Monday, October 28, 2013

வவ்வால் - தெரியாத உண்மைகள்

மொய் விருந்து பற்றி கேள்விபட்டுருப்பீர்கள் தானே? இன்னமும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பல இடங்களில் இந்த முறைமை நடந்து கொண்டேதான் இருக்கின்றது. நம் வலையுலகில் மொய் என்பது பிரசித்தமானது.

சென்ற வாரத்தில் நம் "வீக்கிபீடியா புகழ்" பதிவர் வவ்வால் அவர்கள் என் டாலர் நகரம் புத்தகத்திற்கு ஒரு இலவச விளம்பரத்தை கொடுத்து இருந்தார். அவர் வெளியிட்ட சிறிது நேரத்தில் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களின் பார்வையில் பட்டு அந்த புத்தகத்திற்கான கிராக்கி பல மடங்கு அதிகரித்தது என்று விகடன் குழுமம் என்னிடம் நடு ராத்திரியில் அழைத்து தெரிவித்தார்கள்.

சமூக வலைதளங்களில் அவர் எழுதிய அந்த விபரத்தினை எடுத்துப் போட்டபிறகு என் புகழ் வானத்தின் எல்லையை தொடப்பார்த்து அப்படியே ரிவர்ஸ் கியர் போட்டு திருப்பூருக்கே திரும்பி வந்ததை என் தொடர்பில் இருக்கும் அத்தனை நண்பர்களும் பார்த்துவிட்டு ஆச்சரியத்துடன் என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

நமக்கு வரலாறுச் சம்பவங்கள் முக்கியம் தானே?

இதன் காரணமாக அந்த குறிப்பிட்ட விபரங்களை இந்த இடத்தில் எழுதி வைப்பது முக்கியமானது என்பதற்காக மட்டுமே சுய (பீத்தல்) புராணம்.

# விகடன் வெளியீடு கடையில சுஜாதா, மதன் எழுதிய நூல்கள், விகடனில் தொடரா வந்தது எல்லாம் போட்டு கடைய ரொப்பி வச்சிருக்காங்க, பிரபல எழுத்தாளரும்,பத்திரிக்கையாளரும், பதிவருமான அமுதவன் அவர்கள் சமீபத்தில் எழுதிய " என்றென்றும் சுஜாதா" என்ற புத்தகத்தினை விகடன் வெளியிட்டு இருக்குனு சொன்னாரேனு தேடு தேடுனு தேடினேன் ஆனால் இல்லவே இல்லை , போட்ட புக்குலாம் வித்து தீர்ந்து போச்சூ போல. ஆனால் அங்கே இன்னொரு புக்கு கண்ணில் சிக்கியது,

திருப்பூரின் பிரபல தொழிலதிபதிவரான 'ஜோதிஜி" எழுதிய டாலர் நகரம் தான் ஆனால் விலை தான் டாலரில் சம்பாதிக்கிறவங்களுக்கு ஏத்தாப்போல வச்சிட்டாங்க , சரி போட்டாவாச்சும் எடுத்துப்போம்னு எடுத்துக்கிட்டேன்.

டாலர் நகரம் பக்கத்தில சோடிப்போட்டாப்போல அம்மையாரின் புகைப்பட ஆல்பம்னு ஒரு புக்கு இருந்துச்சு,அட்டையில இருந்த ரெண்டுப்படமும் பார்த்தால் "டாலர் நகரம்" படிக்கும் முன்,படித்த பின் காட்டும் ரியாக்‌ஷன் போலவே இருந்துச்சு ! நல்லாத்தான் சோடிப்போட்டு வச்சிருக்காங்க அவ்வ்!

முழுமையாக விபரம் படிக்க

•••••••••••••••••••••••••••••••••••••••••
இதற்கு என்ன கைமாறு செய்வது என்று யோசித்துக் கொண்டு கடந்த சில நாட்களாக புரண்டு படுத்து தூக்கம் தவிர்த்து, துயரமாய் யோசித்து வவ்வால் குறித்து தேடியலைந்த போது தமிழகத்தின் உண்மையான விக்கிபீடியாவாக இருந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய இந்த விபரங்களை வலைபதிவின் அறிவுச்சுடருக்கு  சமர்பிக்கின்றேன். 

இந்த படம் எடுக்க நடிகை அசின் அவர்களிடம் கால்ஷீட் கேட்ட போது அவர் மறுத்த காரணத்தால் திருப்பூருக்கு வந்த வெளிநாட்டு அம்மிணியை வைத்து எடுத்தோம்.


வௌவால் ஒரு பறவையல்ல. அதுவொரு ராத்திரி மிருகம்.  அப்போது தான் அதற்கு தேவைப்படும் உணவான பூச்சி மற்றும் கொசுக்கள் கிடைக்கின்றன. பகல் நேரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு தூங்கும்.  குட்டி போட்டுப் பால் தரும்.  இரண்டு மாதங்கள் வரை குட்டிக்கு அம்மாதன் ஏரோப்ளேன். வௌவாலுக்குக் கண் உண்டு.  ஆனால் கண் பார்வை அதற்கு அதிகம் தேவையில்லை.  இந்த திறமைமிக்க ஜந்து சவுண்ட் ரேஜ்சிங் என்னும் ஒரு முறைப்படி இருட்டில் அமர்ந்து கொள்ளாமல் தன் இஷ்டத்துக்குப் பற்க்கிறது. இதற்கு உதவுவது அல்ட்ரா சவுண்ட்,

அப்படி என்றால்?

மனிதர்களால் ஒலி அலைகளைச் சுமார் என்பது சைக்கிளிருந்து பதினையாயிரம் அல்லது இருபதாயிரம் சைக்கிள்கள் வரை தான் உணர முடியும். (நம்ம ரெண்டு சக்கர சைக்கிள் அல்ல.  மீட்டர், கிலோ மாதிரி ஒலிகளுக்கான அளவு).  பாடகி எஸ்.ஜானகி தன் அதி கீச்சுக்குரலில் பாடினால் சுமார் ஆயிரம், அது கணக்கீடு அளவில் நூறு சைக்கிள் இருக்கலாம்.  எனவே இருபதாயிரத்துக்கு அப்புறம் நம்மால் உணர முடியாது.  ஒரு வௌவாலின் தொண்டை ஒரு விசில் போல. ப்ஹா என்று இயங்கும் போது ஒரு லட்சத்து ஐமதபதாயிரம் சைக்ளி கீச்சில் சவுண்டு வெளிப்படுகிற்து.

நமக்கெல்லாம் கேட்கவே கேட்காது.  தொடர்ந்து அதால் இந்த லட்சத்து சொச்சத்தை ஊதிக் கொண்டிருக்க முடியாது.  அவ்வப்போது விட்டு விட்டு தான் கீறீச்சிட்டுக் கொண்டிருக்கும்.  இதற்காக காற்றழுத்த தேவையைக் கணக்கிட்டுப் பார்த்திருக்கின்றார்கள். தொண்டையில் ஒரு நீராவி பாய்லருக்கு உண்டான அழுத்தமாம்.

பரவாயில்லையல்லவா?

இந்த மாதிரி சின்ன துடிப்பலைகளாக செகண்டு அஞ்சிலிருந்து அறுபது வரை, சில வகை வௌவால்கள் இருநூறு வரை கூட வெளியிடுகிற்து. ஒவ்வொரு துடிப்பும் மிகக் குறைந்த கால அளவே நீடிக்கும்.  ஒரு செகண்டில் ஐயாயிரம் பாகம்.

இப்போது பதினேழு மீட்டர் தூரத்தில் ஏதாவது தடை இருந்தால் வௌவால் வெளிப்படுத்தும் அல்ட்ரா ஒளி அதைப் போல அடைந்து திரும்புவதற்குச் சுமார் ஒரு செகண்டில் பத்து பாகம் ஆகும்.  சவுண்டுக்கும் உள்ள நேர வித்தியாசத்திலிருந்து அந்தப் பொருள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடலாம்.  இது தான் வவ்வாலின் சமார்த்தியம்.

ஒரு வவ்வால் சுவரை நோக்கி வேகமாக பறக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.  முதலில் ஒரு ஒலித் துடிப்பை அனுப்பும்.  சுவரில் பட்டு எதிரொலித்து அதன் காதில் விழுந்தததும் அடுத்த துடிப்புகளின் எண்ணிக்யும் ஜாஸ்தி பண்ணிக் கொண்டே போக்கும்.  ரொம்ப கிட்டத்தில் வந்துவிட்டால் துடிப்பை அனுப்பின மாத்திரத்தில் பதிலும் வந்துவிடும்.  உடனே டேஞ்சர் என்று சட்டென்று பறக்கும் திசையை வெவ்வால் மாற்றிக் கொண்டு விடும்.

ஆகவே வவ்வாலுக்கு காதுதான் கண்

இதை முதலில் கண்டுபிடித்த லாஸரோஸ் பாஸ்லான்ஸானி என்னும் விஞ்ஞானி.  வௌவாலின் இரண்டு காதுகளையும் துணியால் கட்டிப் பறக்கவிட்டார்.அவர்.  தூண் கதவு சுவர் மேலேலெல்லாம் டங்கு டக் கென்று மோதிக் கொண்டு தொப்பென்று விழுந்து விட்டது வவ்வால். 

மிக மிக விந்தையான மிருகம் இது.

ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான ஒல்லியான கம்பிகளைக் குறுக்கும் நெடுக்கும் ஒரு அறையில் கட்டி இருட்டில் அதை விட்டுப் பாருங்கள்.  கம்பி மேல் படாமல் அழகாக ஊடே பறக்கும். வவ்வாலின் ஒலித்துடிப்புகள் ஒரு கொசு (எடை ,002 கிராம்) அது வந்து விட்டால் போதும்.  அது எங்கே போனாலும் கும்மிருட்டிலும் துரத்திச் சாப்பிட்டு விடும். இப்படிப் பறந்து கொண்டே நிமிஷத்துக்கு பத்து கொசுக்கள் பிடிக்கும்.

மீன் சாப்பிடுகிற, பழம் சாப்பிடுகிற, தேன் சாப்பிடுகிற என்ற சமத்து வெவால்களை தவிர ரத்தம் சாப்பிடுகிற வெவாலும் உண்டு. டிராகூலாகவுக்கு ஐடியா கொடுத்தவர் இவர்.

தென் அமெரிக்காவில் உள்ள இந்த வவ்வால் தூங்கிக் கொண்டிருக்கிற ஒருவரைக் கடி,த்தால் கடிபட்டவர் துளிக்கூட வலி தெரியாமல் தொடர்ந்து குறட்டைவிட்டுக் கொண்டிருப்பார்.  ரத்தத்தை இது காபி கூல்டிரிங்ஸ் சாப்பிடுவது போல உறிஞ்சிக் குடிப்பதில்லை.  பாயசம் ஸ்டைல்தான். பல்லால் ஒரு சின்னகட்.  பிறகு நாக்கினால் குடிக்க வேண்டியது.  ரத்தம் கெட்டிப்பட்டு விடுமே என்பீர்கள்.  நோ ப்ளிஸ்.  வெவாலின் எச்சிலுக்கு ஒரு ஸ்பெஷல் சக்தியுண்டு. தொடர்ச்சியாக ரத்தம் உறையாமல் வந்து கொண்டே இருக்கும்.

••••••••••••••••••••••••••••••

2013தீபாவளி (02.11.2013) பண்டிகையை முன்னிட்டு நம் தமிழ்நாடு அரசு தாயுள்ளத்தோடு எடுத்த இரண்டு நடவடிக்கைகள்.

முதல் படம் சென்னையில் ஷாப்பிங் மாலில் திறக்கப்பட்ட புதிய மதுக்கடையின் படம். இரண்டாவது படத்திற்கு விளக்கம் தேவையில்லை.



ஜனநாயகத்தை போற்றுவோம். வளர்ச்சியை பாராட்டுவோம்.  

49 comments:

ஸ்ரீராம். said...

வவ்வால் பற்றிய விவரங்கள் அறிந்தேன். நன்றி! :)

saidaiazeez.blogspot.in said...

சரி, வவ்வால் பற்றி அறிந்துக்கொண்டோம்!
அடுத்து அசின் பற்றியும் ஒரு பதிவ போட்டுட்டீங்கன்ன ஜூப்ப்ப்பரா இருக்கும்!
விரைவில் பலத்த எதிர்பார்ப்போடு....

வவ்வால் said...

"காம்ரேட்" தொழிலதிபதிவரே,

விக்கிப்பீடியாவில் தேடினாலும் கிடைக்காத அரியத்தகவல்களை தேடித்திரட்டி பதிவாக்கி அரிய தந்தமைக்கு மிக்க நன்றி!

சொகவாசி தெனம் ஒரு பதிவு தெனம் தெனம் தீவாளி தான்...வாழ்த்துக்கள்!

========================
//அடுத்து அசின் பற்றியும் ஒரு பதிவ போட்டுட்டீங்கன்ன ஜூப்ப்ப்பரா இருக்கும்!
விரைவில் பலத்த எதிர்பார்ப்போடு....//

அலோவ், பிரியாணி செய்றதோட நிப்பாட்டிக்கணும் காம்பெடிஷனுக்குலாம் வர்ரப்படாது சொல்லிட்டேன் அவ்வ்!

திண்டுக்கல் தனபாலன் said...

மிக மிக விந்தையான மிருகத்தின் தகவல்களை அறிந்தேன்... நன்றி...

கோவை நேரம் said...

வவ்வால்க்கு வச்ச மொய் நல்லா இருக்கு...

சேக்காளி said...

//மீன் சாப்பிடுகிற, பழம் சாப்பிடுகிற, தேன் சாப்பிடுகிற என்ற சமத்து வெவால்களை தவிர ரத்தம் சாப்பிடுகிற வெவாலும் உண்டு//
நீங்க மொய் விருந்து வச்ச வௌவால் இதுல எந்த வகையை சேர்ந்தது?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//மீன் சாப்பிடுகிற, பழம் சாப்பிடுகிற, தேன் சாப்பிடுகிற என்ற சமத்து வெவால்களை தவிர ரத்தம் சாப்பிடுகிற வெவாலும் உண்டு//
இந்த வகை வௌவால்களை எல்லாம் உண்ணுபவர்களும் இலங்கையில் இருக்கிறார்கள். மிகச் சுவையான இறைச்சி எனவும் கூறினார்கள்.
தலைப்பில் வவ்வால் என எழுதியுள்ளீர்கள். இதை வவ்வால் என்பதா? வௌவால் என்பதா?

ezhil said...

## ஜனநாயகத்தை போற்றுவோம். வளர்ச்சியை பாராட்டுவோம். ## ரொம்ப சரிங்க...பின்ன வேறென்ன சொல்வது...

சார்லஸ் said...

வவ்வாலுக்கே வவ்வாலா ?

Amudhavan said...

நான்கூட நம்ம பதிவுலக வவ்வால் பற்றித்தான் தெரியாத தகவல்கள், உண்மைகள்......என்று சுவாரஸ்யத் தகவல்களை பதிவுலகத்திற்கு தெரியத்தருகிறீர்களோ என்று வந்தேன். பார்த்தால் ஏமாற்றம்தான்.

ஜோதிஜி said...

எழுத்தாளர் சுஜாதா வௌவால் என்று தான் எழுதியிருக்கின்றார். ஆனால் நம்ம வலையுலக சுடரொளி வவ்வால் என்கிறார்,

ஜோதிஜி said...

இத்துடன் தொழில் நகரங்களில் பழைய இருப்பில் இருக்கும் அத்தனை மதுப்புட்டிகளும் விற்றே ஆக வேண்டும் என்ற கட்டளை வேறு. ஊறல் சரக்கு உடம்புக்கு நல்லது என்று யாராவது சொல்லியிருப்பாங்களோ?

ஜோதிஜி said...

என்ன சார்லஸ். இதுக்கே இம்பூட்டு டென்சன் ஆன எப்பூடி?

ஜோதிஜி said...

ஸ்விஸ் வங்கி தகவல் கூட கூடிய விரைவில் வந்து விடும். ஆனா உங்க சிஷ்யன் பற்றிய அம்பூட்டு தகவல்கள் சிக்கிரம் வெளியே வந்துடுமா என்ன?

ஜோதிஜி said...

இதுக்கு நம்ம நந்தவனம் வந்து பதில் சொல்வார்.

ஜோதிஜி said...

ஜீவா ஏதாவது பாத்து போட்டு கொடுங்க.

ஜோதிஜி said...

பயங்கர கெட்டிகாரரு நீங்க.

ஜோதிஜி said...

குடும்பம் சரியா இருந்தா எல்லோருமே எப்போதுமே சுகவாசிதானுங்கோ.?

கவலையேபடாதீங்க. முப்பது நாள் முப்பது பதிவு போடனும்ன்னு ஒரு திட்டம் இருக்கு. நிச்சயம் ஒரு நாள் நிறைவேற்றுவேன்.

ஆனால் ஒவ்வொன்றும் உருப்படியாக இருக்கனும் என்கிற குறிக்கோள் உண்டு.

சுஜாதா எழுதிய ஏன் எதற்கு எப்படி எந்த புத்தகத்தை குழந்தைகளோடு விவாதித்துக் கொண்டிருந்த போது இந்த வவ்வால் குறித்து மகள் கேட்க உடனே இந்த பதிவு உருவானது.

ஜோதிஜி said...

ஆமா இப்ப அந்த அம்மிணி எங்கே இருக்காங்க? ஆளே காணல?

ஜோதிஜி said...

நன்றி ராம். நன்றி சுஜாதா.

? said...
This comment has been removed by the author.
? said...
This comment has been removed by the author.
ஜோதிஜி said...

இந்த பதிலை படித்தவுடன் சிரித்தேன் என்பதை நம்ம வீக்கிபீடியா நண்பரிடம் சொல்ல வேண்டாம் நந்தவனம்.

Jayadev Das said...

இந்தாங்க ஏதோ என்னால முடிஞ்சது................

http://jayadevdas.blogspot.com/2013/01/blog-post_15.html

நீங்க இப்பதிவில் போட்டுள்ள படத்தை நான் ரொம்ப நாளைக்கு முன்னாடியே போட்டுட்டேன்!!
http://jayadevdas.blogspot.com/2013/04/blog-post_23.html


Jayadev Das said...

:))

வவ்வால் said...

பாகவதரே,

//நீங்க இப்பதிவில் போட்டுள்ள படத்தை நான் ரொம்ப நாளைக்கு முன்னாடியே போட்டுட்டேன்!!//

யாரப்பார்த்து என்ன வார்த்தை சொன்னீர், "திருப்பூரின் தீப்பந்தம்" சோதிஜி 'விக்கிப்பீடியாவிலேயே இல்லாத தகவல்களை தருபவர் ,அவர் என்னமோ உம்மை பார்த்து காப்பி அடிச்சிட்டா போல சொல்லுதீர், அவரே சொந்தமா ரூம்ப் போட்டு யோசிச்சு எயுதுவார் தெரியுமில்ல!

படம் கூட ஆள் வச்சு போட்டா எடுத்து போட்டிருக்காரு, நீர் தான் அவரெ பார்த்து காப்பி அடிச்சீர் , அதை நீரே ஒத்துக்கலைனா ,அப்புறம் ஆள் வச்சு உம்மை கலாய்ச்சிடுவாரு அவ்வ்!
(நீர் எப்பவோ இந்த மாரி எழுதியாச்சுனு சொன்னா ஒத்துக்கவா போறார் )

வவ்வால் said...

காம்ரேட் தொழிலதிபதிவரே,

உண்மையில் அமுதவன் சாருக்குலாம் சிஷ்யன் என அறியப்பட்டால் அதுவே பெருமை தான்,ஆனால் என்னப்போல பிக்காலித்தனமா விக்கிப்பீடியாவில் இருந்து எழுதி பொழப்பு நடத்துபவன் எல்லாம் அமுதவன் சாருக்கு சிஷ்யனாக அறியப்பட்டால் அவருக்கு பெருமை அளிக்காது என்பதே உண்மை1

என் மேலத்தான் காண்டா திரியிறிங்கனு நினைச்சேன் ,நம்ம பதிவுகளை படிப்பவர்கள் மீதும் கொலவெறியில இருப்பீங்க போல அவ்வ்!

வவ்வால் said...

//வவ்வால்கள் தாங்கள் மிருகங்களிடம் தாங்கள் பறவைகள் எனவும் பறவைகளிடம் மிருகங்கள் எனவும் அறிவித்து போரில் கலந்து கொள்ளுவதை தவிர்த்தன. //

அந்தக்காலத்திலேயே நம்ம முன்னோர்கள் சமாதன விரும்பிகளாக இருந்திருக்காங்க, எல்லாரும் என்னப்போலவே சண்டை விரும்பாத பயந்த சுபாவம் கொண்டவர்களா இருந்திருக்காங்க போல அவ்வ்!

இந்த காலத்திலும் சிலர் இருக்காங்க , ரெண்டுப்பேருக்குள்ள லேசா உரசிக்கிட்டா போதும் குறுக்க பூந்து ஊதிவிட்டு பிரச்சினைய பெருசாக்கி ரத்தக்களறி ஆக்கி ரசிப்பாங்க அவ்வ்!

ஆனால் "சமாதான வவ்வால்" என சொல்லாமல் எவனோ கூறுக்கெட்டத்தனமா சமாதானப்புறானு சொல்லி வச்சி ,நம்ம இனத்துக்கே துரோகம் பண்ணிட்டானே, அந்தக்காலத்துலவும் "கறுப்பா" இருக்கவன் சொன்னா நம்ப மாட்டாங்க போல அவ்வ்!

# நம்ம புண்ணியத்துல வாசிக்கும் பழக்கமே இல்லாத ஒருத்தர் நிறைய தேடிப்படிக்க கத்துக்கிட்டார், சிரிக்கவே மறந்த இன்னொருத்தர் சிரிக்க கத்துக்கிட்டார், ஏதோ நம்ம பேரால சில நல்லக்காரியங்க: நடந்தால் சரிதேங்க்!

வவ்வால் said...

"காம்ரேட்" தொழிலதிபதிவரே,

ஒரு சின்ன உதவி,

ஒரு காலத்தில் 'நான் வினவு தளத்திலேயே "கட்டுரை எழுதியவன்னு சொல்லி என்னை மிரட்டினீரே, உண்மையில் நீர் வினவில் ஏதாவது கட்டுரை எழுதி வெளியாகியுள்ளதா? அப்படி இருக்குமானால் சுட்டி அளிக்கவும், இப்போ நான் வினவை கலாய்க்கலாம்னு ஒரு முடிவில் இருக்கேன் ,அதுக்கு உதவும் அவ்வ்!

சுட்டி அளிக்க முடியாது எனில், வினவில் கட்டுரை எழுதியது உண்மை தான் என சொன்னால் கூட போதும்,மிச்சத்த நானே பேசித்தீர்த்துக்கீறேன்!

பின்க்குறிப்பு:

இப்பீட்டத்தினை விருப்பப்பட்டால் வெளியிடலாம்.

? said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

நந்தவனம்,

ச்சூ சூ...ஹே ..ஹே ..ஹி..ஹி ...அவ்வ்

உம்மை பார்த்தால் ரொம்ப பாவமா இருக்குய்யா அவ்வ்!

ஜோதிஜி said...

ஜெய்தேவ் ஆச்சரியம் தான். ஆனால் இந்த படத்தை கூகுள் ப்ளஸ் ல் ஒரு வெளிநாட்டுக்காரரிடமிருந்து எடுத்தேன். பொதுவா இது போன்ற சமயங்களில் கூகுள் இமேஜ் மூலம் எடுப்பது வழக்கம். ஆனால் ஆச்சரியமாக கூகுள் ப்ள்ஸ் சில சமயங்களில் கிடைத்து விடுகின்றது.

ஜோதிஜி said...

நான் உங்களைப் போய் மிரட்டினேனா? ஆண்டவா? அடுக்குமா? விக்கிபீடியாவை விக்கல் பற்றியே தெரியாத குட்டிப் பையனால் அது போன்று செய்து விட முடியுமா? ஒவ்வொரு பதிவாக தேடிப் பாருங்க. தேடுங்க. கிடைக்கும்.

? said...
This comment has been removed by the author.
Amudhavan said...

ஜோதிஜி, எல்லாரும் நமக்கு நண்பர்களே!

\\இப்போ நான் வினவை கலாய்க்கலாம்னு ஒரு முடிவில் இருக்கேன்\\

நீங்களே சொல்லுங்கள், வவ்வாலின் இம்மாதிரியான செயல்கள் பதிவுலகை சுவாரஸ்யமாக்குகிறதா இல்லையா?

சேக்காளி said...

இதை வௌவால் என்றுதான் சொல்ல வேண்டும்.வலையுலக சுடரொளி(நல்லாதாம்யா இருக்கு)"வவ்வால்" ஆகவே இருந்து விட்டு போகிறார்.காரணம் அவராகவே வைத்துக் கொண்ட புனைபெயர் அது. தொழிலதிபதிவரே(இதுவும் நல்லாதாம்யா இருக்கு) நீங்கள் குறிப்பிட்டுள்ள "சமத்து வெவால்","சாப்பிடுகிற வெவால்" எல்லாம் எப்படியிருக்கும்?.அடைப்பு குறிக்குள்( ) இருப்பவற்றை சாலமன் பாப்பையா பாணியில் வாசித்துக் கொள்ளவும்.

வவ்வால் said...

அமுதவன் சார்,


// வவ்வாலின் இம்மாதிரியான செயல்கள் பதிவுலகை சுவாரஸ்யமாக்குகிறதா இல்லையா?//

நாம எல்லாம் இவருக்கு பின்னூட்டம் போட்டால் என்ன பலன், ஆகா அருமைனு சொன்னால் என்ன பலன் என்றெல்லாம் கணக்கு பண்ணி காய் நகர்த்துவதில்லை, மனசுல தோன்றதை சொல்லுற டைப்.

I'm a "free will" person.

I think therefore I am "voval"

இந்த கான்செப்டை எல்லாம் மக்கள் புரிஞ்சுக்க ரொம்ப நாளாகும்.

ஜோதிஜி said...

இந்த கான்செப்டை எல்லாம் மக்கள் புரிஞ்சுக்க ரொம்ப நாளாகும்.

ஒரு வேளை நீங்க திருவள்ளுவர் போல முக்காலமும் உணர்ந்த முனிவரா இருப்பீங்களோ?

? said...
This comment has been removed by the author.
ஜோதிஜி said...

அதிலும் Prefrontal cortex சரியாக வேலை செய்யாதவர் இன்னொருத்தரை கலாய்த்தால் இன்னமும் சுவாரஸ்யம்.

வவ்வால் பெருமகனார் எனக்குச் சொன்ன சிரிப்போடு நித்திரையை தழுவச் செல்கின்றேன்.

? said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

ஹி...ஹி நந்தவனத்தின் "ego"வை நான் ரொம்ப டேமேஜ் செய்துட்டேன் போல ,கொலவெறியில அலையிறார், போறப்போக்கைப்பார்த்தால் "OCD" வந்து எப்பப்பார்த்தாலும் வவ்வால் அ சும்ம விடமாட்டேன்னு சொல்லிட்டு அலைய ஆரம்பிச்சுடுவார் போல இருக்கே அவ்வ்!

? said...
This comment has been removed by the author.
சேக்காளி said...

'' Prefrontal cortex'' , "OCD" போன்ற புது புது வார்த்தைகளின்(எனக்கு) அறிமுகத்திற்கு நன்றி.

Nanjil Siva said...

வவ்வாலின் தோல்களினால் ஆன இறக்கைகளை தவிர்த்து பார்த்தீர்களேயானால் இது ஒரு எலி போலவே இருக்கும். எலிக்கு இருப்பது போல வாலும் உண்டு... எனவேதான் இது வவ்''வால்'' .... வால் o.k அது என்ன வவ் என்கிறீர்களா? அது அடிக்கடி வவ்,அவ்வ், என்று சொல்லிக்கொண்டே இருக்கும் ... சந்தேகமிருந்தால் உங்கள் நூலை விளம்பரம் செய்த வவ்வாலின் பதிவுகளை படித்துப் பாருங்கள் புரியும்...ஹ ஹஹா ...அவ்வ்.!!
https://www.scientificjudgment.com/

Paramasivam said...

இந்த பதிவும் இந்த பதிவின் பின்னூட்டங்களும் மிகவும் சுவாரசியமாய் உள்ளன.

ஜோதிஜி said...

ஒவ்வொரு பழைய பதிவுக்கும் ஓய்வு இருக்கும் போது படித்துப் பாருங்க. ரொம்ப வித்தியாசமாக இருக்கும் பரமசிவம்.

IVR Call Center Solutions said...

Nice post thanks for sharing this. India's Top
Call Center Software.
Call Center Solutions
Ivrs

Unknown said...

வவ்வால் கையில் அடிச்சுட்டு போன என்ன ஆகும்