Saturday, January 22, 2011

வந்துட்டான் சீமத்துரை.

ஒரு தனி மனிதன் தன்னுடைய வாழ்க்கைக்காக ஏதோவொரு துறையைச் சார்ந்து தனது இருப்பியலை தக்க வைத்துக் கொளகின்றான். உயிர் வாழ உணவு.  நாகரிக வளர்ச்சி வந்த பிறகு மானத்தை மறைக்க உடை.   ஆனால் இதைப் போல மற்றொன்றுக்கும் முக்கியத்துவம் உண்டு.  அது தான் உறக்கம். இந்த உறக்கம் உண்டு கொழுத்த போதும் வரும். ஒரு வேளைகூட உண்ணாமல் இருந்தாலும் பசி மயக்கத்திலும் வரும். ஆனால் இந்த உறக்கம் ஒரு ஜாதிக்கு மட்டும் வருமா? என்பது கேள்விக்குறியே.

மிகப் பெரிய தொழில் அதிபரும் சரி, பரம ஏழையும் சரி அவரவர் நிலையில் ஏதோவொரு சமயத்தில் தங்களை மறந்து தூங்க வாய்ப்புண்டு.  ஆனால் அரசியல், ஆட்சி, அதிகாரம் போன்றவற்றை தக்க வைத்துக் கொள்ள வாழ்ந்து கொண்டுருப்பவர்களை ஒரு கணப்பொழுது யோசித்துப் பாருங்கள். தூங்கும் நேரத்தில் கூட தங்களுடைய எதிரிகளின் எண்ணிக்கை எத்தனை? என்பதையே தான் யோசித்துக் கொண்டுருக்கக்கூடும். 


அது மகனா? மருமகனா? பேரனா? அடுத்த நிலையில் இருக்கும் அமைச்சரா? தனக்குப் பிறகு யார்? இறக்கும் வரையிலும் இந்த பதவியை தக்க வைத்துக் கொளவ்து எப்படி? என்று சுற்றியிருக்கும் அத்தனை பேர்களுமே அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களுக்கு எதிரியாகத் தான் தெரிவார்கள். அது அந்தக் காலத்து மன்னராக இருந்தாலும் சரி அல்லது இன்றைய அரசியல் வியாதியாக இருந்தாலும் சரி.   கூட்டிக் கழித்துப் பார்த்தால் வரலாற்றுக் குறிப்புகள் இப்படித்தான் சொல்கின்றது.

இராமநாதபுரம் என்றொரு மாவட்டம் முறைப்படி ஆங்கிலேயர்கள் உள்ளே வரும் போது சூடுபிடிக்கத் தொடங்கினாலும் இதற்கு முன்னால் இந்த மாவட்டத்தை கட்டியாண்டவர்களின் கதைகள் அத்தனையும் படிக்கும் போதே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இன்று இவர்களும் இல்லை.  இவர்கள் வளர்த்த "பேர் சொல்லும் பிள்ளைகளும்"  இல்லை. " நான் தான் இந்த ராஜ்யத்தை ஆளப் பிறந்தவன் " என்று சொன்ன அத்தனை பேர்களை புதைத்த இடத்தை இன்று எத்தனை பேர்கள் ப்ளாட் போட்டு விற்று இருப்பார்களோ?

" வடக்கில் இருந்து வந்த இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் மதுரையை சூறையாடினார்கள், விலைமதிப்பில்லாத செல்வத்தைக் கொண்டு சென்றார்கள். இந்துக்களின் வழிபாட்டுத்தலங்களை இடித்து தள்ளினார்கள் " என்று வரலாற்றில் போகிற போக்கில் இந்த இஸ்ஸாமிய படையெடுப்பாளர்களைப் பற்றி ஏதோவொரு சமயத்தில் படித்து இருப்போம்.  ஆனால் இஸ்லாம் என்ற ஒரே மதத்தை சார்ந்து இருந்தாலும் அவர்களுக்குள்ளும் இருந்த இந்த அதிகார வெறியும் பதவி மோகமும் எந்த அளவிற்கு இருந்தது என்பதை வரலாற்றுக் குறிப்புகளை இந்த சமயத்தில் லேசாகத்தான் நாம் பார்க்க முடியும். காரணம் இது இந்திய வரலாறு அல்ல.  ஒரு மாவட்டத்தின் தல புராணம். அவர்கள் இப்போது தப்பி பிழைத்துப் போகட்டும்.

பாண்டிய மன்னர்களின் குடும்ப உள் நாட்டு குழப்பங்கள் என்று தொடங்கி சுற்றிலும் உருவான ஏராளமான எதிரிகள் புடைசூழ வாழ்ந்து கொஞ்சம் கொஞசமாக தங்கள் ஆதிக்கத்தை இழந்து கொண்டுருந்த போது உள்ளே வந்தவர் தான் பாமினி. இவரும் திடீர் என்று முளைத்து வரவில்லை.  அளவற்ற கருணை உள்ள அல்லாவை வணங்கிக் கொண்டு உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்து வளர்ந்தவர் தான். 

" டெல்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சி காலத்தில் தக்கான பகுதிக்கு கவர்னராக நியமிக்கப்பட்டவர் அலாவுதீன் ஹாசன் பாமினி ஷா என்பவர் ஆவார். .தாஜிய-பாரசீக வம்சத்தில் வந்த இவர் 1347ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் நாள் டெல்லி சுல்தானை எதிர்த்து, தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை தனி சுதந்திர அரசாக அறிவித்தார். இதன் பிறகு 1425ம் ஆண்டு வரை அஸன்பாத் (இன்றைய குல்பர்கா) நகரை தலைநகரமாக கொண்டு பாமினி சுல்தான்கள் ஆண்டு வந்தார்கள் ".

இப்படித்தான் இவரின் தலவரலாறு தொடங்குகிறது. 1316 இல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்ஜி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இஸ்லாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் பலவீனப்படுத்தி இஸ்லாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இஸ்லாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விஜயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.  ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விஜயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்து அளிக்கப்பட்டது.

காலம் எப்போதும் போல வேடிக்கை பார்த்துக் கொண்டுருந்தது. 

அரியணைக்கு ஆசைப்பட்டவர்களும், அடுத்தவனை அழித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்களும், வாளால் இரத்த அபிஷேகம் செய்து வந்த படையெடுப்பாள்ர்களையும் பார்த்து வந்த இந்த பூமியில் இறுதியில் வந்தவர்கள் ஆங்கிலேயர்கள்.  

மதன் சொன்ன "வந்தார்கள் வென்றார்கள்" என்பது போல ஒவ்வொரு படையெடுப்பாளர்களும் தாங்கள் நினைத்து வந்தது போலவே வென்றார்கள்.  ஆனால் நீடித்து இருந்தார்களா? என்பதை உண்மையான சரித்திரக் குறிப்புகளை படிக்கும் போது இதற்கு தானா ஆசைப்பட்டாய்? என்ற கேள்வியும் வருகின்றது. ஆனால் உண்மையான நம்முடைய கதாநாயகன் வெள்ளைக்காரதுரைகளைப்பற்றி படிக்கும் போது ஆச்சரியம், சாகசம், பிரமிப்பு, சாதுர்யம், விவேகம், பொறுமை, பிரித்தாளும் சூழ்ச்சி போன்ற அரசியல் பாடத்திற்கு தேவைப்படும் அத்தனை சமாச்சாரங்களும் வண்டி வண்டியாக கொட்டிக் கிடக்கிறது.  இந்த பக்கி பய புள்ளைங்க வந்த பிறகு தான நாம் பார்க்கப் போகும் இந்த இராமநாதபுர வரலாற்றின் இடைவேளை தொடங்கி முக்கிய படத்திற்கான கதைக்குள் நுழைகின்றது. 

இந்த சமயத்தில் இந்த வெள்ளைக்கார பயலுகளைப் பற்றி சிறு குறிப்பு பார்த்துவிடலாம். 


காரணம் இன்று வரையிலும் " வெள்ளையர்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்.  காந்தி தாத்தா போராடி நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் " என்ற கேள்வி பதிலுக்கு பொட்ட மனப்பாடமா உருவேத்திக்கிட்டுப் போய் வாந்தி எடுத்து வாத்தியார்க்கிட்ட அடிவாங்காம தப்பிச்சு வந்துருப்போம்?  

ஏன் இவர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள்?

14 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் வியாபாரிகள் தங்களுக்குத் தேவையான மிளகு லவங்கம், ஏலக்காய் போன்ற பொருட்களை டச்சு வியாபாரிகளிடம் வாங்கி விற்றுக் கொண்டுருந்தனர்.  ஒரு நாள் டச்சு வியாபாரிகள் திடீரென்று மிளகின் விலையை ஒரே சமயத்தில் ஐந்து ஷில்லிங் (அப்போதைய மதிப்பில் மூன்றே முக்கால் ரூபாய்) விலையை ஏற்றி " இஷ்டம்னா வாங்கு... இல்லைன்னா நடையைக் கட்டு " என்று விரட்ட வெள்ளைக்கு கோபம் பொததுக் கொண்டு வர " இனிமே உங்க சங்கநாத்தமே வேண்டாம் " என்று முடிவு செய்து 24 லண்டன் வியாபாரிகள் ஒன்று சேர்ந்து 1549 செப் 24 அன்று 75000 பவுண்டு மூலதனத்துடன் ஒரு நிறுவனத்தை தொடங்கினர். 

இதே ஆண்டு டிசம்பர் 31ந் தேதி பிரிட்டிஷ் முதலாம் எலிசபெத் இந்த நிறுவனம் நன்னம்பிக்கை முனைக்கு அப்பால் கீழ்திசை நாடுகளுடன் வியாபாரம் செய்யலாம் என்று அனுமதி வழங்க இவர்களின் நல்ல நேரம் கடலைத் தாண்ட வைத்தது.

1600 ஆகஸ்ட் 24 ஹெக்டர் எனும் பெயர் கொண்ட 500 டன் எடையுள்ள பிரிட்டிஷ் கப்பலில் வில்லியம் ஹாக்கின்ஸ என்கிற மாலுமி பம்பாய்க்கு வடக்கே உள்ள சூரத் துறைமுகத்தில் கரை இறங்கினார்.  அப்போது இந்தியாவில் ஆட்சி புரிந்து கொண்டுருந்தவர் மொகலாய சக்ரவர்த்தியான ஜஹாங்கீர். வெள்ளைத் தோலைப் பார்த்ததும் மன்னரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு வழிகாட்டியாய் மாற பயபுள்ளைங்களுக்கு சுக்ர திசைகளும் இந்தியாவிற்கு சனி திசையும் அப்போது தான் தொடங்கியிருக்க வேண்டும்.

அன்றைக்கு தொடங்கிய ஆட்டம் தான் இறுதி வரைக்கும் " உன்க்கும் பெப்பே. உங்கப்பனும் பெப்பேன்னு " கதை திரைக்கதை வசனம் எழுதத் தொடங்க படிப்படியாக தங்களை வலுப்படுத்திக் கொண்டு வந்த வெள்ளையர்கள் 1639 இல் ஆங்கிலேயர்கள் மதராஸில் கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவிய பிறகு தான் தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் ஆட்டம் பாட்டம் என்றொரு புதிய அத்தியாயம் தொடங்கியது. 


வெள்ளையர்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம் போல.  அப்போது தமிழ் நாட்டுக்குள் ஆட்சியில் இருந்த சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி ( தமிழர்களுக்கு அன்று முதல் இன்று வரைக்கும் புதிதா என்ன?) அவர்களைப் பிரித்தாண்டு அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தை செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 

ஆங்கிலேயர் அதிகாரத்தை தமிழ்நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இந்த காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர்.மாவீரன் அழகுமுத்துக்கோன், மருதநாயகம், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர், பூலித்தேவன். வீரன் சுந்தரலிங்கம், வெள்ளையன், கந்தன் பகடை, ஒண்டி வீரன், வெண்ணி காலடி தீரன் சின்னமலை, கட்டன கருப்பணன் போன்றோர் வெள்ளையரை எதிர்த்து போரிட படைகளை தலைமையேற்று நடத்தினர்

23 comments:

ஜோதிஜி said...

முதல் வரியில் வந்த எழுத்துப் பிழைக்கு என்னுடைய வருத்தமும் சுட்டிக் காட்டிய தெகாவுக்கு என் நன்றியும்.

எம்.எம்.அப்துல்லா said...

அருமை அருமை!

Chitra said...

விரிவான ...தெளிவான விளக்கம். பாராட்டுக்கள்!

Thekkikattan|தெகா said...

காலச்சக்கரத்தைப் பொருத்தும், அதனூடான இருத்தலியம் பற்றிய ஏற்றமும்/வீழ்ச்சியுமென்பது எனக்கே உண்டான அலாதியான தளமிது! தூக்கமே இல்லாமல் ஒரு பொருளற்ற ’தனது’ சாம்ராஜியத்தை கட்டிக் கொடுத்துவிட்டு எலும்பு கூடுகளாக சிதைமாறிக் கொண்ட மனிதர்களின் மீதாக இன்றைய நம் வீடு நிற்கிறது. அறிந்தும் நாம் அடிக்கும் அலுச்சாட்டியத்திற்கு வரலாறு மற்றுமே கண் முழித்து சாட்சியாக இருக்கிறது...

கட்டுரையின் மூலமாக ‘காலச் சுழிப்பு(டைம் ட்ராவல்) செய்வது எனக்கு பிடித்தமான ஒன்று... அப்படியே கூட்டிட்டு போங்க. அப்பப்போ வந்து பேசுறேன் ;-)

Thekkikattan|தெகா said...

14 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் வியாபாரிகள் தங்களுக்குத் தேவையான மிளகு லவங்கம், ஏலக்காய் போன்ற பொருட்களை டச்சு வியாபாரிகளிடம் வாங்கி விற்றுக் கொண்டுருந்தனர்.//

நான் மத்திய கிழக்கு நாடுகளில் வசித்த அரபியர்கள் அல்லவா ஸ்பைஸ் மற்றும் ஏனைய நறுமண வஸ்துகளை கிழக்காசிய நாடுகளிலிருந்து பெற்று வெள்ளையர்களிடம் விற்றுக் கொண்டிருந்ததாக படித்த ஞாபகம். ஆனா, டச்சுக்காரர்கள் மிக நீண்ட நெடிய காலம் கேரளா பக்கமா வந்துட்டு போனதிற்கு நிறைய சான்றுகள் இருக்கு... அதை வைச்சுப் பார்த்தா நீங்க சொல்லுறதும் சரியாத்தான் இருக்கும்.

இருந்தாலும் ஒத்தை கப்பல்ல வந்து, நம்ம பூமியில மொச்சுக் கிடந்த அரசியல படிச்சிருக்கான் பாத்தியளா? நிறம், இனம், ஜாதின்னு அங்கேதான்யா இருக்கு அவன் புத்திசாலித்தனம்!

ஹேமா said...

ஜோதிஜி...திரும்பவும் ஒரு வரலாறு !

Rathnavel Natarajan said...

Informative Blog.

suneel krishnan said...

ஒரு பக்கம் ஒவ்வொரு படை எடுப்புகளும் சுரண்டி கொண்டு சென்றாலும் ,மறு பக்கம் ஏதோ ஒரு விதத்தில் அவை நம்மை செறிவூட்டவும் செய்கின்றன .இந்தியாவின் இன்றைய மரபணு கலப்புகள் மிக பெரிய சான்று ,பலமும் கூட .

தமிழ் உதயம் said...

உலகின் வரைப்படமே, பல்லாயிரம் ஆண்டுகளுக்கொரு முறை மாறும்போது, சாமானியர்களின் தேசமோ, சாம்ராஜ்யமோ நிரந்தரமானதா. எல்லைகோடுகள் மாறக்கூடியவையே. சூரிய அஸ்தமனத்தையே காணாத தேசம் என்று பெருமை பேசிய பிரிட்டன், இன்று தனது தேசத்தையே காக்க முடியாமல் தீவிரவாதத்துடன் மல்லுக்கட்டுகிறது. எல்லாமே தெரிந்திருந்தும், எல்லா காலத்திலும் ஏதாவது ஒரு நாடு, ஏதாவது ஒரு மதம் வேலையை காட்டுகிறது. இயற்கையின் விளையாட்டு என்பதை தவிர வேறென்ன சொல்ல.

உமர் | Umar said...

//அப்பப்போ வந்து பேசுறேன் ;-)//

நான் வாய் பாக்குறேன். :-)

http://rajavani.blogspot.com/ said...

கால பின்னோக்கிய பயணத்தில் அன்பின் ஜோதிஜியுடன்...

Anonymous said...

அய்யா, இதில் மருதனாய‌கம் பற்றி மாறுபட்ட கருத்து உண்டு. அவர் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக இருந்தார் என்று.

சி.பி.செந்தில்குமார் said...

>>>>ஒரு தனி மனிதன் தன்னுடைய வாழ்க்கைக்காக ஏதோவொரு துறையைச் சார்ந்து தனது இருப்பியலை தக்க வைத்துக் கொளகின்றான்.

ooppaningklayee kool adippadhu eppadi?ஓப்பனிங்கலயே கோல் அடிப்பது எப்படி?

அனுகவும்.. ஜோதிஜி

Unknown said...

போன அத்தியாயத்தின்போதே உங்களக்கு பேச வேண்டும் என்றிருந்தேன். இன்றைக்கு பேசுகிறேன்.

விவரிப்பு நாம் ராமநாதபுர சீமையில் இருப்பதைபோன்ற உணர்வை கொண்டு வருகிறது. சரித்திரத்தை எழுத ஆழ்ந்த வாசிப்பு இருக்க வேண்டும், உங்கள் வாசிப்பு என்னை ஆச்சர்யப்படுத்துகிறது.

ஜோதிஜி said...

மருதனாய‌கம் பற்றி மாறுபட்ட கருத்து உண்டு. அவர் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக இருந்தார்

யாருப்பா இது. இப்பத்தான் ஒரு பஞ்சாயத்து முடிஞ்சு இருக்கு? அதுக்குள்ள இன்னொன்று?

வேண்டாம் ராசா? வேண்டாம் ராசா?

அப்புறம் கும்மியாரே?

ஏற்கனவே ஹாலிவுட் பாலா அடிக்கடி நமக்கிட்ட கலாய்க்கும் ஒரு வாசகத்தை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகின்றேன்.

இப்படி எழுதினா நாங்க எப்டி கும்மியடிக்கிறது?

ஆக மொத்தம் உங்கள் பராக்கு பாக்க வச்சுட்டேன் பாத்தீயளா?

இல்லை செந்தில் இன்னும் ஆழ்ந்து போக வேண்டும். ஆனால் நம்ம மக்கள் தாங்க மாட்டார்கள்.

வாங்க செந்திலூ கோலா? அதெல்லாம் நம்ம கும்மியார் செய்யுற அற்புதம். அதப் போய் நமக்கிட்ட வந்து? என்த்தப் போங்க?

தெகா

ஆழ்ந்த வாசிப்பினால் உங்களை விட ரெண்டு பேரு முந்திட்டாங்க போலிருக்கே?

ஹேமா இருங்க உங்க வீட்டுக்கு வர்றேன்.

தவறு

சக்கரத்தில் அமரும் போது கரம் சிரம் புறம் நீட்டக்கூடாது என்று அப்துல்லா சொல்லியுள்ளார். பாருங்க அருமை அருமை என்று நைஸாக நழுவிட்டார்.

என்ன தமிழ் உதயம் இயற்கையின் விளையாட்டா? நம்ம பயபுள்ளைங்க விளையாட்டு காரணமாகத்தானே நம்ம புஷ் கூட செருப்படி வாங்கினார்.

உங்கள் சிலாகிப்புக்கு நன்றி ரத்னவேல். தகவல் தேவையெனில் தொர்பு கொள்ளவும்.

வணக்கம் சித்ரா

திருநாவுக்கரசு பழனிசாமி said...

அருமை..தொடர்க..தொடர்கிறேன்

எஸ்.கே said...

ஜஹாங்கீர் இவர் அக்பரின் மகனாவார். இவரின் மகன் ஷாஜகான். மேலும் இவர்தான் சலீம் (அனார்க்கலி காதலர்)!

எஸ்.கே said...

ஒரு வித சுவாரசியத்தோடு செல்கிறது தொடர்!

சேக்காளி said...

//காந்தி தாத்தா போராடி நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்//
அவர தந்தை ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.நீங்க தாத்தா ன்னு சொல்லுதியளே.

சென்னை பித்தன் said...

மிக விளக்கமாக,ஆராய்ச்சி பூர்வமாக,ஆர்வத்தைத் தூண்டும் விதமாக இருக்கிறது பதிவு.

ஜோதிஜி said...

சேக்காளி

சிரித்தேன். என் வயதுக்கு அவர் தாத்தா தானே,

நன்றி சென்னை பித்தன். எஸ்கே. ஆகா நீங்க ஒரு பக்கவாட்டில் ஒரு ரூட்டைப் போட்டு கொடுக்குறீயளே?

நன்றி திருநாவுக்கரசு.

Anonymous said...

நல்ல பகிர்வு ஜோதிஜி. பள்ளிக் காலத்தில் நீங்கள் சொன்னது போல் ஒப்பேற்றி விட்டு, இப்பொழுது நல்ல தூக்கத்தில் கண்ட கனவு நினைவுக்கு வருவது போல் ஒரு உணர்வு. அதிலும் தமிழகத்தை மைய இழையாக வைத்து, வரிசையாக மணிகளை ஒன்றன் பின் ஒன்றாக கோர்த்திருப்பது - அழகு.

மதுரை சரவணன் said...

வராலாறு சொல்லும் உங்கள் இடுகை சிறந்தது என்று..!வாழ்த்துக்கள்