என்னுடைய வாழ்க்கையில் நான் படித்த புத்தகங்கள் எத்தனை ஆச்சரியங்கள் தந்ததோ அந்த அளவிற்கு தினந்தோறும் சந்தித்துக் கொண்டுருககும் மனிதர்கள் எப்போதுமே ஏராளமான ஆச்சரியங்களை தந்து கொண்டே தான் இருக்கிறார்கள். நான் இருக்கும் ஏற்றுமதித் துறையில் புழங்கிக் கொண்டுருக்கும் யூரோ, அமெரிக்கன் டாலர், பிரிட்டன் பவுண்ட் இது போக மற்ற நாட்டு பண பரிவர்த்தனைகள் அத்தனையும் கையாண்டு கொண்டுருப்பது எவரும் மெத்தப்படித்த மேதாவிகள் அல்ல. பெரும்பாலும் ஒவ்வொருவரும் அவர்களின் சிறு வயதில் திருவிழாக்களில் விரும்பிய டாலர் செயின் கூட வாங்க முடியாமல் தவித்தவர்கள் தான்.
ஒவ்வொரு நாளின் காலை முதல் இரவு வரைக்கும் உள்ளூர் தொடர்புகளும் வந்து இறங்கிக் கொண்டுருக்கும் சர்வதேச தொடர்புகளுமாய் பார்த்துக் கொண்டு இருக்கும் இந்த வாழ்க்கை என்பது மிக அழகானது. டென்ஷன், கோபம், எரிச்சல், ஏமாற்றம், தவிப்பு, பொறாமை, குரோதம் என்று எத்தனை சங்கடங்கள் இருந்தாலும் இவை அத்தனையும் தினமும் ஏதோ ஒன்றை கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
இப்போதும் ஊருக்குச் செல்லும் போது அங்கே உள்ளே வாழ்ந்து கொண்டுருப்பவர்கள் இருப்பிடம், உறக்கம், உணவு இது மூன்றுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கையை முடித்துக் கொண்டு விடுகிறார்கள். ஆனால் 300 கிமீ தொலைவில் எத்தனை எத்தனை மாற்றங்கள்?. மற்றவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத ஏராளமான அனுபவங்களை உள்வாங்க வைத்துக் கொண்டு தான் இருக்கிறது.
தன்னம்பிக்கை, உழைப்பு, தொடங்கி அதிர்ஷடம்,ஜோதிடம், எண்கணிதம்,கைரேகை போன்ற பல கண்களுக்கு தெரியாத சக்திகளை நான் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் அவர்கள் வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கை அனுபவம் மூலமாக உணர்த்திக் கொண்டுருக்கிறார்கள். .
நண்பர் சொன்னது போல "ஏதோ ஒன்று". ஆனால் இந்த நம்பிக்கைகள் தான் இன்று பலருக்கும் முதலீடு போடச் தேவையில்லாத லாபம் கொழிக்கும் தொழில். இன்று நீங்கள் தொலைக்காட்சி விளம்பரத்தில் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை தலைநகர் பெயரை நினைவுபடுத்திக் கொண்டுருப்பவர்கள் முதல் கலைஞர் குடும்பம் முதல் வளர்ந்து கொண்டுருக்கும் கஞ்சா கருப்பு வரைக்கும் இத்தனையும் நம்பித்தான் ஆக வேண்டும் என்று வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கை வெகு ஜனம் அறியாத ஒன்று. எல்லோருமே இறுதியில் சொல்லும் ஒரே வார்த்தை "உழையுங்கள் முன்னேறலாம்.", ஆனால் இந்தியாவில் 120 கோடி மக்களுக்கும் உழைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவரவர்களுக்கு தெரிந்தவகையில். ஆனால் நான் இருக்கும் ஊரில் தன்னுடைய குழந்தைகளுக்கு தேவைப்படும் ஒரு சான்றிதழ் வாங்க பல வாரம் காத்து இருக்க வேண்டிய கொடுமையும் உண்டு. தகுதியில்லாதவர்கள் அத்தனை பேர்களும் நமக்குத் தலைவர்களாக இருக்கும் வரையிலும் நாம் அடைந்து கொண்டு இருக்கும் துன்பம் அளவில்லாமல் போய்க் கொண்டு தான் இருக்கிறது. அது போன்ற சூழ்நிலையில் வாழும் மக்களுக்கு இறுதியில் இந்த நம்பிக்கைகள் தான் வாழ்க்கையின் வழித்துணையாக மாறிவிடுகின்றது.
இது போன்ற கலைகளை நம்பி வாழ்ந்தவர்களும் உண்டு. இதை மட்டுமே நம்பி கெட்டு அழிந்தவர்களும் உண்டு.
இது போன்ற கலைகளை நம்பி வாழ்ந்தவர்களும் உண்டு. இதை மட்டுமே நம்பி கெட்டு அழிந்தவர்களும் உண்டு.
தொடக்கத்தில் எதையும் கவனிக்கத் தேவையில்லாமல் காலங்கள் ஓடிக் கொண்டு இருந்தது. காரணம் வறுமையில்லாத இளமைப் பருவம்., அதுவே வாழ்ந்து கொண்டு இருந்த சமூக அனுபவங்களை கவனிக்கத் தெரியாமல் கடந்து வந்தாகி விட்டது.
என்னை சமூகத்தில் நிலை நிறுத்திக் கொள்ள அவசரமாய் கடக்க வேண்டியதாய் இருந்தது. வேலை மற்றும் குடும்ப வாழ்க்கை,
விரும்பிய தொழில் வாழ்க்கை வரை ஒவ்வொன்றும் வந்து சேர்ந்தது. ஆனால் இன்று ஒவ்வொரு நிமிடத்தையும் மிக ஆழமாக உள்வாங்கும் இந்த சூழ்நிலையில் மனதில் இருக்கும் வியப்பு மாறாமல் தான் இருக்கிறது.
என்னை சமூகத்தில் நிலை நிறுத்திக் கொள்ள அவசரமாய் கடக்க வேண்டியதாய் இருந்தது. வேலை மற்றும் குடும்ப வாழ்க்கை,
விரும்பிய தொழில் வாழ்க்கை வரை ஒவ்வொன்றும் வந்து சேர்ந்தது. ஆனால் இன்று ஒவ்வொரு நிமிடத்தையும் மிக ஆழமாக உள்வாங்கும் இந்த சூழ்நிலையில் மனதில் இருக்கும் வியப்பு மாறாமல் தான் இருக்கிறது.
முதல் இருபது வருடங்களில் குடும்பத்தினர் என் மேல் வைத்திருந்த பல கவலைகளில் என்னுடைய இறை மறுப்புக் கொள்கை. அது வெறும் கொள்கையாக இருந்தாலும் கூட பராவாயில்லை. இறை கொலையாக இருந்த காரணத்தால் நான் செய்து கொண்டுருந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் குடும்பத்தினரின் சமூக அந்தஸ்து மிகவும் பாதிக்கப்பட்டது.
வந்து சொல்லக்கூடியவர்கள் அத்தனை பேர்களும் கொண்டு வரக்கூடிய முக்கிய குற்றச்சாட்டு கூட்டாளி நாதாரிகளுடன் சேர்ந்து கோவிலில் உடைக்கும் சிதறு தேங்காய் எடுத்து தின்று கொண்டு இருக்கின்றான்.
அவர்களைப் பொறுத்தவரையிலும் அது தோஷம் கழித்த ஒரு நிகழ்வு. அதுவே என்னுடைய பார்வையில் தின்று தீர்க்க வேண்டிய ஒன்று. என்னுடன் இருந்த அத்தனை பேர்களும் அப்படித்தான் திக்கு தெரியாமல் திரிந்தோம். ஊருக்குள் இருக்கும் வரையிலும் அப்படித்தான் வாழ்ந்தோம். கொள்கை கொண்ட அத்தனை பேர்களும் இன்று மாறிவிட்டார்கள். தாமதமாக என்றாலும் நானும் கூட மாறித்தான் போயுள்ளேன். காரணம் அனுபவங்கள்.
சதையும் இரத்தமும் நரம்புமாய் வாழும் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களையும் அவர்களின் அனுபவம் தான் முதலில் தீர்மானிக்கிறது. கற்றுத் தந்த ஆசிரியர்களை விட, கற்றுக் கொள்ள உதவிய புத்தகங்களை விட இந்த அனுபவங்கள் தான் ஒருவரை தலைவராக மற்றொருவரை தறுதலையாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது..
ஆனால் ஆரம்பம் முதல் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்த கோவிந்த ராஜன் இன்று தென்னக ரயில்வேயில் உயர்பதவியில் இருந்தாலும் தான் வைத்திருந்த கொள்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் அவன் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றான். அவன் பத்தாவது படிக்கும் போது சொன்ன தத்துவம் இன்றும் கூட மனதில் பசுமையாக நிற்கிறது.
" உன்னை கடவுள் என்பவர் ஏதாவது கேட்டாரா? உன்னை வேலை செய்யக்கூடாது என்று சொன்னாரா? வந்து படையல் வை என்று வீட்டுக்குள் வந்து கேட்டாரா? போடா....... போய் வேலையைப் பாருங்கடா................"
அறிவுரை யாருக்கும் சொல்ல மாட்டான். ஏன்? யாரிடமும் அளவுக்கு அதிகமாகக்கூட பேசமாட்டான். அவர்கள் குடும்பத்தில் நடக்கும் சடங்ககுகளில் கூட கடமைக்கு என்று நின்று கொண்டு இருப்பான். திருநீறு பூசி விட்டு எப்போதும் போல அவன் இயல்பான வேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டுருப்பான். இறை குறித்து எந்த வாக்கு வாதமும் செய்து பார்த்தது இல்லை. அவர்கள் குடும்பத்தினர் கவலைப்பட்டாலும் தொந்தரவு இல்லாத அவன் கொள்கை இன்று வரையிலும் தடுமாறாமல் நல்ல உயர்ந்த பதவியில் இருக்கின்றான். அவன் தான் எங்கள் செட்டில் கடைசியாக திருமணம் செய்து கொண்டவன்.
40 வயதில் கொஞ்சம் அலட்டிக் கொள்ளாமல் எந்த தவறும் செய்யாமல் அல்லது விரும்பாமல் இன்று வரைக்கும் எனக்கு அதிக ஆச்சரியத்தை தந்து கொண்டு இருப்பவன். பத்தாவதுக்குப் பிறகு தொழில் நுட்ப கல்லூரி முடித்து சென்னையில் உறவினர் வீட்டீல் அவமானத்துடன் தங்கியவன். எதையும் பொருட்படுத்தாமல் தங்கியிருந்த இடத்தில் இருந்து சைக்கிள் ரயில் மீண்டும் சைக்கிள் மூலமாக பயணம் செய்து தொடக்கத்தில் 350 ரூபாய்க்கு ரெட்ஹில்ஸ்லில் வேலை செய்தவன். ரயில்வே பரிட்சை எழுதி ஒவ்வொரு படியாக உயர்ந்து வந்தவன். திருமணம் குறித்து கவலைப்படாமல் இருந்தவனைப் பார்த்து குடும்பத்தினர் தான் தேடி அலைந்து கடைசியாக விசாகபட்டினத்தில் இருந்து பெண் பார்த்து திருமணம் முடித்தார்கள்.
நான் முன்னோடிகளாக வைத்து இருப்பவர்களில் அவனுக்கு எப்போதுமே முதலிடம் உண்டு. ரயில்வே துறையில் ஐ ஆர் எஸ் என்ற உயர் பதவிக்கு பரிட்சை எழுத அவனுக்கு முக்கிய தகுதிகள் அத்தனையும் உண்டு. அவன் எழுதினால் கூட ஒரே தடவையில் தேர்ச்சி பெற்று வரக்கூடியவன். செய்ய மாட்டான். காரணம் இந்த பகுதியில் இடையே பார்க்கலாம்.
திரு. முத்து முருகேசன்.(MUTHU MURUGESON), எப்போதுமே தன்னுடைய பெயரை தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் எழுதக்கூடியவர். இந்த பெயர் தான் என்னுடைய மொத்த வாழ்க்கையையும் திசை திருப்பிய பெயர்,
2001 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நான் தங்கியிருந்த அறைக்கு உள்ளே வந்தவர் அறிமுகப்படுத்திய நபர். அப்போது இவர் மதுரையில் திருநகரில் தன்னுடைய வீட்டில் வாழ்ந்து கொண்டுருந்தார். நம்பிக்கைகளுக்கும் உழைப்புக்கும் இடையே போராடிக் கொண்டுருந்த என்னுடைய அன்றைய திருப்பூர் வாழ்வில் எதிர்பாரா திடீர் திருப்பமாக இவருடைய அறிமுகம் கிடைத்தது.
" உங்கள் மனக்குழப்பங்கள் தீர வேண்டும் என்றால் இவரைப் போய்ப் பாருங்கள் " என்று நண்பர் ஒரு முகவரியைக் கொடுத்து விட்டு நகர்ந்து விட்டார். கல்லூரி சமயத்தில் ஒரே ஒரு சமயம் தொலைந்து போன பரிட்சைத் தாளை தேடி வந்த மதுரைக்கு இப்போது இரண்டாவது முறையாக திருப்பூரில் இருந்து பயணம். முகவரி கண்டு பிடித்து வீட்டுக்குள் நுழைந்த போது கதர் ஜிப்பா மற்றும் நாலு முழ வேட்டி அணிந்துருநத அந்த ஒல்லியான உருவம் என்னை வரவேற்றது. வீடு முழுக்க புத்தக குவியல் தான் அதிகம் தெரிந்தது. அவர் மனைவி காபி கொடுத்து விட்டு ஒதுங்கி விட்டார்.
திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று விரட்டிக் கொண்டுருந்தவர்களை மீற முடியாமலும் என்னுடைய லட்சியங்கள் பாதி அளவில் இருந்த காரணத்தாலும் ஒரு வழிகாட்டல் தேவையாய் இருந்தது. ஆன்மீகம் சார்ந்த எண்ணங்களும், இந்த “ உலகில் உழைப்புக்கு அப்பாற்பட்டு ஏதோ ஒன்று இருக்கிறது ” என்பதை உணர்ந்து கொண்டு இருந்த நேரத்தில் தான் இவரைச் சந்தித்தேன். மூன்று முறை தொழில் ரீதியான வெளிநாட்டுப் பயணங்கள் தட்டிப் போய்விட், மூதலிடு போட்டு உட்கார வைத்து அழகு பார்க்க காத்துருந்தவர் தடுமாறி நின்று விட் இதே போல் அடுத்தடுத்து சூறைக் காற்றும் சூறாவளியும் தொடர்ச்சியாக அடித்துக் கொண்டே இருக்க யோசித்த தருணங்கள் அது.
அவரின் வழிகாட்டல் என்னுடைய வாழ்க்கையை தீர்மானிக்கத் தொடங்கியது.
அவருடன் பேசி முடித்து விட்டு, அவரைப் பற்றி எதுவுமே தெரியாமல் அவர் கொடுத்த நம்பிக்கையை மட்டும் சுமந்து கொண்டு வந்த என்னை எப்போதும் போல திருப்பூர் வாழ்க்கை மறக்கடித்து விட்டது. திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்து பெயர் வைக்கும் சூழ்நிலையில் தான் மறுபடியும் அழைத்தேன். எவர் அழைத்தாலும் அத்தனை சீக்கிரம் வெளியே சென்று விடாத மனுஷன், மறு நாள் திருப்பூருக்கே வருகின்றேன் என்று வீட்டுக்குள் வந்தவர் என்னுடைய மறுமலர்ச்சி அத்தியாயத்தின் தொடக்கப் பககங்களை எழுதத் தொடங்கினார்.
அப்போது தான் அவர் யார்? அவர் பின்புலம் என்ன? என்று ஒவ்வொன்றாக புரிபடத் தொடங்கியது. ஓய்வு கிடைத்த ஒரு சனி ஞாயிறு முழுக்க உரையாடலில் தான் கழிந்தது...அவர் கற்று வைத்திருந்த வித்தைகளை விட அவர் பேசி மடக்கி அவர் வழியில் கொண்டு செலுத்த ஆரம்பித்தார். என்னுடைய அறிவியல் கருத்துக்கள் சற்று மூச்ச வாங்க ஆரம்பிக்க வாழ்க்கை ஆணிவேரின் பிடிமான்ம் அன்று முதல் தான் ஆழமாய் ஊன்றத் தொடங்கியது. அரசியல் இரும்புகளையே கரைத்துப் பார்த்தவர். என்னைக் கரைக்க அதிக நாள் எடுத்துக் கொள்ளவில்லை.
என்னை அவருக்குப் பிடித்ததை விட நான் எப்போதும் விரும்பும் அரசியல் துறை ஆசானாக அமைந்த காரணத்தால் வந்தவரை ஒரு வாரம் தங்க வைக்க மனைவி என்னை வினோதமாக பார்த்தார். நட்பு வட்டாரம் என்பது முழுவதும் நின்று குழந்தைகள் மட்டுமே உலகமாக வாழ்ந்து கொண்டுருந்த வனுக்கு அவர் மேல் நான் காட்டிய அக்கறையும் மரியாதையும் அவளை ஆச்சரியப் படுத்தியது.
இரட்டைக்குழந்தைகளுடன் அல்லாடிக் கொண்டுருந்தவளுக்கு இவர் அடிக்கடி விரும்பும் தேநீர் பழக்கம் எரிச்சலைத்தந்தாலும் என்னை சகித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டுருந்தவளுக்கு இவரையும் சகித்தே ஆக வேண்டிய சூழ்நிலை., காரணம் எனக்கும் அதே பழக்கம்.
அதுவரைக்கும் அத்தனை அரசியல் விசயங்களையும் பத்திரிக்கைகளில் மட்டுமே படித்துக் கொண்டு ஒரு விதமான உத்தேச கொள்கையோடு வாழ்ந்து கொண்டுருந்த எனக்கு இவர் ஒரு மூத்த பத்திரிக்கையாளராக இருந்த காரணத்தால் என்னை அவரிடம் மிக நெருக்கத்தில் கொண்டு போய் நிறுத்தியது.
அப்போது தங்கியிருந்த வீட்டின் மொட்டை மாடியில் வேலை முடித்து சோர்வோடு வந்த பொழுதெல்லாம் முழு ராத்திரி முழுக்க இவருடன் பேசி விட்டு மறுநாள் தூங்காமலேயே அலுவலகத்திற்கு சென்று விடும் பழக்கமும் உருவாகத் தொடங்கியது. .
அக்மார்க் காந்தியவாதி. இன்று வரையிலும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ஒரு தமிழ் திரைப்படத்திற்கு தேவைப்படும் அத்தனை சுவாரஸ்யங்களும் திடீர் திருப்பங்களும் இவரது வாழ்க்கையில் உண்டு. இறுதியில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒரு தனி மனித ஆளுமையால் மொத்த வாழ்க்கையும் மாறிப்போய் 1990க்குப் பிறகு தான் நேசித்த பத்திரிக்கை உலகத்தை மொத்தமாக கை கழுவி விட்டு இன்று திருப்பூரில் மகன் வீட்டில் வசித்துக் கொண்டுருக்கிறார்.
இவரால் உயர்ந்தவர்களும், இவர் நெருக்கமாக சந்தித்த இந்திரா காந்தி,எம்.ஜீ.ஆர்,கலைஞர் என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு. ஆனால் அத்தனையும் விட ஈழப்போராட்டத்தில் பங்கெடுத்த அத்தனை இயக்கம் சார்ந்த நபர்களும் அடங்குவர். ஈழத்தின் 1970 க்குப் பிறகு சிறிது பெரிதுமாக அடுத்த ஏழு ஆண்டு ஏறக்குறைய 36 இயக்கங்கள் உண்டு என்பதை படித்தவர்களும் களத்தில் பங்கெடுத்தவர்களுக்கும் தெரியும். அதில் பல இயக்கங்கள் வரலாற்றுப் பக்கங்களில் இடம் கிடைக்காமல் மூழ்கிப் போனவர்களும் உண்டு. அதில் பல பேர்கள் இவரின் எழுத்துக்கு ஆதரவாளர். சிறீ சபாரெத்தினம், பாலகுமார்,உமா மகேஸ்வரன் போன்றவர்கள் இவருடன் மதுரையில் இரண்டு நாட்கள் வெவ்வேறு காலகட்டத்தில் தங்கியிருந்தவர்கள்.
இதுவரைக்கும் ஈழம் குறித்து எழுதிய 70 சதவிகித எழுத்தாளர்கள்கள் பெரும்பாலும் புத்தக அறிவு மூலமாகத்தான் தங்களது படைப்புகளை எழுதியிருப்பர்.
ஆனால் இவர் எழுதிய "இரத்தத்தால் நனையும் தமீழீழ கொள்கை" என்ற கட்டுரைகள் (1988) அன்றைய தினத்தில் விளம்பரம் இல்லாமல் விற்றுத் தீர்த்த பத்திரிக்கையின் செல்வாக்கு பழைய பத்திரிக்கை நண்பர்களுக்கு தெரியக்கூடும். எந்த வித புத்தக அறிவும் இல்லாமல் அத்தனையும் சந்தித்த நபர்களின் வாக்குமூலங்களை வைத்தே உருவாக்கியவர். இவரை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே இலங்கையில் இருந்து வந்தவர்கள் அநேகம் பேர்கள். அதிலும் விடுதலைப்புலிகளின் வரலாற்றில் தொடக்கத்தில் உருவான சர்ச்சை நிறைந்த ஆளுமையின் காரணமாக பல நூறு முஸ்லீம் மக்கள் தினமும் இவரை வந்து சந்திப்பது அன்றாட வாடிக்கை.
ஒரு நாட்டின் வராலாற்றுப் புத்தகத்தை படித்தால் அந்த நாட்டில் வாழ்ந்து கழித்த அனுபவத்தை படிப்பவர்களுக்கு தரக்கூடும். அதைப் போலவே இவரின் மொத்த வாழ்க்கையையும் தெரிந்து கொள்பவர்களுக்கு வேறு சில அனுபவங்களைத் தரக்கூடும்.
26 comments:
இரண்டு மூன்று கருத்துக்களை ஒன்றாக கொடுக்கும்போது கவனம் சிதறுகின்றது. தொடர்ச்சியாகப் படிக்க சிரமமாக இருக்கிறது.
நல்லதொரு பகிர்வு.
முத்து முருகேசன் - நான் இதுவரை அறிந்திராத பெயர்.
நல்ல விவரங்கள் ஜோதிஜி.
இரண்டு முறை வாசிக்க வைத்த பதிவு
நன்றி.
அருமையான பதிவு.திரைமணம் மகுடம் சூட்டப்பட்டதற்கு பாராட்டுக்கள்
நீண்ட நாட்களுக்குப் பிறகு கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கதை கேட்டத் திருப்தி.
டாக்டர் கந்தசாமி ஐயா
நீங்கள் சொல்வது உண்மை தான். மொத்த விசயங்களையும் கோர்வையாக தனித்தனியாக சொல்ல வேண்டும் என்றால் இந்த வாரத்திற்குள் முடிக்க முடியாது. மேலும் ஒவ்வொன்றுக்கு இடையே ஓராயிரம் செய்திகள் உண்டு. அது அத்தனையும் தெரிந்து கொள்ள எவரும் விரும்ப மாட்டார்கள். அதிகபட்சம் மூன்று நிமிடங்கள் ஒதுக்கி ஓட்டமாய் ஓடி விடும் இந்த வலையுலகில் இந்த சங்கடத்தை எனக்ககாக சகித்துக் கொள்ளுங்கள். உங்கள் வருகைக்கு நன்றி ஐயா.
கண்ணன் வருவார்ன்னு தெரியும். டீச்சர் கூட வந்துட்டீங்க. நன்றிங்க.
வாங்க செந்தில்குமார். திரைமணம் மகுடம். இது பற்றி ஒன்று தெரியவில்லையே....
புயல் வேகத்துல பதிவுகள். ஆச்சர்யமான அதிசயம். உங்க வேகத்துக்கு பின்னூட்டமிட முடியல.///
இருப்பிடம், உறக்கம், உணவு இது மூன்றுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கையை முடித்துக் கொண்டு விடுகிறார்கள்///.
அவர்களும் சந்தோஷமாகவே இருக்கிறார்கள்.
உலகில் உழைப்புக்கு அப்பாற்பட்டு ஏதோ ஒன்று இருக்கிறது ” ///
இருக்கலாம்.ரஜினி சொன்ன மாதிரி, இந்த எண்ணம் நமக்கு அடிமையாக இருக்க வேண்டும். நமக்கு எஜமான் ஆகி விடக்கூடாது. அப்படியானால் நமக்கே பாதிப்பு.
பல்வேறு மனிதர்களையும் அவர்களின் குணாதியங்கள், திறன்களை அறிந்துகொள்ளும்போது நம் வாழ்க்கையும் செப்பனிடப்படுகிறது. நன்றி!
நான் அறியாத மனிதர்,நான் அறியாத விவரங்கள்.உங்களின் பகிர்வு என்னை ஏதோ செய்கிறது.என் வாழ்கையில் இப்பொழுது உங்கள் வாழ்கையின் பிரதிபலிப்பு நண்பரே.அனுபவ செல்வத்தை தேடியலையும் ஒரு பித்தன் மற்றவருக்கு பைத்தியகாரனாக.......
உங்களின் அனுபவங்கள் என்னையும் வாழ்கையை முழுவது வாழ்ந்து தீர்க்க தூண்டுகிறது.உங்கள் அனுபவங்களை இன்னும் இன்னும் நிறைய எழுதுங்கள் நண்பரே!
தொடர்ந்து உங்கள் தனித்தன்மை வாழ்வியல் நடவடிக்கைகளில் வெளிப்படுகிறது..
வாழ்த்துகிறேன்
//தகுதியில்லாதவர்கள் அத்தனை பேர்களும் நமக்குத் தலைவர்களாக இருக்கும் வரையிலும் நாம் அடைந்து கொண்டு இருக்கும் துன்பம் அளவில்லாமல் போய்க் கொண்டு தான் இருக்கிறது.//
உண்மைதான் சார்.ஆனால் எல்லாம் ஒருநாள் மாறும் என்ற சிறு நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டுயிருக்கிறோம்.
முத்து முருகேசன் நான் இதுவரை கேள்விப்பட்டது இல்லை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி பகிர்வுக்கு நன்றி சார்.
நம்மையே நாம் நமக்குள் கேள்விகள் கேட்க ..விடை தெரியா நம்முடைய அலைதலில் அல்லது தேடுதலில் யாரோ ஒருவர் நமக்கு முதல் முன்னோடி.அந்த வகையில் உங்களுக்கு முத்து... தொடருங்கள் ஜோதிஜி வாழ்த்துகள்
நல்ல பகிர்வு...
அருமையான பதிவு.
வணக்கம் நண்பா.!
ஆச்சிரியமா இப்படி அசாதாரணமான மனிதர்களை நடப்புக்குள் வைத்திருப்பது மிகப் பெரும் விஷயம் தான்....
எண்பதுகளில் புலிகள் பயிற்சி களம் அமைத்து பயிற்சி செய்த போது அவர்களுடன் நெருக்கமாக இருந்த பயிற்சியிலும்
கலந்து கொண்ட ஒரு இளைஞன் பின்பு எனக்கு ராணுவப் பள்ளியில்(SAINIK SCHOOL) அறிவியல் ஆசானாக இருந்தார்...!
:) :)
ஆறாம் வகுப்பிலே எனக்கு அவர் மீது ஒரு பிரியம் உண்டு....
ஆறாம் வகுப்பு மாணவன் தமிழீழம் பற்றி பேசுகிறானே என்று என் மீது தனி பாசம் வைத்திருந்தார் அவர்....
பதிவு அருமை...!
இறை மறுப்பு கொள்கையை கண்மூடித் தனமாக பின்பற்றுபவர்களுக்கே குழப்பம் வர வாய்ப்பு உண்டு நண்பா......
ஒரு அப்பாற்பட்ட சக்தி உண்டு என்று கண்டிப்பாக நம்ப வேண்டித் தான் ஆக வேண்டும்.......
அதற்க்கு உடல் பொருள் ஆவி உண்டாக்கி பெயர் சூட்டும் வேலை எனதில்லை....
முன்னோர்களை வழிபடுவதில் நான் மதிப்பிற்க் குரிய ஒரு செயலாகவே பார்க்கிறேன்
அப்படியே நம்ம எல்லை சாமிகள் அத்தனைக்கும் முன்னோர்களை தேடி தேடி போனால்
முருகன் வந்து நிர்ப்பார்...........
ஆதி தமிழனை பார்த்து கை கூப்பி வணக்கம் வைக்க எப்போதும் நான் அசிங்க பட்டதில்லை
கொள்கை கொளைமாங்காய் என்று மனதை குழப்புவதில்லை........
முத்து.முருகேசன் இதுவரை நானும் அறிந்திராத பெயர் ...
நிறைவாக செல்லும் எழுத்தில் மனது லயிக்கிறது ...
ஒரு அப்பாற்பட்ட சக்தி உண்டு என்று கண்டிப்பாக நம்ப வேண்டித் தான் ஆக வேண்டும்.......
இந்த எண்ணம் நமக்கு அடிமையாக இருக்க வேண்டும். நமக்கு எஜமான் ஆகி விடக்கூடாது
ஆதி தமிழனை பார்த்து கை கூப்பி வணக்கம் வைக்க எப்போதும் நான் அசிங்க பட்டதில்லை
மனிதர்களையும் அவர்களின் குணாதியங்கள், திறன்களை அறிந்துகொள்ளும்போது நம் வாழ்க்கையும் செப்பனிடப்படுகிறது
நம்மையே நாம் நமக்குள் கேள்விகள் கேட்க ..விடை தெரியா நம்முடைய அலைதலில் அல்லது தேடுதலில் யாரோ ஒருவர் நமக்கு முதல் முன்னோடி
அனுபவங்கள் என்னையும் வாழ்கையை வாழ்ந்து தீர்க்க தூண்டுகிறது
தனித்தன்மை வாழ்வியல் நடவடிக்கைகளில் வெளிப்படுகிறது..
எழுத்தில் மனது லயிக்கிறது
எல்லாம் ஒருநாள் மாறும் என்ற சிறு நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டுயிருக்கிறோம்.
இரண்டு மூன்று கருத்துக்களை ஒன்றாக கொடுக்கும்போது கவனம் சிதறுகின்றது.
கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கதை கேட்டத் திருப்தி.
இரண்டு முறை வாசிக்க வைத்த பதிவு
1983 ஜூலை 24 ஆம் திகதி ஐ.தே.க.முதன்மை பயங்கரவாதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா.
" சிங்கள அபிலாஷய இடு கரமி ரட தெகட கடன்னட இட நொதிமி"
("நான் சிங்கள மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவேன்.நாடு இரண்டாக துண்டாடப்படுவதற்கு இடமளிக்க மாட்டேன்.)
(28.ஜுலை 1983 ஜே.ஆர்.ஜெயவர்தனா “நாட்டு மக்களுக்கு”தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினியில் ஆற்றிய உரையிலிருந்து)
1981 இல் யாழ் நூலகத்தை எரித்தது தொடக்கம் தமிழரின் 10,000 மேற்பட்ட வீடுகள் சிங்கள பயங்கரவாதிகளால் கொள்ளையிட்டதுவரை இவரது கைங்கரியமே !
பல அரிய விஷயங்களை just like that மேலோட்டமாகக் கடந்து சென்றிருக்கிறீர்கள்... எனவே நாம் விரிவாக - விவாதமல்ல - நீங்கள் பேச நான் கேட்க வேண்டும்... பார்க்கலாம்! என்று கைகூடுமென்று! நானும்கூட இன்று நூலறுந்த பட்டம் போலத்தான் சுற்றிக் கொண்டிருக்கின்றேன்
தமிழ்மண விண்மீனுக்கு வாழ்த்துகள்!
அரிய தகவல்களை அறிய முடிந்தது!
நன்றி!
வாங்க அத்திவெட்டி ஜோதிபாரதி.
உங்கள் முதல்வருகைக்கும் உங்கள் வாழ்த்துக்கும் நன்றிங்க.
அன்பரசன் எளிமையான் விமர்சனத்திற்கு நன்றி.
ராசா
வர வர நீ எழுதுவதை விட விமர்சனம் செய்வதில் ராஜநடராஜன் போலவே பலே கில்லாடியாக இருக்கிறாய். புரிகிறது. உரையாட முடியவில்லை. கடைசி தலைப்பில் புரிந்து கொள்வாய்.
ஹேமா ஜெ என்று எழுத்து ஆரம்பித்தாலே தமிழ்நாட்டில் மட்டுமல்ல இலங்கையிலும் சற்று வில்லங்கமாகத்தான் இருப்பார்கள் போல....
தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கின்றேன். கடைசி தலைப்பில் சந்திப்போம்.
உங்ககிட்ட இருந்து நான் நிறைய உள்வாங்க வேண்டியிருக்கிறது. வாழும் சூழல் வெகுதொலைவில் என்னை பிரித்து வைத்திருக்கிறது. சமயம் வரும்போது சந்திக்க விரும்புகிறேன். உங்களது கட்டுரைகளில் இருந்து நான் நிறையத் தெரிந்துகொண்டு இருக்கிறேன்.
இங்கு செலவிடும் நேரங்களை நான் பக்குவம் சம்பாதித்த நேரங்களாகவே பார்க்கிறேன். இது உண்மை...
//ஒரு நாட்டின் வராலாற்றுப் புத்தகத்தை படித்தால் அந்த நாட்டில் வாழ்ந்து கழித்த அனுபவத்தை படிப்பவர்களுக்கு தரக்கூடும். அதைப் போலவே இவரின் மொத்த வாழ்க்கையையும் தெரிந்து கொள்பவர்களுக்கு வேறு சில அனுபவங்களைத் தரக்கூடும்.//
அருமையாக சொல்லி இருக்கீங்க.
ஒரு நாட்டின் வராலாற்றுப் புத்தகத்தை படித்தால் அந்த நாட்டில் வாழ்ந்து கழித்த அனுபவத்தை படிப்பவர்களுக்கு தரக்கூடும்.//
நிஜம்.
நல்லதொரு அறிமுகம்..
// கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு. //
இதுவே உங்களின் சிறப்பை பறைசாற்றுகிறது...
வாழ்த்துகள்
Post a Comment