Thursday, March 01, 2018

ஞாநி -- தாயுமானவன்





கடந்த 25 வருடங்களில் தமிழகத்தில் உள்ள முக்கியப் பிரபல்யங்கள் பலரையும் நேரிடையாகச் சந்தித்துள்ளேன். நெருக்கமாகப் பழகும் வாய்ப்பும் அமைந்து இருந்தது. இன்று வரையிலும் பலருடனும் அந்தத் தொடர்பு இருந்து வருகின்றது. ஆனால் என் வாழ்க்கையில் ஞாநி என்பவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போலவே என்னுடன் இருந்தார். இவருடன் பழகிய அத்தனை பேர்களும் இதனைத் தவறாமல் குறிப்பிடுகின்றார். 
புத்தகங்கள் அதிகம் வாசிக்காத என் சகோதரிகள், உறவினர்கள் என அத்தனை பேர்களும் ஞாநி இறந்த தினம் அன்று என்னிடம் தொடர்ச்சியாக விசாரித்துத் தங்கள் வருத்தங்களைத் தெரிவித்தனர். அந்த அளவுக்குத் தன் தனிப்பட்ட குணநலனால் எங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கவர்ந்தவர். 
நிச்சயம் இவர் நினைவுகள் எதிர்காலத்தில் பலரின் பார்வைக்குப் பட வேண்டும் என்பதற்காக இந்த மின் நூலை தயாரித்தேன். என் ஆழ்ந்த அஞ்சலிகள்.
நான் இதுவரையிலும் வெளியிட்டுள்ள மின் நூலுக்கு அட்டைப்படத்தை பல்வேறு நண்பர்கள் இலவசமாக வடிவமைத்துக் கொடுத்துள்ளனர்.  குறிப்பாக என் இனிய நண்பர் மதுரைத் தமிழன் ( தற்போது அமெரிக்காவில் வசிப்பவர்)மிக விரைவாக வடிவமைத்துக் கொடுப்பார்.  மாறுதல் சொன்னால் உடனே மனம் கோணாமல் திருத்தி அனுப்பி வைப்பார்.  ஞாநி மின் நூலுக்கும் அவரே தான் வடிவமைத்து இருந்தார்.
திடீரென்று ஒரு நாள் மயிலாடுதுறையில் இருந்து நண்பர் சுரேஷ் மின் அஞ்சல் வாயிலாக என்னைத் தொடர்பு கொண்டார்.  அவர் தொடர்ச்சியாக என் மின் நூல்களை படித்து கவரப்பட்டு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க என்று கேட்டு இருந்தார். அவர் மயிலாடுதுறையில் புகைப்பட கலைஞராக உள்ளார்.  அவர் வரைந்த அட்டைப்படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது.  நண்பர் சுரேஷ் க்கு நன்றியும் அன்பும்.






4 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நீங்கள் கொடுத்துவைத்தவர் என்றே சொல்லாம். இவ்வாறான வாய்ப்புகள் அனைவருக்கும் அமைவதில்லை. அருமையான மின் நூலுக்கு பாராட்டுகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரிய முயற்சி ஐயா

G.M Balasubramaniam said...

ஞானி பற்றிய நினைவுகள் போற்றத்தக்கவை

Rathnavel Natarajan said...

அருமை. நன்றி.