அவர் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் மேலாளர் பதவியில் இருப்பவர். தொழிலுக்கு அப்பாற்பட்டு எங்கள் இருவருக்குமே நல்ல புரிந்துணர்வு உண்டு.. நான் திருப்பூரில் இதுவரைக்கும் சந்திக்காத ஒரு ஆபூர்வ நபர். தனிமனித ஓழுக்கம் அதற்கு மேல் வெளிநாட்டில் இருப்பவருக்குச் சொந்தமான நூறு கோடி சொத்தை தனது நம்பிக்கை ஒன்றின் மூலம் கட்டிக் காத்துக் கொண்டு இருப்பவர். பல ஆச்சரியங்களை எனக்குள் அன்றாடம் தந்து கொண்டுருப்பவர்.
குறுகிய காலத்தில் அவரின் உள் வட்டத்தில் என்னை சேர்த்துருந்தார். என்னுடைய தனிப்பட்ட திறமைகளை விட அவருக்கு காரைக்குடி என்ற ஊரும் அதன் கலாச்சாரமும் ரொம்பவே பிடித்தமானதாக இருந்தது. வேறொரு காரணமும் உண்டு., செட்டிநாட்டு சமையல்.
அவர் கோபியில் பிறந்து கோவையில் வாழ்ந்து கொண்டுருந்தாலும் தொழிலுக்கு அப்பாற்பட்டு பேசும் பேச்சில் கடைசியாக வந்து நிற்பது இந்த அசைவ உணவு சமாச்சாரமே. நான் தொடக்கத்தில் இயல்பாக எடுத்துக் கொண்டாலும் அவரின் தீராத சாப்பாடு வெறியை தீர்த்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். இத்தனைக்கும் அவர் மனைவியும் நன்றாக அசைவ உணவு சமைப்பவர்.
அதனையும் மீறி அவருக்குள் இருந்த ஆர்வத்தை போக்கும் பொருட்டு அவினாசி கோயமுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பாளையம் பிரியும் சந்திப்பில் உள்ள பாலத்துக்கு அருகே உள்ள அந்த சிறிய கடைக்கு அழைத்துச் சென்றேன்.
சிறிய ஓட்டு வீடு. உள்ளே பத்து பேர்கள் தான் அமர முடியும். அடுத்த வரிசை வருவதற்குள் காத்துருப்பவர்கள் ஓடிப் போய் தான் இடம் பிடிக்க வேண்டும். நாக்குச் சொட்டச் சொட்ட அவர்கள் கொடுக்கும் பக்குவமான அசைவ சமாச்சாரங்கள் விபரம் தெரிந்தவர்களை பல மைல்கள் கடந்து வந்து சாப்பிட வைத்துக் கொண்டுருக்கிறது. அங்கு நண்பர் அமர்ந்து சாப்பிட்ட வேகத்தை பார்த்த போது எனக்கு என் அப்பா ஞாபகம் தான் வந்தது.
ஊரில் நான் வாழ்ந்த வாழ்க்கை கூட்டுக்குடித்தனம் என்பதால் பந்தி போலத்தான் வரிசையாக அமர்ந்து பறிமாறிக் கொண்டுருப்பார்கள். ஒவ்வொரு நாளும் திருவிழா போலவே இருக்கும். நான் பார்த்தவரைக்கும அம்மா சமைத்தே இடுப்பு ஒடிந்து போயிருப்பார். வீட்டில் உள்ள மற்ற அத்தனை பேர்களும் எடுபுடி வேலைக்கு உதவிக் கொண்டுருப்பார்கள். அடுப்பு என்பது அணையா விளக்கு போல் எறிந்துகொண்டுருக்கும்.
நான் அழைத்துச் சென்ற கடையில் வெற்றிகரமாக இடம் பிடித்து புன்னகையுடன் உட்கார்ந்த நண்பர் சாப்பிட்ட வேகத்தை பார்த்தது திகைத்துப் போய் விட்டேன். அப்படியொரு சந்தோஷத்தை அதற்கு முன் அவரிடம் நான் பார்த்து இல்லை. "மற்றதெல்லாம் அப்புறம் நாம் பேசிக் கொள்வோம்" என்று விளாச ஆரம்பித்து விட்டார். அந்த குறுகிய அறையில் இருந்த மின் விசிறி பெயருக்கென்று ஓடிக்கொண்டு இருந்தது.
முகத்தில் வழிந்த வியர்வையை துடைக்க மனமில்லாமல் துண்டுகளை கொண்டாடிக் கொண்டுருந்தார்.
முகத்தில் வழிந்த வியர்வையை துடைக்க மனமில்லாமல் துண்டுகளை கொண்டாடிக் கொண்டுருந்தார்.
ஊர் வட்டார வழக்கில் சொல்லப்படும் "கொளம்பு" என்பதை கையில் ஊற்றிக் கொண்டு தன்னை மறந்து சுவைத்துக் கொண்டுருந்தார். காரணம் சேர்க்க வேண்டிய மசாலா சமாச்சாரத்தை சரியான முறையில் அளவில் சேர்த்தால் இந்த அசைவ சமாச்சாரங்கள் என்பது உங்கள் சொத்துக்களை எழுதிக் கேட்டால் கூட கொடுக்க வைத்து விடும்.
அசைவ உணவு சமாச்சரத்தில் முக்கிய இரண்டு பகுதிகள் உண்டு.
ஒன்று சுத்தம் செய்தல்.மற்றொன்று மசாலா சேர்மான அளவு. மீனோ ஆட்டுக்கறியோ தண்ணீர் விட்டு அலசுவதைப் போலவே அதனை சுத்தம் செய்தல் அதிமுக்கியமானது. தேவையில்லாத கழிவுகளை கழித்து விட வேண்டும். வாங்கும் மீன்களின் வாயைத் திறந்து பார்த்தாலே உள்ளே தெரியும் நிறம் வைத்து நல்லதா இல்லை நாறிப் போனதா என்று. விபரம் தெரிந்தவர்களால் கண்டு கொள்ள முடியும். நீங்கள் சாப்பிடும் எந்த உணவகத்திலும் வீடு போல சுத்தம் செய்தா படைத்துக் கொண்டுருக்கிறார்கள் , செய்யவே மாட்டார்கள். மேலும் உணவகத்திற்கென்றே ஒவ்வொரு இடத்திலும் தனியாக வைத்து இருப்பார்கள். கெட்டது, நொந்து போனது, கழிவு போன்ற சமாச்சரங்கள் தான் கடைசியில் பொன் நிற வறுவலாக உங்கள் காசை பறித்துக் கொண்டுருக்கும்.
அலசி, கழுவி முடித்து மஞ்சள் பொடியை அளவாகச் சேர்க்கும் போது மீதியுள்ள கெட்ட வாடை அகன்று விடும். எஞ்சியுள்ள மஞ்சள் தண்ணீர் கரைசலை வெளியேற்றி தனியாக வைத்து விட்டாலே பாதிப் பிரச்சனை முடிவுக்கு வந்து விடும்.
மற்றொன்று சமைத்துக் கொண்டு இருக்கும் போது கொதி நிலையில் கவனமாக பார்த்துக் கொண்டுருக்க வேண்டும். மண்பாத்திரங்கள் என்றால் அதற்குண்டான மரியாதையும் தனியாக இருக்கும். கொதிக்க தொடங்கும் போதே சேர்த்த தண்ணீரின் அளவு பாத்திரத்தில் இறங்கத் தொடங்கும். கரண்டியில் எடுத்து மேலிருந்து கீழாக ஊற்றிப் பார்க்கும் போது அதன் கெட்டித்தன்மையும் உள்ளே வெந்து கொண்டுருக்கும் சமாச்சாரத்தின் சுவையும் புரிய ஆரம்பிக்கும்.
நாக்கில் ஒரு சொட்டு விட்டு பார்க்கும் போது அதன் திரைக்கதை முழுமையும் தெரிந்து விடும். சுவை கூடி வரும் போது முடிவுக்கு கொண்டு வந்தால் பந்தி சாப்பாட்டு சடுதியாக முடியும். இல்லாவிட்டால் சமைத்தவர் அடிவாங்கிய பந்தியாக மாறி விடும். .
வெந்து கொண்டுருக்கும் போது நேரம் கடத்துவதோ, அளவு தெரியாமல் மஞ்சள் பொடியை அள்ளிக் கொட்டுவதோ கடைசியில் சாப்பிடுபவர்கள் அட அக்கிரமமே என்று திட்ட வைத்து விடும்.
திருப்பூருக்குள் எந்தப் பக்கம் திரும்பினாலும் செட்டி நாட்டு உணவகம் என்று பெயர்ப்பலகை தொங்கிக் கொண்டுருக்கும். செட்டி நாட்டு உணவகம் என்று பெயர்பலகையில் தான் இருக்கும். ஆனால் அவர்கள் கொடுக்கும் சாப்பாட்டில் இருக்காது. பணத்தாசை அந்த அளவிற்கு கேவலமாக மாற்றி வைத்து இருக்கும். திருப்பூர் மக்களின் அசைவ வெறி கலாச்சாரத்தை எனக்கு தெரிந்த ஒருவரின் சொத்தை பத்து வருடங்க ளில் 60 கோடியாக மாற்றியுள்ளது. அத்தனையும் ஊரில் இடமாக அரிசி ஆலையாக மாற்ற உதவியுள்ளது.
அப்பாவோ சித்தப்பாக்களோ தொடக்கத்திலேயே சொல்லி விடுவார்கள். " கவுச்சி வாடை வந்து விடக்கூடாது" என்று கட்டளை போலத்தான் சொல்வார்கள். அதிலும் அண்ணாமலை சித்தப்பா பொண்டுகசெட்டி போலவே சமைத்து முடிக்கும் வரையிலும் காத்துக் கொண்டுருப்பார். ரெண்டு துண்டு உள்ளே போனால் தான் அடுத்த வேலைக்கு நகர்வார். ஒவ்வொருவரும் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் அம்மா முதல் சின்னம்மாக்கள் வரைக்கும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.. கறிக்கொளம்பு, எலும்புக்கொளம்பு, இரத்தப் பொறியல், இது போக தெரக்கி எடுத்த கறிக்கூட்டு.
எப்போதுமே வெங்காய பச்சடி தனியாக அனாதையாக இலையின் ஒரு ஓரத்தில் கிடக்கும்.
மொத்த நபர்களும் சாப்பிட்டு எந்திரிக்கும் போது கூட்டி முடித்து விட்டு தண்ணீர் போட்டு துடைத்து விட்டு காத்திருக்கும் பெண்கள் பந்தியில் அமர்வார்கள். நான் பார்த்தவரைக்கும் அக்கா அம்மாக்கள் வெறும் எலும்புகளை தின்று கடித்துக் கொண்டுருப்பார்கள்.
இதற்கிடையே வேலையாட்கள் வேறு தனியாக வந்து போய்க் கொண்டுருப்பார்கள்.
வருமானமும் வசதிகளும் பிரச்சனையில்லாத வரைக்கும் அசைவம் என்பது ஊரில் அத்தனை வீடுகளிலும் சைவ சாப்பாடு போலவே இயல்பாக இருந்து கொண்டுருக்கும். நான் அசைவத்தை விட்டொழித்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது. வீட்டில் இயல்பாகவே அந்த பழக்கம் இல்லை. குழந்தைகள் கூட உறவினர்கள் வீட்டுக்குச் செல்லும் போது தான் ஒரு கட்டு கட்டுவார்கள்.
தாத்தா முதல அப்பா சித்தப்பாக்கள் மற்றும் தொடர் வாரிகள் அத்தனை பேர்களுமே இந்த அசைவத்திற்கு அடிமை சாசனமே எழுதித் தந்தவர்கள் போலத்தான் வாழ்ந்தார்கள். வயல் மற்றும் கடையில் பணிபுரியும் வேலையாட்கள் முதல் வீட்டில் வரும் உறவினர்கள் வரைக்கும் இந்த உயிர்ப்பலியை ரசித்து ருசிப்பவர்கள். நானும் அப்படித்தான் வாழ்ந்தேன் வளர்ந்தேன். முதல் இருபது வருட வாழ்க்கையில் தின்று பழகிய நாக்கின் சுவை அடுத்த பத்து வருடங்கள் திருப்பூரின் நான்கு மூலைக்குள் இருக்கும் பொந்து சந்துக்குள் இருக்கும் இடங்களுக்கெல்லாம் அலைய வைத்தது. செட்டி நாட்டு உணவகம் என்ற தொங்கும் அட்டையைப் பார்த்தால் வண்டி இயல்பாகவே நின்று விடும். மூன்று நேரத்திலும் விடாமல் தின்று மொத்தமாக குடல் அறுந்து விழுந்துப் போகின்றது என்று மருத்துவர் எச்சரித்த போது தான சுவாதீனமே வந்தது.
குடல் சார்ந்த அத்தனை நோய்களும் திருமணத்திற்கு முன்பே இந்த தேடி அலைந்து சாப்பிட்ட சாப்பாட்டால் வரத்தொடங்க. திடீர் என்று ஆன்மீக ஞானமும் வந்து சேர இனி ஒவ்வொன்றாக தொலைக்க வேண்டும் என்று ஆரம்பித்தேன். முதல் பலி இந்த உயிர்ப்பலி.
மூத்த அண்ணி கூட முதலில் கிண்டலடித்தார். நீங்களாவது?நான் நம்பவே மாட்டேன் என்று கேள்விக்குறியாய் பார்த்தவருக்கு வீட்டுக்காரம்மா ஆமோதித்து செர்ன்னபோது அவர்களின் ஆச்சரியம் இன்றும் என் கண் முன் நிற்கிறது. காரணம் அசைவ வெறியனாகத்தான் வாழ்ந்தேன்,
ஊரில் இரண்டு உணவகம் பிரபல்யமானது. ஒன்று விடத்தையா விலாஸ். இரவு 7 மணி தொடங்கி நடுசாமம் வரைக்கும் தண்ணீர் மக்களால் தடுமாறிக் கொண்டுருக்கும். அருகில் கல்லூர் என்ற ஊரில் உள்ள சாராயக் கடை ஆறு போல் ஓடிக் கொண்டுருந்தது. பாட்டிலில் கொண்டு வந்து இங்கு நுழைவதற்கு முன்பு ஊற்றிக் கொண்டு உள்ளே நுழைவார்கள்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நண்பர்களுடன் முழித்து படிக்க வேண்டும் என்று ஜல்லியடித்து உருண்டு புரண்டு அனுமதி பெற்று எப்போதும் போல சாலையில் உள்ள பாலத்தில் வந்து அமர்ந்துருந்த போது தான் ராஜு வந்தான். எங்களுக்கு ஒரு வருடம் பின்னால் படித்துக் கொண்டுருந்தவன். அவன் அம்மா ஊருக்குள் இருந்த ஒரே அரசாங்க மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து கொண்டுருந்தார். அவன் படிப்பதைத் தவிர மற்ற எல்லாவிசயங்களிலும் ஜெகஜால கில்லாடி. அந்த ராத்திரி நேரத்தில் என்னுடன் இருந்த நாலு பேர்களையும் பார்த்து விட்டு அவன் கேட்ட முதல் கேள்வியே என்னப்பா அதிசியமா ராத்திரி நேரத்தில் இங்கு வந்து இருக்கீங்க?
நான் தான் அவனிடம் மெதுவாகக் கேட்டேன். எப்படியாவது விடத்தையா விலாஸில் ரெண்டு புரோட்டா வாங்கி தருவாயா? அவனுக்கு லஞ்சமாக ஒரு புரோட்டாவுக்குரிய காசையும் கொடுத்து விட்டு நாங்கள் அருகில் இருந்த மளிகைக் கடையில் ஒளிந்து கொண்டோம். எவரோ ஒருவர் மறுநாள் ஓம் மகனை இங்கே பார்த்தேனே? என்று நீட்டி முழங்கி விடுவார்கள். உணவகத்தின் முன்னால் மிகப் பெரிய விலைப்பட்டியல் தொங்கிக் கொண்டுருந்தது.. தலைக்கறி, குடல்கறி, மூளை என்று ஏதேதோ போட்டுருப்பார்கள். புலிநகம் போன்ற ஏதோ ஒன்றை கழுத்தில் மாட்டிக் கொண்டு வலைபின்னல் பனியனும் சிலோன் கைலியுமாய் மைனர் போல் ஒருவர் வெகு சிரத்தையாக கொத்திக் கொண்டுருப்பார். கடையை கடந்து செல்லும் பெண்களை பார்த்ததும் அவர் கொத்தும் விதம் சற்று மாறுபடும்.
அவரை பலமுறை முந்திரிக்காட்டுக்குள் தள்ளிக் கொண்டு செல்லும் போது பார்த்தது உண்டு. அவர் ஸ்டைலாக பேசிக் கொண்டே செய்யும் கொத்து புரோட்டா சத்தம் ஊர் அடங்கிய வேலையில் தூரத்தில் இருப்பவர்களுக்குக் கூட நாக்கில் எச்சிலை ஊற வைத்துக் கொண்டுருக்கும்
இப்போது மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு திரைப்பட இயக்குநராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு முதல் பட வேலையில் இறங்கி இருக்கின்றான்.
அப்போது அவன் அறிமுகப்படுத்தியது தான் அருகே இருந்த கண்ணகி உணவகம். பர்மா மலேசியாவில் உள்ள பெரிய வீடுகளில் சமையல்காரராக பணிபுரிந்து விட்டு கடைசி காலத்தில் வந்து கடை போட்டுருந்தார். குடிப்பழக்கம் இல்லாத அத்தனை மக்களுக்கும் இந்தக் கடை தான் வேடந்தாங்கல். நான் பார்த்தவரைக்கும் அம்மியில் அரைத்த மசாலா சமாச்சாரங்களைத்தான் கடைசி வரைக்கும் பயன்படுத்திக் கொண்டுருந்தார்கள்.
ஊரின் மற்றொருபுறத்தில் முஸ்லீம் மக்கள் வாழும் சந்தில் தான் கறிக் கடைகளும் மீன் கடைகளும் இருந்தது. பெரிய சில்வர் தூக்கு வாளி மற்றும் வேறு இரண்டு மூடியுள்ள சட்டியுமாய் அப்பா பின்னால் சென்று அங்கு அமைதியாய் நிற்க வேண்டும். அங்கு கடைபோட்டுள்ள முஸ்லீம் மக்கள் அத்தனை பேர்களும் வருகின்ற நபர்களை அழைப்பது மாமா மாப்பிள்ளை பங்களாளி போன்ற வார்த்தைகளால் மட்டுமே.
இப்போது மாறிப் போன வெறிகலாச்சாரம் எதையும் நான் பார்த்தது இல்லை. இன்று கூட உள்ளடங்கிய கிராமங்களில் இப்படித்தான் பழகிக் கொண்டுருக்கிறார்கள். அப்பா, அணைவருக்கும் தெரிந்தவர் என்பதால் வரவேற்பு பலமாக இருக்கும். காரணம் வேறொன்றுமில்லை. மூன்று குடும்பங்களுக்கும் சேர்த்து எடுக்க வேண்டிய சமாச்சாரங்களால் ஒவ்வொரும் இங்கே வாங்க என்று கையை பிடித்து இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டுருப்பார்கள். அப்பா சென்றதும் முதலில் செய்வது உரித்து தொங்கிக் கொண்டுருக்கும் ஆட்டின் வாலை இழுத்துப் பார்ப்பது. காரணம் செம்மறி ஆட்டுக் கறியை கலந்து வைத்து வாலை மட்டும் ஓட்டி வைத்து இருப்பார்கள்.
இப்போது மாறிப் போன வெறிகலாச்சாரம் எதையும் நான் பார்த்தது இல்லை. இன்று கூட உள்ளடங்கிய கிராமங்களில் இப்படித்தான் பழகிக் கொண்டுருக்கிறார்கள். அப்பா, அணைவருக்கும் தெரிந்தவர் என்பதால் வரவேற்பு பலமாக இருக்கும். காரணம் வேறொன்றுமில்லை. மூன்று குடும்பங்களுக்கும் சேர்த்து எடுக்க வேண்டிய சமாச்சாரங்களால் ஒவ்வொரும் இங்கே வாங்க என்று கையை பிடித்து இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டுருப்பார்கள். அப்பா சென்றதும் முதலில் செய்வது உரித்து தொங்கிக் கொண்டுருக்கும் ஆட்டின் வாலை இழுத்துப் பார்ப்பது. காரணம் செம்மறி ஆட்டுக் கறியை கலந்து வைத்து வாலை மட்டும் ஓட்டி வைத்து இருப்பார்கள்.
எலும்பு சதை இரத்தம் ஈரல் என்று ஒவ்வொன்றும் தனித்தனியாக அதற்கான பாத்திரங்களில் அடைக்கப்பட்டு கடைக்காரர்களே வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள். வீட்டில் இருக்கும் அத்தனை பேர்களும் ஒரே வரிசை யாக அமர வைத்து சாப்பிடும் பழக்கம். எந்த வேலையிருந்தாலும் குறிப்பட்ட நேரத்தில் ஆஜர் ஆகிவிட வேண்டும். எந்த பாரபட்சமும் இல்லாமல் ஒரே மாதிரியான உபசரிப்பு. நண்பர்கள் இடையில் எவராது தேடிவந்தால் செத்தார்கள். சாப்பிட்டு விட்டு தான் செல்லமுடியும். நேரம் பார்த்து உள்ளே வரும் கோபிநாதன் போல் குறிப்பிட்ட நாளில் கோவிந்தராஜன் வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கவே மாட்டான்.
இப்போதுள்ள நகர்புற கோழி கலாச்சாரத்தை நான் ஊரில் பெரிதாக பார்த்தது இலலை. உடம்புக்குச் சூடு என்று எளிதாக ஒதுக்கி விடுவார்கள். உள்ளடங்கிய கிராமங்களில் நாட்டுக்கோழிக்கு மட்டும் விருந்தினர் வருகையின் போது மரியாதை உண்டு. ஆனால் ஊருக்கு மிக அருகில் இருந்த தொண்டி, மீமிசல்,கோட்டைப்பட்டினம் தொடங்கி இராமேஸ்வரம் வரைக்கும் இருந்த காரணத்தால் மீனும் நண்டும் தினமும் ஊருக்குள் மாலை வேலைகளில் குவிந்து கொண்டுருக்கும். வந்து இறங்கிய சில மணி நேரங்களில் அத்தனையும் காணாமல் போய்விடும். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.
ஆனால் புதன் கிழமை சந்தையின் போது கிராமத்து பெரியவர்கள் கொண்டு வரும் அயிரை,கெண்டை,கௌங்கை, போன்ற சிறிய ரக மீன்களுக்கு எப்போதுமே தனி மரியாதை. ஈரமான துணியை தரையில் விரித்து அதில் மண்ணுடன் கலந்து வைத்துள்ள அயிரையும் மற்ற மீன்களையும் கவனமாக பார்த்து வாங்க வேண்டும். கூறு போல் மண்ணுடன் கலந்து வைத்துருப்பார்கள். நிறைய மீன்கள் இருக்கும் என்று நம்பி வாங்கி வரும் கூறுகளை தண்ணிர் விட்டு அலசி கூறாக்கி பார்த்தால் கையில் அடக்கி விடும் அளவுக்குத் தான் தேறும். அம்பானி மார்க்கெட்டிங் போல கிராம மக்களின் தந்திரம் அது.
கெளுத்தி,திருக்கை, தொடங்கி பெரிதான நண்டுகள் வரைக்கும் ஏதோ ஒன்று தினமும் மாலை வேலையில் அம்மா சுததம் செய்து கொண்டுருப்பார். பள்ளி விட்டு வந்தவுடன் சுடச்சுட இறக்கிக் கொண்டு அலைந்து திரிந்த இனிய நாட்கள் அது.
பள்ளி விடுமுறைகளின் போது சாப்பிட்டு முடித்து விட்டால் கட்டாயம் உடனே தூங்க வேண்டும். அப்பாவின் பல கட்டளைகளில் இதுவும் ஒன்று. காரணம் சாப்பிட்ட சாப்பாடு உடம்பில் ஒட்ட வேண்டும் என்பார்.
விஞ்ஞான அறிவைப் பற்றி யோசிக்க நேரமில்லாத காரணத்தால் அவர் சொல்வதை எதிர்த்து பேசத் தெரியாமல் அப்படித் தான் வளர்ந்தோம். சமீபத்தில் மூத்தவளிடம் இதையே தான் கேட்டேன்.
" அப்பா....... சாப்பிடவுடன் தூங்கினால் நல்லது இல்லை. கொஞ்ச நேரமாவது வெளியே உட்கார்ந்து இருக்க வேண்டும். எங்க மிஸ் சொல்லியிருக்காங்க " .
என்ன பதில் என்னால் சொல்லமுடியும்?
என்ன பதில் என்னால் சொல்லமுடியும்?
33 comments:
எல்லாம் அசைவம்........எனக்கு தொலைவாகி பத்துப் பத்தாக ஆண்டுகள் கடந்துவிட்டன. உங்கள் எழுத்தில் இங்கே அசைவம் அசைவமாக இல்லை, சுவைத் தேன்.
//வினாசி கோயமுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பாளையம் பிரியும் சந்திப்பில் உள்ள பாலத்துக்கு அருகே உள்ள அந்த சிறிய கடைக்கு அழைத்துச் சென்றேன்.//
ஏதாவது பெயர் பலகை இருக்குமா ? அவிநாசி பாய் கடை தெரியும் , அது வேறா ?
எச்சில் வாயில் ஊறுதுங்க.. :)
ஜெட் வேகத்தில் இடுகைகள்!!!!
கவனிச்சுப் பார்த்தால் அ னாவில் தொடங்கி ஃ க்கன்னாலே முடிக்கப்போறீங்க போல!!!
மகள் சொன்னதைக்கேட்டு அதன்படி நடந்தீங்களா? இதுக்குத்தான் குழந்தைகளிடம் கேக்கக்கூடாது:-)))) நம்ம காலம் போல இல்லை. ரொம்ப விவரமான தலைமுறை! இந்த வயசில் நாம் ஒன்னுமே தெரியாம விளையாட்டே கதின்னு இருந்துருப்போம்.
அருமையான பதிவு நண்பரே ,அசைவதையும் அசத்தும் வகையில் சுவைபட சொல்லி இருக்கீறீர்கள்.
ஒரு சுய பரிசோதனையா நான் இரண்டு நாட்கள் நீராகரத்தில் உள்ளேன்.இந்த பதிவும்,படமும்,உங்க நண்பர் வெளுத்துக்கட்டும் கடையும் எனக்குத் தேவையா:)
வாயில் எச்சில் ஊற வைச்சிட்டீங்களே! :-)
சாப்பிட்ட உடன் படுப்பது நல்லதில்லைதான். சிறிது நேரம் நடத்தல் நலம்.
அசைவ உணவு சாப்பிடுதல் பற்றிய சாதரண கட்டுரைதான் என்றாலும் தங்கள் எழுத்து எங்களையும் அதற்குள் இழுத்துச் செல்கிறது. (இந்த பதிவு என்றல்ல, நான் படித்த எல்லாமே)
என்னோட பால்ய சிநேகிதன் வீட்டிலும், அடிக்கடி மீன், கருவாட்டு கொழம்பு, எப்பவாவது கரி, சில சமயம் கோழி ... ஆனால் நான் சாபிட்டது இல்லை . நான் கருவாட்டு கடையில் கூட சில நாட்கள் நின்னுருக்கேன் ( என் நண்பன் கடை ) . என் கூட அங்கு வரும் சில ஐயர் நண்பர்கள் அப்போது மாறியது தான், இன்னமும் கறி தான் !!!!???.
ரொம்ப அழகா நினைவுகளை செதுக்கி இருக்கீங்க, நான் என்ஜாய் பண்ணியது எல்லாம் நெய் ரோஸ்ட் தான் !!!?????. இப்பவும் விரும்பி சாப்பிடுவேன் .
சொல்ல மறந்து விட்டேன் இப்பொழுது என் இரண்டு வேளை ஆகாரம் வெறும் பழம்/ காய்கறிகள் மட்டுமே இரவு மட்டும் கொஞ்சம் டிபன்.
சுவையான விவரங்கள்.
சாப்பிட்ட இடங்களின் பெயர்/முகவரி கொடுத்தால் அந்தப் பக்கம் போகும் வாய்ப்பு கிடைத்தால் தலை காட்டலாம். பார்த்தாலே பசிக்குது.
சாப்பாட்ட பதி இப்படி ஒரு பதிவா..
அருமை.
அச்சோ...அச்சோ ஒரே கவிச்சு மணம்.அசைவம் சாப்பிடல சாப்பிட எப்பவோ விட்டாச்சுன்னு சொல்லிச் சொல்லி எவ்ளோ ரசனையோட ரசிச்சு ருசிச்சு எழுதியிருக்கீங்க ஜோதிஜி.
உங்களின் திறமையும் வெற்றியும் இதுதான் ஜோதிஜி.எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அதனோடு ஒன்றிக்கலந்து ஆழமான தேடல்களோடு எங்களையும் உங்கள் வசப்படுத்திவிடுகிறீர்கள்.
அற்புதம்.
நாளைக்கு கொத்துரொட்டி
கடையில வாங்கியாச்சும் சாப்பிடணும் !
இதத்தான் வள்ளுவர் அன்னைக்கே சொன்னார்... யாகவாராயினும் நா காக்கன்னு.. இது ஒரு சாப்பாட்டு வெறி ஏத்தும் பதிவு. இன்று செட்டிநாடு என்பது ஒரு பிராண்ட் ஆக உலகமெங்கும் வெற்றிநடை போடுகிறது. அதன் அர்த்தம் தெரியாத பலபேர் செட்டிநாடு என்ற பெயர் பலகையை மாட்டிக் கொண்டு ரெண்டு கரண்டி மிளகாய்ப்பொடியை அதிகம் போட்டு மறுநாள் காலை வரை மறக்க முடியாத வண்ணம் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
நல்ல மழை நாளில் கையில் மூக்குத் துடைக்க துண்டோடு நண்டு கடித்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. அருமை.
Resaurant இல் சாப்பிடப் போகலாம் என்றாலே என் cousins என்னை திரும்பிப் பார்த்து "பக்கென்று" சிரிப்பார்கள். காரணம், நான் அலுக்காமல் எப்போதும் தெரிவு செய்வது "காரைக்குடி செட்டிநாட்டு" உணவகம் தான். ஞாபகப்படுத்தி விட்டீர்கள். நல்லா இருங்க, ஜோதிஜி. இந்தவார இறுதியில் போயே தீரவேண்டும்.
புயல் வேகத்துல பதிவுகள். ஆச்சர்யமான அதிசயம். உங்க வேகத்துக்கு பின்னூட்டமிட முடியல.///
அசைவ சாப்பாடு, ஹோட்டல் சாப்பாடு போன்றவற்றை அதிகமா விரும்பறது இல்ல. எனக்கு கோதுமை, மைதா, ரவைகளால் செய்யப்பட்ட பதார்த்தங்கள் (புரோட்டா, பூரி, சப்பாத்தி உடபட எது)சாப்பிட்டாலும் ஒவ்வாமை ஏற்பட்டு, அந்த கொஞ்ச நேரத்தில் ரெம்ப கஷ்டப்பட்டுடுவேன். உயிர் போய் உயிர் வரும். அதனால் உணவு குறித்து பெரிசா அக்கறை எடுத்துக்கறதும் இல்ல. மூணு வேளை சாப்பிட்டோமா, ஒரு வேலை முடிஞ்சுச்சான்னு நினைக்கிறதுண்டு. பல ஹோட்டல்களுக்கு உங்க புண்ணியத்துல கூட்டம் வரப்போகுது.
கச்சிதமா சமச்ச கறிக்கொழம்பு மாதிரி இருக்குங்க! ஒரு வார்த்தை கூட.... கூடகொறச்சிப் போவாம... இது... இது.. இதுதான் எதிர்பார்த்தேன்!
மொதல்ல போட்டுருக்குற வரைபடம் நாக்கை சுண்டி இழுக்குது.
இவ்ளோ தூரம் நுணுக்கமா அனுபவிச்சி எழுதிச்சு அசைவத்த விட்டுட்டேன்னு சொல்றீங்க... சரி சரி இனிப்புக்கடை நடத்துறவன் இனிப்பு சாப்பிட மாட்டாங்கிறது நெசந்தாம்போல!
கடேசியா போட்ருக்குற அறிவிப்பு.... அட! நம்புறீங்களோ இல்லையோ ரொம்ப நாளாவே நான் இதுபத்தி கற்பனையில ஒரு படமே ஓடவிட்டுப் பார்ப்பேன். மதுக்கடைகளை முக்குக்கு முக்கு நடத்துற அரசாங்க கண்டிப்பா இத வெற்றிகரமா செய்யலாம். எத்தனையோ பேருக்கு வேலைவாய்ப்பு; தரமான வெலையில சுவையான சாப்பாடு; வருமானத்துக்கு வருமானம்; நல்ல பேருக்கு நல்ல பேரு; ஓட்டுக்கு ஓட்டும் ஆயிடும்! ஏன் இதுவரை அரசாங்கம் இத யோகிக்கல.
இதப் பத்தி விரிவான ஒரு தனிப்பதிவு எதிர்பாக்குறேன்! நீங்க எழுதலன்னா கேஆர்பி அண்ணன எழுதச் சொல்லணும்.... அப்பிடியும் இல்லன்னா முக்கி மொனகியாச்சும் நான் எழுதுவேன்... ( நான் எழுதுற கொடும வேற வேணுமா?!) அதுனால நீங்களே எழுதுங்க!
என்ன நண்பா அசைவத்துல எறங்கிடீங்க????
:) :) :)
கண்ணன், அசைவத்தை விட்டு என்னைப் போலவே பத்து ஆண்டுகளா? ஆச்சரியம். நானும் உங்கள் செய்தியை சுவைத்தேன்.
டீச்சர் இந்த தலைப்பை தலைவர் படித்தாரா? நீங்க உணவு கட்டுப்பாட்டில் எப்படி இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்? ஆனால் தலைவர் சும்மா இருக்க மாட்டாரே?
ராஜ நடராஜன் நீர் ஆகாரமா? ஆகா அதை விட வேறு என்ன சுவை? கடல் தாண்டி வாழ்ந்தாலும் தமிழ் கண்மணியாய்த் தான் இருக்கீங்க.....
அன்பரசன் நன்றிங்க. இளங்கோ முதலில் எச்சிலை ஊற வைத்து பையில் இருப்பதை கறந்து விடுவார்கள். காரணம் சாப்பிட உட்காரும் போது மூஞ்சியில் இடிக்கும் அளவிற்கு அந்த பெரிய தட்டை அருகே கொண்டு வந்து நிப்பாட்டுபவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
அப்பாதுரை வாங்க. நீங்க கேட்ட விபரங்களை கொடுப்பதற்கு பெரிதான மெனக்கட வேண்டியது இல்லை. மேலே ஒருவரும் இதைத்தான் கேட்டு உள்ளார். முதலில் உள்ளூரில் தீர்க்காமல் கடந்த 15 மாதங்களாக ஓடிக் கொண்டு இருக்கும் வாய்க்கால் வரப்பு சண்டை சமாச்சாரம் முடிவுக்கு வரட்டும். அப்புறம் இதைப்பற்றி பெரிய இடுகையாகவே போட்டுத் தாக்கலாம்.
ஹேமா ரதியும் நீங்களும் கிளம்பீட்டீங்க போலிருக்கு. கொத்து ரொட்டி. அதுவே தான் இங்கே கொத்து பரோட்டா. ரதி சாப்பிட்ட பிறகு கனடா டாலர் எவ்வளவு கொடுத்தீங்கன்னு சொல்லுங்க. ஓப்பிட்டு பார்த்துக் கொள்ள வசதியாய் இருக்கும்.
தமிழ் உதயம் இருவருமே ஒரே மாதிரி தான் வாழ்ந்து கொண்டுருக்கிறோம். மிகத் தெளிவாக இன்று புரிந்து கொண்டேன்.
லெமூரியன் நீங்க உங்களுக்கு மேலே இருந்த விந்தை மனிதனுக்குத் தான் நன்றி சொல்லனும். பயபுள்ள தான் இந்த ஐடியா கொடுத்த ஆளு. பாருங்க ராசா சூட்டை கிளப்பி விட்டு கொதி குறைந்து போச்சுன்னு
பேச்சப் பாரு....ஆளப்பாரு....
டீச்சர் சொன்ன மாதிரி ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கு.
சுடுதண்ணி
சிரித்து விட்டேன். டீச்சர் சொன்ன மாதிரி புய புள்ளைங்க கிட்ட பேசாமா இருந்து விட்டால் நல்லது தான் போலிருக்கு.
அப்புறம் நண்டு கருவாடு விட்டுப் போச்சு. உங்க விமர்சனத்தைப் பார்த்து ஐயோ வடை போச்சேன்னு சொல்லிக்கிட்டுருககேன்.
சுந்தர் பொய் பேசாதீங்க.... ஏற்கனவே தமிழ் மண நட்சத்திர வாரத்தில் ரவி இடுகையில் நீங்க போட்டது இன்னமும் எனக்கு சூட்டை கௌப்பிக்கிட்டு இருக்கு....
ம்ம்ம்.... பழம் பால்ன்னு நடிகர் நடிகை பேட்டியை படிப்பது போல் இருக்கு. காரம் சாரமா இரண்டு நாளைக்கு ஒரு முறை கத்திரிக்காய் புளிக்கொளம்பு சாப்பிடலைன்னா வெறியே வந்து விடும் போலிருக்கு.
வாழ்க் நீங்க.
அன்பின் திரு. ஜோதிஜி,
புரட்டாசி மாதம் விரதத்தை கலைத்து விடுவீர்கள் போல உள்ளதே. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காரைக்குடியை சேர்ந்த ஒரு நண்பர் இருந்தார் எனக்கு அவர் இப்போது கோயமுத்தூரில் இருக்கிறார். பிரதி புதன்கிழமை அவர் கொண்டு வரும் காரைக்குடி அசைவ சாப்பாடு இன்றும் நினைவில் உள்ளது. தற்போது நீங்கள் அந்த சாதத்துக்கு ஏங்க வைத்துவீட்டிர்கள்.
இப்படி ரசனையோடு எழுதி வாயில் எச்சில் ஊற வைச்சிட்டீங்களே...
நீங்கள் சிறுவயதில் கூர்ந்து கவனித்த விசியங்களை அருமையாக அனுபவித்து ரசனையோட சுவைபட எழுதி, எங்களை உங்கள் எழுத்துக்கு அடிமையாக்கி விட்டிர்கள் வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றி.
தலைவரே, நான் பரிசோதனை முயற்சியாக அசைவத்தை விட வேண்டும் என்று நினைத்து கடந்த ஒரு வாரமாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். இப்படி படம் படமா போட்டு எழுதி நாக்கில் எச்சில் ஊற வைத்து விட்டீர்களே:(
பதிவு அட்டகாசம்...
இவ்வளவு வேகமாக நீண்ட............இடுகை.அருமையும் கூட. புளியேப்பம் உள்ளவர்களுக்குக்கூட பசியேப்பம் விட வைத்துவிடும் உங்கள் இடுகை. பகிர்வுக்கு நன்றிங்க.
புரட்டாசியும் அதுவுமா....இப்படி ஒரு இடுகை...விரதம் ..மறந்துபோய்டும் போல இருக்கிறது......ஜோதிஜி...எது எழுதினாலும் ஒருதனித்துவம் தெரிகிறது...
//15 மாதங்களாக ஓடிக் கொண்டு இருக்கும் வாய்க்கால் வரப்பு சண்டை...
'தண்ணீர் தண்ணீர்' என்று ஒரு நாடகம் நினைவுக்கு வருகிறது.
நானும் சுவைத்’தேன்! என்னோட கருத்து இந்த சாப்பாட்டு விசயத்தில எப்போதும் மாடரேட்டா இருந்துகிட்டா இப்படி அள்ளிக் கட்டவும் வேணாம், பொறவு சுத்தமா ஒதுங்கி ஓடவும் வேணாம். என்னன்னிக்கும் ஆசைப் படும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் நாக்கில தடவிக்கலாம் பாருங்க.
வீட்டிற்கு சாப்பிடக் கூப்பிட்டது மாதிரி இருக்கு, ஜி!
@ ரவி மேலே சொன்னது உங்களுக்கும்தான்... :) எஞ்சாய் மேன் (மாடரேட்டா)!
அப்பாதுரை தண்ணீர் தண்ணீர் விட இந்த கதை பெரிசுங்க............
தெகா
உங்கள் விமர்சனம் கலைஞரின் டைமிங் சென்ஸ் ஞாபகப்படுத்தியது,
கண்ணகி அங்கேயும் இதே நிலைமைதானா? ஊரு முழுக்க கசாப்புக்கடை மக்கள் இந்த புரட்டாசி மாதத்தை திட்டத் செய்வார்கள்.
முத்து நீங்கள் கொடுத்த விமர்சனம் குறித்து கடைசி தலைப்பில் பார்க்கவும். விசயம் உள்ளது.
ரவி என்னாச்சு. நீங்க சுத்துற சுத்துல கொஞ்சம் ரெண்டு துண்டாவது இறக்கத்தானே வேண்டும். சும்மா பொளந்து காட்டுங்க ரவி.
தமிழ்உதயன் நீங்களும் விரதமா?
எந்தப்பக்கம் பார்த்தாலும் இதே தான் நண்பா...
எங்க ஊரு சாப்பாட்டை எனக்கும் கொடுத்திருக்கீங்க... :-)
ரோஸ்விக் உங்க ஊரு அல்ல நம்மூரு. சரிதானே.
அன்பின் ஜோதிஜி - நீண்ட பதிவு - அத்தனையும் தகவல்கள் அனைத்தையும் உள்ளடக்கிய பதிவு - 10 ஆண்டுகளாக சைவ சாப்பாடு சாப்பிடும் நீங்களா இப்படி தூள் கெளப்புறீங்க. அட்டகாசம் போங்க ! படங்களுடன் தேவையான அளவு விளக்கங்களுடன் எழுதப்பட்ட் பதிவு - அருமை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
சீனா அய்யா மீண்டும் ஒரு முறை நானும் வநது ரசித் தேன் ருசித் தேன்
Post a Comment