Sunday, December 05, 2010

ராஜீவ் காந்தி மரணத்திற்கு பின்னால் உள்ளவர் சுப்ரமணியசாமியா?

இன்று வரையிலும் ஈழம் தொடர்பான விசயத்தை தமிழ்நாட்டில் பேசுபவர்கள் ராஜீவ் காந்தி படுகொலையை தவறாமல் குறிப்பிடுகின்றனர்.

முன்னாள் அதிகாரி திரு. கார்த்திகேயன் தலைமையில் புலனாயவு குழுவினர் கண்டு பிடித்த உண்மைகள் மற்றும் அதன் எதிர்மறை நியாயங்களான ஜெயின் கமிஷன் கேள்விகள் என்று எத்தனையோ விடை தெரியாத மர்மங்கள் ஏராளமாய் உண்டு. 

இன்று வரைக்கும் ஏராளமான கேள்விகள் இந்த நிகழ்வுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டுருக்கிறது. அதுவே இன்று வரையிலும் பலரின் மனதிலும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

எந்த வகையிலும் நியாயப்படுத்தமுடியாத தமிழகத்திற்கு அறிமுகம் இல்லாத மனித வெடி குண்டு தாக்குதல் எத்தனை கோரங்களை உருவாக்கியதோ அதை விட பல மடங்கு ஒரு இனப் பேரழிவும் நம் முன் தான் நடந்தது. 

நாம் என்ன செய்தோம்? என்ன செய்ய முடிந்தது? . 

இன்று வெற்றிகரமாக புலம்பெயர் தமிழர்களால் "போன மச்சான் திரும்பி வந்தான் புறமுதுகு காட்டி"  என்று ராஜபக்ஷே திரும்பி வந்து விட்டார்.  தமிழ்நாட்டில் இலங்கை தூதராக பணியாற்றி அம்சா சென்னையில் கொடுத்த அல்வா பணியாரம் எதுவும் லண்டனில் செல்லுபடியாகவில்லை. 

தமிழ்நாட்டில் இன உணர்வு என்றால் கிலோ என்ன விலை?  அதுவும் எங்கேயாவது இலவசமாக கொடுத்துக் கொண்டுருக்கிறார்களா? என்று கேட்கும் தமிழர்களை ஒப்பிடும் போது ஐரோப்பிய வாழ் ஈழத்தமிழர்கள் உண்மையிலேயே மகத்தான தமிழர்கள் தான்.  

புலம் பெயர்ந்த தமிழர்கள் கூடிய கூட்டம் என்பது எவராலும் முறைப்படுத்தப் படவில்லை. முறைப்படுத்தப்பட்ட ஒழுங்கு இல்லாமல் அவரவர் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், தங்களின் அன்றாட பணியை விட்டு வீதிக்கு வந்து அஹிம்சை முறையில் போராடி தங்களது எதிர்ப்புகளையும் பதிவு செய்துள்ளனர்.  மொத்த ஐரோப்பிய அமெரிக்கா கனடா வாழ் ஈழத் தமிழர்கள் கூடியிருந்தால் நிச்சயம் ஒரு புதிய மறுமலர்ச்சி உருவாகியிருக்கக்கூடும். அதற்கான முதல் அடி இது என்பதாக எடுத்துக் கொள்வோம்.

இங்குள்ள ஊடகங்களின் அரசியல் சித்துவிளையாட்டுகளைப் போல இல்லாமல் போர்க்குற்றவாளியை வெளிக்காட்டிய மேலைநாட்டு ஊடகங்கள் மகத்தான பணியை செய்துள்ளன.

ராஜீவ் காந்தி படுகொலையால் தான் ஈழத்தமிழர்களுக்கு பிரச்சனை ஆரம்பம் ஆனது.  இந்தியா இனப்படுகொலையை வேடிக்கை பார்த்தது. மறைமுகமாக அத்தனை தொழில் நுட்ப உதவிகளையையும் வழங்கியது என்று லாவணி போல் ஒப்பித்துக் கொண்டுருப்பவர்களுக்கு இந்த காணொளி பயன் உள்ளதாக இருக்கும்.

திருச்சி வேலுச்சாமி அவர்கள் கொடுத்துள்ள காணொளி பேட்டியான ஏழு பகுதிகளையையும் உங்களால் நேரம் ஒதுக்கி பார்க்க வாய்ப்பிருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

இன உணர்வு என்பது பரஸ்பரம் வெளிக்காட்டிக் கொள்வது அல்லது உண்மையான விசயங்களை புரிந்து கொள்ள முயற்சிப்பது. 

ஒன்றை புரிந்து கொள்ள முயற்சித்தாலே நம்மில் இருக்கும் இருட்டுப் பகுதிகள் இயல்பாகவே மாறிவிடும். நாம் மாற்றிக் கொள்ளாத வரைக்கும் இனத்தமிழன் என்பது மாறி இலவசத்தை மட்டும் எதிர்பார்க்கும் தமிழன் என்று வைத்துக் கொள்ளலாம்.

வரலாற்றில் எதிர்மறை நியாயங்கள் தேவையானது தானே?

காணொளியை அனுப்பிய நண்பர் வினோத்க்கு நன்றி.
































34 comments:

துளசி கோபால் said...

உடல்நிலை சரியில்லாமல் இருந்த தலைவரை மேலே அனுப்பிட்டு அவருடைய இடத்தை எடுத்துக்கிட்ட சேதி & வதந்தி ஒரு சமயம் வெளிவந்து அமுக்கப்பட்டது நினைவுக்கு வருது.

இதுவும் பண்டைய சரித்திரங்களில் ஏற்கெனவே நிகழ்ந்தவைகள்தான். பதவிக்காக அவுரங்கஸேப் தன் சகோதரர்களை 'மேலே' அனுப்பிட்டுத் தன் தந்தையை சிறை வைக்கலையா?

ஜோதிஜி said...

துளசி கோபால்

உங்களின் தைரியமான விமர்சனத்திற்கு என் வணக்கம்.

ராஜீவ் காந்தி இறந்த சில நிமிடங்களில் அவர் கொண்டு வந்த பல கோடிகள் அடங்கிய பணப்பெட்டிகள் காணாமல் போய் விட்டது. அதைவிட ஆச்சரியம் சோனியா காந்தி சென்னை வந்த போது அந்த சூழ்நிலை சோகத்தோடு அந்த பண்ப்பெட்டிகள் எங்கே என்று தான் கேட்டார்? என்று தகவல் வந்தது.

மொத்தத்தில் மனங்கெட்ட தலைகளும் மரியாதையான பதவிகளும்

Thekkikattan|தெகா said...

எல்லா காணொளியிம் பார்த்தேன், ஜி! என்னமோ போங்க மனிதனை விட ஒரு மாபெரும் கோர விலங்கினை இந்த அண்டம் முழுக்க தேடினாலும் கிடைக்காதப்போய்...

Bibiliobibuli said...

கடந்த சில நாட்களாக நடந்த எல்லாத்தையும் கவனித்து சாவகாசமா ராஜீவகாந்தியிடமிருந்து தொடங்கி ஈழத்தின் இனப்படுகொலையில் முடித்திருக்கிறீர்கள்.

புலம் பெயர்ந்த தமிழர்களை, குறிப்பாக ஐரோப்பிய தமிழர்களை, பாராட்டியிருக்கிறீர்கள். இந்தியாவில் ராமனின் பாதரட்சைகளை வைத்து பரதன் அரசாண்டான் என்கிற கதையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இருந்தாலும், மறைந்தாலும் ஓர் தலைவர் என்கிற இலகணத்துக்கும், இலட்சியத்துக்கும் சொந்தக்காரர் எங்களை வழிநடத்தவும், வழிகாட்டவும் எப்போதும் வரலாற்றில் இருந்துகொண்டே இருப்பார், ஜோதிஜி.

இந்த காணொளிகளை நான் பார்த்து கொஞ்ச காலம் ஆகிவிட்டது.

ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்தியாவும், தமிழகமும் மீண்டும், மீண்டும் வரலாற்றுப் பிழைகளை செய்கின்றன. கைப்பட கடிதம் எழுதுவது, உண்ணாவிரதமும், மனிதசங்கிலிப் போராட்டமும் மட்டுமே உங்கள் இனத்துக்கான வரலாற்றுப்பங்களிப்பு என்பதை மாற்றிக்காட்டுங்கள். எங்களுக்கும் விடியட்டும்.

நன்றி ஜோதிஜி.

THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
vinthaimanithan said...

ஜோதிஜி... நடுநிலைமை என்பது எல்லா சமயத்திலும் சாத்தியப்படாது... நீங்கள் சுப்புரமணியனை கடுமையாவே விமர்சனம் செய்திருக்கலாம்... இன்னும் கள்ளச்சாமி சந்திராசாமியையும்! அரண்மனைச்சதிகளை அம்பலப்படுத்தும்போது மயிலிறகால் வருடிக் கொண்டிருக்க முடியாது. "எரிதழல் கொண்டுவா தம்பி அண்ணன் கைகளை எரித்திடுவோம்" என்ற பாஞ்சாலிசபத வரிகள் ஞாபகம் வருகின்றன

அது ஒரு கனாக் காலம் said...

அடேங்கப்பா... திருச்சின்னா சும்மாவா !!!!!. ஹார்வர்ட் பல்கலை கழகத்துக்கே சவால்...

உமர் | Umar said...

1991, மே 21, இரவு 10:15 க்கு சுப்ரமணிய சாமி BBC அலுவலகத்துக்கு போன் செய்து ஏதும் முக்கிய செய்தி இருக்கிறதா என்று கேட்டதாக நான் படித்திருக்கிறேன். வேலுச்சாமி அதைப் பற்றி இப்பேட்டியில் ஏதும் குறிப்பிடவில்லை.

--
பெங்களூரில் சிவராசன் தங்கியிருந்த வீட்டிற்கு முன்பணம் கொடுத்தவரை விசாரிக்கவில்லை என்றும் படித்ததாக நினைவு. தெளிவுபடுத்துங்கள்.

--
ராஜீவ், சென்னை விமான நிலையத்தில் இரு வெளிநாட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது, குனிந்து தன்னுடைய ஷூ லேசை கட்டியதை தான் பார்த்ததாகவும், அதனடிப்படையிலேயே, முதலில் ஷூவை வைத்து ராஜீவின் உடலை அடையாளம் கண்டதாகவும், ஜெயந்தி நடராஜன் 1991, மே 22 அன்று தூர்தர்ஷனுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

சுந்தரவடிவேல் said...

இதன் எட்டாம் மற்றும் ஒன்பதாம் பகுதிகளையும் இட்டீர்களென்றால் முழுமையாக இருக்கும். http://www.youtube.com/watch?v=1K4G26NR4Ck&feature=mfu_in_order&list=UL
http://www.youtube.com/watch?v=1gwbteDZlIU&feature=mfu_in_order&list=UL
எல்லாவற்றையும் பார்த்தேன். கலைஞரையும், ஔரங்கசீப்பையும் காட்டி துளசி என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை. இது பதவிக்காக நரசிம்மராவால் செய்யப்பட்ட கொலையென்கிறாரா?
ஜோதிஜி அவருக்குப் பதில் சொல்வது வேலுச்சாமியின் கூற்றுக்கு முரணாக இருக்கிறது. சு.சாமி சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்கும்போது பேரறிவாளன், சாந்தனைப் போன்றவர்கள் 19 ஆண்டுகளாகச் சிறையில் வாடுவது இந்திய நீதிக்கு அவமானம்.

சங்கரியின் செய்திகள்.. said...

ஆஜர் சார்.

http://rajavani.blogspot.com/ said...

அரசியல் படுகொலைகள் பலமான பின்னனி இல்லாமல்
நடைபெறுவதில்லை. குத்திய அம்பை மட்டும் குற்றம் சொல்லி கொண்டுள்ளார்கள் அன்பின் ஜோதிஜி.

Unknown said...

பகுதியாகவோ , முழுமையாகவோ உண்மைகளை தெரிந்து கொண்டாலும் . நாம்மால் என்ன செய்ய முடிகிறது.. பெருமூச்சு விடுவதை தவிற...

ராம்ஜி_யாஹூ said...

this veluchami's videos have came before and circulated. I thought some new news has come

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு அண்ணா.... நிறைய தெரியாத விஷயங்கள்.

Unknown said...

நல்ல பகிர்வு சார்

திருநாவுக்கரசு பழனிசாமி said...

வரலாற்றில் துரோகம் என்பது எப்போதும் மாறாமல்தான் இருந்து வருகிறது..துரோகிகளின் பெயர்கள் மட்டுமே மாறி வருகிறது

ஜோதிஜி said...

விந்தை மனித ராசா நடுநிலைமை என்பது எங்கும் இல்லை. படிக்கும் போதே சொல்ல வந்தவர் எதை முன்னிலைப்படுத்தி எங்கு தொடங்கி எங்கு முடிக்கிறார் என்பதை வாசிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

நிர்வாணம் என்பது சில சமயம் தான் ரசிக்கக்கூடியதாய் இருக்கும். காலையில் எழுந்தது முதல் தூங்கும் வரை நான் யோசிக்கும் விசயத்தை தெகா பொட்டில் அறைந்தது போல சொல்லி நகர்ந்து விட்டார். வினோத் சொல்லியதைப் போல நம்மால் எல்லாமே தெரிந்தாலும் என்ன செய்ய முடிந்தது. நான் நினைத்துக் கொண்டுருப்பதைப் போல ஈழம் தொடர்பான புத்தகம் தாமதமாகிக்கொண்டு என்னை அதிக வேலை வாங்கிக் கொண்டுருப்பதற்கும் காரணம் ராம்ஜி சொன்ன ஏதோவொரு செய்தி இன்னும் மிச்சம் இருப்பதாகத்தான் தெரிகின்றது. இதைத்தால் திருநாவுக்கரசு தெளிவாக புரியவைத்து இருக்கிறார்.

இதற்கு மேலாக நான் பார்க்க இணைப்பை சுந்தரவடிவேல் இணைத்துள்ளாரே? இது தான் இந்த பதிவின் வெற்றி.

ஜோதிஜி said...

நல்ல புரிந்துணர்வுக்கு நன்றி தவறு நண்பா.

ஆஜரைக் குறித்துக் கொண்டேன் சங்கரி, நன்றி இரவு வானம் சே குமார்.

கும்மி

நீங்க சொன்ன முதல் தகவல் இது வரைக்கும் உறுதிப்படுத்தாத தகவல். ஒரு வேளை எனக்குத் தெரியாமல் இருக்கலாம்.

இரண்டாவது தகவல்

கர்நாடகாவில் இருந்த தமிழ் ஆர்வலர் குறிப்பாக ஈழ மக்களின் மேல் அனுதாபம் உள்ள ஒரு தமிழர் கொடுத்த முன்பணம் அது. அதற்கு சான்றுகள் உள்ளது.

வெடிகுண்டு நடந்த சில நொடிகளில் தூரத்தில் இருந்த ஜெயந்தி நடராஜன் ஏதோவொரு வாணவேடிக்கை என்றும் கடைசியில் நீங்க சொன்ன மாதிரி அந்த காலணிகளை வைத்தே மூப்பனாரை அழைத்தார் என்பதும் நான் படித்த உண்மைகள். அப்போது தான் மூப்பனார் புரட்டிப் பார்த்து விட்டு நாம் மோசம் போய்விட்டோம் என்றார்.

ஜோதிஜி said...

சுந்தர்

நீண்ட நாளைக்குப் பிறகு என்றாலும் சிரிக்க வைத்து விட்டீர்கள். வேலுச்சாமி சொல்லிவரும் விசயங்களில் ஜெயின் அவர்கள் சூனாபானா திருதிருவென்று விழித்த விதத்தைப் பார்த்து சொன்ன வார்த்தைகளும், ப்ரியங்கா காந்தி முகத்தில் உண்டான பரவசம் போன்றவற்றை கேட்ட போது வேலுச்சாமி அடைந்த ஆனந்தத்தைப் போலவே நானும் நீங்க சொன்ன மாதிரி கவிழ்ந்து போன ஹார்டு வேர்ட்டை பார்த்து நகைத்துக் கொண்டேன்.

ஆமாம் கதையைப் பற்றி ஒன்னும் மூச்சே விடலையே?

ஜோதிஜி said...

தொப்பி மூன்றாவது விதி இப்போது வீதியில் இருக்கிறது. எந்த நாள் என்று தான் தெரியவில்லை.

உமர் | Umar said...

//நீங்க சொன்ன முதல் தகவல் இது வரைக்கும் உறுதிப்படுத்தாத தகவல். ஒரு வேளை எனக்குத் தெரியாமல் இருக்கலாம்.//

நானும் அந்தத் தகவலை படித்திருந்தேனே தவிர முழுமையான விபரங்கள் தெரியவில்லை. இந்தப் பேட்டியில் வேலுச்சாமி அது குறித்து பேசவில்லை. அவரது வேறு பத்திரிக்கை பேட்டிகளை தேடிப்பார்க்கவேண்டும்.

மேலும், உறுதிபடுத்தப்படாத சில தகவல்கள். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த இளம்தலைவர் ஒருவர், மே 21 அன்று காலை அவரது கட்சித் தலைமையால் அழைக்கப்பட்டு உடனடியாக சென்னை திரும்பினார் என்பதும் ஒன்று.

// ஈழ மக்களின் மேல் அனுதாபம் உள்ள ஒரு தமிழர் கொடுத்த முன்பணம் அது. //

சந்திராசாமிக்கு இந்த விஷயத்தில் தொடர்பிருப்பதாக படித்திருந்தேன். நான் படித்தது தவறான தகவல் போலும்.

ஹேமா said...

வினோவுக்கும் ஜோதிஜிக்கும் நன்றி நன்றி !

தாராபுரத்தான் said...

பொறுமையா பார்க்க போறேன்..ங்க

a said...

ஸ் ..... கொஞ்சம் தல சுத்துதுங்க..........

ஜோதிஜி said...

யோகேஷ் இன்னும் பல விசயங்கள் உண்டு. வாய்ப்பு இருந்தால் என் புத்தகம் தமிழீழம் பிரபாகரன் கதையா? வெளி வந்த பிறகு படித்துப் பாருங்கள்.

பாருங்கள் ஐயா.

நன்றி ஹேமா? வினோ நல்லாத்தானே இருக்கு?

எந்த இடத்திலும் சந்திரசாமி குறித்து நான் இது வரைக்கும் படித்தது இல்லை. மற்றொரு தகவல் நீங்க சொன்னது போன்ற பல விசயங்கள் நடந்தது உண்மை. மொத்தத்தில் பலருக்கும் இது இவ்வாறு நடக்கப்போகின்றது என்பது தெரியும் என்பது மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும். நான் படித்த தகவல்கள் கேட்ட தகவல்கள் அந்த அளவிற்கு.

Anonymous said...

subramaniasamy eithil pangu ullathu. usa tamilan

தமிழ்மலர் said...

நல்ல பதிவு.. 9 காணொளிகளையும் பார்த்தேன் நிறைய யோசிக்க வேண்டும். இதுகுறித்து எனக்கு தெரிந்த தகவல்களையும் பதிவாக எழுதுகிறேன். நன்றி.

Thomas Ruban said...

http://idlyvadai.blogspot.com/2010/12/blog-post_08.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+Idlyvadai+%28IdlyVadai+-+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%29

ஜோதிஜி said...

எழுதுங்கள் தமிழ்மலர்.

சூனா பானாவுக்கு எதில் தான் தொடர்பு இல்லை என்று கேளுங்கள் அமெரிக்க தமிழா?

virutcham said...

சு.சுவாமி அவரது ஜனதா கட்சி தளத்தில் என்ன சொல்லி இருக்கிறார் என்பதையும் பாருங்கள்

Thazhavaai said...

கொளத்தூர் கொள்ளணை பற்றி பேசுங்கள்! பரப்புங்கள்!!
தமிழகம் சந்திக்கும் காவிரிச் சிக்கலுக்கு அதிரடியான ஒரு தீர்வு இது! தமிழர்களம் முன்வைக்கும் இத் திட்டம் குறித்து ஆக்கபூர்வமாகத் திறனாய்வு செய்யுங்கள்! தொய்வின்றித் தொடர் பரப்புரை செய்யுங்கள்! இணையத்தில் செய்திகளைப் பாருங்கள். திட்டத்தை நிறைவேற்ற அரசியல்வாதிகளுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்மென்றால் கொள்ளணைத் திட்டம் பரவலாக மக்கள் நடுவில் எடுத்துச செல்லப்பட வேண்டும்.
அரிமா

http://www.kolathoorkollanai.blogspot.com

tamilamudhu said...

ராஜீவ் கொலை வழக்கு மர்மம் - வெளிப்படுத்தும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி மோகன்ராஜ் - http://www.vannionline.com/

நெல்லைத்தமிழன் said...

இந்த சப்ஜெக்டில் நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறேன். எல்லோர் கோணமும் ஓரளவு தவறு என்று நான் நினைக்கிறேன்.

ஒருவன் இதைச் செய்யத் துணிந்துவிட்டான். அந்தச் செய்தி பலருக்கும் தெரிய வருகிறது. அதனால் தனக்கு என்ன செய்துகொள்ள வேண்டும் என்பதை அவரவர் செய்துகொள்கிறார்கள். தங்களுக்கு இருந்த எரிச்சலில், செய்தவர்களுக்குத் துணையாகவோ இல்லை உதவியோ செய்திருக்கிறார்கள். ஆனால் செய்தது ஒரு இயக்கம்தான்.

வைகோவுக்குத் தகவல் வந்த உடன் (நிகழ்வுக்கு முன்), அவருடைய முன்னாள் தலைவருக்கு விஷயத்தை பாஸ் செய்து, அவரது பிரச்சாரத்தை கேன்சல் செய்ய வைத்தார். கொலையாளிகளுக்கு தமிழர்கள் நிறையப்பேர் உதவியதையும் அவர்கள் இன்றும் சமூகத்தில் பெரிய ஆட்களாக வலம் வருவதையும் நீங்கள் அப்போ கணக்கில் எடுக்க விட்டுவிட்டீர்கள். கொலையாளியை டாங்கரில் வைத்து பத்திரமாக பெங்களூருக்கு அனுப்பியவர்...இன்னும் பலர்..

ஜோதிஜி said...

கொலையாளிகளுக்கு தமிழர்கள் நிறையப்பேர் உதவியதையும் அவர்கள் இன்றும் சமூகத்தில் பெரிய ஆட்களாக வலம் வருவதையும் நீங்கள் அப்போ கணக்கில் எடுக்க விட்டுவிட்டீர்கள்.////////// இது உண்மை.