ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்..........
ஆறாவது அத்தியாயம்.
என் பெயர் மாடசாமி.
மாடசாமியை முதல்முறையாக சந்தித்த தினம் இன்றும் என் நினைவில் உள்ளது. ஒரு நாள் அதிகாலை நான்கு மணி அளவில் அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்தில் சந்தித்தேன்.
அதுவொரு வளர்ந்து கொண்டிருக்கும் நிறுவனம். சிறிய நிறுவனமாக இருந்தாலும் சரியான நிலையில் தாக்குப்பிடித்து வருடத்திற்கு வருடம் வளர்ந்து கொண்டேயிருந்த நிறுவனமது. இது போன்ற நிறுவனங்களை திருப்பூர் மொழியில் JOB WORK UNIT என்பார்கள்.
இது போல திருப்பூரில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் உள்ளது. இவர்களின் முக்கியப்பணி என்பது நேரிடையாக ஏற்றுமதி செய்து கொண்டிருக்கும் நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பதே ஆகும். இது போன்ற நிறுவனங்கள் ஐம்பது சதுர அடி முதல் 5000 சதுர அடி வரைக்கும் உள்ள இடங்களில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
மனித வாழ்க்கை மட்டுமல்ல. தொழில் துறையும் கூட ஒவ்வொரு காலகட்டத்திலும் அவ்வப்பொழுதுக்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தாற்போல மாறிக் கொண்டே வருவதை கூர்மையாக கவனித்தால் தெரியும். ஒவ்வொரு தொழிலுக்கும் லாபமே முக்கியமானதாக இருக்கும்.
அந்த லாபத்தை அடைய எத்தனை வழிகள் உள்ளதோ அத்தனை வழிகளையும் தொழில் நடத்துபவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். திருப்பூரில் இன்றைய சூழ்நிலையில் குறிப்பிட்ட சில வேலைகளைத் தவிர மற்ற அனைத்து வேலைகளும் வெளியே உள்ளே நபர்களிடம் சென்று முடிவடைந்து மீண்டும் நிறுவனத்திற்குள் வருகின்றது.
6 comments:
இருபத்து நான்கு மணி நேரமும் செயல்பட்ட திருப்பூர் இப்பொழுது இரவில் உறங்குகிறது. சனி ஞாயிறு விடுமறை, திங்கட்கிழமை பணியாளர்கள் முழுமையாக வேலைக்கு வருவதில்லை. காரணம் டாஸ்மாக்
வேதனையாக இருக்கிறது ஐயா
\\இன்றைய சூழ்நிலையில் ஐம்பது சதவிகித நிறுவனங்களில் அறிவிக்கப்படாத விடுமுறை தினமாக திங்கள் கிழமை இருந்து வருகிறது. ஆண் தொழிலாளர்கள் வருவதே இல்லை. கையில் செலவழிக்கக் காசு இல்லாதபோது மட்டுமே வேலைக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் மேலை நாட்டுக் கலாச்சாரத்தில் வாழவே விரும்புகின்றனர்.\\
இது திருப்பூரில் வேலைப் பார்க்கிறவர்கள் மட்டுமல்லாது தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகிற அனைவருக்கும் பொருந்துவதாக அமைந்துவிட்டதுதான் சோகம். இந்த நிலைமை ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டதென்று நினைக்கிறேன். பெங்களூரில் கட்டடத் தொழில்கள் முதல் கார்ப்பெண்டரி தொழில்கள் வரையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள்தாம் வெற்றிகரமாகச் செய்துவந்தார்கள். இவர்கள் அத்தனைப் பேரும் நீங்கள் மேலே சொல்லியுள்ளபடி மாறிப்போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை நான் என்னுடைய சொந்த வீடு கட்டும்போது நேரடியாகவே அனுபவித்திருக்கிறேன். சனிக்கிழமை சம்பளம் வாங்கிக்கொண்டு போனார்கள் என்றால் அத்தோடு அவர்களுடைய கைக்காசு அத்தனையும் செலவழிந்தபிற்பாடுதான் மறுபடி வேலைக்குத் திரும்புவார்கள். காரணம் கேட்டீர்களோ தொலைந்தீர்கள். அடுக்கடுக்கான பொய்கள். ஆற்றொழுக்காக வந்து விழும். "பொய் சொல்றான் சார். தண்ணி அடிச்சிட்டு , சூதாடிக்கிட்டு, பொம்பள ஷோக்கு வச்சிக்கிட்டு இருந்தான் சார்" என்று அவனெதிரிலேயே அவனுடைய இன்னொரு கூட்டாளி போட்டுக்கொடுப்பான். அவர்களிருவருக்கும் அந்த இடத்திலேயே சண்டை ஆரம்பிக்கும்.
ஒரு கட்டத்துக்குப் பிறகு பார்த்து, கேட்டு........ போரடித்துவிட்டது.
இப்படி இருந்தால் யார் இவர்களை வேலைக்கு வைத்துக்கொள்வார்கள்? இந்தத் தமிழர்களை 'வேலைக்கு' வைத்துக்கொள்வது முழுவதும் குறைந்துபோய் இப்போது இவர்களுடைய இடத்தை பிகாரிகளும், வங்கத்தைச் சேர்ந்தவர்களுமாகப் பிடித்துக்கொண்டார்கள். சென்னையிலும் இதுவே நடைபெறுகிறது என்று நினைக்கிறேன்.
இந்த நிலைமைக்கு டாஸ்மாக் மட்டுமல்ல, இலவசங்களும் ஒரு காரணம்.
இந்த 'லட்சியவாதிகள்தாம்' அடுத்த தேர்தலில் அவர்களை அல்ல - 'நம்மை' யார் ஆளவேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
அருமையான பதிவு.
நன்றி.
வணக்கம் ஜோதிஜி.
எனது வலைப்பதிவில் உங்களுக்கு ஓர் விருது பரிந்துரை செய்திருக்கிறேன். வந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன். இதோ இணைப்பு:
http://wp.me/p244Wx-HR
நன்றி,
அன்புடன்,
ரஞ்சனி
மிகவும் சரியே!
டாஸ்மாக் கலாச்சாரம் எப்படியெல்லாம் பாதிக்கின்றது! மிகவும் வேதனைக்குரியது..அரசு என்ன செய்கின்றது? அருமையான பதிவு ஜி!
நல்ல பதிவு.....மாடசாமி பற்றி அறிய ஆவலுடன் இருக்கின்றோம்.
Post a Comment