Tuesday, October 15, 2013

வாசித்ததும் (ரொம்பவே) யோசித்ததும்

ஆன்மீகம், கடவுள், பக்தி,நம்பிக்கை,மதம் போன்ற வார்த்தைகள் உயர் அழுத்த மின்சார வகையைச் சார்ந்தது.  தொட்டால் தொடரும், தொடாமல் இருந்தாலும் அலற வைக்கும்.  

நமக்கு விருப்பம் இருக்கின்றதோ இல்லையோ சுற்றியுள்ள சூழ்நிலைகள் நம்மை மாற்றும். உங்கள் கொள்கைகளை உரசும்.  நான் எந்த நம்பிக்கைக்கும் அப்பாற்பட்டவன்.  என்னளவில் உணர்ந்த பாடத்தை, பெற்ற அனுபவங்களே என்னை வழிநடத்துகின்றது என்று உங்களுக்குள் யோசிக்க முடியும்.  ஆனால் வெளியே காட்டிக் கொள்ள முடியாது.  

நம்முடைய தனிப்பட்ட கொள்கைகள் அனைத்தும் இங்கே சுற்றியுள்ள சமூகத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றது. 

மீறினால் மிதிபடுவீர்கள். கடைசியாக ஒதுக்கப்படுவீர்கள்.  

அதிகமாய் ஆச்சரியப்படுத்திய ஆத்திகம் நாத்திகம் என்பதைப் பற்றி நான் வாசித்த தீக்கதிர் ஆசிரியர் திரு.குமரேசன் எழுதிய கட்டுரை.

••••••••••••••••••
நாம் ஆக்கர் போட்ட காலம் போய் பிள்ளைங்க ஆப்படிக்கின்ற காலமிது

தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு திமுக ஆட்சி காட்டிய பாதையை, உருவான மாற்றத்தை, உருவாக்கிய தாக்கத்தை, விளைவுகளை இன்று வரையிலும் விமர்சனப் பார்வையில் பார்க்கும் நாம் ஒரு விசயத்தை மறந்து விடுகின்றோம்.  

கடந்த 50 ஆண்டுகளில் தமிழர்களின் மனோபாவத்தைப் பற்றி எவரும் அதிக அளவில் கவலைப்படுவதில்லை.  மூத்த குடி, முது பெரும் மொழி என்று பெருமை கொண்டாடும் நம் தமிழர்களின் அடிப்படை குணாதிசியத்தை பல முறை யோசித்துப் பார்த்தாலும் எனக்குப் பிடிபடாத விசயத்தை திரு. சமஸ் அவர்கள் மிக எளிதாக பட்டவர்த்தனமாக எழுதிய கட்டுரை.

•••••••••••••••••••
மாநில கட்சியுடன் கூடிய கூட்டணி ஒப்பந்தம்

தற்போது இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கும் காங்கிரஸ் கூண்டோடு எழ முடியாத அளவுக்கு ஒரு மிகப் பெரிய சரிவை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படும் கோடிக்கணக்கான வாக்காளர்களில் நானும் ஒருவன். 

தற்போது காங்கிரஸ்க்கு மாற்றாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குறித்து கடந்த இரண்டு மாத காலமாக இணையம் முழுக்க ஆதரவு எதிர்ப்பு என்கிற ரீதியில் ஏராளமான பரப்புரைகள் கட்டுரைகளாக வந்து கொண்டே இருந்தாலும் எழுதியவரும், வாசித்தவர்களும் ஓட்டு போடும் சமயத்தில் வாக்கு செலுத்துவார்களா? என்றால் உறுதியாகச் சொல்ல முடியும்.  நிச்சயம் வர மாட்டார்கள்.  

விசைப்பலகை வீரர்களாகவே இருப்பார்கள்.  

நரபலி மோடி என்று கூக்குரலிட்டாலும் உருவாகப்போகும் மாற்றத்தை சராசரி குடிமகனாய் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு தான் இருக்கின்றேன். நம் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் உள்ளவர்கள், அவர்களின் கொள்கை ரீதியான, சித்தாந்த ரீதியான வகையில் எழுதிய அத்தனை கட்டுரைகளையும் வாசித்து விடுவதுண்டு.  கொள்கைகள் வெவ்வேறு பாதையாக இருந்தாலும் இன்றுவரையிலும் நட்பில் முரண்பட்டு நின்றதில்லை.

எனக்கு ஒருவரை பிடிக்கின்றது என்பதற்காக  அவரின் துதியை மட்டும் கேட்பதில்லை.

அவர் மேல் வைக்கப்படும் குற்றாச்சாட்டு? அவர் கடந்து வந்த பாதை போன்றவற்றை, ஆட்சிக்கு வந்தால் உருவாகப் போகும் சாதக பாதக அம்சங்கள் போன்ற அனைத்தையும் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதுண்டு. தோழர் மருதையன் உரையாற்றிய பேச்சின் மூலம் பல வெளிச்சங்கள் கிடைத்தது.

வலை பதிவில் எல்லோரும் தனக்குத் தெரிந்த வகையில், ஏதோவொரு நடையில் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். டைரிக்குறிப்புகள், அனுபவங்களை, சினிமா விமர்சனங்களை எழுதி வைத்தாலும் சிலரின் எழுத்துக்களை படித்து முடிந்ததும் ஒரு தாக்கத்தை உள்ளுற ஏற்படுத்தும். 

அது போன்ற திறமையுள்ள என் நண்பர் வில்லவன் தமிழருவி மணியன் குறித்து எழுதிய நக்கல் நையாண்டியை படித்த போது இது தான்டா உண்மையான எழுத்தாளனுக்குரிய திறமை என்று எண்ணத் தோன்றிய கட்டுரை..
•••••••••••••••••••••
வரலாறு முக்கியம் அமைச்சரே


தமிழ்நாடு வளர்ந்த மாநிலம் என்பதை தற்போதைய ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம் ராஜன் இந்த ஆதாரத்தை வைத்து தான் கணக்கீடு செய்து இருப்பாரோ?

இன்று மதுவகையின் விலைப்பட்டியல் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள் மட்டும் செல்ல வேண்டிய இடம்.



தொடர்புடைய பதிவுகள்




24 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லாவே யோசித்து சுட்டியையும் கொடுக்குறீங்க...! நன்றி...

ஊரான் said...

”அது போன்ற திறமையுள்ள என் நண்பர் வில்லவன் தமிழருவி மணியன் குறித்து எழுதிய நக்கல் நையாண்டியை படித்த போது இது தான்டா உண்மையான எழுத்தாளனுக்குரிய திறமை என்று எண்ணத் தோன்றிய கட்டுரை..”

நான் வில்லவனைப் பார்த்ததில்லை. ஆனால் நான் வில்லவனின் எழுத்துக்களால் ஈர்க்கட்டுள்ளேன். சமீப காலத்தில் நான் மிகவும் ரசித்த எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை இதுதான்.

ஊரான் said...

”அது போன்ற திறமையுள்ள என் நண்பர் வில்லவன் தமிழருவி மணியன் குறித்து எழுதிய நக்கல் நையாண்டியை படித்த போது இது தான்டா உண்மையான எழுத்தாளனுக்குரிய திறமை என்று எண்ணத் தோன்றிய கட்டுரை..”

நான் வில்லவனைப் பார்த்ததில்லை. ஆனால் நான் வில்லவனின் எழுத்துக்களால் ஈர்க்கட்டுள்ளேன். சமீப காலத்தில் நான் மிகவும் ரசித்த எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை இதுதான்.

தி.தமிழ் இளங்கோ said...

நீங்கள் குறிப்பிட்ட தளங்களை நானும் வாசித்தேன். யோசித்தேன்.
// நான் எந்த நம்பிக்கைக்கும் அப்பாற்பட்டவன். என்னளவில் உணர்ந்த பாடத்தை, பெற்ற அனுபவங்களே என்னை வழிநடத்துகின்றது என்று உங்களுக்குள் யோசிக்க முடியும். ஆனால் வெளியே காட்டிக் கொள்ள முடியாது. //

நல்ல ஆழமான சிந்தனை. உணர்ந்தவர்க்கே புரியும். நாம் இதுதான் உணர்ந்தேன்:. இதுதான் உண்மை என்று கூறினால் பைத்தியக்காரன் என்ற பட்டம்தான் கிடைக்கும்.

//தற்போது இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கும் காங்கிரஸ் கூண்டோடு எழ முடியாத அளவுக்கு ஒரு மிகப் பெரிய சரிவை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படும் கோடிக்கணக்கான வாக்காளர்களில் நானும் ஒருவன். //

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதேதான் நடக்கும். இந்திரன்கள் மாறினாலும் இந்திராணிகள் மாறமாட்டார்கள்.

// விசைப்பலகை வீரர்களாகவே இருப்பார்கள். //

கம்ப்யூட்டர் காலத்திற்கு ஏற்ற நல்ல புதிய சொல்லாடல்.
” வாய்ச்சொல்லில் வீரரடி” நினவிற்கு வந்தது.






துளசி கோபால் said...

யோசிக்க வைக்குதுன்னா.... அது நல்ல எழுத்து. அந்த வகையில் என்னை ரொம்பவே யோசிக்க வைத்தது இந்த இடுகை!

இனிய பாராட்டுகள்.

ராஜி said...

யோசிக்க வைக்கும் சுட்டிகள். பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

முதல் இரண்டு கட்டுரைகள் மனம் கவர்ந்தன, சில சமயம் நல்ல கட்டுரைகளையை வாசித்ததோடு இல்லாமல் பகிர்வதும் எம்மைப் போன்ற சாமான்ய வாசகரை வந்தடையும், மிக்க நன்றிகள் !

எம்.ஞானசேகரன் said...

கட்டுரைகளின் இணைப்புக்கு நன்றி! இப்போதுதான் கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

kavirimainthan said...

ஜோதிஜி,

நல்ல, பயனுள்ள வாசிப்பு.
வாசிக்க வைத்ததற்கு நன்றி.

ஆமாம் - இத்தனையும் படிக்க உங்களுக்கு நேரம்
எப்படி கிடைக்கிறது ?
எனக்கும் அந்த வித்தையை கொஞ்சம் சொல்லிக்
கொடுங்களேன் ..!

-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்

ஜோதிஜி said...

என்ன விளையாடுறீங்களா? உங்க வயசுக்கு எப்பவும் சூடான விசயங்களையே எழுதி தள்ளிக் கொண்டேயிருக்கீங்க. நானெல்லாம் எம்மாத்திரம். பெரும்பாலும் ஒழுங்காக எழுதுபவர்களின் பதிவுகள் மின் அஞ்சல் வழியே வந்து விடுவதால் நேரம் மிச்சம்.

ஜோதிஜி said...

புயல் அனுபவங்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

ஜோதிஜி said...

உங்கள் தளம் அற்புதமாக உள்ளது. எழுத்துரு மட்டும் கொஞ்சம் பெரிசு பண்ணுங்க.

ஜோதிஜி said...

நன்றி ராஜி

ஜோதிஜி said...

சமஸ் எழுதிய இடுகை என் நீண்ட நாள் தேடலை பூர்த்தி செய்தது டீச்சர்.

ஜோதிஜி said...

என்ன ஒவ்வொருமுறையும் ஒரு வார்த்தை சிலம்பாட்டத்தை நடத்தி விட்டு போயிறீங்க. இந்த முறை இந்திராணிகள்...........

ஆனால் தமிழ்நாட்டில் இந்திராணி ஒருவர் தானே.

ஜோதிஜி said...

உண்மை தான். அவர் இப்போது இருக்கும் வேலைப்பளூவில் இந்த அளவுக்கு எப்படி எழுத முடிகின்றது என்பது தான் என் ஆச்சரியம்.

ஜோதிஜி said...

சில விசயங்களை நாம் செய்தே ஆக வேண்டும் தனபாலன்.

srinivasan said...

அருமையான புகைபடங்கள் ! அனுபவமே பாடம் .

மலைநாடான் said...

அருமையான இணைப்புக்களும் பதிவும். அறியத் தந்தமைக்கு நன்றி
- மலைநாடான்

'பரிவை' சே.குமார் said...

யோசிக்க வைக்கும் பகிர்வுகளை அறிமுகம் செய்து வைத்திருக்கிறீர்கள் அண்ணா...

தி.தமிழ் இளங்கோ said...

ஜோதிஜி சொல்வது சரிதான். ” இந்திரன்கள் மாறினாலும் இந்திராணி மாறுவது இல்லை ’’ என்பதே சரி!

Unknown said...

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதேதான் நடக்கும். இந்திரன்கள் மாறினாலும் இந்திராணிகள் மாறமாட்டார்கள்.

ezhil said...

அருமையான , சிந்தனையைத் தூண்டக் கூடிய, விவாதப் பொருளாக்கும் கருத்துக்களை கையாளும் பதிவுகளை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ஜோதிஜி சார்....

Ranjani Narayanan said...

ஒவ்வொரு இணைப்பையும் நிதானமாகப் படிக்க வேண்டும். நிறைய சிந்திக்க வைக்கும் இணைப்புகள். உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து இருப்பது ஒருவித எதிர்பார்ப்பை உண்டு பண்ணிகிறது.