Sunday, January 13, 2013

தை பிறந்தது (டாலர் நகரம்) வழி கிடைத்தது.வணக்கம் நண்பர்களே

அனைவருக்கும் தேவியர் இல்லத்தின் இனிய பொங்கல் (2013) திருநாள் மற்றும் தமிழர் திரு நாள் வாழ்த்துகள்.

வலிகளில் இருந்து பலருக்கும் வழிகள் கிடைக்கின்றது. இந்த பொங்கல் திருநாள் தேவியர் இல்லத்திற்கு மற்றொரு மகிழ்ச்சியான தைத்திருநாள் ஆகும்.

4 தமிழ்மீடியா (படைப்பாய்வகம்) குழுமம் வெளியீட்டில் எனது டாலர் நகரம் என்ற புத்தகம் ஜனவரி கடைசி வாரத்தில் திருப்பூரில் வெளியாக இருக்கின்றது. 4 தமிழ் மீடியா தளத்தில் வெளியான கடைசி அத்தியாயத்தின் ஆசிரியர் பார்வையை படிக்க இங்கே சொடுக்க

இதன் விழா ஜனவரி 27 ஞாயிறு அன்று திருப்பூரில் நடக்க இருக்கின்றது.


இந்த புத்தகம் என்பது வலிகள் சுமந்து கடந்த வந்த எனது திருப்பூர் வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களின் தொகுப்பு. கூடவே திருப்பூர் குறித்த 20 வருடங்களின் மாறுதல்களின் ஆவண பதிவு. 

வண்ண புகைப்படங்களுடன் கூடிய நல்ல தரமான புத்தகமாக வருகின்றது. சர்வதேச காப்புரிமையுடன் 4 தமிழ்மீடியா குழுமம் கொண்டு வருகின்றார்கள்.

இன்று 100 கோடி வணிக வர்த்தக நிறுவனத்தில் பொது மேலாளர் பதவியில் இருந்த போதிலும் அடைந்த உயரத்திற்கு கொடுத்த விலைகளை கடந்த நான்கு வருடங்களாக வேர்ட்ப்ரஸ் ல் எழுத தொடங்கியதில் இருந்த ஒவ்வொன்றையும் பதிவுகளாக எழுதி வந்துள்ளேன். 

என் வலைதளத்தில் உள்ளதைப் போல மிக நீண்டதாக இருக்காது. இயல்பான வாசிப்பில் இருக்கும் சாதாரண வாசிப்பாளர்களுக்கு புரிந்து கொள்ளக்கூடிய வார்த்தைகளின் தொகுப்பாக இருக்கும். திருப்பூர் வாழ்க்கையைப் பற்றியே தெரியாத சாதாரண மனிதர்களுக்கு இந்த ஏற்றுமதி துறை குறித்து புரிந்து கொள்ள உதவும். நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் பார்வையில் 4 தமிழ் மீடியா தளம் ஆசிரியர் திரு. மலைநாடன் அவர்களின் உழைப்பில், திருப்பூரில் உள்ளவர்கள் மற்றும் திருப்பூருக்கு வெளியே இருப்பவர்களுக்கு இந்த ஊரை புரிந்து கொள்ள வேண்டிய எளிய நடை எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது உழைப்பின் மூலம் என்னோடு பயணித்த திருப்பூர் சேர்தளம் தலைவர், வெயிலான் என்ற தளத்தில் எழுதிக் கொண்டு வரும் என் சக பயணி திரு. ரமேஷ் அவர்களுக்கும் என் நன்றியை வாசிப்பாளர்கள் சார்பாக எழுதி வைக்கின்றேன்.

இரண்டு விரல்களை காட்டும் போது உங்களுக்கு ஆங்கில வி என்ற எழுத்து நினைவுக்கு வரும். சிலருக்கும் அதன் அர்த்தமாக விக்டரி என்று தோன்றும்.  வெற்றி என்பதாக எடுத்துக் கொள்ளலாம். 

ஆனால் இதனை எப்பொழுதும் இரண்டு எண் என்பதாக நான் எப்போதும் எடுத்துக் கொள்வதுண்டு.

திருமண வாழ்க்கைக்கு பிறகு என்னை மாற்ற வந்த இரட்டைக் குழந்தைகள் முதல் நடந்த ஒவ்வொன்றுமே இந்த இரண்டாகவே இருக்கின்றது. வெற்றி தோல்வி என்று மாறி மாறி வந்த போதிலும் புறக்கணிப்பும் அவமானங்களும் கற்றுத் தந்த பாடங்களை கவனமாக எடுத்து நடந்து வந்துள்ளேன். கவனமாக சேகரிக்கப்பட்ட என் அனுபவங்களை வலைபதிவுகளில் பதிவு செய்தும் வந்துள்ளேன்.


திருப்பூரில் வாழ்ந்த 20 வருடத்தின் மொத்த அனுபவங்களை, பார்த்த, பழகிய மனிதர்களை, பணிபுரிந்த நிறுவனங்கள் தந்த பாடங்களை என் பார்வையில் பதிவு செய்துள்ளேன்.


பணம் மனம் இந்த இரண்டுக்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் மனித வாழ்க்கையை கவனமாக உள்வாங்கியுள்ளேன்.  கிடைத்த அனுபவங்களை என் ஏற்றத்திற்கு பயன்படுத்தி இருக்கின்றேன். எதையும் வெற்றி தோல்வி என்பதாக கருதிக் கொள்ளாமல் அதை ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டு நடந்து வந்துள்ளேன்.

மீதி அடுத்த பதிவில்.........

(டாலர் நகரம் திருப்பூர் புத்தக கண்காட்சியில் வெளியாகின்றது) 
உங்களை அன்போடு அழைக்கின்றேன்.
ஜோதிஜி

58 comments:

 1. கிடைத்த அனுபவங்களை என் ஏற்றத்திற்கு பயன்படுத்தி இருக்கின்றேன். எதையும் வெற்றி தோல்வி என்பதாக கருதிக் கொள்ளாமல் அதை ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டு நடந்து வந்துள்ளேன்.

  வெற்றியின் முகவரி ..பாராட்டுக்கள்..


  இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

   Delete
 2. ஜோதிஜி!பதிவர் என்ற நிலையிலிருந்து புத்தக படைப்பாளர் அங்கீகாரத்துக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் காலடித் தடம் என்பது தேவியர் இல்லத்தில் முத்திரை பதிக்கப் பட்ட ஒன்று. அது புத்தகத்தின் கடைசி பக்கம் உங்களுக்கு புரிய வைக்கவும்.

   Delete
 3. இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. ஜோதிஜி,

  பொங்கல் மற்றும் தை-1 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  உங்கள் நூல் வெளியீடு சென்னை புத்தக சந்தைக்கு ஏற்றார்ப்போல் வச்சிருக்கீங்க என முதலில் நினைத்துவிட்டேன் ஜனவரி -27 இல் வைத்தால் ,பு.ச.யில் கிடைக்குமா? சந்தைக்கு வருவது போல வெளியிட்டுஇருக்கலாமே? அப்படி செய்தால் ஒரு நல்ல ஓபனிங்க் கிடைக்கும்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். அதற்கும் காரணங்கள் உண்டு நண்பா. ஒரு சமயத்தில் அதைப் பற்றி விரிவாக எழுதுகின்றேன்.

   Delete
  2. ஜோதிஜி,

   மன்னிக்கவும் முதலில் படங்கள் தெரியவில்லை என்பதால் , திருப்பூர் புத்தக சந்தைப்பற்றிய அறிவிப்பினை பார்க்கவில்லை, பின்னர் கவனித்தேன், திருப்பூர் புத்தக விழாவில் கிடைப்பது போல வெளியீடு உள்ளதை அறிந்தேன், அடுத்தடுத்து புத்தக சந்தைகள் வருகின்றன என்பதை இப்போது தான் அறிந்தேன்.

   ஏதேனும் ஒரு சந்தையில் இறங்கும் வாய்ப்பு இருப்பது நல்லதே. வாழ்த்துக்கள்.

   Delete
 5. வாழ்த்துகள் நண்பரே! வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. புத்தக வெளியீடு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.

  இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. எப்ப திருப்பூர் பக்கம் வரப் போறீங்க? உங்க மின் அஞ்சலை தேடிப் பார்த்து சோர்வடைந்து போய்விட்டேன்.

   Delete
 7. புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற, நிறைந்த மனத்துடன் வாழ்த்துகின்றோம்.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
 9. பாராட்டுக்கள் ஜோதிஜி....உங்களை பாராட்டி பாராட்டி அந்த பாராட்டு என்ற வார்தைக்கே அர்த்தமில்லாமல் போய்விட்டது போலிருக்கிறது. அதனால் உங்களை பாராட்ட தமிழில் வார்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்....ஒரு வேளை உங்களை போன்ரவர்கள் பாராட்டு என்ற வார்தைக்கு பதிலாக ஒரு புதிய வார்தையை கண்டுபிடித்து சொல்ல வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. ஊருக்கு வரும் போது வீட்டுக்கு வருவீங்க தானே?

   Delete
 10. நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 11. உங்களை எனக்கு அறிமுகபடுத்தியதே “டாலர் நகரம்” தான்,அதுவே புத்தக வடிவில் வருவதில் மிக்க மகிழ்சி.வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. இது எனக்கு புதிய செய்தி. நன்றி குமார்.

   Delete
 12. ஜோதிஜி அவர்களுக்கு எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்! தங்கள் புத்தகத்தின் விலை, பதிப்பகம் முகவரி, பிற ஊர்களில் கிடைக்கும் இடம் முதலான தகவல்களை தெரிவித்தால் விலைக்கு வாங்க ஏதுவாக இருக்கும்.


  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க. கடைசி பதிவில் அனைத்து விபரங்களையும் தருகின்றேன்.

   Delete
 13. அன்பின் ஜோதிஜி - புத்தக வெளியீட்டு விழா சிறப்புடன் நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. தலைவரை வரவேற்க நானும் சிவாவும் ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

   Delete
 14. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்

   Delete
 15. அனுபவங்களின் தொகுப்பு அனைவருக்கும் பயன்படும் வகையில் நூலாக்கம் பெறுவதில் மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் :)

  ReplyDelete
  Replies
  1. பலரும் இந்த நிகழ்வில் பாடம் கற்றுத் தந்த தருணத்தில் தாங்கள் அளித்த ஒத்துழைப்பு என்றுமே மறக்க முடியாத ஒன்று. நல்வாழ்த்துகள் சிவா.

   Delete
 16. நேர்மையின் பாதையை
  தேர்ந்தெடுக்கும் பயணம்
  வெற்றியில்தான் நிறையடையும்.
  வெற்றியடைந்ததற்கு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. முடிந்தவரைக்கும் வர முயற்சி செய்யவும் அகலிகன்.

   Delete
 17. புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் ஜோதிஜி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கிரி. இனிய பொங்கல் வாழ்த்துகள்.

   Delete
 18. வாழ்த்துகள் ~ வாழ்க வளமுடன்
  - ஆகாயமனிதன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே. அவசியம் வாங்க.

   Delete
 19. பொங்கல் நல்வாழ்த்துகள், புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. 35 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்வது மதுரை என்ற போதிலும், எனது சொந்த ஊர் திருப்பூர். டாலர் நகர அனுபவங்களை, வலிகளை, கற்ற பாடங்களை படித்தபோது, அந்த நகரில் கொங்கு நகரில், தனலட்சுமி தியேட்டர் அருகில், ரயில்வே லயனில், அனுப்பர்பாளையத்தில், டயமண்ட் தியேட்டர் அருகில், கருவம்பாளையத்தில், அவனாசி ரோடில், தற்போது திருப்பூர் திருப்பதி கோயில் இருக்கும் தெருவில், பன்சிலால் காலனியில்- சுற்றித்திரிந்தது, பனியன் ஊசி பொறுக்கியது, சில காலம் மெட்ரோ நிட்டிங் அண்ட் டிரேடிங் கம்பெனி (நூல்- பனியன் இயந்திரங்களுக்கான உதிரி பாகங்கள் விற்கும் கடை / வளர்மதி பாலம் அருகில்)யில் பள்ளி விடுமுறை நாளில் என் சித்தப்பாவுடன் பணிபுரிந்தது, அந்த நாளில் சிறு பையன்கள் சைக்கிளில் விரைவாக வந்து உதிரி பாகம் வாங்கிச் செல்வதை பார்த்தது), இன்னும் பனியன், ஜட்டி என உருப்பெருவதற்கு முன்பாக அது பல சிறு தொழில் முனைவர்களை, தொழிலாளர்களை கடந்து வருவதை வேடிக்கை பார்த்த வகையில், அந்த பனியனை ஒட்டி 80 களில் சிவகாசியில் அச்சிட்டு தயாரித்த அட்டை பெட்டிகள், அச்சுத் தொழில் திருப்பூரில் படிப்படியாக வளர்ந்து இன்று மற்றுமொரு சிவகாசியாக திகழ்கிற நிகழ்வை, பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப் பெற்றிருக்கும் தூண்களில் "வேலைக்கு ஆட்கள் தேவை" என்ற அழைப்புகள் (உலகமயமாக்கல் மற்றும் சாயப்பட்டரை அழிவினால் இன்று அவை குறைந்திருக்கும்) காண்பதை முற்றிலும் ரீவைண்ட் செய்து திரும்ப பார்த்த உணர்வு ஏற்பட்டது, தங்கள் எழுத்து நடை மிக நன்றாக உள்ளது. நேரில் விழாவில் கலந்து கொண்டு- புத்தகம் பெற்று படங்களுடன் படிக்க ஆவலாக உள்ளேன். வாழ்த்துக்கள்

  எஸ்.சம்பத்

  ReplyDelete
  Replies
  1. நன்றி சம்பத். வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றேன்.

   Delete
 21. புத்தக வெளியீடு என்பதும் ஒரு வகை பிரசவ வேதனைதான். விழா நல்லபடியாக நடந்து, அதிகமான நபர்களின் வாசிப்பிற்கு இது சென்றடைய வேண்டும் என்கிற பதைபதைப்பு, ஏற்பாடு செய்த அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெற வேண்டும், மைக் ஒத்துழைக்க வேண்டும், இப்படி நிறைய நினைவுகளுடன் பணிபுரிந்து கொண்டிருப்பீர்கள். நட்பு என்பது மிகப்பெரிய சொத்து, நட்புகளின் ஆதரவில் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும், மறுபடியும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. பிரசவ வேதனையில் கூட இப்படி அனுபவித்து இல்லை சம்பத். அத்தனைக்கும் ஆசைப்பட்டால் அதன் வேதனைகளை இன்பமாக எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று உணர்த்திய பாடங்களை விரைவில் எழுதுகின்றேன்.

   Delete
 22. மீண்டும் வாழ்த்துக்கள் ஜோதிஜி சார்!!!!--செழியன்.

  ReplyDelete
  Replies
  1. செழியன் கண்ணா மூச்சி ஆட்டத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒழுங்கு மரியாதையா விழாவில் கலந்து கொள்ளனும் ஆமாம் செழியன். சொல்லிபுட்டேன். ஜாக்ரத. வருவீங்க தானே.

   Delete
  2. முயற்சிக்கிறேன் ஜோதிஜி சார்:))))--செழியன்.

   Delete
  3. வந்து பார்த்துட்டு எஸ்கேப்பாகி வீடாதீங்க. அறிமுகம் செய்து கொள்ளவும்.

   Delete
 23. டாலர் நகரத்தின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டும் உங்கள் முயற்சிக்கு நொய்யல் பாதுக்காப்பு அமைப்பு சார்பாக வாழ்த்துக்கள்.
  கண்டிப்பாக விழாவிற்கு வருகிறேன்.
  - தமிழ் இளங்கோ

  ReplyDelete
 24. வணக்கம் ஜோதிஜி, என் வலைதளத்தில் நொய்யல் நதியைப்பற்றி ஒரு கட்டுரை எழுதிவிட்டு அதற்கு புகைப்படம் சேர்க்க தேடிக்கொண்டிருந்த பொது உங்கள் வலைத்தளம் கண்டேன். மிக நன்றாக உள்ளது உங்கள் எழுத்துக்களும் கருத்துக்களும்.

  தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்

  நேரமிருந்தால் என் வலைதளத்தைப் பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள், நன்றி!

  ReplyDelete
 25. உங்கள் எழுத்துக்கு தீவிர வாசகன் என்ற முறையில் எனக்கு இது தித்திப்பான செய்தியே, வாழ்த்துக்கள் சகோ. மேன்மேலும் பல படைப்புக்களை தர வேண்டுகின்றேன், வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. வாழ்த்துக்கள் .. கண்டிப்பா கலந்து கொள்கிறேன் :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி அருண்.

   திருப்பூர் வரும் நண்பர்கள் நிகழ்காலத்தில் சிவா அவர்களின் எண் 97 900 36 233

   போக்குவரத்து ஒருங்கினைப்பில் உதவுவார்.

   Delete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.