இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பல்வேறு சமஸ்தானங்கள் மூலம் ஆண்டு வந்த மன்னர்களின் கதைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
இப்போது விக்கிலீக்ஸ் தந்து கொண்டிருக்கும் பரபரப்புகளைப் போலவே அப்போதும் ஒவ்வொரு மன்னர் ஆண்ட பகுதிகளிலும் சார்பாளராக செயல்பட்டுக் கொண்டிருந்த வெள்ளையர்களின் முக்கிய பணியே அந்த குறிப்பிட்ட மன்னர்களின் செயல்பாடுகள், அவர்களின் அந்தரங்க விசயங்கள், பலம் மற்றும் பலவீனமான செயல்பாடுகளை இங்கிலாந்துக்கு கடத்திக் கொண்டிருந்தார்கள்.
பெரும்பாலும் பெண் பித்தகர்களாக இருந்தவர்கள் தான் இந்த மன்னர்கள். ஒவ்வொரு மன்னர்களின் ஆட்டத்தை இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட வல்லபாய் படேல் மூலம் மென்னி முறிக்கப்பட்டு ஒரே நாடு இந்தியா என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்த போது சிறுகுழந்தைகள் போல் மூச்சா போய் அழுத மன்னர்களும் உண்டு.
அங்கங்கே ஆண்டு கொண்டிருந்த மன்னர்களுடன் இருந்த ஆங்கிலேய பிரதிநிதிகள் தாங்கள் சேகரித்து வைத்திருந்த கோப்புகள் அத்தனையும் சர்வஜாக்கிரதையாக பல டன் காகிதங்களையும் தீயிட்டு அழித்து முடித்து தங்கள் விசுவாசத்தை மன்னர்களுக்கு காட்டினார்கள்.
ஒரு வேளை அன்று இணையம் இருந்திருந்தால் நாம் செக்ஸ் கதைகளை படிக்க அலைய வேண்டியதில்லை. ஆனால் சமீப காலமாக உலகத்தில் உள்ள பல தலைவர்களின் செயல்பாடுகளும் இப்படித்தான் இருக்கிறது. இந்தியாவில் இதுவொரு பிரச்சனையே இல்லை.
இதுவும் ஒரு கௌரவமாகிப் போய்விட்டது.
அமெரிக்கா ஏறக்குறைய 270 தூதரங்கள் மற்றும் அதனைச் சார்ந்த அலுவலகங்கள் மூலமாக அந்தந்த நாடுகளில் நடக்கும் நல்லது கெட்டதுகளை கர்மசிரத்தையாக வாஷிங்டனுக்கு அனுப்பிக் கொண்டே தான் இருக்கிறது. மற்ற நாடுகளுக்கு நம் இந்தியாவிற்கும் ஒரு வித்யாசம் உண்டு. மற்ற நாடுகளில் அமெரிக்கர்கள் விசயங்களை கறக்க சற்று மெனக்கெட வேண்டும். இங்கு அந்த பிரச்சனையேயில்லை. ஒரு குவார்ட்டர் போதும். உளற ஆரம்பித்து விடுவார்கள். புத்திசாலி ப. சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் கூட வாக்களர்களுக்கு பணம் கொடுப்பது தவறில்லை என்று சென்னையில் உள்ள அமெரிக்கா தூதரக மக்களிடம் உளறிக் கொட்டியதையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி உள்ளது.
இந்த விக்கிலீக்ஸ் சேகரித்துள்ள 2 50 000 ஆவணங்களில் 11 000 ஆவணங்கள் மிக மிக ரகஸ்யமானது. இதிலும் 9 000 ஆவணங்கள் ஒவ்வொரு நாடுகளின் டவுசர்களை கழட்டி அம்மணமாக்கும் வல்லமை உடையதாம். புண்ணியவான் அசாஞ்சே எப்போது கழட்ட போகிறாரோ?
மது பிரியராக இருப்பவர்களுக்குக்கூட சமூகம் பெரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவன் ஒரு குடிகாரப்பய என்று நகர்ந்து போய்விடுகிறார்கள். அதற்கு மேல் நடிகர் வடிவேல் போல அல்லக்கை சிக்கினால் சற்று கூடுதலாக கும்மி தட்ட வைக்கலாம். ஆனால் மாது தொடர்பு என்றால் அதுவும் தலைவர்களுக்கு இந்த தொடர்பு என்றால் கேட்கவே வேண்டாம். பத்திரிக்கைகளுக்கு செம கொண்டாட்டம். பத்தி பத்தியாக பந்தி வைத்து விட மாட்டார்களா?
பிரான்ஸ் நாட்டு அதிபர் நிக்கோலஸ் சர்கோசியை ‘ஆடையில்லாத பேரரசர்’ என்று அமெரிக்கா அதிகார வட்டத்திற்குள் அழைக்கப்படுவாராம்..
இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி இவர் ஒரு ராக்கோழி. இரவு விருந்தும் அப்போது இவரின் உழைப்பும் மகத்தானது. இது போன்ற விசயங்களில் ஓய்வில்லாமல் உழைக்கக்கூடியவர்.
ஆனால் இவர்களை விட சமீப காலமாக செய்திகளில் அடிக்கடி தென்பட்டுக் கொண்டிருப்பவர் லிபியா அதிபர் கடாபி.
இவரின் முழு பெயர் முவாம்மர் அல் கடாபி.
எனது தனிப்பட்ட தொழில் வாழ்க்கையில் இந்த லிபியா என்ற நாடு மறக்க முடியாத நாடு. அதிபர் கடாபி ஏறக்குறைய 41 வருடங்களாக லிபியாவை தன் இரும்பு பிடிக்குள் வைத்திருப்பவர். இதையே இவர் அன்பு பிடி என்கிறார். ஆனால் இவரின் அன்பு பிடியில் இருக்கும் ஏராளமான பெண்கள் குறித்து நிறைய சுவராஸ்ய தகவல்கள் உண்டு. முழுமையாக எழுதினால் அது 18+ ஆகிவிடும். கையில் போட்டு இருக்கும் கையுறை மூலமே மற்றவர்களை தொடுவார். கிருமிகள் தாக்கி விடும் என்ற அச்சமே முக்கிய காரணமாம். தினந்தோறும் மூன்று உடுப்புகளுக்கு மேல் மாற்றக்கூடியவர். ஐ.நா சபையில் இவர் உளறிக் கொட்டியதைப் போல வேறு எந்த தலைவரும் உளறியதில்லை. ஒரே விசயத்தில் மட்டும் கவனம் இருந்தால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாது போல,
இவரைப் பார்த்தாலே இவர் வில்லனா காமெடியானா என்று தெரியாமல் ஒதுங்குபவர்கள் தான் அதிகம். மொத்தத்தில் காமநெடி மனிதர்.
அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்துக்கு இதெல்லாம் முக்கியமா என்ன? பெட்ரோல் இருக்கா? வண்டிய கட்டு. கூட்டுப் படையை கிளப்பு. லிபியா மக்கள் கடாபி ஆட்சியில் கஷ்டப்படுகிறார்கள் என்று உரிமையை கிளப்பு. அது தான் இப்போது நடந்து கொண்டு இருக்கு.
சொல்ல முடியாது. இவரும் சதாம் உசேன் மாதிரி எந்த பொந்துக்குள் இருந்து வெளியே வரப்போறாரோ? அப்போது தனியா வருவாரா? இல்லை அப்போதும் பக்கத்தில் பெண்கள் இருப்பார்களா?
இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தா இல்லாமல் பெண்களை அதிரடி படைவீரர்களாகவும், தனக்கு அந்தரங்க காரியதரிசியாக வைத்துள்ள கடாபி என்ற 'கடப்பாறை' மனிதரின் படங்கள் உங்கள் பார்வைக்கு.
கூட்டுப்படை தாக்குறாங்களா? அட போங்கப்பா.... எப்பவும் நான் தான் ராஜா
நீங்க இத்தாலி. நான் லிபியா. ஆனா நம்ம ரெண்டு பேரையும் இணைத்தது?
என் உருவத்தைத்தான் மந்திரித்து கழுத்துல டாலரா போட்டுருக்காங்க. இதை விட ஒரு அதிபர் நாட்டு மக்களுக்கு பெரிதாக வேறென்ன செய்து விட முடியும்?
வேற வழியில்லாம இந்த மாதிரி இடங்களில் இந்த உடைகளையும் போட்டுத் தொலைக்க வேண்டியிருக்கு?
ராத்திரி பகல்ன்னு நான் சௌக்கியமாத்தான் இருக்கேன். எனகென்ன கவலை மக்களே? நீங்க எல்லாரும் சௌக்கியம் தானே?
பாருங்க.... எந்த நாட்ல என்னை மாதிரி பெண்களுக்கு இத்தனை உரிமைங்க கொடுத்து இருக்காங்க? சொல்லுங்க பார்க்கலாம்?
ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜ பராக்கிரம தல பராக் பராக்...
சரி சரி அந்தஅனுபவத்தை வெளியே சொல்லிடாதே.
13 comments:
ஹாஹாஹா... என்ன என்னத்தையோ இறக்குமதி பண்ணி அனுபவிக்கிறாய்ங்க. நீங்க இதைப் போயி... ஹிஹிஹி.
இந்தாளோட ஃபாண்டசி பாருங்க சீருடையில் இருக்கிறவிங்கதான் போல ;-)
உறைபோட்டு அனுபவிக்கிறார்
உரைக்கத் தகுமா?
அமரர் தேசிய தலைவரும் இப்படிதானோ?
இன்னும் ஒரு நாலு அஞ்சு வருசத்தில் நல்ல கிளு கிளு கதைகள்
வெளிவரலாம் ..
//நீங்க இத்தாலி. நான் லிபியா. ஆனா நம்ம ரெண்டு பேரையும் இணைத்தது?//
நான் இதுக்கு சிரிச்சிக்குறேன்:)
//பாருங்க.... எந்த நாட்ல என்னை மாதிரி பெண்களுக்கு இத்தனை உரிமைங்க கொடுத்து இருக்காங்க? சொல்லுங்க பார்க்கலாம்?//
பெண்களும் ராணுவத்தில் என்று வளைகுடா நாடுகளுடன் ஒப்பிடும் போது கடாபி புரட்சியாளர்தான்.
அருமையான பதிவு,
பரம்பரை மன்னராட்சியில் விமர்சனமும், எதிர்ப்பும் இல்லை என்னும் போது இன்பமெங்கெ இன்பமெங்கே என்று தேடு என்றுதானே ஓடுவார்கள்.99.99% உலக வரலாற்றில் மன்னர்கள் இபடித்தான் இருந்திருப்பார்கள் என்பதில் யாருக்கும் ஐயம் வேண்டாம்.ஜூனியர் விகடனில் அந்தப் புறம் என்று தொடர்வந்தது படித்தால் இந்த மாதிரி நிறைய விஷயங்கள் வெளிவரும்.மன்னர்களில் பெரும்பாலானவர்கள் வேள்ளையரின் பூரண விசுவாசிகளே.பல மன்னர்களுக்கு பல நடுகளில் இருந்தும் ஆசை நாயகிகள் தருவிக்கப் பட்டார்கள். சுதந்திரத்த்ற்கு பின் பலர் வெளிநாடுகளில் சொத்துக்களுடன் தஞ்சம் புகுந்தனர்.
இதில் என்ன நகைச்சுவை என்றால் நாங்கள் அரச பரம்பரை என்று ஆய்வுக் கட்டுரைகள் என்ழுதும் சில எழுத்தாள்ர்கள்(????) ஒரு அரச்னை தங்க்ள் ஆள் என்பதற்கு பல விவாதங்க்ள் நடத்துவதுதான்.
இது சம்பந்தமான பல ஆதாரங்கள் அழிக்கப் பட்டுவிட்டன.வரலாற்றின் தவறுகள் அபப்டியே நடந்ததாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே அதனை நிவர்த்தி செய்ய முடியும்.அது பொற்காலம் என்றால் எப்போதும் பிரச்சினைதான்.
வாழ்த்துக்ள்
ada kedu ketta manusa
அந்த லிங்க் மேட்டர் அப்பப்பா....
கடாபியின் காவலர்கள்...எனக்கு புதிய செய்தி. 'இரவு வானம்' சுரேஷை பார்த்தல் கேட்டதாக சொல்லவும். நன்றி.
தேநீர் இடைவேளை...அன்பின் வாசகர்கள் எல்லோரும் ரிலாக்ஸ் பண்ணிகீங்கப்பா...அடுத்த முக்கியமான விசய நெடி வீசுது.
என்ன அன்பின்..
:-) வேறெதும் சொல்ல தோன்றவில்லை சார்
ஒரு மாதம் இடைவெளியிலாவது இப்படி வித்தியாசமாக யோசிப்போம்...
ஜோதிஜி, கடாபியின் "மெய்" காப்பாளர்கள் அதிகம் பேர் பெண்கள் தான். :)
Post a Comment