இந்த புகைப்படங்கள் மின் அஞ்சல் வாயிலாக நண்பர் அனுப்பி இதைப் பற்றி எழுதுங்கள் என்று சொல்லியிருந்தார். உங்களில் பலருக்கும் இது வந்து சேர்ந்து இருக்கலாம். எனக்கு இந்த புகைப்படங்கள் சிலவற்றை உணர்த்தவும் . உறுத்தவும் செய்கின்றது. .
ஆன்மீகம் குறித்தோ அல்லது அவசரமான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு கடவுள் மறுப்பாளர்கள் போல் நான் எதையும் சொல்லப் போவதும் இல்லை.
இறை உணர்வு என்பது அனுபவத்தில் வருவது அல்லது அனுபவித்த பிறகு உருவாவது. வாழ்வின் கடைசி வரைக்கும் அது போன்ற எண்ணங்கள் வரவில்லை என்று சொல்லக்கூடியவர்கள் உண்மையிலே மேன்மக்கள் தான்.. இன்று வரையிலும் நான் சந்தித்த அத்தனை பேர்களிடத்திலும் ஏதோவொரு அச்சம் இருப்பதால் நெருக்கடியான சாலையை அடைத்துக் கொண்டுருக்கும் தெரு முனை பிள்ளையார் முதல் உண்டியல் வைத்து பிழைப்பு நடத்து ஆ சாமிகள் வரைக்கும் நன்றாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
கோடீஸ்வர்ரகள், லட்சாதிபதிகள்,அன்றாடங்காய்ச்சிகள் எவரும் விதிவிலக்கல்ல. பேரம் பேசுவது போல் கோவிலுக்குச் சென்று உள்ளே வாதாடிக்கொண்டுருப்பவர்களைக் காட்டிலும் வெளியே காத்து இருக்கும் பிச்சைகாரர்கள் தான் என் பார்வையில் சிறப்பாக தெரிகிறார்கள். நேற்றைய கவலையில்லை. நாளைய ஏக்கமில்லை. இன்று? உள்ளே நுழைபவர்கள் கொடுத்தால் மகாராஜா அவர்களும் எதுவும் கொடுக்காவிட்டால் கிடைக்கும் உருண்டைச் சோறு. துறவிக்கு அழகு மெலிதல். ஆனால் இன்று துறவி வேடம் போட்டவர்கள் தான் சுண்டக் காய்ச்சிய பாலில் சுக ஜீவனம் நடத்திக் கொண்டுருக்கிறார்கள்.
இங்கு ஒவ்வொரு செவ்வாய் வெள்ளியன்றும் தெருவை நாஸ்தி செய்து உடைபடும் சிதறு தேங்காய்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. திருஷ்டி கழிக்கப்பட்டவைகளின் மீது மோதி வழுக்கி இரவில் வேகமாக செல்லும் வாகனங்களில் இருந்து விழுபவர்களின் எண்ணிக்கையும் நின்றபாடில்லை.
கோடீஸ்வர்ரகள், லட்சாதிபதிகள்,அன்றாடங்காய்ச்சிகள் எவரும் விதிவிலக்கல்ல. பேரம் பேசுவது போல் கோவிலுக்குச் சென்று உள்ளே வாதாடிக்கொண்டுருப்பவர்களைக் காட்டிலும் வெளியே காத்து இருக்கும் பிச்சைகாரர்கள் தான் என் பார்வையில் சிறப்பாக தெரிகிறார்கள். நேற்றைய கவலையில்லை. நாளைய ஏக்கமில்லை. இன்று? உள்ளே நுழைபவர்கள் கொடுத்தால் மகாராஜா அவர்களும் எதுவும் கொடுக்காவிட்டால் கிடைக்கும் உருண்டைச் சோறு. துறவிக்கு அழகு மெலிதல். ஆனால் இன்று துறவி வேடம் போட்டவர்கள் தான் சுண்டக் காய்ச்சிய பாலில் சுக ஜீவனம் நடத்திக் கொண்டுருக்கிறார்கள்.
இங்கு ஒவ்வொரு செவ்வாய் வெள்ளியன்றும் தெருவை நாஸ்தி செய்து உடைபடும் சிதறு தேங்காய்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. திருஷ்டி கழிக்கப்பட்டவைகளின் மீது மோதி வழுக்கி இரவில் வேகமாக செல்லும் வாகனங்களில் இருந்து விழுபவர்களின் எண்ணிக்கையும் நின்றபாடில்லை.
ஆனால் நம்பிக்கைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் வித்யாசம் பார்க்கத் தெரியாத கூட்டம் பெருகிக் கொண்டுருப்பது முதல் ஆச்சரியம். ஆனால் கீழே கூட்டத்தில் இருக்கும் அத்தனை பேர்களும் படிப்பறிவு இல்லாத பாமரன் என்று உங்களால் நினைக்கத் தோன்றுகிறதா?
மேதாவிகள். இது தான் ஆச்சர்யமான சோகம்.
மேதாவிகள். இது தான் ஆச்சர்யமான சோகம்.
கிராமத்து பாமரன் போற வழியில் இருக்கும் வேப்பமரத்தில் இருப்பதாக நம்பிக் கொள்ளும் முனியை நினைத்துக்கொண்டு அடுத்த வேலைக்கு போய்க் கொண்டுருக்கின்றான். அவனுக்கு நித்தியும் தேவையில்லை. அவர் படங்களில் காட்டும் "சக்தி" யும் தேவையில்லை.,
ஆனால் ???
நித்தியின் சேவையால் பதிவுலகம் களை கட்டியது? எல்லாவிதமான ஊடகங்களும் ரவுண்டு கட்டி இலவச தரிசனத்தை காட்டி கல்லாவை நிரப்பிக் கொண்டார்கள்.
இவரைப் பாருங்கள்? என்ன குறை?
இபிகோ,ரஞ்சிதா,லெனின்,ரெய்டு,வெட்கம்,அவமானம், களங்கமான ஆன்மிக உணர்வு, இந்து மதம், மத காப்பாளர்கள் என்னவாயிற்று.?
"காட்டிய" அவருக்கும் வெட்கமில்லை
.
"படத்தை" காட்டியவர்களுக்கும் சொரணையில்லை,
.
மொத்த ஊடக தர்மம் ????. அப்படி ஒன்று இருக்கிறதா என்ன?
இந்த கூட்டத்தில் புதிதாக லெனின் உருவாகாத வரைக்கும் அடுத்த ரஞ்சிதாக் களின் சேவைகள் வெளிவரப்போவதும் இல்லை. நமக்கும் அடுத்த படுக்கை அறை காட்சியைப் பார்க்க வாய்ப்பு வரப்போவதும் இல்லை.
இவர் தான் உண்மையிலேயே நண்பர் சொன்ன காமம் கடந்த ஆள்.
21 Ft ANANDHA LINGAM PRANA PRATHAKSHA BY PARAMAHAMSA NITHYANANDA @ BANGALORE ON 25.07.10
இதுவும் இந்தியாவில் நடந்து கொண்டுருக்கும் சிகிப்புத்தன்மை உள்ள ஆன்மிக உணர்வு உள்ள படம் தான்.
50 comments:
படங்களுக்கு நன்றி.
நித்தியைப் பார்க்கக் காத்திருக்கக் கூடியிருக்கும் கூட்டத்தை நினைத்தால் தான் சிரிப்பாக இருக்கிறது.
//பேரம் பேசுவது போல் கோவிலுக்குச் சென்று உள்ளே வாதாடிக்கொண்டுருப்பவர்களைக் காட்டிலும் வெளியே காத்து இருக்கும் பிச்சைகாரர்கள் தான் என் பார்வையில் சிறப்பாக தெரிகிறார்கள்.//
உண்மை. உங்களின் இக் கருத்து எனக்கு மிகவும் உடந்தையானது. பகிர்வுக்கு நன்றி . வாழ்த்துக்கள்
நித்தி 'லிங்க'த்துக்கு அபிஷேகம் பண்றார்! இதிலென்ன ஆச்சர்யம்?! ஹா..ஹாஹ்ஹா
ஆகக்கூடி நித்தி தனக்கு வந்த சோதனைகளை வென்று விட்டார் என்று தோன்றுகிறது.
//நித்தி யின் சக்தியைக் காட்டும் புகைப்படங்கள் //
உண்மை தான் .
பேராசைகள், அபிலாசைகள் இருக்கும் வரை (போலி) ஆன்மிக சந்தைக்கும் குறைவு இருக்காது.
அடப்பாவிங்களா!! :(
சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை:(
கோவியார் சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு!
முன்னாள் எம்.எல்.ஏ, இன்னாள் எல்லாம் நித்தியை சந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் உடல் நலக் குறைவை நித்தி, நிவர்த்தி செய்ததாக கூறுகிறார்கள்.
நாமெல்லாம், இளிச்சவாயர்கள், பிழைக்கத் தெரியாதவர்கள்.
சான்ஸ் கிடைச்சா, நாமும் 'நித்தி'யாவும் என்பதுதான் நிதர்சனம்:)
kodumai than
so sad...
//அப்ப நாமெல்லாம்?//அடுத்த போலி சாமியாரின் தவறுக்கு காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.
இயற்கையோடு இறையை புரிந்து கொள்ளாதவரை இந்த தொல்லை நீடிக்கவே செய்யும்
இன்கே பின்னோட்டம் போட்டவர்கள் புனிதம் என்னை புல்லரிக்க வைக்கிறது...
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள். கட்டாயம் உத்தமர்கள் தான் அப்போ இரு இந்து சாமியார்கள் கொலை குற்றத்தில் கைதான போது உங்கள் எதிர்ப்பை காட்டி இருந்தால்!!!
இங்கு பின்னோட்டம் போட்டவர்களில் யாரெல்லாம் அந்த கைதை ஆதரித்து எழுதினீர்கள்.
சூத்திர சாமியார் என்றால் ஏன் எல்லோரும் குதிரை ஏருகிறீர்கள்? இந்த இரு இந்து சாமியார்கள் கொலை குற்றத்தில் கைதான போது உங்கள் எதிர்ப்பை காட்ட முடியாமல் போனது என்ன?
சொல்லுங்கள்... கோழைகளே!!!!
இன்கே பின்னோட்டம் போட்டவர்கள் புனிதம் என்னை புல்லரிக்க வைக்கிறது...
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள். கட்டாயம் உத்தமர்கள் தான் அப்போ இரு இந்து சாமியார்கள் கொலை குற்றத்தில் கைதான போது உங்கள் எதிர்ப்பை காட்டி இருந்தால்!!!
இங்கு பின்னோட்டம் போட்டவர்களில் யாரெல்லாம் அந்த கைதை ஆதரித்து எழுதினீர்கள்.
சூத்திர சாமியார் என்றால் ஏன் எல்லோரும் குதிரை ஏருகிறீர்கள்? இந்த இரு இந்து சாமியார்கள் கொலை குற்றத்தில் கைதான போது உங்கள் எதிர்ப்பை காட்ட முடியாமல் போனது என்ன?
சொல்லுங்கள்... கோழைகளே!!!!
//நித்தி யின் சக்தியைக் காட்டும் புகைப்படங்கள் //
உண்மை தான் .
காமம், பக்தி எல்லாம் அவரவர் விருப்பம்.
ஜனங்கள் ஏமாற தயாராக இருக்கும் போது, அரசியல்வாதிகளும், சாமியார்களும் பாவம் என்ன செய்வார்கள்.
ஏமாற்றுபவரை விட ஏமாறுபவரை தான்............... நிரப்பி கொள்ளுங்கள்.
கடைசியில் நீங்களும் நித்தியின் வலையில் விழுந்து விட்டீர்கள். சரியா ஜோதிஜி.
கடைசி படம் அருமை நண்பா
காலம் இப்படியே இருக்காது. தவறிழைத்தவர்களுக்குக் கண்டிப்பாகத் தண்டனை உண்டு.
நித்தியின் அடுத்த பெண் தேடும் படலம் தொடரும். என்ன அவருடைய தேவையை பூர்த்தி செய்ய பல பெண்கள் வரிசையில் நிற்க இப்பவே தொடங்கிவிட்டார்கள். எத்தனை வீடியோ வந்தாலும் யாருக்கும் எதை பற்றி கவலையில்லை. காம லீலைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். நல்லதொரு பதிவு வாழ்த்துக்கள் தோழரே.
பதிவுக்குக் கீழே ஷேரிங் பட்டன்களை இணையுங்கள். வாசகர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களுடன் இடுகையைப் பகிர உதவியாய் இருக்கும். கடைசிப் படம் பல சேதிகளைச் சொல்லாமல் சொல்கிறது. நிச்சயம் பகிர வேண்டிய இடுகை.
மூன்றாவது படத்தில் சிவப்பு சால்வையுடன் இருப்பது ராஜபக்சாவா?
எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு .ஆனால் மூடநம்பிக்கை இல்லை.
இன்று ஆன்மிகம் என்று தேடும் பலர் சொந்த வாழ்க்கையில் தாம் செய்த பாவங்களை கழிக்க பாவமன்னிப்பு கேட்கிறார்கள் ஆக்கும் ,
எல்லோரையும் சொல்லவில்லை ,சிலரை சொல்கிறேன்.
--வானதி
அட பாவிகளா நேற்றுதான் இவனைப்பற்றி செய்தி ஒன்றும் இல்லையே என நினைத்தேன்
அதற்குள் வந்து விட்டான்
இவனை வெளியே விட்டதே தவறு
அன்புடன்
நெல்லை நடேசன்
துபாய்
கடைசிப்படம் அருமை.
கடைசி போட்டோ சூப்பர் :)
கடைசியில் நிற்பவளுக்கு புர்காவை 'போடவிடப்பட்டுள்ளது' என்பதுதான் உண்மை..அவள் இஸ்லாத்தைச் சார்ந்தவள் இல்லை..
ஓ....நீங்க நித்தி ஆளா ஜோதிஜி !
படங்கள் எல்லாம் தெளிவா அழகா இருக்கு.
ரசிச்சு எடுத்துப் போட்டிருக்கீங்க.
கடைசிப் படம் தேச ஒற்றுமைன்னு வச்சுக்கலாமே !
என்னத்த சொல்ல...
கடைசிப்படம் மட்டுமே என்னை கவர்ந்தது....
எம்மாடி எவ்ளோ பெருசு!
இதை பார்த்து தான் ஏமாந்துருச்சோ அந்த பொண்ணு!
LAST PICTURE IS BEST ONE, THIS LADY TAKING HIS SON FOR SCHOOL COMPETITION THERE IS NOTHING WRONG. IF TMMK FEELS BAD, TEL THEM TO GO TO AFGNNISTAN, THERE TALIBAN CALLING THEM. IN INDIA WE ALL ARE SAME,WE SHOULD NOT THINK LIME IDIOTS. YOU NEED NON MUSLIM TEACHERS, SCHOOLS AND ...ETC.
THERE IS NOTHING WRONG WHEN THE KIDS WHO DO NOT KNOW ANYTHING ABOUT GODS WEARING DIFFERENT MAKE UP,
I BEG THE SO CALLED TMMK CHANGE YOURSELVES OTHER WISE YOU WILL BE VIPED OUT FROM TAMIL NADU.
MOST OF MEMBERS OF TMMK IS PIRATED CD SELLERS.
கடைசியில் உள்ள படம் சிந்திக்க வைக்கிறது.
என்னத்த சொல்ல...! கடைசிப்படம் ஏதாவது தேர்தல் சமயத்தில் "ஜெய் கோ" பாட உதவும். ஆனால், குஜராத்தின் காயங்களை மறக்கடிக்க போதுமானதா தெரியவில்லை. ஊருக்கும் வெட்கமில்லை, உலகுக்கும் வெட்கமில்லை. இதில் நித்திக்கு மட்டும் என்ன வந்தது.
என்ன நண்பா,
திடீர்னு நித்தி மேல கோபம்???
ரஞ்சிதாவின் ஆரம்ப கால திரைப் படம் ஏதும் பாத்தீங்களா என்ன???
:) :) :) :) :) :)
ஏறத்தாழ ஒரு பதினைந்து வருடம் கடந்துவிட்டது கோவிலுக்கு சென்று.....
பெரிதாக ஈர்ப்பொன்றும் வரவில்லை.....
விவரம் தெரியாத வயதில் அம்மாவுடன் பஜனை கூட்டங்களில் எல்லாம் கலந்திருக்கிறேன்......
ஆசிரியமாகதான் இருக்கு.........
நண்பிகளின் ஆசைகளுக்காக கோவில் வரை சென்று..அவர்கள் தரிசனம் முடித்து வரும் வரை வெளியில் காத்திருந்த சம்பவங்கள் நிறைய...........
ஆனாலும் பிடித்த கடவுள் பட்டியலில் முருகனும் மற்றும் தமிழின காக்கும் தெய்வங்கள் அனைத்தும் உண்டு...
இன பற்று என்று கூட கொள்ளலாம்...
:)
கடைசி படம் ஒன்னும் பெரியதாக கவன ஈர்ப்பு செய்யவில்லை.!
ஆதிக்க சக்திகளின் கடவுளின் வேஷத்தை ஒரு சிறுபான்மை இனத்து குழந்தை இட்டிருப்பதை
பார்க்க சகிக்கவில்லை......
ஊடகங்கள்தாம் எவ்வளவு முயல்கின்றன...
ஆதிக்க சமூகத்தின் அடையாளங்களை பரப்ப????
ஏன் அவர்கள் அவர்களாகவே இருக்கும் போது ஒற்றுமை இல்லையா???
இப்படிதான் வெளிச்சம் போட்டு காண்பிக்க வேண்டுமா????
உங்கள் வலைதளத்தில் இந்த புகைப்படத்தை பார்ப்பதுதான் சற்று அதிர்ச்சி...
மாட்டிக்காம தப்பிச்ச சாமிகள் ஏராளம்.....
மாட்டிகிட்டு முழிச்ச சாமிகள் தாராளம் (நம்ம காஞ்சிபுரத்து பயலுகதான் ) :)
இவரு மாடிகிட்டாலும் தப்பிச்சி வந்து நிக்கிறாரு பாருங்க...
அங்கதான் அவருக்கு நாம ராயல் சல்யுட் அடிக்கணும் :)
இந்த கூட்டத்தில் புதிதாக லெனின் உருவாகாத வரைக்கும் அடுத்த ரஞ்சிதாக் களின் சேவைகள் வெளிவரப்போவதும் இல்லை. நமக்கும் அடுத்த படுக்கை அறை காட்சியைப் பார்க்க வாய்ப்பு வரப்போவதும் இல்லை.
நித்தி அலை அடிந்து ஓய்ந்து விட்டது. எப்போதும் பின்னூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் பதில் அளிப்பது என் வழக்கம். மக்கள் வந்து என்னை கும்மி விடுவார்கள் என்று நினைத்தேன்.
வால் பையன் கூட நாகரிகமாக ஒதுங்கி விட்டார்.
கண்ணன் டீச்சர் சொன்னது போல் போலி ஆன்மிகத்தை சுட்டிக் காட்டுவதே என் நோக்கம்.
நிறைய புதிய நண்பர்கள் பின்னூட்டத்தின் வாயிலாக அறிமுகம் ஆகி உள்ளார்கள் உங்கள் அணைவருக்கும் நன்றி.
ஹேமா தமிழ் உதயம்...........
ஒரு வகையில் நானும் நித்தியின் ரசிகன் தான். காரணம் லெமூரியன் சொன்ன விமர்சனத்தைப் பாருங்க.........
விஜய் கோபால் சாமி உங்கள் அக்கறைக்கு நன்றி. உருவாக்கி உள்ளேன்.
ரதி சில விசயங்களை நம்மால் உரத்துப் பேச முடியாது. ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் ஒரு அரசியல் கண்க்கு உள்ளது. இந்தியா மட்டுமல்ல. சர்வதேச அரசியலும் இப்படித்தான்........
நடேச்ன்
உங்கள் விமர்சனத்தை படித்து விட்டு பலமுறை சிரித்துக் கொண்டே இருந்தேன்.
வானதி நீங்க என்ன புதுசா பீதியை கௌப்புறீங்க.....
விடுதலை வீரர் பெயரே அம்சமா இருக்குங்க...
அம்பி உங்கள் இடுகையைப் படித்தேன். உங்கள் தைரியம் எனக்கு கொஞ்சம் ஆச்சரியம் சற்று பயம்....
பின்னோக்கி நீங்கள் சொல்வது உண்மைதான்....
கந்தசாமி ஐயா நீங்க சொன்னது உண்மைதான்...
செந்தில் உங்களுக்குச் சிரிப்பா இருக்கு. இங்கு நண்பர் என்னை வறுத்தெடுத்து விட்டார்.
விந்தை ராஜா உன்னோட டைமிங் சென்ஸ்க்கு ஒரு அளவே இல்லையா..........
சர்வேசன், தெகா.....
நானும் உங்களைப் போலத்தான் ஆச்சரியப்பட்டு போனேன்......
சரவணன்.... உங்கள் உடந்தையான கருத்து தான் நான் பின்பற்றும் ஆன்மீகம்...
பேரம் பேசுவது போல் கோவிலுக்குச் சென்று உள்ளே வாதாடிக்கொண்டுருப்பவர்களைக் காட்டிலும் வெளியே காத்து இருக்கும் பிச்சைகாரர்கள் தான் என் பார்வையில் சிறப்பாக தெரிகிறார்கள்//
செம சூப்பர் ஜோதிஜி
muslim are terrorist. the last picture very clearly shows that they can do anything they want
Mr. Ananymus, I condemed your unnecessery comments on muslims.
This article declared your believes are blind.
Think about your scriptures and its faiths.
திருப்பூரில் இருந்து இப்படியொரு பிளாக் வருவது நன்று! நம் மக்களுக்கு வித்தியாசமாக ஏதாவது செய்தால்தான் முண்டியடித்து வருவார்கள் என்றுணர் ந்து பல சாமியார்கள் ரூம்போட்டு யோசித்து வித்தியாசமாக செய்து பக்தர்களை கவர்கிறார்கள். நித்தி இதை ஜெயிலில் இருக்கும்போது யோசித்து செயல்படுத்தியுள்ளார்...ஆயிரம் பெரியார்கள் வ ந்தாலும் நம் மக்களை காவிகளின் பின்னே செல்வதை தடுக்கமுடியாது..
ம்ம்ம்... பி.எஸ்.வீரப்பாவின் வசனமே நினைவுக்கு வருகின்றது. :(
ஹாலிவுட் பாலாவின் வலைத்தளத்திற்கு எப்படிப் போவது.. பழைய முகவரியில் அவரது பக்கத்தைக் காணோமே.. யாராவது சொல்லுங்களேன்..
சாமக்கோடங்கி
பாலா தளத்தை நீக்கி விட்டார்.
கனாக்காதலன் என்ன வசனம் அது?
ஈஸ்வரன் உங்கள் வருகைக்கு நன்றி.
இறை உணர்வு என்பது அனுபவத்தில் வருவது அல்லது அனுபவித்த பிறகு உருவாவது. வாழ்வின் கடைசி வரைக்கும் அது போன்ற எண்ணங்கள் வரவில்லை என்று சொல்லக்கூடியவர்கள் உண்மையிலே மேன்மக்கள் தான்.. இன்று வரையிலும் நான் சந்தித்த அத்தனை பேர்களிடத்திலும் ஏதோவொரு அச்சம் இருப்பதால் நெருக்கடியான சாலையை அடைத்துக் கொண்டுருக்கும் தெரு முனை பிள்ளையார் முதல் உண்டியல் வைத்து பிழைப்பு நடத்து ஆ சாமிகள் வரைக்கும் நன்றாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்...அபாரமான சிந்தனைங்க.
I agree with you, Sir.
//அப்ப நாமெல்லாம்?//
இது தெரியாதா?? கே..............
அத விடுங்க சார்.. சொல்ல வந்ததை மிகத் தெளிவாக கூறியுள்ளீர்கள்
அவருக்கென்ன, ஜம்முன்னு லிங்கத்திற்கு பாலபிசேகம் பண்றார், பண்ணுவார்.. ( டபுள் மீனிங்ல நான் பேசலப்பா ;
))))
நித்தியானந்தத்தைவிட மோசமான பாதிரிகளும், முசல்மான்களும் இருக்கிறார்கள்.... அவர்களைப்பற்றி யாருமே செய்திகள் (இந்த அளவு) வெளியிட தயங்குகிறார்கள்.... இரு மதத்தினர் காதலித்ததை படம் எடுத்த மணிரத்னம் வீட்டிற்கு குண்டு!... இன்னமும் குறிப்பிட்ட ஜன சமூகத்தை போட்டுக் குழப்பும் உதயகுமாருக்கு அரசு செய்யும் கைமாறு... (கைமாறு என்றால் உதவியல்ல!..)பழைய போப் டெல்லி வந்து 2000 ற்குள் இந்தியாவில் இந்துக்களே இல்லை எனுமளவு நீங்கள் (கிறித்துவர்களைப்பார்த்து) உழைக்கவேண்டும்!.. என்று கட்டளையிட்டது.... முதலிய எதைப்பற்றியாவது விரிவாய் அலசுவீரா?!...
தளத்தில் மதத்திற்கு அப்பாற்பட்ட எல்லாநிலையிலும் எல்லா மதங்களைப் பற்றியும் என் பார்வை உண்டு. படித்துப் பாருங்கள்.
Post a Comment