுத்த காரணத்தால்கழுத்தை அறுத்து கொலைசெய்யும் அளவிற்கு மாணவர்களின் மனோபாவம் மாறியுள்ளது. ஒரு எலெக்ட்ரிசியன் வீட்டுக்கு குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு வர முடியுமா? ஒரு கிரைண்டர் ரிப்பேர் செய்பவர் உடனே வருவார் என்று எதிர்பார்கக முடியுமா? கடந்த பத்து வருடங்களில் அடிப்படைத் தொழில்களை கற்றுக் கொள்வதும், அது சார்ந்த துறைகளில் ஈடுபடுவதும் குடும்பத்தினரே வெறுக்கும் அளவிற்கு இந்த சமூகம் மாறியுள்ளது. எல்லோருக்கும் ஏசி ரூம். எல்லோருக்கும் ஒயிர் காலர் ஜாப். எல்லோருக்கும் சிஈஓ பதவி. இது மாற வேண்டும். மாற்றியே ஆக வேண்டும்.
6 முதல் 17 வரைக்கும் உள்ள அனைத்தும் அரசியல் கட்சிகள் அரசியல் செய்ய உதவக்கூடியது. எதார்த்த நடைமுறையில் வாய்ப்பே இல்லாதது.
1. ஒரு பள்ளர் பறையரை திருமணம் செய்ய விரும்புவதில்லை. அதே போல ஒரு பறையர் பள்ளரை திருமணம் செய்ய நினைத்துக் கூட பார்க்க மாட்டார். இவர்கள் இருவரும் ஒரு அருந்ததியரை திருமணம் செய்வது கொலைபாதக செயல் எனக் கருதுவார். காரணம் என்ன?
2. அரசாங்கம் மாறிக் கொண்டேயிருக்கும். அரசியல்வாதிகளும் மாறுவார்கள். முன்பு கல்வி என்பது அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது இந்தியா முழுக்க 60 சதவிகிதம் தனியார் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. எத்தனை தனியார்பள்ளி கல்லூரிகளில் அவரவர் மனசாட்சிக்கு உட்பட்டு இட ஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்படுகின்றது?
3. மொழி மதம் போன்றவற்றைக் காரணம் காட்டி சிறப்பு சலுகைகள் பெற்ற கல்வி நிறுவனங்கள் எத்தனை இடங்களில் அந்த சலுகையின் பொருட்டு தங்கள் மதம் சாதி சார்ந்த மக்களுக்கு காசு வாங்காமல் கல்வியை போதிக்கின்றார்கள்.
4. இந்துத்துவா கொள்கையை எதிர்க்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கிறிஸ்துவ பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்கள் விருப்பப்படி கிறிஸ்துவ பாடல்கள், மதப் பிரசங்கம் போன்றவற்றை இன்னமும் நடத்திக் கொண்டு தான் இருக்கின்றார்கள். அதே பள்ளியில் இந்து மற்றும் முஸ்லீம் மாணவ மாணவியரும் படிக்கத்தானே செய்கின்றார்கள். அங்கே மதச்சார்பின்மை பற்றி யாரும் பேசுவதில்லையே? இது போன்ற பள்ளியில் நீங்க சொன்ன இட ஒதுக்கீடு இல்லை. அரசின் எந்த சட்டதிட்டமும் செல்லாது. வரி விலக்குஉண்டு. என்ன செய்யலாம்?
தமிழகத்தில் பிறந்து வாழ்ந்து படித்த முஸ்லீம் மாணவர்கள் எங்கள் மொழி உருது. நாங்கள் அதில்தான் பரிட்சை எழுதுவோம் என்று சமீபத்தில் போராட்டம் செய்தார்களே? அவர்களை என்ன செய்யலாம்?
மோடி தமிழகத்தில் உள்ள கட்சி பிரச்சனைகளை சரி செய்து, ஹைட்ரோ கார்பன், கெயில் போன்றவற்றை கை விடாதவரை முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.
இந்தி திணிப்பு அடிக்கடி வந்து வாபஸ் வாங்கி விடுகிறார்கள் என்றாலும், சீண்டிக்கொண்டே இருக்கிறார்கள். எரிச்சலாக உள்ளது.
இது தவிர்த்து பல நல்ல திட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார். வரவேற்கிறேன்.
இங்கே மோடியை வைத்தே பல தவறுகள் மறைக்கப்படுகின்றன. இதை உணராமல் அவர்களுக்கு பாஜக வினர் எடுத்துக்கொடுப்பது இங்குள்ளவர்களுக்கு வசதியாக உள்ளது.
ஆட்சியின் நோக்கம் மக்கள் நலனைவிட பெருமுதலாளி நலன்,
பணமதிப்பிழப்பு நோக்கம் என்னவாக சொல்லப்பட்டது , நடந்தது என்ன ?,
மேக் இன் இந்தியா திட்டம், உற்பத்தி எங்கும் எதிலும் உயர்வு உண்டா?,
நீதித்துறையில் அரசு உச்சபச்ச தலையிடு ,
ஸ்மார்ட் சிட்டி - சிரிப்புதான் வரும் ,
தூத்துக்குடி சம்பவம் ,
இந்துத்துவமுகம் நாட்டு நலனுக்கு உகந்ததா ?
அரசியல் வெற்றியை ஒத்துகொள்கிறேன் ,அரசு தோல்வியே,
முற்றிலும் உண்மை.
உங்களுக்குச் சற்று விரிவாகவே பதில் அளிக்க விரும்புகிறேன். அப்போது தான் நீங்களும் நானும் எந்தப் புள்ளியில் இருக்கின்றோம் என்பதனை புரிந்து கொள்ள முடியும்?
1. தற்போதைய அரசியல் என்பது மக்கள் நலன் சார்ந்தது அல்ல. இது இந்தியாவில் மட்டுமல்ல. உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பெரு முதலாளிகளின் விருப்பத்தின் அடிப்படையில் தான் எல்லாமே நடக்கின்றது. பாஜக இடத்தில் நாளை காங்கு வந்தாலும் இதே நிலை தான். உங்களால் மறுக்க முடியுமா? ஆனால் இதனை மோடி தந்திரமாக ஏணி போலப் பயன்படுத்தி ஏறிவந்து விட்டார்.
2. பணமதிப்பு குறித்து அவர் என்ன சொன்னார் என்பதனை ஏன் நீங்கள் நம்புகிறீர்கள்? நான் அந்த எட்டாம் தேதி மாலை தொடங்கிய நாள் முதல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு ஊடகங்கள் வழியாகக் கவனித்துக் கொண்டே வந்தேன். அவர் பணமதிப்பு இழப்பு உருவாக்கியதற்கு உண்மையான காரணங்கள் வெவ்வேறு. நான் புரிந்து கொண்டதை, பலருடன் உரையாடிப் புரிந்தவற்றை, பலவற்றைப் படித்துத் தெரிந்து கொண்டதை நான் இங்கே எழுதுகிறேன். சர்வதேச அரசியல், பொருளாதாரம் குறித்த கட்டுரைகளை உன்னிப்பாகக் கவனித்துப் படித்து வந்தவர்களுக்கு மட்டுமே இதன் சூட்சமம் தெரியும். முக்கியமான தணிக்கையாளர்கள் இதனை அவர்கள் அப்படியே ஒப்புக் கொண்டனர். ஆனால் யாருடனும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இல்லை. அரசியல்வாதிகளுக்கும் தெரியும். ஆனால் இரத்தம் சுண்டிப் போய் இருந்தார்கள். பணமதிப்பு இழப்பு மூலம் மோடி ஒரே கல்லில் பல மாங்கனிகளை அடித்துப் பெற்றுக் கொண்டார் என்பது தான் உண்மை. அதில் பாதி சுயநலம். பாதி பொது நலம். (இந்திய மக்கள் கஷ்டப்பட்டார்கள் என்பதனை சராசரி நபர் கோரிக்கை போல எடுத்துக் கொண்டு வரவேண்டாம்)
அ) 70 வருட ஆலமரத்தைச் சாய்த்து ஆட்சியை பிடித்தாகி விட்டது. ஆனால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் மாநிலக் கட்சிகள் ஏராளமாக உள்ளது. பாஜகவின் அஜண்டா என்பது ஒரே தேசம் ஒரே கொள்கை, ஒற்றை ஆட்சி. இதற்கு இடைஞ்சலாக இருப்பது மாநிலக் கட்சிகள். ஒவ்வொருவரும் அவரவர் அளவிற்குப் பல வகையில் பணம் வைத்திருக்கின்றார்கள். இது தான் இவர்களை இயக்க வைத்துக் கொண்டு இருக்கின்றது. என்ன செய்வது? இந்த திட்டத்தின் முதல் நோக்கம் வெற்றி. மோடி அறிவித்த நாளில் அருண் ஜெட்லி சிறைக்கைதி போலவே உள்ளே வைத்திருக்கப்பட்டார். நிதியமைச்சரான அவருக்கே முழு விபரம் சொல்லப்படவில்லை. பிரதமர் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப் போகின்றார். எவரும் வெளியே செல்ல முடியாது என்கிற ரீதியில் மொத்த நிதியமைச்சக அதிகாரிகளை உட்கார வைத்திருந்தனர். தொலைக்காட்சியில் மோடி பேசிய பின்பு தான் அரசாங்கத்தின் உயர் மட்டத்திற்கே தெரிய வந்தது. அந்த அளவுக்கு இந்த விசயத்தில் ரகசியம் காக்கப்பட்டது. டெல்லியில் மாயாவதி மட்டும் இருபதுக்கும் (அவர்கள் கட்சி சார்ப்பாக, தனிப்பட்ட பெயர்கள், அறக்கட்டளை பெயர்கள்) மேற்பட்ட கணக்குகள் மூலமாக என்னன்னவோ மாற்ற முயன்றார். தேற்ற முடியவில்லை.
இதே போல இந்தியா முழுக்க ஒவ்வொரு அரசியல் கட்சிகளும். நன்றாகக் கவனிக்கவும் நான் மக்களை இந்த இடத்தில் கொண்டு வரவே இல்லை. அரசாங்கத்தின் முதல் நோக்கம் இதுவே. ஒவ்வொருவரும் பாதிக்குப் பாதி தான் தேற்ற முடிந்தது. மற்றது முழுவதும் காகிதமாக மாறிவிட்டது. படிப்படியாக வெவ்வேறு காரணங்கள் சொல்லி மாற்றுவதைத் தடுத்தார்கள். அவர்களுக்கு விரித்த வலையில் மக்கள் செத்து சுண்ணாம்பாகி தெருவில் வந்து நின்று புலம்பிச் செத்தும் போனார்கள்.
திருப்பூரில் பல வங்கிகள் இரவு முழுக்க இயங்கின. இருபது சதவிகித கமிஷன் என்று தொடங்கியது. நள்ளிரவில் 40 சதவிகிதம் வரைக்கும் வந்து நின்றது. வங்கி அதிகாரிகள் லம்பாகத் தூக்கினார்கள். இங்குள்ள முதலாளிகள் பாதிக்குப் பாதி காப்பாற்றிக் கொண்டார்கள். இதே போல இந்தியா முழுக்க.
இந்த இடத்தில் மற்றொரு விசயத்தை நாம் பேசியாக வேண்டும்.
இத்தனை ஆயிரம் கோடிகள் புழக்கத்தில் உள்ளது. முந்தைய காங்கு அரசாங்கம் மற்றும் ஆர்பிஐ சொன்ன கணக்கின் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டார்கள்.
ஆனால் முதல் இரண்டு நாட்கள் எவ்வளவு மாற்றப்பட்டது என்று சொன்னார்கள். அடுத்த நாலைந்து நாட்கள் சொன்னார்கள். நன்றாக ஊடகத்தைக் கவனித்து இருந்தீர்கள் என்றால் அடுத்த வாரம் மத்திய அரசாங்கம் வரும் கணக்கை வெளியிடவே இல்லை. காரணம் என்ன?
காங்கு செய்த மொள்ளமாறித்தனம் வெளியே வரத்துவங்கியது. அதாவது பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தமுடியாமல் ஒரே சீரியலில் பணத்தை அடித்துத் தள்ளியிருக்கிறார்கள். சொன்ன கணக்கு வேறு. உண்மையான கணக்கு வேறு. அரசாங்கம் வாயைப் பொத்திக் கொண்டது. வெளியே தெரிந்தால் முதலீடு செய்துள்ள அந்நிய நிறுவனங்கள் காறித் துப்பி விட மாட்டார்களா? சமாளிக்கத் தொடங்கி விட்டார்கள். இதையும் வைத்து ப சிதம்பரம் பேட்டி மூலம் வார்த்தை விளையாட்டு காட்டிக் கொண்டு இருந்தார். ஒரு வேளை மோடி முழுமையாக விபரத்தை விவகாரத்தை வெளியே சொல்லியிருந்தால் என்னவாகும். மொத்தமாக இந்திய பண மதிப்பு அதலபாதாளத்திற்குப் போய் நின்று இருக்கும். பாவத்தை முழுக்க ஏற்றுக்கொண்டார்.
காங்கு ஆட்சியில் மற்றொரு விசயம் நடந்தது. நாசிக் ல் பணம் அடிக்கும் பழைய எந்திரங்களை (பழைய பொருட்கள் என்கிற ரீதியில்) இணையம் வழியாக டெண்டர் விட்ட போது அதனைப் பாகிஸ்தான் நபர் எடுத்தார்.
இப்போது வேறு சில விசயங்கள்.
வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அனைத்து மாநிலங்களும் பக்கத்து நாடுகளுடன் வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் நெருக்கமான தொடர்பில் உள்ளது. தீவிரவாதம், போதைப் பொருள் கடத்தல், ஹவாலா பரிவர்த்தனை, ஆயுத கடத்தல் முதல் ஆள் கடத்தல் வரைக்கும் மிக மிக அதிகம். இந்தியப் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட பங்கு இவர்கள் கட்டுப்பாட்டிலிருந்தது. காஷ்மீர் முழுக்க பாகிஸ்தான் நம் பணத்தை அடித்து உள்ளே அனுப்பிக் கொண்டேயிருந்தது. நம் நாட்டைச் சுற்றி மூன்று புறமும் தண்ணீர் என்பது போல நான்கு புறமும் எதிரிகள். இந்த பணமதிப்பு மூலம் மொத்தமாக ஆப்பு. அந்த சமயத்தில் காஷ்மீரில் மயான அமைதி நிலவியது. இதன் தொடர்ச்சி இன்று பாகிஸ்தான் அரசு ஊழியருக்குச் சம்பளம் போடவே திண்டாடித் தடுமாறிக் கொண்டு இருக்கின்றது. காரணம் அவர்கள் முழுக்க முழுக்க இரண்டாம் தர வேலைகளின் மூலமாகத்தான் சம்பாரித்துக் கொண்டிருந்தார்கள். அரசாங்கமே அப்படித்தான் செயல்பட்டுக் கொண்டு இருந்து.
நேபாளம் எங்களுக்குச் சிறிது காலம் கொடுங்கள். எங்களிடம் உள்ள இந்தியப் பணத்தை மாற்ற அனுமதி கொடுங்கள் என்று கூட கெஞ்சியது. மூர்க்கமாக இந்திய அரசு மறுத்து விட்டது.
இவை பாஜக வை முட்டுக் கொடுக்க நான் கற்பனை கலந்து எழுதியது அல்ல. நாம் வாசிக்கத் தேர்ந்தெடுக்கும் பத்திரிக்கைகள், இணையம் போன்றவைகள் மூலம் நான் வாசித்த தகவல்கள். இது மோடியை எதிர்க்கும் முக்கியமான நபர்கள் அத்தனை பேர்களுக்கும் தெரியும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்பதனை நாம் புரிந்து கொண்டால் போதும்.
நான் சொல்ல விரும்புவது தாராளமாக மோடி ஆட்சியை எதிர்க்கலாம். விமர்சிக்கலாம். ஆனால் அதற்குப் பின்னால் உள்ள அரசியலைச் சாதாரண நபர்களை விடச் சற்று மேம்பட்டு நாம் பேச வேண்டும் என்பதனையே உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். காரணம் அரசியல் என்பது எவரும் சேவை செய்ய வருவதில்லை. மோடியையும் சேர்த்தே சொல்கிறேன். அதே போல ஒரு முறை அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டால் எவரும் அத்தனை எளிதாக அதனை விட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள். எந்த அரசும் மக்களுக்கானது அல்ல. நாம் தான் பெருமையாக மக்களாட்சி என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.
ஒரு காவல் துறை உயர் அதிகாரி சொன்ன தகவல் முக்கியமானது.
காவல்துறையின் முக்கியப் பணி என்பது மக்களிடம் இருந்து அரசியல்வாதிகளைக் காப்பாற்றுவது. அதற்குப் பிறகு தான் மற்றது எல்லாமே?
இதன் அர்த்தம் புரிந்தால் உங்கள் அரசியல் சிந்தனை சராசரியை விட மேம்பட்டு நிற்கும்.
மேக் இன் இந்தியா நீங்க சொல்வதில் எனக்கு முழுமையான உடன் பாடு உண்டு. ஆனால் இவர்கள் அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கி உள்ளார்கள். முழு மனதோடு கடந்த ஐந்தாண்டுக் கால ஆட்சியில் செய்து இருக்க வேண்டும். செய்யவில்லை. குறிப்பிட்ட துறைகளில் மாற்றத்தை உருவாக்கி உள்ளனர். குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றார்கள். பொதுத்துறையே இருக்கக்கூடாது என்கிற கொள்கையில் இருப்பார்கள் போலும். முக்கிய உதாரணம் பிஎஸ்என்எல். இந்த முறை தப்பிக்க முடியாது. என்ன செய்யப் போகின்றார்கள் என்பதனை கவனிக்க ஆவலுடன் உள்ளேன்.
நீதித்துறை குறித்து வெளிப்படையாக இங்கே எழுத முடியாது. மற்ற அத்தனை துறைகளை விடவும் புழுத்துப் போய் அழுகிப் போய் உள்ளது. ஒரே ஒரு உதாரணம்.
ஜெயலலிதா எப்படியெல்லாம் தப்பித்தார்? யார் யார் உதவினார்கள்? எப்படி செலவு செய்தார்? யாருக்கு எவ்வளவு கொடுத்தார்? என்னவெல்லாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்தது என்று உங்களுக்குத் தெரிந்தால் நீங்களே யூகித்துக் கொள்ளலாம். ஒரே ஒரு உதாரணம். உச்சநீதிமன்ற நீதிபதி ஜெ வால் விலைக்கு வாங்கப்பட்டவர் அப்பட்டமாகப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொன்ன வாசகம் இது.
நான் 600 கோடி வாங்கி உள்ளேன் என்று சொல்கிறார்கள். சொல்லிவிட்டுப் போகட்டுமே? என் தோல் கனத்த தோல். இது போன்ற விமர்சனங்களைக் கண்டு கொள்ளாது என்றார். மீதியை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
இவர்களை அரசாங்கத்தால் நீக்க முடியாது. பாராளுமன்றத்தில் இரண்டு மடங்கு உறுப்பினர் சேர்ந்து ஆதரவு அளித்து தீர்மானம் நிறைவேற்று ஜனாதிபதி முடிவெடுத்தால் மட்டுமே இவர்கள் மேல் கை வைக்க முடியும். கொலீஜியம் என்பது வேறு விதமானது. அதை முழுமையாகத் தெரிந்தால் எப்படி இவர்களை வந்த அரசுகள் விட்டு வைத்தார்கள் என்று உங்களுக்குத் தோன்றும். காங்கிரஸ் ல் உள்ள பலரையும் மோடி இன்னமும் கை வைக்க முடியாமைக்குக் காரணம் அத்தனை நீதிபதிகளும் காங்கிரஸ் கொடுத்த பிச்சையின் அடிப்படையில் வந்தவர்கள். முக்கிய உதாரணம் ப.சி. இனி வரும் கேஸ்கள் எப்படி அவர்கள் கையாளப் போகின்றார்கள் என்பதனை வைத்து முடிவு செய்ய முடியும்? இன்னமும் பாதிக்குப் பாதி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளை பாஜக நியமிக்காமல் இழுத்தடித்துக் கொண்டு தான் இருக்கிறது. இதன் அரசியல் வேறு.
ஸ்மார்ட் சிட்டி - சிரிப்புதான் வரும் ,
இதில் அதிக லாபம் பார்த்த நபர் வெங்கையா நாயுடு மருமகன். மீதியை நீங்களே யூகித்துக் கொள்ளுங்க.
தூத்துக்குடி சம்பவம் ,
இப்போதைய சூழலில் நாடு அந்நிய செலவாணியைக் கட்டுப்படுத்த ஒரு மாவட்ட மக்களையே பலிகொடுக்க வேண்டும் என்றால் தயாராக இருக்கின்றார்கள். காப்பர் உற்பத்தில் சீனா முன்னிலையில் உள்ளது. அதன் வெளிப்பாடு தான் இது. இது தவிர திமுக அதிமுக பாஜக மூன்று கட்சிகளும் மிக அதிக அளவு அகர்வாலிடம் வாங்கித் தின்று உள்ளார்கள். பேசுவது வேறு. செயல்படுவது வேறு. அகர்வால் தனிப்பட்ட அறிக்கைகளை அவர் நிறுவன செயல்பாடுகளை கவனித்துப் படித்தால் ஷேர் வாங்கிய மக்களுக்கே அதன் பலனை கொடுக்காதவர். மீதி நீங்களே யூகித்துக் கொள்ளுங்க.
இந்துத்துவமுகம் நாட்டு நலனுக்கு உகந்ததா ?
படு கேவலமான செயல்பாடு தான். ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் தற்போதைய கிறிஸ்துவ தனிநபர்கள் மதமாற்றம் என்கிற ரீதியில் செய்கின்ற செயல்பாடுகளைப் பார்த்தால், ஜிகாதி அமைப்புகள் அகோர பசியோடு வளர்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் நமக்கே நம் குழந்தைகள் இந்தியாவில் வாழ முடியுமா? என்ற பயமும் வரத்தானே செய்கின்றது. பாஜக அரசியல் ஆதாயத்திற்கு செய்கின்றது. ஆனால் அவர்களை இயக்குவது இவர்கள் தானே?
அரசியல் வெற்றியை ஒத்துகொள்கிறேன் ,அரசு தோல்வியே,
மன்மோகன் சிங் இரண்டாவது ஆட்சி காலத்தில் அனைத்து விதமான அவமானங்களையும் பெற்றார். இவரின் இரண்டாவது ஆட்சி காலத்தில் என்ன நடக்கப் போகின்றது என்பது கவனித்து இன்னும் சில ஆண்டுகளில் இதற்கான விடை கிடைக்கலாம். வாயால் எத்தனை நாட்களுக்கு வடை சுட முடியும்? என்பதனை மக்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் உலக அரங்கில் இப்போது தான் இந்தியாவிற்கு மரியாதை கிடைத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. அமெரிக்கா பேச்சை தட்டிக்கழித்த வகையில் வேறொரு அரசியலில் மோடி முன்னிலையில் இருக்கின்றார் என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Post a Comment