Wednesday, February 17, 2010

அமைதிப்படை(IPKF) உருவாக்கிய பாதை

 திலீபன் இறந்த சமயத்தில் நான் அங்கு பயணப்பட்டேன்.  அந்த செய்தி அப்போது தான் பொது மக்கள் மத்தியில் தாக்கத்தையும் இந்தியாவின் மீது சொல்லமுடியாத எரிச்சலையும் அதிகப்படுத்தியிருந்தது.  விடுதலைப்புலிகள் கையில் ஒப்படைக்கப்பட்ட பண்டத்தரிப்பு என்ற இடத்தில் மக்கள் ஏராளமாக கூடியிருந்தனர்.  அவர்கள் இறப்பு நிகழ்ச்சிக்கு கூடினார்கள் என்பதை விட அடுத்து என்ன நடக்கப்போகின்றதோ என்ற அச்சம் தான் முக்கியமாக இருந்தது.

ஆனால் அடுத்த நாள் புலிகள் தரப்பில் மக்களைக் கூட்டி ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.  கூட்டத்தின் இறுதியில் அமைதிப்படை அதிகாரிகளிடம் மகஜர் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுருந்தது.  ஆனால் அதிகாரிகள் அதை வாங்க மறுத்தனர்.  பலாலிக்குச் செல்லும் அத்தனை பாதைகளிலும் இராணுவ முகாமும், வீரர்களின் தலைகளைத் தாண்டித்தான் அலுவலகத்தை சென்று அடைந்தனர்.  அதிகாரிகள் எவரும் மக்களின் தார்மீக கோபத்தையோ, அவர்கள் கொண்டு வந்த மகஜர் குறித்து அக்கறை ஏதுமின்றி    "  உங்களை காப்பதற்குத் தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம்.  மகஜர் தேவையில்லை "  என்று மறுக்க ஆசேமடைந்த பொதுமக்கள் கல்வீச்சில் இறங்கினர்.  அங்கே தேவையில்லாத பதட்ட சூழ்நிலை உருவானது.
புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் சண்டை தொடக்கம் பெற்ற போது இருதரப்பில் கடுமையான சேதம் உருவான செய்திகள் வரத்தொடங்கிய போது கயட்ஸ் தீவுக்கு வந்து விட்டேன்.   மூளாய்க்கும், காரைநகர் கடற்படைத்தளத்திற்கும் இடையே இருந்த கடல்பாலத்தை புலிகள் தாக்கி அழித்து இருந்தனர்.  அப்போது சிங்கள இராணுவத்தினர் அந்த பாலத்தை உருவாக்குவதில் ஈடுபட்டுக்கொண்டுருந்தனர்.  காரணம் அப்போது அங்கு கடுமையான உணவுப் பஞ்சம்.  விலைகள் மூன்று மடங்காக தாறுமாறாக ஏறத்தொடங்கியது.

ஒரு மழை ஓய்ந்துருந்த போது திடீர் என்று வந்து இறங்கிய இந்திய இராணுவத்தினர் ஹெலிகாப்டலில் இருந்தபடியே காரைநகர் தளத்தில் இருந்து குண்டு வீசத் தொடங்கினர்.  அரைமணி நேரத்திற்குப் பிறகு தான் அந்த புகைமூட்டத்தில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள ஓடத்தொடங்கினார்கள்.  தங்களை காப்பாற்றிக்கொள்ள அருகில் இருந்த கோவிலுக்குள் சென்ற மொத்த மக்களையும் சுற்றி வளைத்து, பரிசோதனை செய்யப்பட்டு இறுதியில் 35 பேர்களை பிரித்து சுட்டுக்கொன்றனர்.  பிடியில் இருந்த பெண் கற்பழிக்கப்பட்டதும், அவர் அன்றே தூக்கில் தொங்கியதும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  இந்த இடத்தில் இருந்து புலிகள் யுத்தம் தொடங்கிய போதே வெளியேறி விட்டார்கள்.  வெளியேறியவர்களை, உள்ளே தான் இருக்கிறார்கள் என்றபடி வந்தவர்கள் அடைந்த ஏமாற்றமும் அதுவே இறுதியில் வானொலியில் தீவு கைப்பற்றப்பட்டது என்றும் ஒலிபரப்பப்பட்டது.

மொத்தமாக ஒவ்வொரு இடத்திற்கும் கமாண்டர்கள் வருவதும், மொத்த மக்களையும் கூட்டத்தை ஒரு இடத்தில் நிறுத்தி " உங்களில் புலிகள் எவராவது இருந்தால் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள்" என்ற கேட்டு இறுதியில் ஏமாற்றத்துடன் சிலரை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டுப் போய் அடித்து உதைத்து பாதி வழியில் விட்டுவிட்டு சென்று விடுவதும் தொடர்ச்சியாக நடந்து கொண்டுருந்தது.

நடு இரவில் வழி தெரியாமல் வந்த ஒரு இராணுவ சிப்பாய், பேசிய ஹிந்தி மொழி புரியாமல் மொத்த மக்களும் சூழ்ந்து கொண்டு காப்பாற்றி கொண்டு வந்து சேர்த்தனர். அவர் பேசியதே பரிதாபமாக இருந்தது.  மூன்று நாட்களாக சாப்பிட வழி இல்லாமல், மறுபடியும் முகாம்க்கு போக வழியும் தெரியாமல் இருந்தவரை கொண்டு வந்தவரை அவர் பயந்து போய் வானத்தைப் பார்த்து சுட ஆரம்பித்தார்.  இவர் இருப்பதை கேள்விப்பட்டு புலிகள் வந்து சேர அவர்களை சமாதானப்படுத்தி பொதுமக்கள் அனுப்பி வைத்தனர்.  அவர் பேசிய ஆங்கிலத்தில், இலங்கை இந்திய ராணுவத்தின் மொத்த பயமும், இந்தியாவிற்கு திரும்பிச் செல்ல எப்போதும் செல்ல தயாராய் இருக்கும் துயர வாழ்க்கையும் புரிந்தது.

கயிட்ஸ் தீவில் உணவுப்பஞ்சம் கடுமையாக இருக்க யாழ்பாணம் சென்று விடலாம் என்று நினைத்தோம்.  நெடுந்தீவு மக்கள் பட்டினியால் செத்துக்கொண்டுருந்தார்கள். அப்போது இலங்கை கடற்படையினர் தங்களின் உணவுகளை சிறிதளவு கொடுத்து உதவினார்கள். அப்போதைய சூழ்நிலையில் யாழ்பாணம் முழுக்க இந்திய இராணுவம் வைத்ததே சட்டம்.  அவர்களைப் பார்த்தவுடன் சைக்கிளில் சென்றாலும் இறங்கி நடந்து செல்ல வேண்டும்.  குறிப்பிட்ட தூரத்தில் இருந்து கைகளை தூக்கியபடியே செல்ல வேண்டும்.  ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் அவர்களே உடம்பு முழுக்க சோதனை என்ற பெயரில் அவர்கள் செய்யும் வக்கிரங்கள் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது.

புலிகளை பிடிக்கிறோம் என்று கைகளில் படங்களை வைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக வீரர்கள் உள்ளே வரும் போது மக்கள் மொத்தமாக பயந்து கொண்டு வீட்டின் பின்புறம் வழியாக தப்பி ஓடி மறைவும் அன்றாட நிகழ்ச்சியாய் இருந்தது.  யாழ்பாணம் முழுக்க கடுமையான பஞ்சம் நிலவியது.  எவரும் அன்றாட பணிகளைக்கூட செய்ய முடியாமல் துன்பப்பட்டனர்.  மண்டை தீவுக்கு அருகே இந்தியா ஒரு பெரிய போர்க்கப்பலை நிறுத்தியுள்ளனர்.  மீனவர்களை மீன்பிடிக்கு அனுமதிப்பது இல்லை.

யாழ்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கு வந்து சேர்ந்தேன்.  வழியெங்கும் இராணுவ முகாம்களும், அவர்களின் சோதனைகளும் தாண்டி வர வேண்டியதாய் இருந்தது.  யாழ்பாணத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு போக வேண்டுமென்றால் கச்சேரி என்ற இடத்தில் போடப்பட்டு இருந்த இராணுவ முகாமில் போய் அனுமதிசீட்டு வாங்க வேண்டும்.  தங்க வசதிகள் இல்லாத காரணத்தால் சர்ச்சிலில் அடைக்கலம் கிடைத்தது.  காலையில் வவுனியா செல்ல திட்டமிட்டேன்.

கிளிநொச்சியில் ENTLF ( THREE STARS CAMP) தனியாக முகாம் அமைத்துள்ளார்கள்.  புலிகளுக்கு எதிரான மற்ற இயக்கங்களை ஒன்றாக இணைத்து இந்திய இராணுவத்தின் பாதுகாப்புடன் மொத்த சோதனைகளும் அவர்கள் மூலம் நடந்து கொண்டுருந்தது.   அவர்கள் தாண்டி எவரும் சென்றுவிடமுடியாது.  வவுனியாகவுக்கு வரும் வழியில் மாங்குளத்துக்கு அருகே சுமார் 1500 சீக்கியர்கள் கொண்ட முகாம் இருந்தது.  இது போக மொத்தவழியிலும் மொத்தமாக இராணுவ தலைகளாகவே தென்பட்டது.  உடன் இருக்கும் இலங்கை காவல்துறைக்கும் இந்திய இராணுவத்தினர்களுக்கும் முட்டல் மோதல் தொடர்ந்து கொண்டே இருந்ததை பார்க்கமுடிந்தது.

பேரூந்து வரும் வழியில் ஓமந்தை கிராமத்தில் இருந்த மொத்த வீடுகளையும் இந்திய இராணுவத்தினர் ஆக்ரமித்து குடியேறியிருந்தனர்.  அவர்கள் கேம்பில் பரிசோதனைகள் என்ற பெயரில் ஆண் பெண் பேதம் இன்றி ஆடைகளுக்குள் கையை விட்டு வக்ரத்தை நிறைவேற்றிக்கொண்டுருந்தனர்.  வவுனியா நகரை வந்தடைந்த போது ஏழு முறை பரிசோதனைகளும், இடையில் நிறுத்தி அடையாள கேள்விகளும் முடிந்து சேர்ந்த போது மூச்சு திணறியது.  வழக்கமாக இரண்டு மணிக்கு சற்று குறைவாக வந்தடைய வேண்டிய தூரத்தை பரிசோதனைகள் காரணமாக 6 மணிக்கு மேலாக கடந்து வந்து அடைந்த போது ஆயாசமாக இருந்தது.

வவுனியா நகரில், இந்திய இராணுவத்தினர், இலங்கை இராணுவத்தினர், இந்திய மத்திய ரிசர்வ் போலிஸ், இலங்கை போலிஸ், இது போக விடுதலைப்புலிகளுக்கு எதிரான த்ரி ஸ்டார் போராளிக்குழுக்களின் கேம்ப் என்ற எங்கு பார்த்தாலும் இவர்களின் தலைகள் தான் அதிகமாகத் தெரிந்தது.   இது போக மாலை 4 மணி முதல் மறு நாள் காலை 6 மணி வரையிலும் மொத்தமாக இங்கு ஊரடங்குச் சட்டம் வேறு அமலில் இருந்தது.  வரும் வழியில் த்ரி ஸ்டார் போராளிக்குழுக்கள் பரிசோதனை முடிந்தது ஒவ்வொருவரிடமிருந்து கட்டணம் என்று வாங்கி அப்பட்டமாக கொள்ளையடித்துக்கொண்டுருந்தனர். இலங்கை காவல்துறை போல் இந்த த்ரி ஸ்டார் செயல்பட்டுக்கொண்டுருக்கிறது.

சிங்கள கிராமத்தில் இருந்த சிங்களர்களுக்கும் இந்திய இராணுவத்தினர் மீது பயமாக இருந்தனர்.      " உங்களை காக்க வந்தவர்களே இன்று உங்களை கொன்று குவிக்கிறார்களே?  இவர்கள் எங்களையும் கொன்று விடுவார்களோ? " என்று கிழக்கு மகாண சிங்கள மக்கள் சொன்ன பயம் பொதுவாக அங்குள்ள எல்லோரிடத்திலும் இருந்தது.

புலிகள் மீது மதிப்பும், இந்திய இராணுவத்தினர் அப்பாவி மக்களை தாக்குவதால் தான் புலிகளை அவர்களை திருப்பி தாக்குகிறார்கள் என்ற ஆதங்கம் பொதுமக்கள் மத்தியில் இருந்தது.  அதுவே புலிகளுக்கு மறைமுக ஆதரவாக மாறிக்கொண்டுருந்தது.  யாழ்பாண பொதுமருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர்கள், தாதியர்கள், நோயாளிகளை இந்திய இராணுவத்தினர் வெறியாய் சுட்டுக்கொன்றது மக்கள் மனதில் ஆழமான வடுவாய் போய்விட்டது.
கொக்குவில், உரும்பிராய் பகுதிகளில் பெரும்பாலான வீடுகள் தரைமட்டமாய் இருந்தது.  அழுகிய சடலங்களை எடுக்க ஆள் இல்லாமல் நாறிக்கொண்டுருந்தது.  இலங்கை இராணுவத்தினர் கூட புலிகளைப் பார்த்து, அவர்களைத் தேடி போர் செய்தனர். ஆனால் இவர்களுக்கு தமிழ் மக்கள் எல்லோருமே புலிகளாக தெரிந்தனர்.

யாழ்பாண பல்கலைக்கழக வளாகம் இப்போது மொத்தமாக இந்திய இராணுவத்தினர் கட்டுப்பாட்டில்.  இவர்கள் உருவாக்கிய பிரச்சனையால் மொத்தமாக இந்த பகுதியின் பொருளாதாரமே இன்னும் 25 வருடங்கள் பின்தங்கிடப்போகின்றது என்ற அச்சம் அனைவரிடத்திலும் இருந்தது.  குறிப்பிட்ட நேரம் மட்டும் தான் மின்சாரம். எந்த அடிப்படை வசதிகளும் இராணுவத்தினர் கட்டளையின்படி நடந்தது.  இதற்கிடையே அகில இந்திய வானொலியின் தொடர்ச்சியான பொய்த்தகவல்கள்.

ஈழமுரசு தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதை தொடர்ந்து, சில நாட்களிலேயே சிறிய அளவுகளில் வெளியிடத் தொடங்கினார்கள். காரணம் அகில இந்திய வானொலி ஆகாச புளுகுணியாக ஒலிபரப்பிக்கொண்டுருந்தது.

மொத்தத்தில் மக்கள் அத்தனை பேர்களும், இந்திய இராணுவம் அமைதி என்ற பெயரில் உள்ளே வந்து விட்டது.  இனி இவர்கள் இதைவிட்டு நகர இன்னும் 25 வருடங்கள் ஆகும் என்று அவரவர் தீர்மானமாக நம்பி எதிர்க்கத் தொடங்கினார்கள்.

போர் தொடங்கிய காலத்தில் அங்கு பயணப்பட்ட பெர்ணாண்டஸ் என்ற பத்திரிக்கையாளரின் மொத்த அனுபவத்தின் சுருக்க பகிர்வு.

15 comments:

Anonymous said...

பராரிகளின் ஆட்டம் இன்னமும் தொடர்கிறதே!கொலஞர் வேறு சேர்ந்து கொண்டிருக்கிறாரே?

தமிழ் அமுதன் said...

இந்திய உணர்வை குறைத்து .

தமிழ் உணர்வை அதிகரிக்கிறது பதிவு ..!

ஜோதிஜி said...

அன்றைக்கு ஆடியது ஆடு புலி ஆட்டம். இன்றைக்கு ஆடிக்கொண்டுருப்பது அழுகுணி ஆட்டம்.

ஜோதிஜி said...

தமிழர்கள் மட்டும் சுதந்திரத்திற்கு முன்பு முதல் இன்று வரைக்கும் இந்தியா என்றும் தேச ஒற்றுமை என்றும் வாய்ப்பு கிடைத்தாலும் டெல்லியில் சென்றவுடன் குளிருக்கு போத்திக்கொண்டு பொத்திக்கொண்டு.

ஆனால் மற்ற எந்த மாநிலங்களும் இன்று வரை அவர்கள் முதல் அதற்குபிறகு டெல்லி முதலை.

அகலரயில் பாதை முதல் அணைக்கட்டு வரைக்கும்?
காவேரி முதல் சேது சமுத்திரம் வரைக்கும்.

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள்?

Unknown said...

இலங்கையில் அமைதிப்படை இப்படிப்ட்ட செயல்களை செய்து இருப்பர்கள் என்று நான் எதிர்பார்கவில்லை. இந்த சூழ்நிலையை நினைத்துபர்த்தால் ராஜிவ் கொலையில் எந்த தவறும் காண முடியவில்லை. ராஜிவ் மட்டுமல்ல இதற்கு காரணமான மற்ற அதிகாரிகளுக்கும் அதேபோல இல்லையெனில் அதைவிட கொடுமையாக அவர்களை அவர்களின் குடும்பத்துடன் கொன்று இருக்க வேண்டும். எனெனில் சுயநலத்துடன் பலரை துன்புறுத்தி அவர் தம் குடும்பத்துக்காக தானே பொருள் சேர்த்தனர். சுயநலத்துடன் செயபட்டால் குடும்பத்தினருடன் கொல்லப்பட்வோம் என்பது அதிகாரிகட்கு புரிந்தால் இனி இம்மாதிரி அவலம் செய்ய அஞ்சுவர்.

தமிழ் உதயம் said...

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள்?/////


எத்தனை காலம் தான் ஏமாறுவார்கள்?

இப்போதாவது தமிழர்கள் விழித்து கொள்ள வேண்டும். இல்லை எப்போதுமே விழித்து கொள்ள இயலாமல் போகும். அப்படியே விழித்து கொண்டாலும் புரியோஜனமே இல்லாமல் போகும்.

Jerry Eshananda said...

புகைப்படம் கண்களை குளமாக்குகிறது.

ஜோதிஜி said...

யார் இங்கு விழிக்காமல் இருக்கிறார்கள். ஆனால் தான் விழித்து தெளிவாக இருப்பதாக உணர்ந்து கொண்டு இது தான் சரியான வாழ்க்கை என்று கோட்டுக்குள் வாழ்ந்து கொண்டுருக்கும் போது கேடுகள் தான் தலைமைப் பொறுப்பிற்கு வந்து சேர்கிறது. கேடுகள் கோட்டை அழித்து விடுகிறது. படிப்படியாக நாட்டையும் அழித்துக்கொண்டுருக்கிறது.

ஜோதிஜி said...

1983 க்குப்பிறகு வந்தவர்கள் அத்தனை பேர்களும்

1, தரப்படுத்துதல் என்ற சிங்களர்கள் உருவாக்கிய கேவல மனப்பான்மையால் தடம் மாறியவர்கள்.

2. 1991 வரைக்கும் பள்ளிக்கூட சிறுவர்கள் வந்து கூடும் பூங்காக்கள் வரைக்கும் வந்து அவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றது வரைக்கும் உண்டு.

3. 1991 முதல் அதற்குப்பிறகு திட்டமிட்டதாய் தானாய் போய் சேர்ப்வர்களால் நிரம்பி வழியத் தொடங்கியது ஆசிரியரே.

Thenammai Lakshmanan said...

//சிங்கள கிராமத்தில் இருந்த சிங்களர்களுக்கும் இந்திய இராணுவத்தினர் மீது பயமாக இருந்தனர். " உங்களை காக்க வந்தவர்களே இன்று உங்களை கொன்று குவிக்கிறார்களே? இவர்கள் எங்களையும் கொன்று விடுவார்களோ? " என்று கிழக்கு மகாண சிங்கள மக்கள் சொன்ன பயம் பொதுவாக அங்குள்ள எல்லோரிடத்திலும் இருந்தது..//

இவ்வளவு தூரமா இந்திய அமைதிப்படையின் அட்டூழியம் இருந்தது ஜோதிஜி பயமாய் இருக்கிறது

Anonymous said...

இது அமைதி அழிக்க வந்த குரங்குப்படை. இப் படையை அனுப்பியவனை அழித்ததில் தவறு என்ன?
இந்த குரங்குப்படை செய்த அட்டுளியங்களில் ஒரு துளி இது. அனுபவித்த எமக்கே அதன் வலி தெரியும்.
ஜனா

நண்பன் said...

ஜோதிஜி,

ஒரு தரப்பாய் அல்லது ஜல்ராவாய் மட்டுமே உள்ளது , ஈழபோராட்டத்தில் எனது சாட்சியம் அல்லது கொரில்லா போன்ற புத்தகங்களையும் படியுங்கள் .

இல்லாவிட்டால் இது இன்னொரு புலி ஜால்ரா சத்தமாகவே போய்விடும் , ஆய்வாக இருக்காது

ஜோதிஜி said...

நீங்கள் சொல்ல வருவது புரிகின்றது நண்பரே. எத்தனை புத்தகங்கள் படித்தாலும், நீங்கள் சொன்ன புஷ்பராஜா முதல் பிரபாகரன் தவறானவர் என்று சொல்லும் அ மார்க்ஸ் கட்டுரைகள் வரைக்கும் எந்த இடத்திலும் அமைதிப்படை குறித்து நல்ல விசயங்கள் எவருமே பதியவில்லை. இதன் முடிவு இன்னும் இரண்டு மூன்று பதிவுகள் வரும். அது மொத்தமும் அலசலாய் இருக்கும். அமைதிப்படைக்கு தலைமையேற்று சென்ற தளபதியே குமுறித் தீர்த்து இருப்பதை நீங்கள் உணரும்போது நான் ஜால்ரா அல்ல என்பதை உணர்வீர்கள். இதன் தொடர்ச்சியாக வரும் ராஜீவ் காந்தி இறப்பு புலனாய்வு பக்கங்கள் வரும் போது அப்போது அவர்கள் தரப்பில் இருந்து என்னை திட்டித் தீர்க்க வார்த்தைகளை இப்போது கோர்த்துக்கொண்டுருக்கலாம். என்ன செய்வது.

அவர்களின் போராட்டம் எத்தனையோ இழப்புகளை கொடுத்து இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது? இன்று என்னுடைய சுய ஆளுமையையே புடம் போட வைத்துக்கொண்டுருக்கிறது.

நண்பா பொறுத்தருள்க?

M.Thevesh said...

இந்தியக் கொலைகாரப் படைகள் தங்களைக் காப்பாற்ற வந்ததாகத் தவறாகப்புரிந்து கொண்டதால் யாழ்மக்கள் முதலில் இப்படையை பூர்ணகும்பம் வைத்து வரவேற்றார்கள்.ஆனால் இக்கொலைகாரப் படைகள் சிங்கள அரசுக்கு உதவி செய்து தமிழர் உரிமையைக் குழி தோண்டிப் புதைக்கும் எண்ணத்து
டனும் அது செய்து முடிக்க பத்து வருடம் தேவைப் பட்டாலும்அதுவரை வடகிழக்கு மாகாணங்களை தங்
கள் ஆளுகைக்குள் வைத்திருக்கும் திட்டத்துடன்தான்
வந்துள்ளார்கள் என்பதை அறிந்திருக்கவில்லை.
இந்தியக் கொலைகாரப் படை தன் சுய ரூபத்தைக்
காண்பித்து யாழ் மக்களைத் தாக்கத்துவங்கியதன்
பின்பு பொதுமக்கள் இந்தியக் கொலைகாரப் படையு
டன் மோதலை ஆரம்பித்தார்கள். எதிர்ப்புக்கோசம்,
எதிர்ப்பு ஊர்வலம் அவர்கள் ஆரம்பித்ததும் கொலை
கார இந்தியப் படை பொதுமக்களை மோசமாக தாக்
கி அழிக்கத் தொடங்கினார்கள்.அதன் மேல்தான்
பிரபாகரன் பொதுமக்களைக் காப்பாற்ற இந்தியக் கொ
லைகாரப் படையுடன் மோதலை ஆரம்பிக்க வேண்டி
ய சூழ்நிலை ஏற்பட்டது. பிரபாகரன் பொதுக்கூட்டம்
போட்டு பொதுமக்களைக் காப்பாற்ற இந்தியக் கொலைகாரப் படையுடன் மோதப்போவதாக அறிவித்
து விட்டே மோதலை ஆரம்பித்தார். இந்தியக் கொலைகாரப் படைகள் யாழ்மக்களிடம் கொள்ளை
அடித்து எடுத்துச்சென்ற தங்க நகைகளுடன் சென்னை விமான் நிலையத்தில் பிடிபட்ட செய்தி
இந்தியப் பத்திரிகைகளில் முதல் பக்கச் செய்தியாக
வெளிவந்தன.அந்நாளில் இச்செய்தியை வாசித்தவர்
கள் இதை நினைவு கூரமுடியும். பொதுமக்களைப்
பாதுகாக்க பிரபாகரனின் போராளிகள் இந்தியக் கொலைகாரப் ப்டையுடன் நெரடியாக மோத ஆரம்
பித்ததும் யாழ் பொதுமக்கள் நூறு வீதம் பிரபாகரன்
பின்னால் அணிதிரண்டார்கள்.ஒட்டுமொத்த மக்களும்
பிரபாகரனுக்கு ஆதரவாளர்களாக மாறினார்கள்.இந்தி
யக்கொலை காரப் படையை விஷமென வெறுக்க
ஆரம்பித்தார்கள். பிரபாகரனின் வெற்றி நடை ஆரம்
பமாகியது.

ஜோதிஜி said...

உண்மைகள் உண்டு துவேஷ்