Sunday, March 27, 2011

63 நாயன்மார்களுக்கு சீமான் உருவாக்கியுள்ள ஆப்பு

காங்கிரஸ் கட்சி. 

இந்திரா காந்தி அம்மையார் குறித்த பல விமர்சனங்கள் இருந்தாலும் அத்தனையும் தாண்டி அவருக்குள் இருந்த தீர்மானமான கொள்கை முடிவுகள் இந்தியாவை பல படிகளேனும் முன்னேற்றப்பாதையில் அழைத்துச் சென்றது என்பதும் உண்மை. திடீர் தலைவராகவோ, திட்டமிடுதல் இல்லாமல் வந்த அமரர் ராஜீவ் காந்தி போலவோ இல்லாமல் முன்னாள் பிரதமர் ஜவர்ஹலால் நேருவின் உதவியாளர் போலவே செயல்பட்டு அரசியலின் ஒவ்வொரு படியையும் கடந்து மேலே வந்தவர். 

வாரிசு என்றொரு குற்றச்சாட்டு எத்தனை உண்மையோ அதையும் உடைத்து தன்னுடைய ஆளுமையை நிரூபித்த மகா பெண்மணி.  இந்திரா காந்தி இருந்த போது அவருடன் இருந்த மற்ற முக்கிய தலைவர்கள் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை அரசியல் நோக்கர்களைத் தவிர இப்போது போல அவ்வளவு சீக்கீரம் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. காரணம் இந்திரா ப்ரியதர்ஷிணி சகலவிதங்களிலும் வியாபித்திருந்தார். 

குறிப்பாக வெளிநாட்டுக் கொள்கைகளில் பங்களாதேஷ் முதல் ஈழம் வரைக்கும் சுயமாக சிந்தித்து முடிவு எடுத்த சாதனைப் பெண்மணி.  

நான் வாழ்ந்த பகுதியில் எந்த தேர்தல் வந்தாலும் மாநிலத்திற்கு இரட்டை இலை.  மத்தியில் கைச் சின்னம்.  இதுதான் தராக மந்திரமாகவே இருந்தது.  காங்கிரஸை தூற்றுவதும் பழிப்பதும் ஏறக்குறைய ஒரு பாவச் செயல் போலவே கருதப்பட்டது. 

ஆனால் காலங்கள் உருண்டோடி காவுகள் பல வாங்கி வந்து நிற்கும் இன்றைய காங்கிரஸ் கட்சியின் நிலைமை?  அந்தோ பரிதாபம்? 

ஈழம் சார்ந்த கொள்கைள் முதல் இன்றைய வெட்கக்கேடான வெளியுறவுக் கொள்கைகள் வரைக்கும் அத்தனையும் சிக்கல் மேல் சிக்கலாகி சின்னாபின்னமாக்கி சிதறுண்டு போய்க்கிடக்கிறது. டம்மி பிரதமரை வைத்துக் கொண்டு கும்மியாட்டம் நடத்திக் கொண்டிருக்கும் இந்த மத்திய காங்கிரஸ் கட்சியை சீமான் எதிர்ப்பது ஈழத்தில் நடந்த அக்கிரமத்திற்காக மட்டுமே.  ஆனால் என்னுடைய பார்வையில் இந்த காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த சில நிகழ்வுகளையும் பார்த்து விடலாம். 

சாய்நாத் ஹிந்து பத்திரிக்கையில் எழுதிய இந்த விபரங்கள் இன்றைய சாதனை காங்கிரஸ் கட்சியின் சாதனைப் பட்டியல் சிலவற்றை மட்டுமே கொடுத்துள்ளேன்?

2005-06 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி, பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள வரி - 3,74,937 கோடி ரூபாய். (இது, 2ஜி அலைக்கற்றை ஊழல் தொகையைவிட 2 மடங்கு)

இப்போது நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள வரி - ரூ.88,263 கோடி.

இப்படி பெரும் தொகையை தொழில் நிறுவனங்களுக்கு ரத்து செய்த பிரணாப் முகர்ஜி, விவசாயத் துறைக்கான ஒதுக்கீட்டில் ரூ.5568 கோடியை வெட்டி விட்டார். பயிர்ப் பாதுகாப்புக்காக, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகையில் மட்டும் குறைக்கப்பட்ட நிதி ரூ.4,447 கோடி.

பெரும் தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையை தள்ளுபடி செய்தது மட்டுமல்ல, இனி எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய சுங்கவரியைக் கட்டத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்ட தொகை - ரூ.48,798 கோடி!                (நாடு முழுதும் பொது விநியோகத் துறையான ரேஷன் கடைகளுக்கு ஓராண்டுக்கு செலவிடப்படும் தொகையில் இது பாதி)

அப்பல்லோ போன்ற ‘நட்சத்திர ஓட்டல்’ தரத்தில் நடத்தப்படும் தனியார் மருத்துவமனைகளுக்கு வெளிநாடுகளிலிருந்து நவீன மருத்துவக் கருவிகளை இறக்குமதி செய்ய, இந்த நிதி நிலை அறிக்கையில் விலக்காக அளிக்கப்பட்டுள்ள சுங்கவரித் தொகை ரூ.1,74,418 கோடி.

இந்த மருத்துவமனைகளில் 30 சதவீத படுக்கைகளை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கி, சிகிச்சை அளிப்பதாக இந்த நிறுவனங்கள் பொய் கூறி அரசிடமிருந்து சலுகைகளைப் பெறுகின்றன. உண்மையில் அப்படி எந்த இலவச சிகிச்சையும் இங்கே வழங்கப்படுவது இல்லை.

இந்த நிதிநிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளாக அறிவிக்கப்பட்டுள்ள தீர்வை வரி - ரூ.1,98,291 கோடி.                (கடந்த ஆண்டு - ரூ.1,69,121 கோடி)

தொழில் வருமான வரி, சுங்க வரி, தீர்வை வரி - ஆக பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் செலுத்தத் தேவையில்லை என்று 2005-2006 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தமாக வழங்கப்பட்ட வரிச் சலுகை - ரூ.21,25,203 கோடி. (21 இலட்சத்து 25 ஆயிரத்து 203 கோடி. 2ஜி அலைக்கற்றை ஊழலைவிட 12 மடங்கு அதிகம்)

இப்படி கோடிகோடியாக தொழில் திமிங்கலங்களின் வயிற்றில் கொட்டும் இந்த காங்கிரஸ் ஆட்சி தான். ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருள்களை வழங்க நிதி இல்லை என்று கை விரிக்கிறது. உணவுக்காக வழங்கப்படும் நிதி உதவியை குறைக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களை வரவேற்கும் மத்திய மாநில அரசுகள் உள் கட்டமைப்புகளில் கவனம் செலுத்துவதில்லை. 

மற்ற ஊர்களில் எப்படியோ? திருப்பூரில் தொடக்கத்தில் மின்சாரத்தடை இரண்டு மணி நேரமாக இருந்தது.  இப்போது ஒரு நாளைக்கு சராசரியாக 6 மணி நேரமாக மாறியுள்ளது. உள்ளே இருக்கும் நிறுவனங்களுக்கே மின்சாரம் வழங்க முடியா சூழ்நிலையில் இருப்பவர்கள் தான் பன்னாட்டு நிறுவனங்களை ரத்தினக்கம்பளம் போட்டு வரவேற்கிறார்கள்.வருகின்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம்.அத்துடன் குறிப்பிட்ட வருடங்களுக்கு வரிவிலக்கு. 

காரணம் என்ன?  

எச்சில் பொறுக்கிகள் தங்கள் மேல் விழும் எலும்புத் துண்டுகளை கவ்வ தயாராக இருப்பதால் நம் இந்தியாவை இன்று பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாகவே இப்போதுள்ள மத்திய அரசாங்கம் மாற்றியுள்ளது, இந்த பட்ஜெட்டில் உள்நாட்டு தயாரிப்பாளர்களுக்கு நிதியமைச்சர் பிரணாப் கொடுத்த மற்றொரு அன்புப் பரிசு கலால் வரி பத்து சதவிகிதம். 

ஜட்டி, பனியனை தயாரித்து நிறுவனத்தை விட்டு வெளியே கொண்டு வர வேண்டுமென்றால் 100 ரூபாய்க்கு பத்து ரூபாயை வரியாக கட்டி ரசீது வாங்கி விட்டு தான் வெளியே கொண்டு போக வேண்டும். இது போன்று ஒவ்வொரு துறைக்கும் இவர்களின் அன்புப் பரிசு உண்டு.

கற்பனை செய்து பாருங்க. நம்மை ஆளும் அரசாங்கம் நம் மக்களை வாழவைக்கவா?  இல்லை அழித்து முடித்து அடுத்த நாட்டு கையில் ஓப்படைக்கவா?

இந்த 2011 தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள 63 நாயன்மார்களை ஒழித்துக் கட்ட சீமானின் நாம் தமிழர் இயக்கம் உருவாக்கிய காணொளி தமிழ்நாடு முழுக்க சென்றடையுமா? என்று தெரியவில்லை. நல்ல வேளை மொத்த பிரச்சனைகளுடன் ஈழப்பிரச்சனைகளையும் சேர்த்து இடையிடையே சீமானின் பேச்சும் கலந்துள்ள இந்த 20 நிமிட காணொளியை பார்க்கின்ற இளைஞர்களுக்கு, குறிப்பாக முதன் முறையாக ஓட்டுப் போடுகின்றவர்களை பாதிப்படைய வைத்தாலே முழு வெற்றி தான். 

நிச்சயம் இது போன்ற இளைஞர்கள் மற்றும் முடிவெடுக்க யோசித்துக் கொண்டிருப்பவர்கள், ஒவ்வொரு முறையும் வாக்குச் சாவடிக்குச் செல்லாமல் இருப்பவர்கள் என்று குறிப்பிட்ட சதவிகிதம் யோசித்தாலே போதுமானது.

ஆனாலும் சீமான செய்ய வேண்டிய வேலையின் பாதி அளவை ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தங்கபாலு செய்து முடித்து விட்டார். 

காரணம் காந்திஜியின் தண்டி யாத்திரையில் கலந்து கொண்ட வழித்தோன்றலான தங்கபாலு மனைவி ஜெயந்திக்கு இந்த முறை சீட்டு கிடைத்துள்ளது. தங்கபாலூவின் கைபேசியை தூக்கிக் கொண்டு வரும் தாமோதரனுக்கும், கார் கதவை திறந்து விடும் சிவலிங்கம் போன்ற தியாகச் செம்மல்களுக்கு சீட்டு கிடைத்துள்ள காரணத்தால் இப்போது தங்கபாலு வசிக்கும் வீட்டு சந்துக்கே கூட காவல் போட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். 

ஆனால் இவர்களை விட முக்கியமான ஒரு பிரமுகர் உண்டு. 

கிருஷ்ணகிரி வேட்பாளர் ஹசீனா சையத்.  இவர் செய்து கொண்டிருந்த தொழில் தங்கபாலுவின் தொலைக்காட்சியில் அழகுக்கலை நிகழ்ச்சியை வழங்குவது.  

ஆகா புல்லரிக்குது. 

தங்கபால் காங்கிரஸ்க்கு பால் ஊற்றியதற்கு நன்றிங்கோ.

இந்த காணொளியை பகிர்ந்து கொண்ட தெகா மற்றும் ராஜாகீர்த்திக்கு நன்றி.



27 comments:

Ashwin Ji said...

//ஆனாலும் சீமான செய்ய வேண்டிய வேலையின் பாதி அளவை ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தங்கபாலு செய்து முடித்து விட்டார். //

Everyone has its own waterloo. For TN Congress it is Thangabaloo. :)))))

Thekkikattan|தெகா said...

முதலில் காக்கவைத்ததிற்கு மன்னிக்க!

போட்டிருக்கும் எண்களை ஆர அமர படித்துப் பார்த்தால் கண்ணைக் கட்டுது!

பெரும் கம்பெனிகளுக்கும், முதலாளிகளுக்கும் கொடுக்கும் விலக்குகளை அப்படியே விவாசாயிகளுக்கு பெருமளவில் கொடுத்து, அவர்களின் பிழைப்பிற்கு நல்ல வழி செய்து கொடுத்தால் எப்படி இருக்கும்...

ம்ம்ம், எகிப்து பொருளாதாரம் போன அதே வழிதான் நாமும் போய்க் கொண்டிருக்கிறோம். பெரிசு பெரிசா கட்டடம் நிக்கும், ஆனா பணம் எங்கே போயி சேரணுமோ அங்கே போயி அடையாது.

காங்கிரஸ் மூட்டையை கட்டினா சரி, இந்திய -இத்தாலி(தயாரிப்பு) இளைஞர் தமிழக இளைஞர்களுக்கு எதையோ ஊட்டி வளர்க்கிறாராமா? செங்கல் சுமக்க சூலைக்கு போனாராமே திரும்ப வந்துவிட்டாரா? நல்ல அழகு, அதுக்கே ஓட்டுப் போடலாம்... ;-)

ராஜ நடராஜன் said...

//ஆனாலும் சீமான செய்ய வேண்டிய வேலையின் பாதி அளவை ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தங்கபாலு செய்து முடித்து விட்டார். //

தமிழக காங்கிரஸ்காரர்களே காங்கிரஸ் சார்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்களா?

ஹசன் அலின்னு ஒரு பீசு இருக்குது.அதையும் சேர்ந்து கவனிக்கனும் ஜோதிஜி!

தமிழ்மலர் said...

வியாபாரத்துக்காக வந்த பிரிட்டீசு கம்பனியை எதிர்த்து தான் இந்தியா சுதந்திரம் பெற்றது. சுதந்திர இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்த பன்னாட்டு கம்பனிகள் இப்போது 30 சதவீத நாட்டை திருப்பமுடியாத குத்தகைக்கு எடுத்துவிட்டன. நம்ம நாட்டை ஆளும் சனநாயக தியாகிகளுக்கு வரிசையில் நின்றுவேறு வாக்கு செலுத்த வேண்டுமா?

நான் இதுவரை வாக்கு செலுத்தியது இல்லை. இந்திய சனநாயக முறைகளை சீர்படுத்தும் வரை இனிமேலும் வாக்கு செலுத்தபோவது இல்லை.

எங்கள் ஊர் அட்டப்பாடியில் ஆசிவாசி மக்கள் இப்படி சொல்வார்கள் : வஞ்சனை இல்லாமல் நாலுபேருக்கும் நாலுமுறை பொத்தனை அமுத்தினேன் என்று. ஆதிவாசி மக்கள் மட்டுமல்ல 60 சதவீத மக்களுக்கு தேர்தல் எப்படி நடக்கிறது என்பதே தெரியாது.

சின்னத்தை மட்டும் நினைவில் வைத்து யாருக்கு ஒட்டுபோடுகிறோம் என்றே தெரியாமல் ஓட்டுப்போடும் இந்த கேளிகூத்து தேர்தலை புறக்கணிப்போம்.

vinthaimanithan said...

பதிவுல நீங்க சொல்லி இருக்குற டேட்டா எல்லாம் வயித்தை எரிய வைக்குது! வழக்கத்தை விட சூடு, காரம் அதிகமாவே இருக்கு. பார்க்கலாம், திமுக, அதிமுக ரெண்டு கருமாதில எது வேணா வரட்டும். ஆன தமிழனுக்கு சூடுசொரணை, உப்பு போட்டு சோறு திங்கிரவனா இருந்தா இந்த தடவை காங்கிரஸ் எல்லா தொகுதிகள்லயும் தோற்கும். அப்டி இல்லன்னா தமிழன்னு பெருமையா சொல்லிக்கிட்டு ஒரு மசுத்தைக்கூட பிடுங்கிப்போட தமிழ்நாட்டுத் தமிழனுக்கு அருகதை இல்லாம போயிடும்

Unknown said...

63 மட்டும் இல்ல,, ஒட்டு மொத்த கான்கிரஸ் காட்சியையும் அழித்தால்தான் இந்தியா உருப்படும்..

கோவி.கண்ணன் said...

//ஆனாலும் சீமான செய்ய வேண்டிய வேலையின் பாதி அளவை ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தங்கபாலு செய்து முடித்து விட்டார்//

காங்கிரஸ் தேர்தலில் மண்ணைக் கவ்விய பிறகு தோல்விக்கானக் காரணங்களை காங்கிரஸ் பதிவர்கள் கவுரவமாகச் சொல்லிக் கொள்ள நீங்களே டிப்ஸ் அள்ளிக் கொடுக்கிறீர்கள் :)

தாராபுரத்தான் said...

வரவேற்புங்கோ...கலக்குங்க..ஒரு இடத்தில் வெற்றி பெற்றாலும் நமக்கு தோல்விதான்..

Bibiliobibuli said...

தேர்தலோட நீங்களும் பிசியாகிட்டீங்க போல. :)நடத்துங்க, நடத்துங்க. உங்க சேவை நாட்டுக்குத் தேவை. தாராபுத்திரன் அவர்கள் சொன்னதை வழிமொழிகிறேன். காங்கிரஸ் ஒரு இடத்தில் வென்றாலும்.......! ம்ஹீம் ........!

Anonymous said...

திமுகவுக்கு வோட்டுப் போடுறதா.. அதிமுகவுக்கு வோட்டுப் போடுறதா எனக் குழப்பமா? கவலையை விடுங்கள்... காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் அதிமுகவுக்கு போடுங்க.. தேமுதிக நிற்கும் தொகுதிகளில் திமுகவுக்குப் போடுங்க .. காங்கிரஸும் தேமுதிகவும் ஒரே தொகுதியில் நின்றால் சுயேட்சசைக்குப் போடுங்க .... திமுகவும் - அதிமுகவும் நிற்கிற தொகுதி தான் இப்போ சிக்கலே ? அதுக்கும் ஒரு டெக்னிக் இருக்கு. இந்த தொகுதியில் நிற்பவர் ஏற்கனவே எம் எல் ஏவாக இருந்திருந்தால்.. அவர்களுக்குப் போடாமல் புதுசா யாருக்காவது போடுங்க... புதுசா யாரும் இல்லையா. கண்ணை மூடிட்டு எதோவொரு பட்டனை அமுக்கிட்டு வாங்க பாஸ் !!! தேர்தலாம் தேர்தல் மக்களும் கொஞ்சம் அரசியலில் விளையாடினாங்கனா ... அப்போத் தான் நம்மளைக் கண்டும் பயப்படுவானுக பயப்புள்ளைக !!!

தமிழ் உதயம் said...
This comment has been removed by the author.
தமிழ் உதயம் said...

இங்கே பதிவுலக சிந்தனைகள் இப்படி. பாமரர்களின் சிந்தனை எப்படி உள்ளது என்று அறிவீர்களா. சீமானை தமிழகத்தில் எத்தனை பேருக்கு தெரியும். அதை உணர்ந்து தான் அவரே ஒதுங்கி இருக்கிறாரோ. இன்னும் பத்திரிகை ஊடகம் மாத்திரமே வெகுஜன ஊடகமாக உள்ளது. அவர்களால் செயற்கையான ஒரு அலையை உருவாக்க முடியும்.

'பரிவை' சே.குமார் said...

தமிழக காங்கிரஸ்காரர்களே காங்கிரஸ் சார்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்களா????

http://rajavani.blogspot.com/ said...

நிறைய விசயங்களின் அறிமுகம். தேர்தல் நேரத்தில் திட்டமிட்ட பதிவுகள் மிக சரியாய் காய் நகர்த்துகிறீர்கள் அன்பின் ஜோதிஜி வாழ்த்துகள்.

நிலவு said...

செத்த பாம்பை அடிக்க ஏங்க மெனக்கெடுறீங்க‌

மாயாவி said...

தமிழ் ஈன தலைவருடன் இருந்து இருந்து மனைவி துணைவி வகையறாவில் தங்கபாலு மனைவிக்கும் அவர் தம் _________க்கும் வாங்கி கொடுத்துள்ளார் சீட்டு.

ஹேமா said...

ஜோதிஜி...இப்பல்லாம் எல்லாரோட பதிவுகளுக்கும் ஓட்டு மட்டும்தான்.பெரியவங்களெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காங்க.இதில !

Unknown said...

@தமிழ்மலர் said...
ஒரு பத்திரிக்கையாளர் இப்படி பேசுவீங்கன்னு எதிர்பார்க்கலை....
தேர்தல் புறக்கணிக்க வேண்டாம், வாக்களியுங்கள்,
பிடிக்கலையா 49 0 மூலம் என் ஓட்டு யார்க்கும் இல்லைனு சொல்லுங்க...
//..நான் இதுவரை வாக்கு செலுத்தியது இல்லை. இந்திய சனநாயக முறைகளை சீர்படுத்தும் வரை இனிமேலும் வாக்கு செலுத்தபோவது இல்லை. ..//

அதை விடுத்து இப்படி சொல்லுவது பொறுப்பல்ல..
சனநாயக முறையை யார் திருத்துவர்? ஓட்டளிகவில்லைன
நீங்க கள்ள ஓட்டுபோட வழி வகுக்குறிங்க.. அப்புரம் அடுத்தவங்களை சுட்டிகாட்ட உங்களுகளுக்கு தகுதியில்லாமல் போய்விடும்...


நீங்களும் நானும் செய்யவேண்டியதும் இருக்கு. நமக்கு தெரிந்த அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்துவோம்.நாமும் தவறாது வாக்களிப்போம். இந்த முறை யாருக்கேனும் வாக்களீகனும் அவ்வளவே. அடுத்த முறை நாம் வாக்களித்த , வாக்களிக்க மறுத்த கட்சி செயல்பாட்டை அலசி , தவறாது வாக்களிப்போம். இப்படி செயல்பட்டல் எதிர் காலத்தில் குறைதது 99% வாக்கு பதிவு நிச்சயம். குழப்படி செய்பவர் தொற்பதும் நிச்சயம்.. செயல்படுத்த நீங்க ரெடியா ?

இதை பற்றி ஒரு பதிவு போடுங்க...
அதாவத் ...நமக்கு தெரிந்த அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்துவோம்.நாமும் தவறாது வாக்களிப்போம்.

Unknown said...

ஓட்டுரிமை இருக்கும் அனைவரும் அதை செலுத்த
பதிவுபோடுங்க ஜி

அதாவத் ...நமக்கு தெரிந்த அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்துவோம்.நாமும் தவறாது வாக்களிப்போம்.

நிலவு said...

ஓட்டுப் போட்டால் சமூக மாற்றம் நடக்குமா காமடி பண்ணாதீங்க‌

கண்ணகி said...

வேட்பாளர்கள் பட்டியல் எரிச்சல் ஊட்டுகிறது...

தமிழ்மலர் said...

திரு. வினோத் உங்கள் மாற்று கருத்துக்கு நன்றி.

ஆனாலும் எனக்கு வாக்கு செலுத்த வரிசையாய் கால்கடுக்க நிற்பவரை பார்த்தால் சிரிப்பு தான் வரும்.

வாக்கு செலுத்துவது ரகசியமாக இருக்க வேண்டும் என்பது விதி. 49 ஓ ரகசியமாகவும் எளிமையாகவும் இல்லையே. அப்புறம் நீங்க என்ன தான் மாங்கு மாங்குனு 49 ஓ போட்டாலும் உங்க ஓட்டு கள்ள ஓட்டாய் பதிவாகிவிடும். 49 ஓ மாயமாகிவிடும்.

வாக்கு சாவடியில் பூத் முகவர்கள் அடிக்கும் கூத்தை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். இந்த முறை உற்று பாருங்கள். நன்றி.

Unknown said...

நண்பரே நெஞ்சம் பதைக்கிறது அந்த காணோளி... இறுதி காட்சிகள்...இந்தியா எனும் காட்டேறிதேசம் ... இப்படியான படுபாதகமான செயலுக்கு துணைநின்று பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்பதாக சொல்வது.. கேவலத்திலும் படு கேவலம்...இனி வரும் காலங்களில் இந்த தேசத்தலைவர்கள் எவரேனும் கொடும் மரணம் நேரிட்டு இறந்தால் இனி நான் உளமாற மகிழ்வேன்.

ஜீவன்சிவம் said...

//எச்சில் பொறுக்கிகள் தங்கள் மேல் விழும் எலும்புத் துண்டுகளை கவ்வ தயாராக இருப்பதால் நம் இந்தியாவை இன்று பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாகவே இப்போதுள்ள மத்திய அரசாங்கம் மாற்றியுள்ளது//

சத்தியமான உண்மை, மக்கள் புரட்சி ஓன்று தான் தீர்வு

Anonymous said...

alagu

வீரபத்ரன் said...

ஏய்யான்சோதி 63 நாயன் மாரை யார்னு தெரியுமா?அவர்களை பற்றி என்ன தெரியும் உமக்கு?என்ன தெனாவெட்டு இருந்தா இந்த திருட்டு <<<<பசங்களை 63 நாயன்மாரோடு ஒப்பிடுவே?உன் லுல்லாவை கட் பண்ணி காக்காய்க்கு போட்டாலும் தப்பில்லை,இல்லாட்டி உன்னை கல்லில் கட்டி கடல்ல போட்டாலும் தப்பில்லை,அபிஷ்டு.கவர்ச்சி தலைப்பு கைக்க நீ என்ன தினமலரா,இல்ல சன் டிவீயா?ஒழுங்கா எழுது,நாத்திகம் எழுது வேணாம்னு சொல்லல,யாரையும் நோகடிக்காம நாத்திகம் வித்த்துக்கோ!!!

ஜோதிஜி said...

வீரபத்ரன் தொடர்ந்து படித்துக் கொண்டு வர்றீங்க. ஒரு ரவுண்டு வந்தவுடன் சொல்லுங்க. ஓரளவுக்கு எல்லா தலைப்புகளையும் படித்து முடிக்கும் போது என்னைப் பற்றி தாங்கள் வைத்துள்ள அனுமானம் எப்படி இருக்கு என்று பார்க்கின்றேன்.

காத்திருக்கின்றேன்.