Thursday, March 20, 2014

பயணமும் படங்களும் - அரை நிர்வாண பக்கிரி

மதுரை காந்தி அருங்காட்சியம்

மோகன் தாஸ் கரம் சந்த் காந்திக்கு எத்தனையோ சிறப்புகள். அதில் ஒன்று தான் வின்ஸ்டன் சர்ச்சில் கொடுத்த அரை நிர்வாண பக்கிரி என்ற பட்டப் பெயரும் ஒன்று. காரணம் காந்தியடிகள் இங்கிலாந்து மன்னரைச் சந்திக்கச் சென்ற போது அவர் அணிந்திருந்த உடையைப் பார்த்து  சர்ச்சில் அவ்வாறு அழைத்தார். காந்தி தன் உடை அலங்காரத்தை மாற்றிக் கொள்ளத் தூண்டிய சம்பவம் தமிழ்நாட்டில் மதுரையில் தான் நடந்தது. 

1921ம் ஆண்டுக் காந்தி மதுரை வந்த போது ராம்ஜி கல்யாண்ஜி என்பவரது வீட்டில் தங்கினார். அப்போது அவர், ஏழை மக்கள் பலர் உடுத்த சரியான ஆடையின்றிக் குளிரில் வாடுவதையும், கோவணத்துடன் இருந்த ஏழை விவசாயியையும் கண்டார். அன்று இரவே, நாட்டில் இப்படியும் மக்கள் இருக்க, தனக்கு மட்டும் ஏன் இந்த் ஆடம்பரம் என்று தான் உடுத்தியிருந்த ஆடையைத் துறந்து அரை நிர்வாணத்திற்கு மாறினார் மகாத்மா. 

அந்த மகாத்மாவின் மறைவுக்குப் பின்னர், நாட்டின் சில பகுதிகளில் காந்தியடிகளின் அருங்காட்சியகத்தை நிறுவ மத்திய அரசு முடிவு செய்தது. அப்படித் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் ஒன்று மதுரை. 

1957ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால், மதுரையில் ராணி மங்கம்மாளின் அரண்மனை இருந்த இடத்தில் காந்தி மியூசியம் அமைக்கப்பட்டது. 

சுமார் 13 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த மியூசியத்தில் அமைதி பூங்கா என்றொரு இடம் இருக்கிறது. இங்குக் காந்தியின் அஸ்தியில் ஒரு பகுதி வைக்கப்பட்டுள்ளது.இங்கு காந்தியின் வாழ்க்கையை வரலாற்றைப் படம்பிடித்துக் காட்டும் அரிய புகைப்படங்கள், அவரின் ரத்தக்கறை தோய்ந்த வேஷ்டி, மூக்குக் கண்ணாடி, அவர் நூற்ற ராட்டை மற்றும் நூல், கைக்குட்டை, செருப்பு, தலையணை, கம்பளி உள்ளிட்ட 14 பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 

அரசு சார்புள்ள குழுவினர் காந்தி அருகாட்சிக் கூடத்தைப் பாதுகாத்துக் கொண்டு வந்தபோதிலும் உள்ளே உள்ள கட்டிடங்களைக் கவனித்த போது பல இடங்களில் கவனிப்பாரற்ற நிலையிலும், வெள்ளை அடித்து எத்தனை வருடங்கள் ஆகி விட்டதோ? என்கிற நிலைமையில் தான் உள்ளது. காந்தியை முன்னிறுத்தும் அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளை விடக் காந்தி மேல் உண்மையான மரியாதை கொண்ட பலரின் இடைவிடாத ஒத்துழைப்பால், உழைப்பால் இன்றும் இந்த நினைவு காட்சியம் உயிர்ப்போடு இருந்து வருகின்றது. 

ஆசான் தன் வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை மாதந்தோறும் இந்த அருங்காட்சி நிர்வாகத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கின்றார். தங்கள் வாழ்க்கையைக் காந்தியின் கொள்கையைப் பரப்புவதற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர்களுடன் தொடர்பில் இருப்பதால் இங்குச் சென்று விட்டு பிறகு திருச்செந்தூர் செல்வோம் என்று கூறியதால் எனக்கு முதல் முறையாக இந்த இடத்தைப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. 


தொடர்புடைய பதிவுகள்
















20 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

'உண்மை' அருங்காட்சியகத்தை காப்பாற்றிக் கொண்டிருப்பது உண்மை... தொடரவும் வேண்டும்...

படங்கள் அருமை... பலமுறை சென்று வந்துள்ளேன்...

Unknown said...

காந்திஜி அரை நிர்வாண பக்கிரியான இடம் இன்று காந்தி பொட்டல்என்று பெயர் பெற்றுள்ளது .அங்குள்ள காந்தியாரின் சிலையும் ,சிறியதாய் தோட்டமும் முன்பு நன்றாக பராமரிக்கப் பட்டு வந்தது .இன்று ..அந்த கொடுமையை எப்படி சொல்ல ?

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

அற்புதமான செய்தியுடன் பயணம் தொடர்கிறது ...வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

சிறு வயதில் அடிக்கடி சென்று இருக்கிறேன்.
அங்கு காந்தி மஹான் அவர்களின் புத்தகங்கள் வாங்கி வந்து படித்து இருக்கிறேன்.
பதிவு அருமை. படங்கள் நன்றாக இருக்கிறது.

Rathnavel Natarajan said...

திரு ஜோதிஜியின் அருமையான பதிவு.
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி திரு ஜோதிஜி.

கரந்தை ஜெயக்குமார் said...

பலமுறை மதுரைக்கு வந்திருந்த போதிலும் இதுவரை காந்தி மியூசியத்திற்குச் செல்லாதது, வருத்தத்தை அளிக்கிற்து ஐயா.
அவசியம் சென்று பார்க்கின்றேன். நன்றி ஐயா

ஜோதிஜி said...

எனக்கும் அங்கே சென்றதும் நீங்க சொல்லியிருப்பதைப் போலத்தான் தோன்றியது.

ஜோதிஜி said...

தொடர் பயணத்தில் இடைவிடாது பயணிக்கும் உங்களுக்கு என் நன்றி.

மகிழ்நிறை said...

நானும் சென்றிருக்கிறேன். பழைய நினைவுகளை கிளறிய பதிவு. ஆசான் இன்னும் என்னென்ன தான் செய்கிறார்?! கிரேட் !

ஜோதிஜி said...

மிக்க நன்றி

ஜோதிஜி said...

திருப்பூரில் தான் இருக்கின்றீர்களா?

ஜோதிஜி said...

நானும் கவனித்தேன்.

ஜோதிஜி said...

நல்ல ஒரே வார்த்தை விமர்சனம்.

Thulasidharan V Thillaiakathu said...

அதைச் சென்று பார்த்ததில்லை! தங்கள் பயணக் குற்ப்புகள், பார்க்கும் ஆசையைச் தூண்டிவிட்டது! பயண அனுபவம் அருமை! படங்களும் மிக அழகு!

தி.தமிழ் இளங்கோ said...

படங்களோடு தகவல்கள்! நன்றி!

Pandiaraj Jebarathinam said...

மதுரை சென்றால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு இடம்..

ஜோதிஜி said...

அவசியம் சென்று பார்க்கவும்

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

முழுமையாக பயணத்தில் வந்தமைக்கு நன்றி.