Sunday, August 14, 2011

ராஜீவ் காந்தி படுகொலையில் உண்மையிலேயே யாருக்கு தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்?


எங்கள் அருமை புலம் பெயர் தமிழர்களேஉங்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வேண்டுகோள்

வணக்கம். 

உங்களிடத்தில் முதல் முறையாக மே பதினேழு இயக்கம் கோரிக்கையும்வேண்டுகோளையும் வைக்கிறது. 


தமிழர்களின் மீதான தாக்குதலை இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனது தமிழர் எதிர்ப்பு நிலையை எந்த விலையை கொடுத்தேனும் காட்டுகிறது இந்திய அரசு. தமிழீழத்தின் மீதான இன அழிப்பு போரை நடத்தி கிட்டதட்ட ஒருலட்சத்தி நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை அழிப்பதற்கு துனை நின்று பிறகு அந்த கொலையாளிகளை உலக அரங்கில் காப்பற்ற செயல் பட்டுக் கொண்டு இருக்கும் இந்திய அரசு தமிழக மீனவர்கள் உட்பட அனைவரின் மீதும் தனது எதிர்ப்பு நிலையை தீவிரப்படுத்தியிருக்கிறது.

தமிழர்களின் இந்த இக்கட்டான வரலாற்று சூழலில் தனது அரசியல்சமூக போராட்ட கட்டமைப்புகளை பிஞ்சு நிலையில் பெற்று இருக்கும் தமிழர்கள்தங்கள் மீது திணிக்கப்படும் இந்த அடக்குமுறைகள்கொலைகள்  நம்மை எவ்வாறு கையறு நிலைக்கு கொண்டு சென்றுள்ளது என்பதை நாம் கவனிக்க முடியும். இந்த முறையில் இன்று தமிழக அரசியல் போரளிகளின் மீது  கடும் தாக்கத்தையும் துயரத்தையும் ஏற்பட்டுத்தி இருப்பது தோழர்.பேரறிவாளன்தோழர்.முருகன்தோழர்.சாந்தன் திணிக்கப்பட்டு இருக்கும் மரணதண்டனை.  கொலை செய்யப்பட்டவர் முன்னால்  பிரதமர் என்கிற ஒரே காரனத்திற்காக  நீதியை மறுத்து இருக்கிறது 


இந்த அரசு. சோடிக்கப்பட்ட இந்த வழக்கில்  முதலில் தூக்கில் இடப்படுவதற்காக கைது செய்யப்பட்டவர்களில்   13பேர்  ஈழத்தமிழர்களாகவும் 13 பேர் இந்திய-தமிழகத் தமிழ்ழர்களாகவும் இருக்கும் படி பார்த்துக் கொண்டது அரசு.பிறகு  தூக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்ட  4 பேரில் இருவர் தமிழகத் தமிழர்களாகவும், 2 பேர் தமிழீழத்தமிழர்களாகவும் இருக்குமாறு பார்த்துக் கொண்டது.  செய்யாத குற்றத்திற்காகவும்நிரூபனம் ஆகாத குற்றச்சாட்டு ஒன்றிற்காகவும் இந்த அப்பாவிகள் தமிழர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக இந்தியாவின் மத்திய அரசால்  உயிர் பறிக்கபட இருக்கிறது. 

எந்த ஒரு அடிப்படை சட்ட வழிமுறையும் பின்பற்றப்படாமல் மெளனமாக்கப்பட்ட இந்த  அப்பாவிகள்கதவிடுக்கில் சத்தமில்லாமல் பலியிடப்படும் சுவர் பல்லிகளாய்பலியிடப்பட காத்து இருக்கிறார்கள். எந்தவித கவனமும் இல்லாமல் விபத்தாய் இந்த படுகொலை நடக்கப் போகிறது. ஆனால் இது விபத்து அல்லமிகக் கவனமாய் திட்டமிடப்பட்ட நடத்தப்பட இருக்கிற படுகொலை. நம் கண்முன்னே நமது சகோதரர்கள் எந்தவித முகாந்திரமுமின்றி படுகொலை செய்யப்பட 21 வருடங்களாய் காக்க வைக்கப்பட்டுவிடுதலை கிடைக்கும் என நம்பிக்கை கொடுக்கப்பட்டுஇறுதியில்  தூக்குக் கயிறை தழுவப்போகிறார்கள். 

தமிழர்கள் எந்த ஒரு சமத்திலும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடிய வலிமை உள்ளவர்கள் அல்ல என்று நம்பும் இந்த இந்திய அரசைதமிழர்களாகிய நாம் வெல்லவேண்டும். ஆசியாவிலேயே யூத இனத்திற்கு அடுத்தபடியாக சர்வதேச அளவில் விரிந்து நிற்கக் கூடிய தமிழ்ச் சமூகம் தன் இனத்திற்கு நடக்ககூடிய அநீதியை தட்டிக் கேட்க வீதிக்கு  உலகம் முழுவதும் வந்து நிற்கும் என்பதை புரிய வைக்க வேண்டும்.தமிழர்களுக்கு இன்னல் விளைவித்தால் சர்வதேசச் சமூகத்தில் அவமானத்தை பரிசாக பெற்றுக்கொள்ளும் நிலை இவர்களுக்கு வரும் என்பதை முகத்தில் அறைந்து உரைக்கவேண்டும். 

திரு. பேரறிவாளன் திரு. முருகன் திரு. சாந்தன் அவர்களின் விடுதலை பெற்றுத்தரக் கூடிய ஒரு போராட்டத்தை நாம் எடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். இந்தப் போராட்டம் தமிழத்தினை விட்டு வெளியேவும் நடக்க வேண்டும். சர்வதேச அரங்கில் இந்த அநீதிக்கான போராட்டம் நடக்கும் பட்சத்தில் இந்திய அரசு நெருக்கடிக்கு உள்ளாகும்.  தமிழர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி தன்னையும்சிங்களத்தையும் காக்க நினைக்கும் இந்தியம்,  நமது ஒருங்கினைந்த போராட்டத்தினால் நிலைகுலையும். இந்தியாவின் தன் மரியாதையை உலக அரங்கில் இழக்கும் இந்த சமயத்தில்அதன் நேர்மையும் காந்திய முகமூடியும் கிழிக்கப்படும். இது நமக்கு இந்த சமயத்தில் அவசியமானதும்தேவையானதுமான ஒன்று. உலகெங்கும் உள்ள தமிழர்கள் தம் இனம் காக்க ஒன்று கூடி நிற்பார்கள் என்பதை உணர்த்தும் விதமாக புலம் பெயர் உறவுகளே உங்களுடைய போராட்டத்தினை பதிவு செய்யங்கள். 

இவர்களின் நியாயங்களை உலகெங்கும் உள்ள பத்திரிக்கைகளில்ஊடகங்களில் பதிவு செய்யுங்கள். நிறைவு பேறாத விசாரணைபாதியில் முடிக்கப்பட்ட  கமிசன்கள்ஒத்து ஊதும் ஊடகங்கள் ஆகியவற்றால் தவறாக முடிவுற்ற இந்த வழக்கினையும்இந்திய அரசின் நேர்மையின்மையையும் காட்டுங்கள்... 

இந்தப் பஞ்சமா பாதகத்தினை செய்ய முனையும் இந்திய காங்கிரஸ் அரசின் தூதரகத்தின் முன்போ அல்லது முக்கியப் பகுதிகளையோ தேர்ந்தெடுத்து போராடலாம். இந்தப் போராட்டத்தின் அவசியம்  நம் தமிழ் நிரபராதிகளை தூக்கில் போடப்பட கூடாதுஇந்த அப்பாவிகள் தமிழர்கல் என்கிற ஒரே காரணத்திற்காகவே தூக்கிலேற்றப்படுகிறார்கள். விசாரனை முடியும் முன்பே,  சந்தேகத்திற்குரிய நபராக சுப்ரமணியன் சாமி (முன்னால் மத்திய சட்ட அமைச்சர்-தமிழீழ விடுதலை எதிர்ப்பாளர்சந்திரசாமி ) மேலும் தமிழர்களாகிய நாம் ஒரே அணியில் நிற்போம் என்பதே.

தமிழனுக்கு உலகில் எம்மூலையில் துன்பமும்அநீதியும் விளைவிக்கப்பட்டால் தமிழர்கள்  நாம் ஒன்றாய் நிற்போம். 


புலம் பெயர் தமிழர்களே களம் காணுங்கள் 

நம் பேரறிவாளன்முருகன்சாந்தனுக்காக. அனைத்து அமைப்புகளும்உணர்வாளார்களும் இனைந்து   வரும் ஆகஸ்டு 20 ம் தேதி வரும் ஆகஸ்டு 20 ம் தேதி நாங்கள் சென்னையில் பாரி முனை அருகில்கலெக்டர் ஆட்சியகம் முன்னால்  லட்சம் தமிழர்களாய் ஒன்று கூடுகிறோம்.   

வரும் 18ம் தேதி வியாழன் 2000 இருசக்கர வாகனங்களில் வேலூரை நோக்கிய பிரச்சாரப் பயண்ம்.  

நீங்களும் கை கோருங்கள்.உங்கள் புலம் பெயர் நாடுகளில் இந்த அப்பாவிகளுக்காய் ஒன்று கூடி உரக்கக் குரல் கொடுங்கள்.. மேற்கத்திய எழுத்தாளர்கள்அறிஞர்கள்போராளிகள்அரசியல் அறிஞர்கள் என அனைவரின் ஆதரவினையும் சேகரித்துக் கொடுங்கள்....  

தமிழராய் ஒன்று கூடுவோம். நாம் வெல்வோம்.

நன்றி. 
மே பதினேழு இயக்கம்.

96007 81111, 98848 77487, 90948 17952.

11 comments:

இராஜராஜேஸ்வரி said...

தமிழராய் ஒன்று கூடுவோம். நாம் வெல்வோம்.

Samy said...

We have to fight for our rights.samy

sarujan said...

நாம் வெல்வோம்

Bibiliobibuli said...

http://tamilnet.com/art.html?catid=13&artid=34297

இந்த இணைப்பையும் படித்துப்பார்க்கவும்.

இந்திய உளவாளி என்பதால் பாகிஸ்தானிடம் அவரை விடுதலை செய்யக்கொருகிறது இந்தியா. தமிழர்கள் (கருணை மனு கூட இந்திய ஜனாதிபதியால் நிராகரிப்பு) சீக்கியர்கள், காஷ்மீரிகள் என்பதால் அவர்களின் மரணதண்டனையை துரிதப்படுத்தச் சொல்கிறார்கள்.

இந்த விடயத்தில் இந்தியா தமிழர்களின் விரோதப் போக்கை இன்னும் தீவிரப்படுத்தப் போகிறது. ஒருவேளை தமிழ்நாட்டு தமிழர்கள் பற்றி இந்தியாவுக்கு அக்கறை இல்லையோ என்றும் யோசிக்கவைக்கிறது.

இதற்காய் உலகத்தமிழர்கள் ஒன்றாய் இணையத்தான் வேண்டும்

Unknown said...

1,50,000 தமிழர்களை கொன்றதற்கும் ’தோழ்’கொடுத்த ஜென்மங்களுக்கும் தண்டணையை யார்,எப்போது எப்படி கொடுப்பது?காலம் பதில் கூறுமா? முன்னெடுத்து இப்பதிவிட்டதற்கு மனமார்ந்த நன்றி.ஒன்று கூடினால் வெற்றி நிச்சயம்.

சத்ரியன் said...

//நம் தமிழ் நிரபராதிகளை தூக்கில் போடப்பட கூடாது, இந்த அப்பாவிகள் தமிழர்கல் என்கிற ஒரே காரணத்திற்காகவே தூக்கிலேற்றப்படுகிறார்கள்.//

உலகத் தமிழினமே!

இக்கொடூரத்தையும் நாம் அனுமதித்தோமானால், தமிழினத்தை யார் காப்பார்?

Anonymous said...

சாரே இந்த கேஸ் பல நீதிமன்றங்கள் தாண்டி கடைசியில் தான் தீர்ப்பு வந்தது. அங்க இவங்க எல்லாம் என்ன செஞ்சாங்க.. அய்யோ பாவம் இந்த கொலைகாரங்களுக்கு ஏதுவுமே தெரியாது . இவனுங்களை இத்தனை நாள் விட்டு வைச்சதே ரொம்ப தப்பு

உமர் | Umar said...

அனானி அய்யா. தடா வழக்கின்கீழ் இது புனையப்பட்டதால், உயர்நீதிமன்ற விசாரணை நடைபெறவில்லை. உச்சநீதிமன்றமும் தடாவழக்கு இதற்கு செல்லாது என்று கூறிவிட்டது. ஆனால், பேரறிவாளனின் வாக்குமூலத்தை மட்டும் தடா வழக்கின் அடிப்படையில் ஏற்றுக் கொண்டது. இங்கே தெரிகின்றதா முரண்பாடு?

உங்களை கைது செய்தால், நீங்கள் செஷன்ஸ் கோர்ட், ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் ஆகிய மூன்றிலும் வழக்கு நடத்த முடியும். ஆனால், இந்த வழக்கு இரண்டு நீதிமன்றங்களில் மட்டும்தானே நடைபெற்றுள்ளது! உங்களுக்கு மூன்று வாய்ப்புகள். இவர்களுக்கு மட்டும் இரண்டு வாய்ப்புகள்தானா?

உங்களைப் போன்று இணையத்தில் உட்கார்ந்து வெட்டிக்கதை பேசிக்கொண்டிருக்க எமக்கு நேரமில்லை. அதனால், இனியும் உங்களது உளறல்களுக்கு நான் பதில் சொல்லப்போவதில்லை. ஒருவேளை உங்களுக்கு சிந்திக்கும் திறனிருந்தால், இந்த கடிதத்தை படித்து 'தெளிந்து' கொள்ளுங்கள்.

http://allinall2010.blogspot.com/2011/08/blog-post_3567.html

Anonymous said...

அய்யா உமர் அவர்களே !! அவர் குற்றமற்றவர் என்றால் நீதிமன்றத்தில் முதல் முரையீட்டிலே விடுதலை செய்யபட்டு விடுவார். இதே ராஜீவ் கொலை வழக்கில் பல குற்றவாளிகள் தண்டனை குறைக்கபட்டு இதே நீதிமன்றத்தினால் தான் விடுதலை ஆனார்கள்.அப்போ அவனுங்க யாருங்க. வானத்தில் குதிச்சு வந்தவனுங்களா?


நீங்க என்ன சொல்றீங்க. அவர் குற்றம் செய்வாராம் தமிழர் என்ற காரணத்தால் அவருக்கு விடுதலை வேண்டுமாம். சுத்த காமேடியா இல்லை.

செய்றது கேப்மாறிதனம் இதில் இனம் மொழி எல்லாத்தையும் இழுத்துகிட்டு.

Anonymous said...

வேலூர் வரைக்கும் பெட்ரோல் போட்ட்குகிட்டு இரு சக்கர வாகனத்தில் போறாங்களாம்..பெட்ரோல் போடற பணத்தை எதாச்சும் அனாதை விடுதிக்கு கொடுத்தால் நாலு நாளைக்கு அந்த குழந்தைங்க சாப்பிடும்.

Anonymous said...

அய்யா அனானி,தலையும் தெரியாமல் வாலும் தெரியாமல் மனசாட்சி இல்லாமல் பெட்ரோல் போடர பணத்தை அனாதை இல்லத்துக்கு கொடுக்க சொல்லும் உங்கள் அறிவு எங்களுக்கு இல்லை.அடடா என்னெ ஒரு அறிவு நாணயம்?அது சரி, நீங்கள் என்ன............