இந்த மாதம் முழுக்க சமச்சீர் கல்வியைப்பற்றி யோசிக்க, குடும்பம், குழந்தைகள் என்று மாறி மாறி பயணித்து வாழ்க்கையின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன். ஆனால் இப்போது தடம் மாறி பயணிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றேன்.
ஒவ்வொரு முறையும் நான் எழுதத் தொடங்கும் போது பதிவுலகில் எவரும் எழுதாத விசயங்களைப் பற்றி எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கின்றேன். பலமுறை பலவிசயங்களை கூகுள் தேடு பொறியில் பல வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு தேடத் தொடங்கும் போது பல ஆச்சரியங்களை பார்த்தது உண்டு.
யாரோ எவரோ குறிப்பிட்ட காலத்தில் பல வரலாற்று சம்பவங்களை எழுதியிருப்பதையம் அவர்களின் உழைப்புகளையும் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும். பலரும் தேடு பொறியின் மூலம் என் தளத்திற்கு வருவதை தினமும் கவனித்துக் கொண்டே தான் இருக்கின்றேன்.
இதன் அடுத்த கட்டமாக ஒரு முக்கியமான பாதை இன்று முதல் தொடங்குகின்றது.
அடிமைகள் என்ற வார்த்தையை கேள்விபட்டுருக்கிறீங்களா?
இன்று உலக நாகரிகம் வளர்ந்துள்ளது. 50 வருடங்களுக்கு முன்பு இருந்த வாழ்க்கை முறை மாறியுள்ளது. நாம் பலவற்றிலும் முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்கின்றோம். ஆனால் இந்த மனித நாகரிக வளர்ச்சி எங்கேயிருந்து தொடங்கி படிப்படியாக எப்படி வளர்ந்தது என்பதை நினைத்து பார்த்து இருக்கீங்களா?
நாலைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு மனிதர்களை அடிமையாக வைத்துக் கொண்டு வளர்ந்த மேற்கத்திய நாடுகளைப்பற்றி நீங்கள் அறிவீர்களா? ஆப்பிரிக்க அடிமைகள், ஐரோப்பிய அடிமைகள் என்று தொடங்கிய இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்த அடிமைகளின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்?
இந்த சமயத்தில் சிலரைப் பற்றி பேசியாக வேண்டும்.
துளசி தளம் என்ற வலைபதிவின் மூலம் எழுதிக் கொண்டிருக்கும் திருமதி துளசி கோபால் எழுத்தை கவனித்துப் பார்த்தால் ஆங்கில வார்த்தைகள் கலந்தே வரும். ஆனால் அவருக்குத் தெரிந்த தமிழ் இலக்கண சமாச்சாரங்கள் இன்று வரைக்கும் எனக்குச் சரியாக தெரியாது. ஏறக்குறைய ஒரு தமிழாசிரியர் அளவுக்கு என் எழுத்தை பிரித்து மேய்ந்து என் தவறுகளை சுட்டிக் காட்டியிருக்கிறார். திருமதி துளசி கோபால் மூலம் அறிமுகம் ஆன சந்தியா பதிப்பகம் நடராஜன் எழுதுவது எப்படி? என்பதை ஒரு வாத்தியார் போலவே கற்றுத் தந்தார். இன்னும் கூட கற்றுத் தந்து கொண்டேயிருக்கிறார்.
தொடர்ச்சியாக கிழக்கு பதிப்பகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் மருதன் அவர்களைப் பற்றி அவரின் ஒத்துழைப்பை பற்றி இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
நாலைந்து மாதங்களுக்கு முன்பு உலகில் வாழ்ந்த அடிமைகள் பற்றி எழுத வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். நானும் அதன் முழு உழைப்பைப் பற்றி தெரியாமல் களத்தில் குதித்து விட்டு பிறகு தடுமாறிப் போனேன். ஆனால் என்னை அவர் விடுவதாக இல்லை. உங்களால் முடியும் என்று உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளமாக்கி விட்டார். இப்போது கூட எழுதுவது எப்படி? என்று தூரத்தில் உட்காரந்து கொண்டு பாடம் எடுக்க அடுத்தடுத்து நகர்ந்து ஓரளவுக்கு பல புத்தகங்களை படித்து கோர்த்து முடிக்க பாதி அளவுக்குத் தான் நகர்ந்து வர முடிந்தது. இதன் தொடர்பாக புத்தகம் ஒன்றை அனுப்பி வைத்தார்.
அவரைப் போலவே சார்வாகன் உடனடியாக ஒரு மின் நூல் அனுப்பி ஆச்சரியப்படுத்தினார். தமிழ்மலர் என்ற சகோதரி, பத்திரிக்கையாளர் பொறுப்பில் இருப்பவர் அவர் பங்குக்கு ஒரு புத்தகத்தை அனுப்பி வைத்தார். ஒவ்வொரு புத்தகத்தையும் படிக்கப் படிக்க நம்முடைய நாகரிக வளர்ச்சி என்பது இது போன்ற பல இன்னல்களை தாண்டி வர முடிந்துள்ளது என்பதை மட்டும் என்னால் தெளிவாக புரிந்தது கொள்ள முடிந்தது.
தமிழ்நாட்டில் கடந்த நூற்றாண்டுகளுக்கு முன்னால் நடந்த பல சம்பவங்களைப் பார்க்கும் போது படிக்கும் போதே கண்களில் நீர் வருவதை அடக்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஜாதி என்ற பெயரால் சக மனிதனை எந்த அளவுக்கு அடிமைபடுத்தி வைத்திருந்தார்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் தொடர்ந்து எழுத நேரம் இல்லாத காரணத்தால் அதுவும் பாதியில் நின்றது. இப்போது உழைத்தே ஆக வேண்டும் என்று மருதனின் அன்புக்கட்டளையினால் வலைபதிவில் எழுதினால் இன்னமும் பலருக்கும் போய்ச் சேருமே என்று கேட்ட போது அதற்கும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
எத்தனை பேருக்கு இந்த தொடர் பிடிக்கின்றதோ இல்லையோ நான் வலைபதிவுகளில் அடிமைகள் குறித்து தேடிய போது மிக குறைவான அளவுக்குத் தான் விசயங்கள் இருந்தது.
நிச்சயம் இந்த தொடர் நமது மனித நாகரிகத்தைப் பற்றிய புரிந்துணர்வை நமக்கு உருவாக்கும். நிச்சயம் இந்த தொடரை தொடர்ந்த எழுத உங்கள் அணைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பாக்கின்றேன். உங்களுக்குத் தெரிந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளுங்க. இது புத்தகமாக வரும் போது பலருக்கும் உதவக்கூடும்.
20 comments:
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். எடுத்த பணியை சிறப்பாக செய்து (எழுதி) முடிக்க வாழ்த்துகள்.
அருமையான பணி.
தொடருங்கள்...என் ஆதரவு கண்டிப்பாய் உங்களுக்கு...
thodarungkal... anaivar aatharavum undu.. vaalththukkal..
ஆகஸ்ட் 23ம் தேதி உலக அடிமை வியாபார ஒழிப்பு நினைவு தினத்தன்று இது பற்றி நானும் எழுத இருந்தேன் .தங்களின் தொடருக்கு வாழ்த்துக்கள்.தொடருங்கள் தொடர்கிறேன்.நன்றி.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.ஆவலுடன் உள்ளேன்.சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் I AM SALVE என்ற ஆங்கில படம் பார்த்தேன். ஆபிரிக்க குழந்தைகள் அடிமைகளாக ஆக்கப்பட்டு எப்படி இங்கிலாந்திற்கு கொண்டுவரப் படுகிறார்கள் என்பதே படத்தின் கரு. இதைப் பற்றி ஒரு விமர்சனம் இடலாம் என நினைத்திருக்கும் பொழுது
ஒரு அடிமை வரலாறு தொடங்க இருக்கிறேன் என குதிதுள்ளீர்கள்.
ரத்த வாடையுடன் தொடங்குங்கள்...
வாழ்த்துக்கள் ஜோதிஜி. கலக்குங்க.. நான் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.
நீங்க சிறிய பத்தியாக பிரித்து எழுத தொடங்கி இருப்பதும் மகிழ்ச்சி. தற்போது தான் படிக்க எளிமையாக உள்ளது :-)
உங்களால் முடியாததா சார்? எங்களுக்கு அதிகமாகவே நம்பிக்கை உண்டு உங்கள் மேல், எழுதி கலக்குங்க, புத்தக வடிவிலும் விரைவில் எதிர்பார்க்கிறேன்
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
மிருக நிலையில் இருந்து கொஞ்சம் வேகமாக
உடல் அளவில் வசதி வாய்ப்புகளில்
மனித நிலக்கு உயர்ந்தவர்கள்
மனத்தளவில் மிருகமாகவே இருந்தவர்கள்
கொஞ்சம் மெதுவாக உயர்ந்துகொண்டிருந்தவர்களை
பயன்படுத்திய காட்டுமிராண்டித்தனம் தான்
அடிமைகளின் வரலாறாக இருக்க முடியும்
தாங்கள் எழுத முயலுதல் குறித்து மிக்க மகிழ்ச்சி
அந்தப் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்
நிச்சயம் இந்த தொடர் நமது மனித நாகரிகத்தைப் பற்றிய புரிந்துணர்வை நமக்கு உருவாக்கும்.
உண்மை.
தொடர்ந்து எழுதுங்க..
அருமையான பதிவு.
தொடர்ந்து எழுதுங்க..
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
வணக்கம் ஜோதிஜி,
கேட்பது தவறு-ன்னு சொல்ற நீங்களே ஆதரவு அது இது-ன்னிக்கிட்டு. எடுங்க மட்டைய. சும்மா அடிச்சு ஆடுங்க.
வாழ்த்துக்கள். என் காத்திருப்புகள் உங்களை எழுதத் தூண்டும்.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
நண்பர்களின் ஆதரவுக்கு நன்றி.
காத்திருக்கிறேனுங்க..
தொடரை தொடர்கிறேன்
i am waiting
Post a Comment