Wednesday, July 25, 2018

நாட்டு நடப்பு - பணம் இருந்தால் பங்காளி - 14

கடந்து போன அரசியல் நிகழ்வுகளைச் சம்மந்தப்பட்ட அரசியல்வாதிகள் மட்டும் திரிக்கவில்லை. நாமும் நம் விருப்பப்படியே தான் அதை அணுகின்றோம். இன்று சிலவற்றைப் படித்த போது இதை எழுதத் தோன்றியது. 

இதை எனக்குச் சொன்னtவர், கலைஞரின் கடந்த 40 வருடமாக அணுக்கத் தொண்டராகவும் இருப்பவரும், கலைஞருடன் தொடர்பில் இருந்தவரும், அவரைத் தவிர வேறு எவரும் எனக்குத் தலைவர் இல்லை என்று இன்று வரையிலும் இருக்கக்கூடிய என் நெருங்கிய நண்பர்.  

இன்று வரையிலும் பெரும்பாலான அனைவரும் ஊடகங்களில் பிராமணர்கள் தான் இருக்கின்றார்கள். அதனால் அவர்கள் பிராமணர்கள் சம்மந்தப்பட்ட அரசியலில் உள்ளவர்களுக்கு அவர்களின் பார்வை ஒரு மாதிரியாகவும், பிராமணர் அல்லாதவர்களுக்கும் ஒரு மாதிரியாகவும் உள்ளது. இது தான் இங்கே முக்கியப் பிரச்சனை. 

ஏ1 குற்றவாளி என்று சட்டத்தின் முன்பு நிறுத்தி அவப்பெயருடன் மறைந்த ஜெயலலிதாவை இன்று வரையிலும் எந்த ஊடகமும் பெரிதாகக் கேள்வி கேட்கவில்லை. அதை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை.  ஆனால் கலைஞர் முதல் ஆ ராசா வரைக்கும் பிராமின் இல்லாத காரணம் என்பதால் வறுத்து எடுக்கின்றார்கள்.  

இது எந்த அளவுக்கு உண்மை?

இந்தக் கேள்வி எனக்குள்ளும் இருந்தது. இதற்கு அவர் பிறந்த பிராமணர் குலம் மட்டும் காரணமல்ல. கலைஞரின் காசு, பணம் சார்ந்த பார்வையும் ஒரு முக்கியக் காரணம். (இந்த இடத்தில் மற்றொரு செய்தி சந்தியா என்பவர் பிராமணர் தான். ஆனால் ஜெ வின் தாயார் நடிகை சந்தியா நடிகையாக மாறுவதுற்கு முன்பே அன்றைய அவர் வாழ்க்கையில் அவர் தொடர்பில் இருந்தவர்கள் பல பேர்கள். இதைப் பல பத்திரிக்கைகள் பலவித ஆதாரங்களுடன் எழுதி உள்ளார்கள்?) 

பெங்களூரில் நடந்த ஜெ வின் சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த வழக்கு இழுத்துக் கொண்டே சென்றது. ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் உள்ள அத்தனை பத்திரிக்கையாளர்களும் அங்கே கூடுவார்கள். வழக்கு விபரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்வார்கள். ஆனால் எதையும் பத்திரிக்கையில் எழுத மாட்டார்கள். ஒரே காரணம். பணம். மற்றதெல்லாம் அதற்குப் பிறகு தான். 

ஜெ வின் மறைவிற்குப் பின்னே வெளியே அதிகம் தெரிந்த பெங்களூர் புகழேந்தி பொறுப்பில் இது சார்ந்த மொத்த நிர்வாகத்தையும் ஜெ கொடுத்து இருந்தார். வாய்தா முடிந்து ஒவ்வொரு தடவையும் வழக்கு வழக்காடு மன்றத்திற்கு வரும் போது அங்கே ஒரு மாவட்டச் செயலாளர் ஆஜர் ஆவார்.  ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர் அங்கே ஆஜர் ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. அன்றைய செலவு முழுக்க அல்லது அது எத்தனை நாட்கள் என்றாலும் அவர் தான் பொறுப்பு.  அடுத்த வாய்தா வரும் போது அடுத்தவர் வருவார்.

அதிமுகச் சார்பில் குறைந்தபட்சம் (வாதாடுபவர் ஒருவராக இருந்தாலும் எடுப்புத் தொடுப்பு என்று அங்கே இருப்பவர்கள் ஏராளம்) ஐம்பது வக்கீலாவது அங்கே இருப்பார்கள். இது தவிரத் தொண்டர் படையினர் தனி. இது போலத்தான் பத்திரிக்கையாளர் கூட்டமும். 

இந்தக் கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் காலை, மதியம் சாப்பாடு முதல் ஊக்கப் பரிசு போல அவரவர்களுக்கு என்று தனித்தனியாக ஒரு குறிப்பிட்டத் தொகை வழங்கப்பட்டு வந்தது. 

இதில் பணம் வாங்காத இரண்டு பேர்கள் தமிழில் நக்கீரன் நிருபர். ஆங்கிலத்தில் தி ஹிந்து நிருபர். தொடக்கத்தில் தி ஹிந்து தமிழில் வரவில்லை. 

திமுகச் சார்பாக வழக்காடிக் கொண்டிருப்பவர்களுக்கு, அது சார்ந்த வேலையை முன்னெடுத்துக் கொண்டிருந்தவர்களுக்குக் கட்சி சார்பாகச் சல்லி பைசா பேராது. திமுகக் கட்சியில் இருப்பவர்களே (தங்கள் சீனியரிடம்) பல முறை எத்திரணியைச் சுட்டிக் காட்டி கேட்டு உள்ளனர். சிரித்துக் கொண்டே நகர்ந்து விடுவாராம். 

தொடக்கம் முதல் திமுக வின் டிசைன் இப்படித்தான். அந்த கட்சி எப்போதும் ஒன் வே டிராபிக். உள்ளே போக முடியும். ஆனால் திரும்பி வெளியே வர முடியாது.  இருப்பதை இழந்து விட்டு தான் வர முடியும். ஆனால் சமூகநீதி, சம உரிமை போன்ற ஜல்லி போட்டு ரோடு பலமாக இருக்கும்.

ஜெ வை மற்றவர்கள் ஆதரிக்கப் பத்துக் காரணங்களில் ஒரு காரணம் பிராமணர் என்பது. ஆனால் மற்ற காரணங்கள் என்பது பணம் சார்ந்தது தான் என்று நண்பரே பல முறை என்னிடம் வருத்தமுடன் சொல்லியுள்ளார். 

இன்று ஊடகம் என்பது செய்தித்தாள்கள், வாரப் பத்திரிக்கைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் என்று பிராமண ஆதிக்கம் அளவுக்குப் பிராமணர் அல்லாதவர் கைகளிலும் உள்ளது.

ஆனால் இன்று வரையிலும் இந்த நிலையில் மாற்றம் இல்லை. 

#பணம் இருந்தால் தான் பங்காளி.

16 comments:

G.M Balasubramaniam said...

உப்பு தின்றவன் தண்ணி குடித்துதான் ஆகவேண்டும் இதில் பிராமணன் அல்லாதவன் என்னும் பாகுபாடு எங்கிருந்து வந்தது பல அரசியல் வாதிகள் எழுத்தாளர்களின் தொடர்பு உங்களுக்கு இருந்ததை உங்கள் எழுத்துகள் மூலம் அறிகிறேன்

அது ஒரு கனாக் காலம் said...

very biased view, Iyers/Iyanagar doesn't run self financing college, doesn't run liquor shop, doesn't run night clubs , doesn't run gambling dens , and most importantly, u don't find them many inside the jails ( reason for this is education, self contentment , simple habits , god fearing ) . Of course there are corrupt people within this group , but they will pay for it. But no one can beat MK's corruption

bandhu said...

தி மு க செய்வது வெறுப்பை தூண்டி நடத்தும் அரசியல். நீங்களும் அதற்கு பலி ஆகி விட்டீர்கள்.

வருண் said...

***அது ஒரு கனாக் காலம்July 25, 2018 at 4:22 PM

very biased view, Iyers/Iyanagar doesn't run self financing college, doesn't run liquor shop, doesn't run night clubs , doesn't run gambling dens , and most importantly, u don't find them many inside the jails ( reason for this is education, self contentment , simple habits , god fearing ) . ***

Who the hell are you?!!

Anuradharamanan was complaining that Sakaracharya was inviting to his bed, to see the God together?

DID YOU READ her complaints?!

Are you are SO STUPID and just living in your "dream world" without seeing whats happening around you in the real world??

Did you know, god-fearing JJ was found guilty and would have been in JAIL if she were alive?!

God-fearing Sankaracharya got rid of "Sankar Raman" and was accused of killing Sankar Raman?

What an IDIOT you ARE!!

GTFOH!

வருண் said...

***13 December 2004
reason for this is education, self contentment , simple habits , god fearing***

Are you educated??!! How did you become STUPID then?

READ THIS!!

https://www.outlookindia.com/magazine/story/if-you-cooperate-i-can-extend-you-all-benefits/225947

National
'If You Cooperate, I Can Extend You All Benefits'
This is what the seer told this Tamil writer. Her account of what happened.
Anuradha Raman

The problem for you here is that BOTH of THEM are Brahmins, god-fearing blah blah bullshit!

Obviously one of the god-fearing saints is LYING. So, you LOSE, whomever may be the liar is!

அது ஒரு கனாக் காலம் said...

Dear Varun, just few odd cases will not entitle you to paint the whole group as..... whatever you call it. JJ paid the price , isn't it , she had a dog's death, without anybody being around - speak to your school friends or college friends , see how are they now, how is their family , what is their main source of income , - by the way I don't trust outlook , wasn't that Shoma choudhry was the editor , who was a friend of Tejpal.

ஜோதிஜி said...

உங்கள்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது. தீர்ப்பை அறிவிக்கும்வரையில் பக்கத்தில் உள்ள அறையில் அமர்ந்திருங்கள்’ - என்று நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அறிவித்தபோது, மனதளவில் நொறுங்கிப் போனார் ஜெயலலிதா.

ஒரு மாநில முதல்வரின் அத்தனை அதிகாரங்களையும் ஒடுக்கி, அவரைக் குற்றவாளி என அறிவித்தார் குன்ஹா.

தீர்ப்பு வெளிவந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது ஜெயலலிதாவும் இல்லை. அவர் அரும்பாடுபட்டு வளர்த்த இரட்டை இலையும் இல்லை. கார்டன் ரகசியங்களைப்போல, அவரது மரணமும் மர்மமாகவே முடிந்துவிட்டது.

2014 செப்டம்பர் 27 அன்று வரலாற்றுத் தீர்ப்பு எழுதிய மைக்கேல் டி குன்ஹா, என்ன செய்து கொண்டிருக்கிறார் ?

" கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக, தனது சட்டப் பணியைக் கவனித்துக்கொண்டு வருகிறார் குன்ஹா.

அண்மையில், அவருடைய நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்ட விழாவில், ‘ஜெயலலிதா வழக்கின் தீர்ப்புப் பற்றி நினைத்துப் பார்த்தது உண்டா?’ என ஒருவர் கேள்வி எழுப்பியபோது,

'நான் ஓர் அரசாங்க ஊழியன். சட்டம் என்ன சொன்னதோ அதை மட்டுமே செய்தேன். மற்ற வழக்குகளைப் போலவேதான் அந்த வழக்கையும் பார்த்தேன். தீர்ப்பு வழங்கியதோடு என்னுடைய பணி முடிந்துவிட்டது. எந்தவித தனிப்பட்ட விருப்பு வெறுப்பையும் அந்த வழக்கில் நான் காட்டவில்லை' என இயல்பாகப் பேசியிருக்கிறார். 'இதுதான் குன்ஹாவின் வழக்கம்' என்கிறார்கள் அவருடைய நண்பர்கள்.

இதே சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமியையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

கார்டனை விட்டு ஜெயலலிதா வெளியில் வர இந்தத் தீர்ப்பு ஒரு காரணமாக அமைந்தது. அதேநேரம், 'குமாரசாமி கால்குலேட்டர்' என விமர்சிக்கும் அளவுக்குக் கெட்ட பெயர் சம்பாதித்தார்.

'இப்போது என்ன செய்கிறார் குமாரசாமி?'

“சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விடுதலை என தீர்ப்பு வழங்கிய ஓர் ஆண்டிலேயே குமாரசாமி ஓய்வு பெற்றுவிட்டார்.

பொதுவாக, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டால், அவரை அரசு சார்ந்த துறைகளின் விசாரணை அதிகாரியாகவோ, தனி அதிகாரியாகவோ அரசு பயன்படுத்திக் கொள்ளும்.

ஓய்வுக்குப் பிறகு பத்துக்கும் மேற்பட்ட அரசுத் துறைகளில் பணியாற்ற விருப்பக் கடிதம் கொடுத்தார் குமாரசாமி. அந்தக் கடிதங்களைக் கிடப்பில் போட்டுவிட்டது கர்நாடக அரசு.

அவருக்குப் பிறகு ஓய்வுபெற்ற நீதியரசர் சந்திரசேகரை (ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுத்த நீதிபதி இவர்) பல்வேறு அரசுத் துறைகளில் பயன்படுத்திக்கொண்டது கர்நாடக அரசு.

இதனால் மனம் நொந்து போன குமாரசாமி, மத்திய அரசின் ரயில்வே வாரியத்தின் (Accident claim) பணிக்கு விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தையும் மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

மீண்டும் கர்நாடக அரசின் அட்மினிஸ்ட்ரேஷன் கிரிமினல் (Criminal Justice Administration) என்ற பதவிக்கும் விண்ணப்பித்தார்.

இந்தப் பதவியையும் சந்திரசேகருக்கு அளித்துவிட்டு, குமாரசாமியைக் குப்புறத்தள்ளியது அரசாங்கம்.

ஒரே ஒரு தீர்ப்புக்காக ஒருவர் கொண்டாடப்படுகிறார். மற்றவர் நிராகரிக்கப்படுகிறார்.

‘நீதிபதிகள் பாரபட்சமின்றி, விதிப்படி கடமையைச் செய்ய வேண்டும்; அப்பொழுதுதான் மக்களின் நம்பிக்கையைப் பெறுவார்கள்' என்ற அர்த்த சாஸ்திர வரிகளை மைக்கேல் டி குன்ஹா நன்றாக அறிந்து வைத்திருக்கிறார் போலும். *உண்மையும், நீதியும், நேர்மையும் என்றும் காலத்தால் அழிவதில்லை என்பதற்கு இந்த தீர்ப்பும் நல்ல எடுத்துக்காட்டு*

*Vikatan Exclusive*

ஜோதிஜி said...

very biased view, Iyers/Iyanagar doesn't run self financing college

உங்கள் வாதம் தவறு. இப்போது தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மிக முக்கிய உதாரணம். அரசு நிலத்தை அபகரித்து கட்டப்பட்டது. இப்போது கிரிஜா வைத்தியநாதன் மூலம் மேலும் நிலங்கள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் சூழலில் மிகப் பெரிய சிக்கலை சந்தித்துக் கொண்டு இருக்கின்றது. இப்போது சிபிஎஸ்சி பள்ளிகள் (மிக அதிகமான கட்டணங்கள் வாங்கும் பட்டியல் அனைத்தும்) அய்யர் அய்யங்கார் நடத்தும் பள்ளிகளே.

ஊருக்கெல்லாம் உத்தமனாக நல்ல சொல் சொல்லிய கடைசி வரைக்கும் நாடகம் ஆடிய சோ கடைசியில் சசிகலா வெளியே அனுப்பப்பட்டதும் மிடாஸ் ஆலையின் இயக்குநராக பொறுப்பேற்றதும் அவரின் மிக நெருங்கிய நண்பர்கள் கூட அவர் தொடர்பை துண்டித்தனர். அவர் இறக்கும் தருவாயில் உள்ள அவர் புகைப்படத்தைப் பாருங்கள். மொத்த உடம்பும் 25 கிலோ அளவுக்கு உருவான நோய்கள் அவரைப் பாடாய் படுத்தி இறக்க வைத்தது.

ஏ1 குற்றவாளி கர்நாடகா சிறையில் இருந்தாரே தவிர அவர் சிறையில் இருப்பது போல இல்லை. வேண்டுமானால் சொல்லுங்க. அதைப் பற்றியும் உள்விவகாரங்கள் தெரிந்த, சொன்ன தகவல்கள் உள்ளது. நீங்க விரும்பினால் எழுதுகிறேன்.

நீங்க அவரை இன்னமும் விரும்புவதற்கு ஒரே காரணம் எனக்குத் தெரிந்தவரையிலும் கலைஞருக்கு எதிர்ப்பு எதிர் திசை என்ற நிலையில் தான் நீங்க வைத்து பார்க்குறீங்க. நான் அவர் இந்த தமிழகத்தை எப்படியெல்லாம் பாழ்படுத்தினார் என்ற நோக்கில் (மட்டுமே) பார்க்கின்றேன். அவரிடம் என்ன நல்ல குணம் இருந்தது என்று இப்படி புகழ்ந்து பேசுகின்றீர்கள் என்றே எனக்கு இன்னமும் புரியவில்லை.

ஜோதிஜி said...

கலைஞரின் தொண்டன் அல்ல. நான் திமுக கட்சியைச் சேர்ந்தவனும் அல்ல. கலைஞர் இந்த நாட்டை ஊழல் மயமாக்கினார். அதற்கு காரணமாக இருந்தார் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதை விட ஆயிரம் மடங்கு சீரழித்தவர் என்ற நிலையில் ஏ1 குற்றவாளி மேல் எனக்கு ஒரு துளியும் மரியாதை இல்லை. பழைய பதிவுகளில் குன்ஹா பற்றிய எழுதிய பதிவுகளில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின் மின் நூலை இணைத்துள்ளேன். முழுமையாக படித்துப் பாருங்கள். அவர்களும் வெறுப்பு அரசியல் காரணமாகத்தான் அந்த தீர்ப்பைக் கொடுத்து உள்ளார்களா?

ஜோதிஜி said...

சங்கரராமன் கொலை செய்யப்பட்டதை விட அந்த கொலை நடந்தும் ஒரு துளி கூட வருத்தப்படாமல் அதற்கு அவர் சொன்ன காரணங்கள் தான் எனக்கு அதிக ஆச்சரியத்தைத் தந்தது. மடத்தில் வாழ்ந்தும் எதையும் கற்றுக் கொள்ள விரும்பாமல் மறைந்தும் விட்டார்.

ஜோதிஜி said...

just few odd cases will not entitle you to paint the whole group as ஒரு விதிவிலக்கு இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மொத்தமாகவே இப்படித்தானே இருக்கின்றார்கள். ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். 7000 சிலைகள் காணாமல் போய்விட்டது என்கிறார்கள். மதிப்பு என்பது பல பில்லியன் டாலர். ஆண்டாள் சர்ச்சை குறித்து அத்தனை பேர்களும் பேசினார்கள். ஆனால் இது குறித்து எந்த ஜீயரும், மட அதிபர்களும் பேசவில்லை. என்ன காரணம்? தமிழகத்தில் உள்ள எந்த மடங்கள் தமிழக மக்களுக்கு நல்லது செய்து உள்ளது. அவர்கள் வாழ்க்கை முறை, வாழும்விதம் எல்லாமே சாதாரண மக்களிடம் இருந்து வேறுபட்டது. காலம் காலமாக இப்படியே இருந்து பழகி விட்டார்கள். அதனால் தான் திமுக எளிதாக ஆட்சியைக் கைப்பற்றியது.

வருண் said...

***Dear Varun, just few odd cases will not entitle you to paint the whole group as.***

Are you NOT the one who PAINTED THE WHOLE GROUP as God-fearing good people blah blah?!

***by the way I don't trust outlook , wasn't that Shoma choudhry was the editor , who was a friend of Tejpal. ***

It does not matter. Like I said, both Sankaracharya and Anuradharaman are Brahmins. One of them is a LIAR. It does not matter to me who. Your defense does not get you anywhere.

Just like many (including "saint" Rajinikanth), you dont seem to care about the poor brahmin, Shankar Raman who was brutally murdered. You only care about "saint" the accused, periyavaa!



அது ஒரு கனாக் காலம் said...

So, you could come up with only one shasthra university , may be there are few engineering colleges, but none like money made from liqour trade , converted into an engineering college . Do your own investigation and analysis, and tell your self, hows shasthra conducts its colleges and how are the other self financing colleges run? . Yes running CBSE school may be a little offence ( chinna thiruttu) , who ever it is , if its a crime , if it is against dharma , they will face the music be it is a brahmin or anybody. CHO -I don't know the background , by being a director , I am not sure what he could have done or he couldn't have , still the jury is not out on this. Mk followed a certain type of politics, and to match that , MGR and Jayalalitha followed the path ( hiring goondas, posters , illegal money, biryani, bottle, vulgarity, etc ., etc.,)

Rathnavel Natarajan said...

இன்று ஊடகம் என்பது செய்தித்தாள்கள், வாரப் பத்திரிக்கைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் என்று பிராமண ஆதிக்கம் அளவுக்குப் பிராமணர் அல்லாதவர் கைகளிலும் உள்ளது.

ஆனால் இன்று வரையிலும் இந்த நிலையில் மாற்றம் இல்லை. - நிஜம். அருமையான பதிவு. நன்றி.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

அனுராதா ரமணன் பேட்டி அளித்த ஒவ்வொரு வார்த்தைகளும் எனக்கு உருவாக்கிய ஆச்சரியமும் அதிர்ச்சியும் இன்று வரையிலும் மாறவில்லை.