Saturday, March 19, 2011

கொங்குநாடு முன்னேற்றக் கழகம் (கொ.மு.க,) - ஏழுக்குள் ஏழரை

கலைஞர் எப்போதும் மற்றவர்களுக்கு இதயத்தில் மட்டுமே இடம் கொடுப்பவர்.  இந்த முறை உளவுத்துறையில் உள்ள எந்த புண்ணிய ஆத்மா தகவல் கொடுத்தார்களோ கொங்கு முன்னேற்றக் கழகத்திற்கு ஏழு சீட்டுகளை தராளமாக வழங்கியுள்ளார்.  

தற்போது நடக்கப் போகும் 2011 தேர்தலில் பா.ம.க. வுக்கு கிடைத்த அதிர்ஷ்ட சீட்டுகளைப் போலவே இந்த கொ.மு.கவுக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு அமைந்துள்ளது. காரணம் காங்கிரஸ்க்கு பாடம் கற்பிக்கலாம் என்று எடுத்த முடிவின் இறுதியில் கலைஞரே கவிழ்ந்து போனது தான் மிச்சம்.

தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் கொங்கு மண்டல பகுதிகள் அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி பகுதிகளில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.  தமிழ நாட்டு அரசாங்கத்தின் கஜானாவை நிரப்புவதில் இந்த மாவட்ட மக்களின் பங்களிப்பு அதிகம்.  கணக்கீட்டின்படி தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் இந்த பகுதிகளில் இருந்து மட்டும் 42 சதவிகித வருமானம் அரசாங்கத்திற்கு செல்கின்றது என்று புள்ளி விபரங்கள் சொல்கின்றது.

தென்னை, ஆய்த்த ஆடை ஏற்றுமதி தொழில், கனரக வாகனங்கள், பஞ்சு சார்ந்த துணைத் தொழில்கள் மற்றும் நூற்பாலைகள், கோழிப்பண்ணைகள் என்று பல தொழில்களிலும் சக்ரவர்த்தியாக இருக்கும் இந்த கொங்கு இன மக்களுக்கு இந்த அரசியல் அமைப்பு தொடங்க வேண்டிய அவஸ்யம் என்ன? 


தொடக்கத்தில் கோவை செழியன் கொங்கு இன மக்களுக்கு காவலராக இருந்தார். அவருக்குப் பிறகு பெரிய அளவில் எவரும் உருவாகவில்லை.  ஒவ்வொருவருக்கும் இருக்கும் தொழில் அடிப்படையில் எந்த கட்சி ஆட்சிக்கு வருகின்றதோ அவர்களுக்கு சலாம் போட்டு விட்டு தாங்கள் உண்டு தங்கள் தொழில் உண்டு என்று தான் இதுவரையிலும் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். வெறுமனே கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை என்கிற ரீதியில் பலமற்ற நிலையில் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் கடந்த மூன்று வருடங்களில் படிப்படியான வளர்ச்சிக்குப் பிறகு இன்று தமிழ்நாட்டு அரசியலில் 'கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்' முக்கிய இடத்தை பெற்றதோடு ஏராளமான பிரச்சனைகளையும் உருவாக்கியுள்ளது. 

இவர்கள் சொல்லும் கோரிக்கை வித்யாசமானது. 

"அதிகாரத்திற்கு வருபவர்கள் கொங்கு மணடலத்தை புறக்கணிக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் நிலையில் இருக்கும் கவுண்டர் இன மககளை மிகவும் பிற்பட்ட இனத்தில் கொண்டு வந்து அரசாங்கம் சேர்க்க வேண்டும். கொங்கு மண்டலத்தில் பி.சி.ஆர் என்ற தீண்டாமை வன்கொடுமை சட்டத்தை நீக்க வேண்டும். இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தி கவுண்டர் இன மக்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்கள் உருவாக்கப்படுகின்றது. இதன் காரணமாகத்தான் 'கொங்கு முன்னேற்றப் பேரவை'யை 'கொங்கு நாடு முன்னேற்றக் கழக'மாக மாற்றியுள்ளோம் " என்கிறார்கள்.

தொடக்கத்தில் தொடங்கிய 'கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை'யினர் அரசியல் எழுச்சி மாநாடு என்று ஒன்று சேர்ந்து 'கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை'யாக மாற்றினர். கோவைக்கு அருகே உள்ள கருமத்தம்பட்டியில் பிப்ரவரி 15 2009 அன்று 'கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாற்றி இதன் தலைவராக பெஸ்ட் ராமசாமி, பொதுச் செயலாளராக ஈஸ்வரன் தலைமையிலும் இந்த இன மக்கள் ஒன்று சேரத் துவங்கினர். 

பெஸ்ட் இன்டர்நேஷனல் என்ற ஆய்த்த ஆடைகளுக்கான மிகப் பெரிய ஏற்றுமதி சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டு வரும் ராமசாமி தன்னுடைய பெயருடன் தன் நிறுவன பெயரையும் செர்ந்து பெஸ்ட் ராமசாமி என்று மர்றியுள்ளார். எந்த விசயத்தில் இவர் பெஸ்ட் என்பதை அவருக்கு எதிரெணியில் உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும். இவரைப் போலவே பொதுச் செயலாளர் பதவியில் இருக்கும் ஈஸ்வரன் என்பவரும் ஏற்றுமதி தொழிலில் தான் உள்ளார்.  

பெஸ்ட் ராமசாமியை அவரின் குணாதிசியங்களை விமர்சிக்கும் மாற்று அணியினரைப் போல ஈஸ்வரனை அவரின் பிறப்பு குறித்து வரைக்கும் அக்குவேறு ஆணி வேறாக பொளந்து கட்டுகின்றனர்.  காரணம் கவுண்டர் முஸ்லீம் கலப்பு மனத்தில் பிறந்த இவர் எப்படி கவுண்டர் இன மக்களுக்கு காவலராக வர முடியும்? என்பது வரைக்கும் ஏராளமான சர்ச்சையை கிளப்புகின்றனர்.  

ஆனால் அரசியலுக்கு வந்தவுடன் இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தால் நீடிக்க முடியுமா?

கோவைக்கு அருகே கருமத்தம்பட்டி பகுதியில் நடந்த மாநாட்டுக்கு அணைவரும் திரண்டு வாரீர் என்று அழைப்பு விடுக்க ஏறக்குறைய ஒவ்வொரு வீட்டிலும் இருந்து கவுண்டர் இன மக்கள் தங்களது வாகன சகிதமாக போய் கலந்து கொண்டனர்.  திமுக, அதிமுக கட்சிகள் மிரண்டு பார்த்த மாநாடு அது.  ஆனால் இன்று கலந்து கொண்ட அத்தனை மக்களும் இப்போது முகத்தை திருப்பிக் கொண்டு எப்போது தேர்தல் வரும்? இவர்களை கவிழ்க்க என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். 

திருப்பூரைப் பொறுத்தவரையில் சாயப்பட்டறை முதலாளிகள் ஆளுங்கட்சி மேல் கொலை வெறியோடு சமயத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஏற்றுமதியாளர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் மின்சாரத் தடையினால் ஆளுங்கட்சியை நேரிடையாக பகைத்துக் கொள்ளாமல் மனதிற்குள் வன்மத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதுவும் திமுகவுடன் கொமுக கூட்டணி வைத்துள்ளதை பார்த்த பலரும் கொமுக மேல் வெறுப்புடன் விலகி நின்று வேடிக்கை காட்ட தயாராக உள்ளனர். 

இங்குள்ள பெரும்பான்மை கவுண்டர் இன மக்களே இந்த கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தால் பத்து காசுக்கு பிரயோஜனமில்லை என்று பொறுமிக் கொண்டிருப்பதைப் போலவே எதிரேயிருக்கும் மாவட்ட விவசாயிகள் அமைப்பு அடுத்த சவாலான நிலையில் திமுகவை பழிவாங்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். 

இதற்கு மேலாக இந்த கொங்கு மண்டலம் முழுக்க பரவியிருக்கும் தலித்துகள் இந்த கொமுகவுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறார்கள்.  இந்த பகுதிகளில் இருக்கும் தலித்துகளுக்கும் கவுண்டர்களுக்கு காலம் காலமாக நடந்து கொண்டிருக்கும் பனிப்போர்கள் விபரம் புரிந்தவர்களுக்கு நன்றாக தெரிந்த விசயமாகும்.  இந்த கொங்கு மண்டலம் இரட்டை இலையின் கோட்டையாக இருப்பதற்கு முக்கியமான காரணமே இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் ஓட்டுச் சீட்டே காரணமாக இருக்கிறது. இதிலும் கூட இப்போது உருவாகியுள்ள கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் இந்த தலித் ஓட்டுகளை வாரிக் கொண்டு விட்டதால் இன்னும் இடியாப்பச் சிக்கல் அதிகமாகிக் கொண்டே தான் போகின்றது.

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் ஜாதி ரீதியான அமைப்பாக இருந்து போது, பின்னால் பேரவையாக மாறிய போதும் இருந்த புரிந்துணர்வு, படிப்படியாக அரசியல் கட்சியாக மாற வெளியே தெரியாத ஏராளமான பூசல்கள் உருவாகத் தொடங்கியது.  பணத்திற்கும் பஞ்சமில்லை.  ஏதோவொரு வகையில் மொத்தத்தில் கணக்கு காட்ட வேண்டிய சூழ்நிலையில் இந்த இனக் காவலர்கள் இருப்பதால் ஒவ்வொருவரின் முகமூடிகளும் கிழ்த்து தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மாவட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் எந்த பிரச்சனைக்கும் கொமுக முன்னிலை வகித்தது இல்லை. 

சாயப்பட்டறை பிரச்சனையாக இருக்கட்டும் ஒவ்வொரு தொழில் நிறுவனத்தையும் வீதிக்கு கொண்டு வந்து கொண்டிருக்கும் மின்சாரத் தடையாக இருந்தாலும் தனக்கு என்ன லாபம் என்கிற ரீதியில் தான் ஒவ்வொருவரும் தனித்தனி அணியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். சில நாட்களுக்கு முன் நீதிமன்றம் உத்தரவிட்ட தீர்ப்பு விபரம் கூட (மாசுக்கட்டுபாடு வாரியம் தான் ஏற்று நடத்த வேண்டும்) வெகுஜன ஊடகத்தில் வெளிவர முடியாத அளவிற்கு அரசாங்கம் கெட்டிக்காரத்தனமாக நடந்து கொண்டிருக்கிறது.  

சென்ற முறை அதிமுக ஆட்சிக்கு வராமல் போனதற்கு விஜயகாந்தின் தேமுதிக பிரித்த ஓட்டுக்களே முக்கிய காரணமாக இருந்தது. அதே போல் கொங்கு மண்டலத்தில் அதிமுகவுககு உண்டான் சரிவுக்கும் இந்த கொங்கு முன்னேற்றப் பேரவை சிதறடித்து பெற்ற பெரும்பான்மையான வாக்கும் முக்கிய காரணியாக இருந்தது. காரணம் சென்ற பாராளுமன்ற தேர்தலில் தனியாக நின்று மொத்தம் ஆறு லட்சம் வாக்குகளை பெற்றனர். சூலூர், பல்லடம் தொகுகளில் பெற்ற பெரும்பான்மையான வாக்குகளை பெற்று அரசியல் கட்சிகளை ஆச்சரியப்படுத்தினர்.

ஆனால் கட்சி ரீதியாகவே ஓட்டுப் போடும் பழக்கத்தில் உளளவர்களை மாற்றுவது கடினம் என்று உணர்ந்து கொண்டு இந்த முறை கொமுக தங்களது கதவை அகல திறந்து வைத்துக் கொண்டு காத்துக் கொண்டிருந்தனர். எப்போதும் போல ஆத்தாவின் தரிசனம் கிடைக்கவில்லை. சந்திக்கும் போது எப்படி குனிய வேண்டும்? எப்படி பேச வேண்டும் என்று வகுப்பு மட்டும் நடக்க நொந்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு திமுக அதிசியமாக வரவேற்ப்பு கொடுத்துள்ளது. இதற்குப் பின்னால் உள்ள பேரங்கள் வேறு தனியாக இந்த பகுதியில் சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு வகையில் கலைஞரின் முதல் கோணல் முற்றிலும் கோணலுக்கு இதுவும் காரணமாக இருக்கப் போகின்றது.

காரணம் கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் இந்த அளவிற்கு வளர்ந்து வந்தமைக்கு முக்கிய காரணம் கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை என்ற அமைப்பே முக்கியமாகும்.  ஆனால் அரசியல் ரீதியாக கொமுக செல்வாக்கு பெற படிப்படியாக இந்த அமைப்பை ஒதுக்கி வைக்க இப்போது இவர்கள் 'மாநில கொங்கு பேரவை' என்ற அரசியல் கட்சியை உருவாக்கி மணிக் கவுண்டர் தலைமையில் இந்த முறை தேர்தலில் களத்தில் இறங்குகின்றனர். இவருக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை என்ற அமைப்பில் உ.தனியரசு என்பவர் அதிமுகவில் பெற்ற ஒரு சீட்டு மூலம் இந்த இன மக்களுக்கு பாடுபடப் போகின்றேன் என்று களம் புகுந்துள்ளார். 

இதற்கு மேலாக 49 ஓ என்ற ஆயுதமும், ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்காளர் எழுச்சிப் பேரவை என்ற அமைப்பு 1000 பேர்களையும் இந்த தேர்தல் களத்தில் இறக்குகின்றனர். இவர்களுக்கு கட்ட வேண்டிய டெபாஸிட் தொகையை குறிப்பிட்ட அமைப்பினர் திரட்டி 'யார் வேண்டுமானாலும் வரலாம். ஆள் மட்டும் போதும்' என்கிற ரீதியில் ஆளுக்கட்சியான திமுகவின் ஓட்டுகளை சிதறடிக்க சூறாவளியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இரண்டு பணக்காரர்கள் ஒன்று சேர்ந்தால் என்ன பேசுவார்கள்? 

சேர்க்க வேண்டிய சொத்துக்களை, சேர்த்த சொத்துக்களை காப்பாற்றுவது பற்றி பேசக்கூடும்.  இயல்பாகவே ஈகோ அதிகமுள்ள இந்த இன மக்களின் நல்வாழ்க்கையை காக்க நான் வந்துள்ளேன் என்று சொன்னால்?  அதுவும் திமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு வந்து நிற்கப் போகும் கொமுக வினருக்கு இது போதாத காலம் போலிருக்கு.

ஒரு கட்சிக்கு இரண்டு எதிரிகள் இருந்தாலே சமாளிப்பது சிரமம்.  ஆனால் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்திற்கு நூற்றுக்கணக்கான எதிரிகள். அதுவும் இந்த பகுதி மக்களின் முக்கிய எதிரியான திமுகவுடன் கூட்டணி வேறு வைக்க கொமுக வின் தலையில் பகவான் சம்மணமிட்டு அமர்ந்துள்ளார். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள கவுண்டர்கள் சிரிக்கும் சிரிப்பில் கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் என்பது சங்கு ஊதி முடிக்க வேண்டிய கழகமாக மாறியுள்ளது. 

62 comments:

THOPPITHOPPI said...

present

Unknown said...

கொமுக வை தோற்கடிக்க பாடுபடும் அரும்பணியை... செய்யும் கொங்கு கழகங்களை பட்டியல் இட்டுள்ளீர்கள்..சரி.. ஆனால் திமுகவும் காங்கிரசும் இதே பணியை கொமுக வை கூட்டணியில் வைத்துகொண்டே செய்யுமே.. அதை எழுதவில்லையே..

THOPPITHOPPI said...

தேர்தல் முடிவுதான் இவர்கள் தலைஎழுத்தையும் நிரனையிக்கும். எனக்கு இப்போதிருக்கும் மிகப்பெரிய கவலை சிறு சிறுக்கட்சிகள் வளர்ந்து வருவதுதான். எதிர்க்காலத்தில் இவர்களும் கொள்ளையில் பங்கு வேண்டும் என்று போட்டிப்போட ஆரம்பித்துவிட்டால் ஒரு நிலையான அரசு அமைவது கேள்விக்குறியே. எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இந்தத்தேர்தலில் சிறுக்கட்சிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைப் பார்த்தால் ஒரு தவறான அரசாங்க எதிர்க்காலத்திர்க்கு அறிகுறியாகத்தான் தெரிகிறது. இதையெல்லாம் வேடிக்கைமட்டுமே பார்க்கும் நிலையில்....................

ராஜ நடராஜன் said...

இப்படியொரு கட்சி இருப்பதே கலைஞர் கருணாநிதியும் நீங்களும் சொல்லித்தான் தெரியும்:)

http://thavaru.blogspot.com/ said...

வளர்ந்துவரும் இனகுழுக்களால் தமிழகம் அமைதி என்னவோ கேள்விகுறிதான் அன்பின் ஜோதிஜி.

விரிவான அலசல் வாழ்த்துகள்.

தொழில் பிசியா இருக்க நடுவுலேயும் இணையத்த விடலயே அன்பின்.

ராஜ நடராஜன் said...

திருப்பூர்ல கம்யூனிஸ்ட்டுகளை ஜெயிக்க வையுங்க.குறைந்த பட்சம் குரல் கொடுக்கவாவது செய்வார்கள்.

சக்தி கல்வி மையம் said...

கலைஞரின் ராஜதந்திரம் என்னாச்சு?

Unknown said...

ராஜ நடராஜன்...

கம்யூனிஸ்டுகள் குரல் கொடுப்பர்கள் சரி..யாருக்கு...
ஏற்கனவே.. கம்யூனிஸ்ட்டு எம்.எல்.ஏ. எம்.பி. தேர்தெடுத்த அனுபவம் திருப்பூர் மக்களுக்கு உண்டு..

அவர்களின் (தன்)மக்கள் பணியை பார்க்கும்போது...
ஏன் ஓட்டுபோட்டோம்.. வாக்கை திரும்பபெறும் வழி, திரும்ப அழைக்கும் சட்டம் உடனே வராதான்னு எண்ண தோன்றுது...

Unknown said...

பிளாகில் எழுதுவது எப்படின்னு படிக்க போறேன்..

நன்றி தல..
http://vinothpakkangal.blogspot.com/

karthikkumar said...

கொங்கு முன்னேற்ற கழகத்திற்கு கண்டிப்பாக இந்த தேர்தலில் பின்னடைவு ஏற்படும்.... இங்கு உள்ள பிரச்சினைகள் அனைத்தும் தெரிந்தும் திமுகவுடன் சேர்ந்து நிற்பது அவர்கள் தலையில் அவர்களே மண்ணை அள்ளி போட்டுகொள்கிறார்கள் என்று தெரிகிறது....:)

தமிழ் உதயம் said...

சாதிக்கட்சிகள் வரமா... சாபமா...
ஆரோக்கியமா... அச்சுறுத்தலா... சொல்லுங்கள்.

VJR said...

வக்கனையாக இருக்கும் நாம் யோசிப்பது போலெல்லாம் அடித்தட்டு மக்கள் யோசிப்பதில்லை என்பது மே 13 ல் தெரிந்துவிடும்.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

சரியான பிரதிபலிப்பு

தமிழ் அஞ்சல் said...

ஹ..ஹ,,ஹா..ஹா

நிகழ்காலத்தில்... said...

//சில நாட்களுக்கு முன் நீதிமன்றம் உத்தரவிட்ட தீர்ப்பு விபரம் கூட (மாசுக்கட்டுபாடு வாரியம் தான் ஏற்று நடத்த வேண்டும்) வெகுஜன ஊடகத்தில் வெளிவர முடியாத அளவிற்கு அரசாங்கம் கெட்டிக்காரத்தனமாக நடந்து கொண்டிருக்கிறது.//

உங்கள் மூலமாகத்தான் தெரியும். விவரத்தை இணைய இதழ்களில் வரவைக்க முடியுமா?

//கொமுக வின் தலையில் பகவான் சம்மணமிட்டு அமர்ந்துள்ளார்.//

சனி பகவான் அப்படின்னு திருத்துங்க ஜோதிஜி:)

Unknown said...

எதை தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலையில் உள்ள திமுக இதையும் விட தயாராக இல்லை, கொங்கு மண்டலத்தில் திமுக நின்று ஜெயிக்க போவதில்லை, ஒருவேளை இவர்களாவது ஜெயித்தால் கிடைத்தவரை லாபம்தானே, பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று...

Unknown said...

ஆனால் இந்த 5 வருடகாலத்தில் திருப்பூர் பகுதியில் உருவான மாற்றத்திற்கு திமுக தான் காரணம் என்பதையும் நாம் மறுக்க முடியாது, கவுண்டர் இன மக்கள் எப்பொழுதும் ஒற்றுமையுடந்தான் இருக்க முயல்வர், இப்பொழுது என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை, மற்ற பேரவைகளை விட கொமுகவிற்குதான் அதிக கவுண்டர் இன மக்களின் சப்போர்ட் இருக்கிறது...

NAGA INTHU said...

ஒரு சமுதாயமக்களின் உண்மையான மனஓட்டம் எப்படி இருக்கும் என்பதை தங்களின் இப்பதிவு தெளிந்த நீரோடையாய்,உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாய் புரியவைத்தமைக்கு மிக்க ந்ன்றி.
அரவரசன்.

டக்கால்டி said...

அன்பு நண்பர்களே...
எனது பழைய தளமான HTTP://DAKKALTI.BLOGSPOT.COM யாரோ ஒரு அன்பரால் அழிக்கப் பட்டுவிட்டது. அதை எவ்வளவோ முயற்சித்தும் மீட்க முடியவில்லை. எனவே அனைவரும் தங்களது ஆதரவை தொடர்ந்து http://dagaalti.blogspot.com/
எனும் தளத்துக்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,
டக்கால்டி.

லெமூரியன்... said...

\\கொங்கு மண்டலத்தில் பி.சி.ஆர் என்ற தீண்டாமை வன்கொடுமை சட்டத்தை நீக்க வேண்டும்//.....

அந்த சட்டம் இருக்க போய்தான் ஏதோ அங்கு தலித்துகளால்
நிமிர்ந்து நடக்க முடிகிறது....இல்லையென்றால் அவர்களின்(கவுண்டர்கள்) ஆட்டத்திற்கு அளவே இல்லாமல் போய்விடும்...
கோவை செழியனின் எகத்தாளமான அகங்காரமான ,தலித்துக்களுக்கு எதிரான அறிக்கைகளே போதும்
அவ்வினத்தின் ஒரு சோற்று பதம்...!
நான் பள்ளியில் படித்து கொண்டிருக்கும்போது அவரின் அறிக்கைகள் செய்தி நாளிதழ்களில் வெளிவரும்...
வெட்டு பட்டு சாவார் என எதிர்பார்த்தேன்..!
:) :)
பிற்படுத்த பட்ட இனங்கள்தான் எவ்வளவு வெறித்தனமாக இயங்குகின்றன அடிமை சமூகத்தை அடக்கிவைப்பதர்க்கு..!

குறும்பன் said...

பரமத்தி வேலூரில் தனியரசுவின் வெற்றி உறுதி. 2001 & 2006ல் பாமக கபிலர் மலை தொகுதியில் வெற்றிபெற்றது, எல்லாம் கூட்டணி கட்சியின் தயவுதான். ஆனால் கபிலர் மலை தொகுதியில் வன்னியர்கள் குறிப்பிட்ட அளவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலில் கூட்டணி தான் முக்கியம். கொமுக தனியாக நின்றால் வெற்றி பெறமுடியாது என்பது உண்மை. கவுண்டர்களிடம் மற்ற சங்கங்களை விட கொமுகத்திற்கு அதிக ஆதரவு உள்ளது உண்மை.

தற்போதய சூழலில் கொமுக அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அறுவடை அமோகமாக இருந்திருக்கும். ஆனால் அதிமுகவை நம்புனா அதோ கதி தான் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

தனியரசுக்கு பரமத்தி-வேலூர் கிடைக்க காரணமே கொமுக திமுக பக்கம் போனது தான்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இடுகையை முழுசாகப் படிக்கலை.. ஆனால் சாதிக் கட்சிகள் எல்லாவற்றையும் தடை செய்யணும் - இது இப்ப மிக அவசரமான அவசியமான ஒரு விஷயம்ன்னு தோணுது.. அதே மாதிரி சாதியை அடிப்படியாகக் கொண்டு கட்சிகள் உருவாவதை தடை செய்ய வேண்டும்.. தினமும் ஒரு சாதிக்கட்சி உதயமாவதைப் படிக்கிறேன் :((

சுடுதண்ணி said...

//எந்த விசயத்தில் இவர் பெஸ்ட் என்பதை அவருக்கு எதிரெணியில் உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும்.//
//திமுக அதிசியமாக வரவேற்ப்பு கொடுத்துள்ளது. இதற்குப் பின்னால் உள்ள பேரங்கள் வேறு தனியாக இந்த பகுதியில் சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கிறது.//

மேற்படி விவரங்களை அவசரமாகத் தனிமடலில் தெரிவிக்கவும்.

// சந்திக்கும் போது எப்படி குனிய வேண்டும்? எப்படி பேச வேண்டும் என்று வகுப்பு மட்டும் நடக்க//

நல்ல டைமிங் :D. மிகவும் ரசித்தேன்.

ஊரான் said...

"ஒவ்வொருவருக்கும் இருக்கும் தொழில் அடிப்படையில் எந்த கட்சி ஆட்சிக்கு வருகின்றதோ அவர்களுக்கு சலாம் போட்டு விட்டு தாங்கள் உண்டு தங்கள் தொழில் உண்டு என்று தான் இதுவரையிலும் செயல்பட்டுக் கொண்டிருந்தனர்."

எதார்த்தம். கொச்சையாகச் சொன்னால் பிழைப்புக்காகத்தான் ஓட்டுச்சீட்டு அரசியல். மக்களுக்காக (சாதிமக்களுக்குத்தான்)என்பதெல்லாம் வெறும் பம்மாத்து.

ஓட்டுச்சீட்டு அரசியலில் நல்லவர்களைத் தேடுவது நரகலில் நல்லரசித் தேடுவதைப் போல.

தேர்தலையொட்டி இதோ ஒரு பதிவு:

மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!
http://hooraan.blogspot.com/2011/03/blog-post_19.html

Anonymous said...

//டக்கால்டி said...

அன்பு நண்பர்களே...
எனது பழைய தளமான HTTP://DAKKALTI.BLOGSPOT.COM யாரோ ஒரு அன்பரால் அழிக்கப் பட்டுவிட்டது. அதை எவ்வளவோ முயற்சித்தும் மீட்க முடியவில்லை. எனவே அனைவரும் தங்களது ஆதரவை தொடர்ந்து http://dagaalti.blogspot.com/
எனும் தளத்துக்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,
டக்கால்டி.//

அப்பவே சொன்னோம்ல தொப்பிதொப்பி கிட்ட வச்சுக்காதேனு

Anonymous said...

5 வருடமாக தி.மு.கவுக்கு எதிராக போராடிவிட்டு தேர்தலில் ஒட்டிக்கொண்ட இவர்களும் பத்தோடு 11 தான்

ராஜ நடராஜன் said...

//ராஜ நடராஜன்...

கம்யூனிஸ்டுகள் குரல் கொடுப்பர்கள் சரி..யாருக்கு...
ஏற்கனவே.. கம்யூனிஸ்ட்டு எம்.எல்.ஏ. எம்.பி. தேர்தெடுத்த அனுபவம் திருப்பூர் மக்களுக்கு உண்டு..

அவர்களின் (தன்)மக்கள் பணியை பார்க்கும்போது...
ஏன் ஓட்டுபோட்டோம்.. வாக்கை திரும்பபெறும் வழி, திரும்ப அழைக்கும் சட்டம் உடனே வராதான்னு எண்ண தோன்றுது...ராஜ நடராஜன்...

கம்யூனிஸ்டுகள் குரல் கொடுப்பர்கள் சரி..யாருக்கு...
ஏற்கனவே.. கம்யூனிஸ்ட்டு எம்.எல்.ஏ. எம்.பி. தேர்தெடுத்த அனுபவம் திருப்பூர் மக்களுக்கு உண்டு..

அவர்களின் (தன்)மக்கள் பணியை பார்க்கும்போது...
ஏன் ஓட்டுபோட்டோம்.. வாக்கை திரும்பபெறும் வழி, திரும்ப அழைக்கும் சட்டம் உடனே வராதான்னு எண்ண தோன்றுது...//

வினோத்!இப்படியும் ஒரு பார்வையிருக்கிறதா?மாற்றமாக இருக்குமென்று நினைத்தேன்.நீங்கள் முன்பே பரிட்சித்துப்பார்த்து விட்டீர்களா?

திருப்பூர் அரசியலில் நான் சின்னக்குழந்தை:)

செந்திலான் said...

ஜோதிஜி நீங்கள் பிரச்சினையை ஒரே கோணத்தில் அணுகுகிறீர்கள்.திருப்பூர் பிரச்சினை தான் அது.எல்லா கவுண்டர்களுக்கும் அது முக்கிய பிரச்சினை அல்ல.சோமனூர் பல்லடம் போன்ற பகுதிகளில் விசைத்தறி தான் முக்கிய தொழில் மேலும் கொ.மு.க திருப்பூரின் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடவில்லை.இந்த மணிக் கவுண்டர் என்பவரெல்லாம் யாரென்றே தெரியாதவர் ஒரு லெட்டர் பேடு அமைப்பின் தலைவர்.ஏதோ ஜெயலலிதா வந்தால் எல்லா பிரச்சினைகளும் சரியாகி விடும் .என்று நினைப்பது அடி முட்டாள் தனம். சாயப் பட்டறைகள் செய்யும் முறைகேடுகளுக்கு அரசாங்கம் என்ன செய்ய முடியும்?எல்லா திட்டங்களையும் சென்னையிலேயே குவிக்கிறார்கள் அதில் இரண்டு பெரிய கட்சிகளுக்கும் விதி விலக்கு இல்லை கருணாநிதியிடம் போய் பேசவாவது முடியும் ஆனால் போயஸ் மாளிகையின் இறுகிய இரும்புக் கதவுகள் கூட்டணி கட்சிகளுக்கே திறக்காத நிலை பின்னர் எப்படி அ.தி.மு.க விடம் கூட்டணி வைக்க முடியும்.ஆனால் கொ.மு.க வினர் பலரிடம் அரசியல் தெளிவு இல்லை என்பதே உண்மை.அவர்களிடம் பேசிய வகையில் வெறும் உணர்ச்சி வயப் பட்ட வரட்டுவாத சினிமா ரசிகர்களைப் போன்ற மனநிலையில் தான் உள்ளார்கள் எதார்த்தத்தை உணரவில்லை கட்சி நடத்துவது மிகக் கடினமான விடயம் அதில் பணம் என்பது குருதி கசிவதைப் போன்று வலி மிக்க கசிவாக இருக்கும் .
லெமுரியனின் கருத்து தலித்துகள் யாரை வேண்டுமானால் வெட்டிக் கொல்ல உரிமம் வாங்கி உள்ளதைப் போன்று உள்ளது.

செந்திலான் said...

உங்களின் முந்தய பதிவில் எனது பின்னூட்டத்திற்கு பதிலாக இதில் சில விடயங்கள் உள்ளன(பதில் எழுதுகிறேன் என்று சொல்லி இருந்தீர்கள்) . உங்களது பின்னூட்டத்தை இந்த பதிவிற்கு பின்னர் தான் வாசித்தேன். நான் கர்நாடகாவில் இருந்தாலும் எனது ஊர் பல்லடம் அருகில் தான் உள்ளது. எனது உறவினர்கள்,சகோதரிகள் என்று பலர் இந்தத் தொழிலில் இருக்கிறார்கள் அவர்கள் பலரை கடந்த வாரம் சந்து உரையாடியதில் இருந்து வந்த கருத்துகள் தான் அவை.நான் இதற்கு முன்பு இந்தத் தொழில் சார்ந்த தொழிலில் கொஞ்ச காலம் இருந்துள்ளேன்

ஜோதிஜி said...

நன்றி செந்திலான். பல நண்பர்களின் அன்புப்பிடியில் நான் இருப்பதைப் போலவே இப்போது பட்டியலில் வந்து சேர்ந்து விட்டீங்க. நானும் வந்தேன். விமர்சனம் கொடுத்தேன் என்றில்லாமல் தெளிவாக உள்ள உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி செந்தில்.

சாயப் பட்டறைகள் செய்யும் முறைகேடுகளுக்கு அரசாங்கம் என்ன செய்ய முடியும்?

என்ன நண்பா இப்படி சொல்லீட்டிங்க. அந்நிய செலவாணியை யார் எதிர்பார்க்கிறார்கள்? டாஸ்மார்க் வருமானத்திற்கு எவ்ர் இந்த வருடம் இத்தனை கோடி இந்த மாதம் இத்தனை கோடி என்று எவர் தீர்மானிக்கிறார்கள்?

சாயப்பட்டறை முதலாளிகள் பணத்துக்காக தொழில் செய்கிறார்கள்? உண்மைதான். ஆனால் இந்த மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஒன்று இருக்கிறதே? இதன் பங்களிப்பு தான் என்ன? இந்த அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்,

செந்தில் தனியார் மற்றும் பொது சுத்திகரிப்பு நிலையங்களில் தானியங்கி கருவிகளைப் பொருத்தி ஒவ்வொரு சாயப்பட்டறைகள் வெளியாக்கும் நச்சு சாய கழிவை இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு கவனிக்க முடியும். சட்டத்தை சரியாக சொடுக்கி சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும்?

ஆனால் வந்து போகும் எந்த அதிகாரிகளும் செய்வதில்லை. ஏன்?ஏன்?

ஜோதிஜி said...

செந்தில் உங்கள் பார்வை சரிதான். எந்த இடத்திலும் ஜெயலலிதா குறித்து ஆதரவாக நான் எழுதியது இல்லை. காரணம் உண்மைகள் எனக்கும் தெரியும். ஆனால் கலைஞர் ஆட்சியில் நடந்த விசயங்களை, முறைகேடுகளை, பிரித்தாளும் சூழ்ச்சிகளை, இன்னும் பல விசயங்களை எழுத விருப்பம் இல்லை. காரணம் கலைஞரை குறை சொல்வதை விட இங்கிருப்பவர்களின் நடவடிக்கைகளை பார்க்கும் போது கலைஞர் குறையானவராக எனக்குத் தெரியவில்லை.

ஜோதிஜி said...

கொ.மு.க வினர் பலரிடம் அரசியல் தெளிவு இல்லை என்பதே உண்மை.அவர்களிடம் பேசிய வகையில் வெறும் உணர்ச்சி வயப் பட்ட வரட்டுவாத சினிமா ரசிகர்களைப் போன்ற மனநிலையில் தான் உள்ளார்கள் எதார்த்தத்தை உணரவில்லை கட்சி நடத்துவது மிகக் கடினமான விடயம் அதில் பணம் என்பது குருதி கசிவதைப் போன்று வலி மிக்க கசிவாக இருக்கும்

பெஸ்ட் ராமசாமி தொடக்க காலம் குறித்து அந்த நிறுவன வளர்ச்சியின் ஒவ்வொரு காலகட்டத்தையும் நான் அறிவேன். ஈஸ்வரன் குறித்து ஊடகம் சித்தரிக்கும் விசயங்களுக்கும் அவரின் தனிப்பட்ட கொள்கைகள் சிறப்பாக உள்ளதாக நண்பர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஒரு ஜாதி ரீதியான அமைப்பில் மூன்று வருடத்திற்குள் இத்தனை பிளவுகள், அடிதடிகள், பதவி போட்டிகள் இருக்கிறது என்றால் இவர்கள் யாருக்காக போராட போகிறார்கள்?

நான் பார்த்த வரைக்கும் இங்கு நடந்த எந்த போராட்டத்திறகும் (திருப்பூருக்குள்) இவர்கள் முன்னிலை வகித்தது இல்லை.

ஜோதிஜி said...

தற்போதய சூழலில் கொமுக அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அறுவடை அமோகமாக இருந்திருக்கும். ஆனால் அதிமுகவை நம்புனா அதோ கதி தான் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

குறும்பன் இந்த பதிவு எழுதும் போது கூட ரொம்பவே யோசித்துக் கொண்டே இருந்தேன். காரணம் வில்லங்கமான 3வது அணி குறித்து தகவல் வந்து கொண்டேயிருந்தது. ஆனால் இந்த பகுதியில் திமுக எதிர்ப்பு பல வகையிலும் உள்ளது. எனக்குத் தெரிந்த வகையில் பல முதலாளிகள் வெளியே காட்டிக் கொள்ளாமல் இதற்காக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்????

ஆனால் அறுவடை யாருக்கு என்பது மர்மத்திலும் மர்மம்.

ஜோதிஜி said...

// சந்திக்கும் போது எப்படி குனிய வேண்டும்? எப்படி பேச வேண்டும் என்று வகுப்பு மட்டும் நடக்க//

உண்மைதானே சுடுதண்ணி. மன நோய் பிடித்தவர்கள் தான் அரசியலில் தலைகளாக இருக்கிறார்கள்.

ஜோதிஜி said...

ராஜ நடராஜன்

இந்த திருப்பூரில் உள்ள கம்யூனிஸ்ட்களை ஏற்கனவே நாறும் உள்ளாடைகள் என்று தொடராக எழுதிக் கொண்டு வந்த போது சில விசயங்களை கோடிட்டி காட்டினேன். நீங்க வரிக்கு வரி படித்து எழுதிய விமர்சனம் கூட இப்போது கூட நினைவில் உள்ளது.

இங்கு சுப்பராயன் கோவிந்தசாமி என்ற மானஸ்தர்கள் இருந்தார்கள். இப்போது என்ன செய்கிறார்கள் என்று கேட்காதீர்கள், முடிந்தால் வினோத் மீண்டும் வந்து பதில் அளிப்பார்.

நல்லக்கண்ணு, பொன் ராதாகிருஷ்ணன்(பா,ஜ,க,), பாலபாரதி, போன்றவர்களைப் போல இவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காதீங்க. இருப்பதையும் இழந்து விடுவீங்க.

இப்போது கோவிந்தசாமி திமுக சார்பாக போட்டியிடுகிறார். குழப்பமாயிருக்கா?

ஜோதிஜி said...

பிற்படுத்த பட்ட இனங்கள்தான் எவ்வளவு வெறித்தனமாக இயங்குகின்றன அடிமை சமூகத்தை அடக்கிவைப்பதர்க்கு..!

லெமூரியன், நாடார் பதிவுகளுக்கு நீங்க கொடுத்த சவுக்கடிக்குப் பிறகு இது தானோ? நீங்க சொல்வதை நாகரிகமாக செந்திலான் கேள்வியாக கேட்டுள்ளார்.

உங்கள் கூற்றில் உண்மையிருந்தாலும் என்னுடைய பார்வையில் இப்போது சற்று மேம்பட்டு உள்ளது நண்பா?

ஜோதிஜி said...

வக்கனையாக இருக்கும் நாம் யோசிப்பது போலெல்லாம் அடித்தட்டு மக்கள் யோசிப்பதில்லை என்பது மே 13 ல் தெரிந்துவிடும்.

வலிக்கும் எதார்த்தம்

ஜோதிஜி said...

ஆரோக்கியமா... அச்சுறுத்தலா... சொல்லுங்கள்.

எந்த மக்களுக்கு நாங்கள் பாடுபடுகின்றோம் என்று சொல்கிறார்களோ அந்த இன மக்களுக்கு இவர்கள் உண்மையிலேயே உழைத்து அந்த குறிப்பிட்ட இன மக்கள் சமூகத்தில் மேலே வர பாடுபட்டால் என் பார்வையில் ஆரோக்கியம்.

ஆனால் இதை வைத்து பேர அரசியல் நடத்தும் இன்றைய அரசியல் தலைகளைப் பார்க்கும் போது எதிர்கால அச்சுறுத்தல் தான் நினைவுக்கு வருகின்றது.

ஜோதிஜி said...

தொழில் பிசியா இருக்க நடுவுலேயும் இணையத்த விடலயே

உண்மைதான் தவறு நண்பா. குறிப்பிட்ட விசயங்களை எழுத வேண்டும் என்று மனதில் ஓடிக் கொண்டிருப்பதை எழுத்தாக்கிய பின்பு தான் சற்று ஆறுதல் கிடைக்கிறது. உங்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சி காத்திருக்கிறது.

ஜோதிஜி said...

உங்கள் மூலமாகத்தான் தெரியும். விவரத்தை இணைய இதழ்களில் வரவைக்க முடியுமா?


முயற்சிக்கின்றேன் சிவா. சங்க பொறுப்பில் உள்ளவர்களுக்கே அநேக அச்சுறுத்தல்கள் இருக்கிறது என்பது தான் உண்மை.

ஜோதிஜி said...

வினோத்

இதில் ஒரு முக்கியமான விசயத்தை எழுத மறந்து விட்டேன். கள் இறக்க அனுமதி என்று கேட்டுக் கொண்டுருப்பவர்கள் மிகப் பெரிய அச்சுறுத்தல்களை உருவாக்க காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் பங்குக்கு தனியாக சூறாவளியாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். பார்க்கலாம். நான் சொன்னது தான். கண்களுக்குத் தெரிந்த தெரியாத பல எதிரிகள் கொமுக வுக்கு.

ஜோதிஜி said...

இதையெல்லாம் வேடிக்கைமட்டுமே பார்க்கும் நிலையில்....................

தவறு நண்பருக்குச் சொன்ன ஒரு இனிய அதிர்ச்சி உங்களுக்கும் உண்டு. நாளை தெரியும்? நம்(என்)பங்கு என்னவென்று?

ஜோதிஜி said...

கவுண்டர் இன மக்கள் எப்பொழுதும் ஒற்றுமையுடந்தான் இருக்க முயல்வர், இப்பொழுது என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை, மற்ற பேரவைகளை விட கொமுகவிற்குதான் அதிக கவுண்டர் இன மக்களின் சப்போர்ட் இருக்கிறது.

சிறிய மாறுதல் உண்டு சுரேஷ். நான்கு மாதங்களுக்கு முன்பு வரை இருந்தது. ஆனால் இப்போது அது இல்லை. இது தான் எதார்த்தம்.

ஜோதிஜி said...

இங்கு உள்ள பிரச்சினைகள் அனைத்தும் தெரிந்தும் திமுகவுடன் சேர்ந்து நிற்பது அவர்கள் தலையில் அவர்களே மண்ணை அள்ளி போட்டுகொள்கிறார்கள் என்று தெரிகிறது....:)

உண்மைதான் குமார். காரணம் ஆவணம் உருவாக்கிய பாதையின் முடிவில் கலைஞரிடம் சரண் அடைய வேண்டிய கட்டாயம்.

ஜோதிஜி said...

ஆணவம் என்று மாற்றி படிக்கவும்.

செந்திலான் said...

பதில்களுக்கு நன்றி ஜோதிஜி.
சாயப்பட்டறை முதலாளிகள் பணத்துக்காக தொழில் செய்கிறார்கள்? உண்மைதான். ஆனால் இந்த மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஒன்று இருக்கிறதே? இதன் பங்களிப்பு தான் என்ன? இந்த அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் //

முற்றிலும் உண்மை எந்த ஒரு விடயத்திலும் அரசாங்கம் நுழைந்தால் அங்கே லஞ்சமும் ஊழலும் தலை விரித்து ஆடத் தொடங்குகிறது.

பகலில் சாம்பிள் மட்டும் ஓட்டிவிட்டு இரவில் பல்க் ஆர்டர் ஒட்டி தண்ணீரை ஆற்றில் விடும் சாயப் பட்டறைகளை என்ன செய்வது?
தேவை சமூகம் குறித்த புரிதல் சுற்று சூழல் குறித்த விழிப்புணர்வு மற்றும் சுய கட்டுப்பாடு.

எந்த இடத்திலும் ஜெயலலிதா குறித்து ஆதரவாக நான் எழுதியது இல்லை.// நான் உங்களை சொல்லவில்லை. அ.தி.மு.க வுடன் கூட்டணி அமைக்க விரும்பிய கொ.மு.க வினரின் விருப்பங்களைப் பற்றிதான் அவ்வாறு சொன்னேன். இதிலிருந்தே அவர்களிடம் சரியான அரசியல் விழிப்புணர்வு இல்லை என்பதை உணரலாம்.

ஆனால் ஒரு ஜாதி ரீதியான அமைப்பில் மூன்று வருடத்திற்குள் இத்தனை பிளவுகள், அடிதடிகள், பதவி போட்டிகள் இருக்கிறது என்றால் இவர்கள் யாருக்காக போராட போகிறார்கள்?//

உங்கள் புரிதல் கட்சி அமைப்பில் இருந்து அரசியல் ரீதியாகத் தொடங்குகிறது. ஆனால் இது சமூக நோக்கில் பார்க்கப் பட வேண்டிய விடயம். கவுண்டர்கள் ஒற்றுமையாக இருந்ததாக வரலாறே இல்லை.கோவை செழியன் இருந்த போது கூட அவரை எதிர்த்து அமைப்பு நடத்தியவர்கள் இருந்தார்கள். ஒரு ஊரில் முப்பது வீடுகள் கவுண்டர்கள் இருந்தால் அதில் மூன்று அல்லது நான்கு பிரிவுகளாக இருப்பார்கள். அதில் பங்காளி, நேர் பங்காளி (கவுண்டர் நண்பரிடம் இதைப் பற்றி கேட்டு கொள்ளுங்கள் ) மாமன் மச்சான் என்று பல பிரிவுகள் மேலும் கவுண்டர்களிடையே கூட பட்டக்காரர்கள், கவுண்டர்கள்,குடியானவன் என்று ஒன்று ,இரண்டு ,மூன்று என பல வகைப்பாடுகள் உண்டு.கொஞ்சம் ஆழ்ந்து செல்ல வேண்டும்.ஒருவர் பதவிக்கு வந்தால் மற்றவர்களுக்கு ஆகாது.

நான் நாடார் பதிவில் சொன்னது போலவே வளர்ச்சி அடைந்த சமூகத்தை ஒற்றுமையாக வைத்திருக்க முடியாது. வன்னியர்கள் இன்னும் அந்த அளவிற்கு வளர்ச்சி அடையவில்லை என்று தோன்றுகிறது. அதன் பின் பல அடிதடிகளை எதிர் பார்க்கலாம்

நான் பார்த்த வரைக்கும் இங்கு நடந்த எந்த போராட்டத்திறகும் (திருப்பூருக்குள்) இவர்கள் முன்னிலை வகித்தது இல்லை.//

எப்படி முடியும்? ஏனெனில் சாயப் பட்டறை உரிமையாளர்களும், விவசாயிகளும் கவுண்டர்களே. இரண்டு பிரிவினரும் கட்சியில் இருக்கிறார்கள்.யாருக்காக பேசமுடியும்.

இந்த பகுதிகளில் இருக்கும் தலித்துகளுக்கும் கவுண்டர்களுக்கு காலம் காலமாக நடந்து கொண்டிருக்கும் பனிப்போர்கள் விபரம் புரிந்தவர்களுக்கு நன்றாக தெரிந்த விசயமாகும்.//

வட,தென் மாவட்டங்களின் பிரச்சினை போன்று இதை பார்க்க முடியாது. ஏனெனில் இங்கே தலித்துகள் எனப் படுவோர் உண்மையில் மண்ணின் மைந்தர்கள் அல்ல. அவர்கள் தெலுங்கைத் தாய்மொழியாக கொண்டவர்கள் வந்து குடியேறியவர்கள். நாயுடுகள் அழைத்து வந்ததாக கேள்வி.இங்கே இருந்த ஆதி திராவிடர் பலர் வால்பாறை போன்ற இடங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். மேலும் பணம் சம்பாதிப்பதே முக்கியம் என்று எப்பொழுதும் மக்கள் ஓடிக் கொண்டிருந்தால் சாதி ரீதியான மோதல்களுக்கு நேரம் ஏது? தற்பொழுது தலித்துகளுக்கும் கவுண்டர்களுக்கும் தொடர்புகள் குறைந்து கொண்டே செல்கிறது. அவர்களின் மீதான ஆதிக்கப் பிடி கூட முற்றிலும் விலகிக் கொண்டிருக்கிறது.விவசாயம் குறைவதால் இயல்பாகவே இந்த தொடர்பு அறுந்துவிட்டது.

ஜோதிஜி said...

ஒரு ஊரில் முப்பது வீடுகள் கவுண்டர்கள் இருந்தால் அதில் மூன்று அல்லது நான்கு பிரிவுகளாக இருப்பார்கள். அதில் பங்காளி, நேர் பங்காளி (கவுண்டர் நண்பரிடம் இதைப் பற்றி கேட்டு கொள்ளுங்கள் ) மாமன் மச்சான் என்று பல பிரிவுகள் மேலும் கவுண்டர்களிடையே கூட பட்டக்காரர்கள், கவுண்டர்கள்,குடியானவன் என்று ஒன்று ,இரண்டு ,மூன்று என பல வகைப்பாடுகள் உண்டு.கொஞ்சம் ஆழ்ந்து செல்ல வேண்டும்.ஒருவர் பதவிக்கு வந்தால் மற்றவர்களுக்கு ஆகாது.

உங்கள் தெளிவான விளக்கத்திற்கு நன்றி. நானே இது பற்றி எழுத வேண்டும்என்று நினைத்து இருந்தேன். என்னுடைய திருப்பூர் அனுபவத்தில் ஒரு கவுண்டர் மற்றொரு கவுண்டரை ஆதரித்ததாக சரித்திரம் இல்லை. போட்டி, பொறாமை, எரிச்சல் இத்யாதி. ஆனால் ஒன்று சேரும் போது வாய் வார்த்தை ஒன்று. சென்றதும் வேறு வார்த்தைகள். பணம் ஒன்று தான் சேர்க்கின்றது. அதுவே பல விபரீதங்களுக்கும் காரணமாக இருக்கிறது. இங்குள்ள 50 பேர்கள் ஒன்று சேர்ந்து ஒரே அணியில் இருந்தால் எந்த அரசியலும் உள்ளே வரமுடியாது. அப்படி ஒரு சூழ்நிலையில் திருப்பூர் இருக்கும் பட்சத்தில் இன்றைய தினத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இந்த சாயக்கழிவு கூட தெளிவான முறையில் நச்சு நீக்கப்பட்டு ஆற்றில் கலந்து விடும் நாதாரிகளை இனம் கண்டு ஒதுக்கப்பட்டு இந்நேரம் 30 000 கோடிகளை தொட்டு மிகப் பெரிய வணிக ஊராக மாறியிருக்கக்கூடும்.

நாடார் பதிவில் சொன்னதும் இப்போதும் சொல்வதும் ஒன்றே தான்.

பணம் தான் பிரதானம். ஜாதி போன்ற மற்றதெல்லாம் அப்புறம்தான்.

ஜோதிஜி said...

மேலும் பணம் சம்பாதிப்பதே முக்கியம் என்று எப்பொழுதும் மக்கள் ஓடிக் கொண்டிருந்தால் சாதி ரீதியான மோதல்களுக்கு நேரம் ஏது? தற்பொழுது தலித்துகளுக்கும் கவுண்டர்களுக்கும் தொடர்புகள் குறைந்து கொண்டே செல்கிறது. அவர்களின் மீதான ஆதிக்கப் பிடி கூட முற்றிலும் விலகிக் கொண்டிருக்கிறது

இதைத்தான் பல பதிவுகளில் நாயாக கத்திக் கொண்டிருக்கின்றேன். கல்வெட்டு, கும்மி, குழலி, விந்தைமனிதன், தெகா, இன்னும் பலர் என்னை விடாமல் ரவுண்டு கட்டி அடிக்க வருகிறார்கள்.

செந்திலான் said...

நன்றி ஜோதிஜி. ஆம் நான் கூறியது முற்றிலும் நடைமுறை எதார்த்தம். நீங்கள் கூறியவர்களில் யாரேனும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் உள்ளார்களா? இங்குள்ள ஊர்ப்புறங்களில் வாழ்ந்திருக்கிறார்களா? எனது சொந்த அனுபவத்தில் நான் கண்ட உண்மை அது.
இங்கு பணமே முதன்மை.முடிந்தால் தலித் மக்களிடமே கடன் வாங்கும் அளவுக்கு பொருளாதாரம் தான் வழி நடத்துகிறது.
சில விடயங்களில் முன் முடிவுகளோடு அணுகினால் நாம் தவறான தீர்மானங்களுக்கு சென்று விடுகிறோம் ஒரு பரந்துபட்ட ஆழ்ந்த பார்வையில் இதைக் கண்டறியலாம். ஒரு சில சித்தாந்தங்களைக் கொண்டோ அல்லது சில பல கொள்கைக் கண்ணாடிகள் அணிந்தோ சமூகத்தை நோக்கினோம் என்றால் அந்த கொள்கைகள் தரும் மயக்கம் நம்மை தவறான இடத்துக்கு கொண்டு செல்லும்

செந்திலான் said...

தென்னை, ஆய்த்த ஆடை ஏற்றுமதி தொழில், கனரக வாகனங்கள், பஞ்சு சார்ந்த துணைத் தொழில்கள் மற்றும் நூற்பாலைகள், கோழிப்பண்ணைகள் என்று பல தொழில்களிலும் சக்ரவர்த்தியாக இருக்கும் இந்த கொங்கு இன மக்களுக்கு இந்த அரசியல் அமைப்பு தொடங்க வேண்டிய அவஸ்யம் என்ன? //

எல்லாம் தொழிலில் நன்கு செட்டில் ஆகிவிட்டு அதை வாரிசுகளிடம் ஒப்படைத்துவிட்டு பின்னர் வந்த அரசியல் அங்கீகார,பதவி ஆசைகள் தான்.
இங்கு தொழில் துறையில் முதலில் கொடி நாட்டியவர்கள் நாயுடுகள் தான் அதுவும் கோவை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே. அவர்களைப் பார்த்து தான் கவுண்டர்களும் வந்தார்கள். அடிப்படையில் முரட்டுத்தனமான வல்லடி வேளாண் சமூகம் தொழிலில் இறங்கினால் பல விடயங்களை அறிவு சார்ந்து சிந்திக்காமல் வல்லடியாகவே சிந்திப்பார்கள் என்பதற்கு சாயப் பிரச்சினை எடுத்துக்காட்டு.
இங்கு கனரக வாகனங்கள் யாரும் உற்பத்தி செய்யவில்லை அதற்கு உதிரி பாகங்கள் மட்டுமே அதுவும் கோவையை சேர்ந்தவர்கள் தான் அதிகம்.

ஜோதிஜி said...

எல்லாம் தொழிலில் நன்கு செட்டில் ஆகிவிட்டு அதை வாரிசுகளிடம் ஒப்படைத்துவிட்டு பின்னர் வந்த அரசியல் அங்கீகார,பதவி ஆசைகள் தான்.

சபாஷ். முற்றிலும் உண்மை. குறிப்பிட்ட சிலர் ஊர்க்காசை உலையில் அடித்து போட்டு பலரின் வாழ்க்கையை கெடுத்து படிப்படியாக முன்னேற்றம் என்று காட்டி ஒதுக்கிய காசை இன்று கல்விகூடங்கள் என்ற பெயரில் அடுத்த தொழிலை தொடங்கியுள்ளனர். சிலர் இது போல அரசியலில்.

மொத்தத்தில் அமைதியிழந்த வாழ்க்கை. ஏன் இத்தனை ஆசைகளும் அவஸ்த்தைகளும் யோசிக்கத் தோன்றுகின்றது.

இங்குள்ள பெரிய நிறுவனங்கள் முடித்துக் கட்டிய சிறிய நிறுவனங்களைப் பற்றி அந்த ஆயிரக்கணக்கான அப்பாவிகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுத முடியும். 15 வருட காலத்தில் என் அனுபவத்தில் 3000 நிறுவனங்களை இல்லாமலேயே ஆக்கிவிட்டார்கள்.

Bibiliobibuli said...

பாதிக்கு மேல் படிக்கமுடியவில்லை. வடிவேல் பாணியில் கண்ணை கட்டுதே. தமிழ்நாட்டில் எத்தனை அரசியல் கட்சிகள்? எத்தனை சாதிப்பிரிவுகள்? வீதிக்கொரு மரம் வளர்ப்போம் என்பது போல் சாதிக்கொரு கட்சி என்பது வரை புரிகிறது.

என்னமோ போங்க. வை.கோ விற்கு இவங்கல்லாம் செய்யிறது அடுக்காதுங்க. எந்த தேர்தலாலும் தமிழனுக்கு விடிவில்லை என்பதும் நல்லாவே தெரியுது.

ஜோதிஜி said...

வாங்க ரதி.

ஒரு மாதிரியா புத்துணர்ச்சியோடு வந்து இருப்பீங்க.

வைகோ பாதி அவரே கெடுத்துக் கொண்டார். மீதி அவரின் புத்திசாலித்தனத்திற்கு ஏற்ற இடம் தமிழகம் அல்ல.

Bibiliobibuli said...

//வைகோ பாதி அவரே கெடுத்துக் கொண்டார். மீதி அவரின் புத்திசாலித்தனத்திற்கு ஏற்ற இடம் தமிழகம் அல்ல.//

முன்பாதி அரசியல், எனக்கு அதிகம் புரிவதில்லை. இவர் சீமான் போலேயே ஈழம் பற்றி அதிகம் பேசி தமிழ்நாட்டில் மதிப்பை இழந்தாரோ என்று யோசிப்பதுண்டு.

வை. கோ. வின் புத்திசாலித்தனத்துக்கு ஏற்ற இடம் தமிழ்நாடு இல்லை என்பது நான் எப்போதோ நினைத்தது. நீங்க அதை சொல்லிட்டீங்க. அவரின் அறிவு சார் ஆளுமை தமிழ்நாட்டு அரசியலில் வீணாகிப் போகிறது.

லெமூரியன்... said...

\\லெமூரியன், நாடார் பதிவுகளுக்கு நீங்க கொடுத்த சவுக்கடிக்குப் பிறகு இது தானோ? நீங்க சொல்வதை நாகரிகமாக செந்திலான் கேள்வியாக கேட்டுள்ளார்........//

தவறான புரிதல் நண்பனே...!
அடிமை வலையில் இருந்து மீண்டு அதிகார வலைக்குள் வந்து நிற்கும் நாடார் இனத்தை கண்டு வியந்து நம் இனத்திலும் இவ்வளவு ஒற்றுமையும் உயர்வுக்குண்டான சித்தனையும் விளையாத என ஏக்கம் கொள்பவன் நான்...!

அந்த குறிப்பிட்ட பதிவில் கனிமொழியை குறிப்பிட, சாதியின் அவசியம் ஏன் வந்தது என்பது மட்டும்தான் எனது கேள்வி..!

ஜோதிஜி said...

ரதி ஏழாயிரம் பண்ணை என்றொரு இடம் (வைகோ பிறந்த ஊருக்கு அருகே)

உறவினருடன் வேறொரு வேலையாக சென்று இருந்த போது ஆர்வமாக இவரைப்பற்றி விசாரித்தேன். ஏன் படுகேவலமாக தோற்றார் என்று அடித்தட்டு மக்களிடம் பேசிய போது தான் புரிந்தது. இத்தனைக்கும் போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கென்று ஒரு அற்புதமான சிறப்பு முகாம் ஒன்று நடத்திக் காட்டினார்.

தொழில், குடும்பம், அரசியலில் திட்டமிடுதல் முக்கியம். சந்தர்ப்பம் சூழ்நிலையை ஊன்றி கவனித்து தன்னை மாற்றிக் கொள்ளுதல் அதை விட முக்கியம். ஆனால் என்ன தான் சந்தர்ப்பவாதம் என்று பேசினாலும் இன்று இவரைப்பற்றி வினவு தளத்தில் அனாதை என்று படித்த போது உருவான வலி அதிகம்.

நாடார் இனத்தை கண்டு வியந்து நம் இனத்திலும் இவ்வளவு ஒற்றுமையும் உயர்வுக்குண்டான சித்தனையும் விளையாத என ஏக்கம் கொள்பவன் நான்...!


லெமூரியன் அற்புதமான விமர்சனம். பல புத்தகங்களை படித்த போது எனக்கே இந்த எண்ணம் தான் மேலோங்கியது. கனிமொழி குறித்து எழுதும் போது ஏன் அதிபன் போஸ் உடன் திருமணம் ஆக வேண்டிய அவஸ்யம் என்ன? என்று யோசித்த காரணத்தால் அதுவும் வந்தது. உங்களுக்குத் தெரியுமா? இந்த திருமணமே தினகரன் முன்னால் அதிபர் கேபி கந்தசாமி வாரிசு உடன் நடக்க வேண்டிய ஒன்று. இதையெல்லாம் பற்றி எழுதினால் தடம் மாறிவிடாதா? நீங்கள் விமர்சனமாக பல விசயங்களை எழுதி விடுறீங்க. நான் முக்கிய விசயங்களை மட்டும் எழுதி விடுகின்றேன். தெரிந்த போதிலும் வாசிப்பவர்களின் மனோபாவம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை மனதில் கொண்டு பல விசயங்களை இயல்பாக தவிர்த்து விடுவதுண்டு.

ஆதரவு எதிர்ப்பு என்பதை விட ஏன்? எதற்காக? எப்படி? இதை விவரிப்பது தான் என் நோக்கம். படிப்பவர்களுக்கு அத்தனையும் தெரியும்.

தெரிந்தவர்கள் மட்டும் தான் இந்த இல்லத்திற்குள் எப்போது வருகையாளர்கள்.

Sakthivel said...

....//இயல்பாகவே ஈகோ அதிகமுள்ள இந்த இன (கொங்கு வேளாள கவுண்டர்) மக்களின் நல்வாழ்க்கையை காக்க நான் வந்துள்ளேன் என்று சொன்னால்? அதுவும் திமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு வந்து நிற்கப் போகும் கொமுக வினருக்கு இது போதாத காலம் போலிருக்கு.//....

அன்பு நண்பா நேதாஜி,

ஒரு குறிப்பிட்ட இனத்தை பற்றி அவதூறாக பேசும் முன் யோசித்து செய்யவும்.
உன் இனத்தை நான் விமர்சித்தால் நீ ஏற்று கொள்வாயா?

கவுண்டர் இனம் என்பது எங்கோ இருந்து புலம் பெயர்ந்த இனமோ இல்லை பஞ்சம் பிழைக்க வந்த இனமோ கிடையாது.
இந்த பூமியின் பூர்வீகங்கள் கவுண்டர்கள். காட்டை திருத்தி வேளாண் பயிர் செய்து உலகத்தின் பசி தீர்த்தவர்கள்.
சற்று வரலாற்றை திருப்பி பாருங்கள், எம் மக்கள் வீர மறவர்கள், சோழ சாம்ராஜ்யத்தின் காவலர்களாக விளங்கியவர்கள்.
கவரிமான் போல் தம் மேல் பலி சொல் வரின் உயிரை மாய்த்து கொண்டவர்கள், பண்டைய கல கவுண்டர் இன மக்கள்.
நீதிக்கும் நேர்மைக்கும் விசுவாசத்திற்கும் இன்றளவும் தமிழகத்தின் எடுத்துக்காட்டு இவர்கள்.

கொங்கு நாட்டை இவ்வண்ணம் எங்கள் மக்கள் ஆண்டு கொண்டிருக்கையில், எம் மக்களின் பொருளாதாரம் உயர்ந்தது,
செல்வம் பெருகியது. இதன் பொருட்டு அண்டை நாடுகளில் (தற்போது மாநிலங்கள்) இருந்து வேலை தேடி குடும்பத்துடன் புலம் பெயர்ந்தவர்கள்
கொங்கு மண்டலத்தில் குடியேறினர். இவர்களே தலித்துகள் என்று இன்றும் அழைக்க படுகிறார்கள். இவர்கள் இன்று பொருளாதார முன்னேற்றம் கண்டிருந்தாலும்,
அவர்களின் பழக்க வழக்கங்கள் இன்றும் மாறவில்லை. இவர்களால் சுத்த பத்தமாக இருக்க முடியவில்லை, விருந்தோம்பல் சரி வர இருக்காது,
நீதி நேர்மை விசுவாசம் இவர்களிடம் இப்போது இல்லை.

இந்த நிலையில் ஒரு வேலை கஞ்சிக்காக நேற்று நம்மிடம் கை ஏந்தியவன் இன்று நமக்கு நிகராக பண பலம் இருக்கும் காரணத்தால்,
நம்மை எதிர்க்கிறான் என்றால், இந்த கவுண்டர் இனம் மட்டுமல்ல, எந்த நல்ல சாதி மக்களுக்கும் கோவம் வரத்தான் செய்யும்.

சான்றோர் சான்றோரே! ஆன்றோர் ஆன்றோரே! - கொடுத்து சிவந்த கைகள் எமது, சந்தேகள் இருப்பின் பாரி வள்ளலை பற்றி படித்து பாரும்.

-சக்தி

ஜோதிஜி said...

சக்திவேல் இந்த பதிவை ஒரு சாதி என்கிற கண்ணோட்டத்தில் படிக்கும் போது உங்களுக்கு வரும் கோபம் நியாயமானது. இந்த பகுதி உங்கள் தாய் மண் என்ற போதிலும் இப்போதுள்ள சூழ்நிலையை விளக்கும் பொருட்டு எழுதப்பட்ட வாசகங்கள் உங்களை வெறுபேற்ற வைத்துள்ளது என்றே நினைக்கின்றேன். பாருங்க. பழக்கவழகக்ம் என்பதை விட ஜாதி என்பது கடல் கடந்து போனாலும் விட முடியலை பாத்தீயளா?

செந்திலானும் இங்குள்ளவர் தான். அவரின் எதிர்மறை நியாயங்களில் உள்ள நாகரிகத்தை கவனிங்க சக்திவேல்.

Anonymous said...

சக்திவேல் - அவர் ஜாதி குறித்து எதுவும் தவறாகச் சொல்லவில்லையே? ஜாதியை வைத்து அரசியல் செய்பவர்களின் விமர்சனம் தானே செய்துள்ளார்?

//இவர்களே தலித்துகள் என்று இன்றும் அழைக்க படுகிறார்கள். இவர்கள் இன்று பொருளாதார முன்னேற்றம் கண்டிருந்தாலும்,
அவர்களின் பழக்க வழக்கங்கள் இன்றும் மாறவில்லை. இவர்களால் சுத்த பத்தமாக இருக்க முடியவில்லை, விருந்தோம்பல் சரி வர இருக்காது,
நீதி நேர்மை விசுவாசம் இவர்களிடம் இப்போது இல்லை.//

இப்படி மனிதர்களை வேறுபடுத்திப் பார்ப்பதை என்று தான் நிறுத்தப் போகிறீர்கள்? அண்டை மாநிலத்திலிருந்து வந்தாலும் அவர்களும் மனிதர்கள் தானே? சரி உங்க கூற்றுப்படியே பழக்கவழக்கம் வேற மாதிரி என்று வைத்துக் கொண்டாலும், உங்கள விட சுத்தமாக இருக்கும் சாதிக்காரங்க உங்கள ஒதுக்கி தீண்டத் தகாதவர்களாக நடத்தினால் ஒத்துக் கொள்வீர்களா? உங்களுக்கு வலிக்காது? யாரோ ஒருத்தர் பெஞ்சு மேல உக்காந்து டீ குடிக்க, நீங்க எல்லாரும் தரையில தான் உக்காரனும்ன்னு சொன்னா கஷ்டமா இருக்காது?

நீதியும் நேர்மையும் விசுவாசமும் இனத்தைப் பொறுத்தது என்பது தவறான கருத்து நண்பரே. அவர்களில் நம்மை விட நல்லவர்கள் இருக்கலாம். யோசித்துப் பாருங்க - ஊருக்குள்ள ஒண்ணா நம்மளோட புழங்கிவரும் மக்கள் - நம்ம நல்லது கெட்டது எல்லாத்துலயும் அவங்க இருப்பாங்க. உங்க வீட்டுல வந்து ஏதாச்சும் திருடிப் போனாங்களா? உங்க வீட்டுல யாராவது கையைப் பிடிச்சு இழுத்திருக்காங்களா? அவங்களும் மேல வரணும். எல்லாரும் சரிசமமாகனும். இது நடக்கத் தான் போவுது. பாத்துகிட்டே இருங்க.

அவங்க ஏழையாக இருப்பதால் தான அழுக்காக இருக்காங்க? குடிசை வீட்டுல வாழ்ந்துகிட்டு கூலி வேலை செய்து சாப்பிட்டுகிட்டு இருக்கறவங்ககிட்ட உங்க வீட்டுச் சுத்தத்தை எதிர்பார்க்காதீங்க நண்பரே.

அதென்ன விருந்தோம்பல்? நீங்க என்னைக்காச்சும் அவங்க வீட்டுக்குள்ள போய் சாப்பிட்டு வந்திருக்கீங்களா?

அங்க கிராமத்துல அவனவன் இருக்கற காட்டையும் வித்துட்டு மில்லு வேலைக்குப் போயிகிட்டு இருக்கான். நீங்க இப்படி வீண் பெரும பேசிப்பேசியே வீணாப் போங்க.

Unknown said...

நான் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவன். தீண்டாமை வன்கொடுமைச் சட்டம் என்று ஒன்றில்லாதிருந்தால், தலித் மக்களை மனிதர்களாகக் கூட மதித்திருக்க மாட்டார்கள். தங்கள் காடு கழனிகள் அருகே இருக்கும் மாற்று சாதிக்காரர்களை விவசாயம் செய்ய விடாமல் செய்ய என்னென்ன அநியாயங்கள், தந்திரங்களை இவர்கள் செய்வார்கள் என்று அனுபவப்பட்டவர்களே அறிவார்கள். கடைசியில் இவர்களிடமே அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டுப் போய்விடும் நிலையை ஏற்படுத்துவார்கள். இவர்களுடைய பையன்கள் மாற்றுசாதிப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்தால், அந்த மருமகள்களைக் கொல்வது, இவர்கள் பெண்கள் மாற்றுசாதிப் பையன்களைக் காதலித்துத் திருமணம் செய்தால் இருவரையும் கொல்வது என்று ஆயிரமாயிரம் சம்பவங்கள் இருக்கும் இவர்களின் ஆதிக்கத்தில் உள்ள கிராமப் பகுதிகளில்... கோவை, திருப்பூர், பெருந்துறை, சென்னிமலைப் பகுதிகளில் ஜவுளித் துறை வளர்ச்சியால், இவர்களிடமிருந்து மாற்று சாதியினர் சற்று சமூக மற்றும் பொருளாதார சுதந்திரம் அடைந்தார்கள் என்பதுதான் உண்மை

Unknown said...

அழகான, தெளிவான வாதங்கள். வாழ்த்துக்கள் தோழரே...

அன்புடன்,

சிவா, தெற்கு சூடான், ஆஃப்ரிக்கா...
nirmalshiva1968@gmail.com

Unknown said...

கொங்கு வேளாளாின் வரலாறு இ்டடக்கட்டப்பட்டது. இவா்கள் வந்தேறிகள். நாடோடிகள் , இவா்களின் கூற்றுப்படியே சோழ நாட்டு இளவர சிக்காக குற்றேவல் செய்ய வேண்டி சேர நாடு் அனுப்பி வைக்கப்பட்ட 5000 குடிகளே் இவா்கள் எனில் மீதி கு டிகளின் வாாிசுகள் இன்னும் சோழநாட்டுப் பகுதயில் இருக்க வேண்டுமே? இருக்கறாா்களா? என்ன சாதி பெயாில் ?வேட்டுவககவுண்டா்களே இம்மண்ணின் பூாவகுடிகள்.