Tuesday, August 06, 2013

சொல்ல மறந்த கதைகள்

படங்கள் சொல்லும் பாடம். (தொடக்கம் முக்கியம்)

கதையோ கட்டுரையோ படமோ தொடங்கும் போது கவர்வதாக இருக்க வேண்டும் என்கிறார்கள். தொடங்கியது முதல் கடைசி வரைக்கும் உடம்பு முழுக்க ரத்தக் களறியாக்கிய இரண்டு படங்கள் பட்டத்து யானை, சொன்னா புரியாது. பொதுவாக மோசமாக எடுக்கப்பட்ட படங்கள் மூலம் தான் உண்மையான படத்தை ரசிக்க எடுக்க முடியும் என்பார்கள். 

இந்த இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர்களை விட இவர்களை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளரை நினைத்துக் கொண்டேன்.கலைஞர் தொலைக்காட்சியில் வரும் குறும்பட இயக்குநர்களிடம் பயிற்சி எடுத்து வரச் சொல்லி இருக்கலாம்.

நீண்ட நாளைக்குப் பிறகு படம் தொடங்கியது முதல் கடைசி வரைக்கும் ஆச்சரியமாய் அதிசயமாக பார்த்த படம் சூது கவ்வும்.  பல மாதங்கள் ஆகியும் இன்னமும் அந்த படம் உருவாக்கிய பிரமிப்பு ஆச்சரியமாக உள்ளது. இயக்குநரின் திறமை என்பது என்ன? என்பதை முழுமையாக உணர்த்திக் காட்டிய படம் அது.   ஆனால் எனக்கு ரொம்ப பிடித்த படம் கீழே உள்ள படம்.



வெற்றிகள் சொல்லும் பாடம். (வெற்றியை மட்டும் இங்கே பேசு.)

ஒரு ஏற்றுமதி நிறுவன முதலாளி  நிறுவனத்தில் பணியாற்றும் முக்கியமான ஒவ்வொருவருக்கும் வருடந்தோறும் அழகான டைரி கொடுப்பது வழக்கம். அதன் முதன் பக்கத்தில் ஒரு வாசகத்தை தவறாமல் எழுதுவார்.  

"கப்பல் கடலில் எத்தனை புயல்களை சந்தித்தது என்பது குறித்து யாரும் கவலைப்படுவதில்லை.  கப்பல் கரைக்குச் சேர்ந்ததா? என்பதே இங்கே முக்கியம். நமக்கு வெற்றி மட்டுமே முக்கியம். காரணங்கள் தேவையில்லை". 

நானும் இது போன்ற வாசகங்களை, வசனங்களை தொடக்கத்தில் ரொம்பவும் ரசிப்பதுண்டு.ஆனால் வெற்றி பெற்றவர்களின் தொடக்கம் என்பதும், கடைபிடித்த வழிகள் என்பது பேசப்பட வேண்டியதாக இருந்தாலும் வெற்றி அடைந்ததும் அதற்குப் பெயர் ராஜதந்திரம் அல்லது அதிர்ஷ்டம் என்ற பெயரால் மாறிவிடுகின்றது.

சமீபத்தில் நான் படித்த பழைய பதிவான சன் தொலைக்காட்சி குழுமம் குறித்த முழுமையான விபரங்கள் இங்கே.

நடுத்தரவர்க்கத்தினர் வெற்றியை இது போன்று வலை போட்டு தேட வேண்டியதாக உள்ளது.


வாழ்க்கை சொல்லும் பாடம்.(பக்திமானாக இருப்பது கூடுதல் தகுதி)

இதயகோவில் படம் வந்த போது இனக்கவர்ச்சியில் மாட்டியிருந்தேன்.  இது குறித்து தனியாக எழுத வேண்டிய அளவுக்கு நிறைய விசயங்கள் உள்ளது. இந்த படத்தில் வந்த பாடல்களை பள்ளிக்கூட அத்தனை நோட்டுகளிலும் எழுதி வைத்து மனப்பாடமே செய்து வைத்திருந்தேன்.கல்லூரியில் தொடங்கிய இசையார்வம் திருப்பூரில் விரும்பிய பெரிய அளவு ஸ்பீக்கர், வூப்பர் என்று ஏராளமாக செலவு செய்து பெரும்பாலான ஓய்வு நேரங்களில் இசையை ரசிக்கவே இந்த வாழ்க்கை என்று வாழ்ந்தேன். குறிப்பாக இசை தான் இளையராஜா. ராஜா தான் இசை என்கிற ரீதியில். 

எழுத்தாளர் பாலகுமாரனைப் போலவே இளையராஜாவும் வானத்திற்கு மேலே இருப்பவர்களைப் பற்றியே வாழ்க்கையில் அதிகம் யோசிக்க அவர் மேல் இருந்த மரியாதை போயிந்தே.  ஆனாலும் இன்று வரையிலும் ஒரு தனி மனிதன் எந்த பின்புலமும் இல்லாமல் தன் உழைப்பால் மட்டும் எந்த உயரத்திற்கு செல்ல முடியும் என்பதற்கு நம் வாழும் காலத்தில் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் முக்கியமானவர் இசைஞானி இளையராஜா.  

ஆனால் வாழும் பொழுதே வார்த்தைகளை அளவாக பேசி செயலில் அதிகம் சாதித்தவர் ஏ.ஆர்.ரகுமான். ஜாக்கி சேகர் பதிவின் மூலம் அறிந்த ரகுமானின் அறக்கட்டளை உதவியோடு நடத்தி வரும் இசைப்பள்ளி குறித்து அறிய.


நீதிகள் மாறும்( தன்னைத் தாக்காத வரைக்கும் எல்லாமே செய்திகளே)

பேரறிவாளன் அவர்களின் தூக்கு கொட்டடியில் இருந்து ஒரு மடல் புத்தகத்தை இணையத்தில் படிப்பதற்கு தமிழ், ஆங்கிலம், மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் இருக்கிறது.


மனிதம் என்பது? (சிலரின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

மதங்களை, சாதிகளைப் பற்றி எழுதும் போது உருவாகும் எதிர்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும் இது குறித்த விமர்சனங்கள் பொதுவில் வைக்க வேண்டியது அவசியமாகத்தான் உள்ளது. பதிவுகளில் வரும் மறுமொழிகள் மூலம் தான் நமக்குத் தெரியாத பல விசயங்களை கற்றுக் கொள்ள முடிகின்றது.

அது போன்ற ஒரு பதிவு திரு. தருமி அவர்களிடமிருந்தது வந்தது.

என் பார்வையில் எழுதும் விசயங்களை படிப்பவர்களின் பார்வையில் எப்படி தெரிந்தாலும் அது குறித்து வரும் விமர்சனங்களை கவனமாக உள்வாங்கிக் கொள்வதுண்டு. மாற்றுப் பார்வையில் வினவு தளத்தின் ஆறாம் ஆண்டுக்காக எழுதப்பட்ட என் கட்டுரை



சொல்லாததும் உண்மை

(தகவல் உபயம் முகநூல்)

இந்து மதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா?

ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்!   என்றார் பாரதியார். 

ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத் தாழ்வு பார்க்காமல் இருப்பது மேலான வாழ்க்கை. ஆனால் ஜாதிகளும் பிரிவுகளும் இந்துக்களிடம் மட்டும் தான் இருக்கிறதா?

கொஞ்சம் சமூகத்தைச் சுற்றிப் பார்த்தால் பல விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. சுற்றிப் பார்ப்போம் வாருங்கள்!

இந்துக்களிடம் தான் பல பிரிவுகள் இரு க்கின்றன என்றும் மற்றவர்கள் எல்லோரும் ஒரே மதம் ஒரே கடவுள் என்ற கொள்கையில் ஒன்றாக ஒற்றுமையாக இருப்பது போன்ற தோற்றத்தை ஊடகங்களும் திரைப்படங்களும் தொடர்ந்து பரப்பி தவறான செய்திகளை வருகின்றன.

உண்மையில் கிறிஸ்த்துவம் மற்றும் இஸ்லாம் மதங்களிலும் பல்வேறு பிரிவுகள் இருக் கின்றன• 

முதலில் கிறித்துவ மதத்தில் எத்தனை பிரிவுகள் இருக்கின்றன என்பதை பார்ப்போம். 

ஒரே கிறிஸ்து ஒரே பைபிள் ஒரே மதம் என்று சொல்ல‍ப்படும் கிறிஸ்துவ மதத்தில் . . .

லத்தீன் கத்தோலிக்கர்கள், சிரியன் கத்தோலிக்க சர்ச்சுக்குள் நிழைய மாட்டார்கள்.

இந்த இருபிரிவினரும் மார்தோமா சர்ச்சுக்குள் நுழையமாட்டார்கள்.

இந்த மூன்று பிரிவினரும் பெந்தகோஸ்ட் சர்ச்சுக்குள் நுழைய மாட்டார்கள்.

இந்நான்கு பிரிவினரும் (Salvation Army Church) சால்வேஷன் ஆர்மி சர்ச்சுக்குள் நுழையமாட்டார்கள்.

இந்த ஐந்து பிரிவினரும் சென்வென்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச்சுக்குள் நுழைவதில்லை.

இந்த ஆறு பிரிவினரும் (Orthodox Church.) ஆர்தோடாக்ஸ் சர்சுக் குள் நுழையமாட்டார்கள்.

இந்த ஏழு பிரிவினரும் (Jacobite church) ஜேகோபைட் சர்ச்சுக்குள் நிழையாமாட்டார்கள்.

இப்படி கிறிஸ்தவர்களில் 146 பிரிவினர்கள் கேரளாவில் மட்டுமே இருக்கிறார்கள் என்கிறது அந்த தகவல்.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால் நாடார் கிறிஸ்தவர்கள், தலித் கிறிஸ்தவர்கள், வன்னியர் கிறிஸ்தவர்கள் என்று மதம் மாறிய பிரிவினர்கள் எல்லோரும் அவர்களது ஜாதியை கிறிஸ்தவ ஜாதியாக மாற்றி ஜாதி கிறிஸ்தவர்களாகவே வாழ்கிறார்கள்.

இப்படி மதம் மாறிய கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பப் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் போது சொந்தப் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களாகவே பார்ப்பதும் நடக்கிறது.

அவ்வளவு ஏன்,மாதாவைக் கும்பிடும் கிறிஸ்தவர்கள் ஏசுவை ஏற்றுக்கொள்வதில்லை.

ஏசுவைக்கும்பிடும் கிறிஸ்தவர்கள் மாதாவைக் கும்பிடுவதில்லை.

இரண்டுமே கிறிஸ்தவத்தின் கடவுள் என்றாலும் இவ்விரண்டு பிரிவினரும் ஏசுவயும் மாதாவையும் பரஸ்பரம் சாத்தான்களை ஏசுவதைப் போல ஏசுவார்கள்.



தமிழிலில் இதுவொரு முக்கியமான தளம் மற்றும் சிறப்பான முயற்சி. 

முக்கியமான (பொன்னியின் செல்வன், உ.வே.சா வின் என் சரித்திரம்) வற்றை ஒலித்தொகுப்பாக மாற்றும் முயற்சி.



மேலே உள்ள ஒவ்வொன்றையும் படித்து, இணைப்புக்குள் நுழைந்து, அதையும் படித்து, குழம்பிப்போய், என்னடா கிரகம்? ஒவ்வொன்றையும் நினைத்தால் எப்படி ஒரு வாய் சோறு உள்ளே இறங்கும்ன்னு யோசிக்கிற ஆளா நீங்க? உங்களைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன். 

சாப்பிடும் போது யோசிக்காதீங்க. யோசித்துக் கொண்டே சாப்பிடாதீங்க. எம்ப்புட்டு வேணுமோ எடுத்துக்குங்க. இது எங்கூரு பலகாரம்.

12 comments:

phantom363 said...

as always awesome musings....good stuff :)

Yaathoramani.blogspot.com said...

பயனுள்ள தகவல்களை
சுவாரஸ்யமாகவும் தர தங்களிடம்தான்
கற்கவேண்டும்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சுவாரசியமான தொகுப்பு.
பெரும்பாலும் தனிநபர் தொடங்கும் அறக்கட்டளைகள் வருமானவரியில் இருந்து தப்பித்துக் கொள்ளவே என்று கூறப்படுகிறது இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.

துளசி கோபால் said...

இங்கே எங்கூரில் ஸெவந்த் டே சர்ச் மக்கள் வீடுகளுக்கு வந்து 'உண்மையான சாமி' பற்றிச் சொல்லிட்டு, உங்க மதத்துலே ஏகப்பட்ட சாமிகளும் கோவில்களும் இருக்கேன்னு ஆரம்பிப்பாங்க.

ஆமாங்க. ஏகப்பட்ட சாமிகளுக்கு ஏகப்பட்ட கோவில் இருப்பது உண்மை. ஆனால் ஒரே சாமிக்கு ஏகப்பட்ட வகை சர்ச்சுப் பிரிவுகள் உங்க மதத்தில் இருக்கே!ன்னதும் கப் சுப்.

இன்னும் சிலர் கடவுள் எல்லோரையும் நேசிக்கிறார்னு சொல்லிக்கிட்டே. மரம் கல்லு எல்லாம் வச்சுக் கும்பிடறீங்களேன்னு ஆரம்பிப்பாங்க........

அதுவரை மரியாதை கருதி இவுங்களை வீட்டுக்குள் வரவழைச்சுப் பேசிக்கிட்டு இருந்த நான் முழிச்சுக்கிட்டேன்.கல்லோ, மண்ணோ, கட்டையோ.... நம்பிக்கைதான் கடவுள் என்பது எனக்கு.

அதிலிருந்து தட்டுங்கள் திறக்கப்படும் என்று கதவைத் தட்டும் நபர்களிடம், நான் வேற்று மதத்தவள்.போயிட்டு வாங்க. இன்றைய நாள் நல்லதாக இருக்கட்டுமுன்னு ஜன்னல் வழியே சொல்வதோடு சரி.

பின்னூட்டங்கள் வாயிலாக பதிவைவிட அதிகத் தகவல்கள் கிடைக்கும் என்பது ரொம்பச்சரி.

Avargal Unmaigal said...

////நமக்கு வெற்றி மட்டுமே முக்கியம். காரணங்கள் தேவையில்லை". ///


மிக மிக சரி

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம்.இந்துக்கள் மத்தியில் தான் அதிக ஜாதி பிரிவுகள் என்பது போல ஒரு மாயை இருக்கு.காரணம் ஜனத்தொகையில் இந்துக்கள் அதிகமாக இருப்பதால் தானோ என்னவோ.

'பரிவை' சே.குமார் said...

அண்ணா...
சுவராஸ்யமாத் தொகுத்து அளித்திருக்கிறீர்கள்...
அருமை.

Avargal Unmaigal said...

எனது இன்றைய வலைப்பதிவில் சிறந்த 10 பேரை தேர்ந்தெடுத்து எனது பதிவிற்கு நல்ல கருத்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளேன். உங்களுக்கு நேரம் இருந்தால் அதற்கான பதிலை தருமாறு உங்களை பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்,

உங்களை நான் தொந்தரவு செய்வதாக நினைத்தால் மன்னிக்கவும்

http://avargal-unmaigal.blogspot.com/2013/08/blog-post_7219.html
நன்றி

அன்புடன்
மதுரைத்தமிழன்

srinivasan said...

மனதை தொட்ட அருமையான புகைப்படங்களும் , ஜோமோ கேன்யடாவின் வரிகளும்.

Unknown said...

ஜோமோ கேன்யடாவின் வரிகள் மனதை நெருடியது, உண்மைதான் கிருஸ்துவத்தில் உள்ள ஒரு சில பிரிவுகள் மதமாற்று என்ற பெயரில் செய்யும் மோசடிகள். ம்ற்றபடி தங்களின் சொல்ல மறந்த கதைகளின் கருத்து கோவைகள் அனத்தும்

மறந்து போகாத நிஜங்கள்.

Unknown said...

சொல்ல மறந்து போனேனே! உங்கூரு பலகாரத்தில் எனக்குப் பிடித்த எள்ளுருண்டை, தட்டை, முருக்கு என ஜம்மாய்த்து விட்டேன், ஏ....வ்.... ரொம்ப நன்றி.

ஜோதிஜி said...

நன்றிங்க