" நான் ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரத்தில் சிங்கள மொழியை ஆட்சி மொழியாக்குவேன்"
இந்த வார்த்தைகள், வாக்குறுதி SWRD பண்டார நாயகாரவை ஆட்சிக்கு வரவழைக்க உதவியது என்றால் நம்பித்தான் ஆக வேண்டும். அதே போல் கடமை தவறாமல் நிறைவேற்றியும் காட்டினார்.
முதலில் அஸ்திவாரம்.
எதிர்காலத்தில் இலங்கை சிங்களர் நாடாக உருமாற வேண்டும் என்றால் தமிழர்களின் மொத்த எண்ணிக்கையான 25 சதவிகிதத்தை குறைக்க வேண்டும். உடனடியாக தோட்டத் தொழிலாளர்களை நாட்டை விட்டு விரட்டினால் தீர்வு கைக்கு வந்து விடும். அவர்களுக்கு என்று போராட பெரிய அளவில் யாருமில்லை. இலங்கையின் ஜனத்தொகையிலும் அவர்கள் தனியாகத் தான் தெரிகிறார்கள். மொத்தமாக தமிழன் என்றாலும் பூர்வகுடி தமிழர்கள் அவர்களை சீண்டுவதும் இல்லை. உறவாடுவதும் இல்லை. எத்தனையோ காரணங்கள்.
நாம் இதை கையில் எடுத்தால் ஆட்டத்தை தொடங்கி விடலாம். தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமை பறித்தால் அடுத்து வரும் தேர்தலில் வாக்களிக்க முடியாது. இவர்கள் வளர்ந்து கொண்டே ஆட்சி அதிகாரம் வரைக்கும் உள்ளே வந்தால் இன்னமும் எதிர்காலத்தில் பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.
இவர்களின் இரு பக்கமும் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் உள்ளே வந்தால் எப்படி எதிர்காலத்தில் இலங்கையை சிங்கள தேசமாக உருவாக்க முடியும்?
தீர்க்கசரினமாய் யோசித்து செயலில் காட்டியவர் " குடியுரிமைச் சட்டம்" மூலம் சிறப்பாக அந்த புனித காரியத்தை நிறைவேற்றியவர் சிங்களர்களின் தந்தை சேனநாயகா.
ஆனால் பண்டார நாயகா 1930 முதல் களத்தில் இருந்து சிங்களர்களின் மனதில் இருந்த போதிலும் சேனநாயகா அரசாங்கத்தில் மிஸ்டர் இரண்டு தான். பெரிதாக வாய்ப்புகள் உருவாகவில்லை. சேனநாயகாவின் மகன் டட்லி சேனநாயகா மற்றும் மொத்த உறவினர்கள் பட்டாளமும் பயமுறுத்திக்கொண்டுருந்தது.
தான் நடத்திக்கொண்டு (1951) வந்த "சிங்கள மகா சபையை" உயிர் ஊட்டிக் கொண்டு வந்து கொண்டுருந்தார். சேனநாயகா மறைவுக்குப்பிறகு, நடந்த தேர்தலில் ஆங்கிலேய கவர்னர் எதிர்ப்புகளையும் மீறி சேனநாயகாவின் மகனுக்கே ஆட்சி அமைக்க வாய்ப்பு அளிக்க முக்கிய காரணம் அன்றுவரையிலும் பிரிட்டன் படைகள் இலங்கையில் இருந்ததும், அவர்களுக்கு சேனநாயகா குடும்பம் காட்டிய விசுவாசமும்.
தொடர்ந்து வந்து தேர்தலில், தமிழர் எதிர்ப்பை அடிப்படையாகக்கொண்டு இயங்கிக்கொண்டுருந்த சிங்கள கட்சிகளை கைக்குள் போட்டுக்கொண்டு அப்போது தான் உருவாக்கிய புதிய கட்சியான "ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி" மூலம் மகனை பின்னுக்கு தள்ளி ஆட்சிக் கட்டிலில் பண்டாரா நாயகா அமர்ந்தார். அப்போது தேர்தலில் தோற்ற டட்லி சேனநாயகாவுடன் கூட்டணி அமைத்து இருந்த தமிழர்களின் குடியரசுக்கட்சி பெற்ற இடங்கள் வெறும் பத்து மட்டுமே.
அதனால் என்ன? குடியரசு கட்சி மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தந்தை செல்வாவுக்கு.
1949 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட "கல்லோயா அபிவிருத்தி" திட்டத்தின் மூலம் பெரும்பான்மையாக அங்கு வாழ்ந்து கொண்டுருந்த அத்தனை தமிழ் மக்கள் வாழ்விடங்களிலும் மொத்தமாக சிங்களர்களை கொண்டு போய் குடியமர்த்தினர் . பண்டார நாயகா வருவதற்கு முன்னால் நடந்த ஆட்சிகளில் தமிழர்களை வடக்கு மற்றும் கிழக்கு மகாணங்களில் வாழ்ந்த தமிழர்களை மொத்தமாக விரட்டி அடித்தனர். மொத்த அவர்களின் வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டு கொலை செய்து தூக்கி எறிந்தவர்களின் கணக்கு எண்ணிக்கையில் அடங்காது.
சேனநாயகா மகன் இருந்த போது மிகப் பெரிதான புண்ணிய காரியங்களை தமிழ் மக்களுக்கு வழங்கா விட்டாலும் பண்டார நாயகா ஆட்சியை பிடித்ததும், வட்டியும் முதலுமாக சிங்களர்கள் கொண்டாடும் புத்த ஜெயந்தி அன்று மொத்த தமிழர்களுக்கும் பரிசாக (1956) "சிங்கள மொழி மட்டுமே ஆட்சி மொழி"
தமிழர்கள் நீதிமன்றத்திற்கு செல்வது தொடங்கி மொத்த அரசு சார்ந்த இடங்களிலும் சிங்களம் தான் பேசமுடியும். தெரிந்தால் தான் பிழைக்க முடியும்.
பண்டாரா நாயகா கொடுத்த பரிசான சிங்களமே ஆட்சி மொழிக்கான முக்கிய காரணம் கடந்த 150 வருடங்களாக ஆங்கிலேயர்கள் உள்ளே இருந்த போதிலும் ஒற்றை இலக்க சதவிகித எண்ணிக்கையில் தான் சிங்களர்களுக்கு ஆங்கிலம் பேசமுடியும். அந்த சூழ்நிலையிலும் தமிழர்கள் எங்கும் நீக்கமற நிறைந்து இருந்தனர்.
சிங்களர்ளே அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்? என்றால் ஒத்துக்கொள்வார்களா? தெளிவாக பண்டாரா நாயகா தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த சிங்களமே ஆட்சி மொழி என்பது அத்தனை சிங்களர்களையும் கவர்ந்தது. ஆட்சியை பிடிக்கவும் உதவியது.
இந்த சட்டத்தை எதிர்த்தே ஆக வேண்டும். செல்வநாயகம் அரசாங்கத்திடம் தமிழர்களின் மொத்த எதிர்ப்பை காட்ட காந்திய வழியில் சாத்வீக போராட்டத்தை பாராளுமன்ற கட்டிடடத்திற்கு அருகே உள்ள புல்தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார்..
காந்திய வழியில் போராடலாம் என்று சென்ற செல்வநாயகத்தை அப்போது துறைமுகத்தில் இருந்து வெளியே வந்த இளைஞர்கள் ஆரம்பித்த ஆழித்தீ கோரத்தாண்டவமாக மாற்றம் பெற்று மிக அசிங்கமான வழியில் செல்வா மற்றும் அவர் மகன்கள் அத்தனை பேர்களும் மிகக் கோரமாக தாக்கப்பட்டனர்.
போராட்டத்தை பார்த்துக்கொண்டு தன்னுடைய அலுவலகத்துக்கு சென்று கொண்டுருந்த பண்டாரா நாயகா கலவரத்தை அடக்கலாமா? என்று கேட்ட காவல் துறை அதிகாரிகளிடம், பண்டாரா நாயகா சொன்ன வார்த்தைகள் இது
"வேண்டாம் அவர்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும் வரைக்கும் பொறுமையாய் இருங்கள்"
அறவழிப் போராட்டம் தொடங்கியது முதலே சிங்கள இளைஞர்களும் காவல் துறையினரும் வெறியாட்டம் ஆடித் தீர்த்தனர்.
அசிங்க தாக்குதல் மூலம் அவமானத்துடன் பாராளுமன்றத்துக்கு வந்த செல்வநாயகத்தை உள்ளே வரவேற்ற பண்டாரா நாயகாவுடன் சேர்ந்த மற்ற தலைவர்கள் அனைவரும் சொன்ன வார்த்தைகள்.
"விழுப்புண்கள் ஆறிவிட்டதா இல்லை இன்னமும் வலிக்கின்றதா?"
பண்டாரா நாயகா மூலமும் தமிழர் பரம்பரையில் வருகிறது. இவருடைய முன்னோர்கள் பண்டாரம் என்கிற தலைமை கோவில் பூசாரிப் பணியில் இருந்ததாக யஸ்வின் குணரத்னே என்ற சிங்களர் மிகத் தெளிவாக "புரிந்துணர்வை" உருவாக்கி உள்ளார்.
பண்டாரா நாயகா, ஆக்ஸ்போர்ட்டு பட்டம் என்றாலும் முழுமையாக சிங்களம் பேசத் தெரியாது. மொத்தத்தில் மேல்தட்டு வர்க்க வாழ்க்கை.
மேலும் இலங்கையில் உள்ள மொத்த வாகனங்களிலும் ஸ்ரீ என்ற எழுத்து பொறிக்கப்பட வேண்டும் என்று உருவாகியிருந்த சட்டம் , அதனை எதிர்த்த அத்தனை தமிழர்களையும் தவிடு உமி போல் ஊதித் தீர்த்தார்கள்.
தந்தை செல்வா சிங்கள தலைவர்களிடம் வைத்த கோரிக்கை.
" தமிழர்கள் வாழும் பகுதிக்கென்று ஒரு தன்னாட்சி அமைப்பு. சிங்களர்களுக்கென்று ஒரு தன்னாட்சி அமைப்பு. இவை இரண்டையும் இணைத்து மத்தியில் ஒரு கூட்டாட்சி."
கேட்ட சிங்கள தலைவர்கள் சொன்ன வாசகம்.
"சிங்களர்களின் பூமியில் வாழும் நீங்கள் ஆட்சி உரிமையை நினைத்து கனவு கண்டு கொண்டு இருக்கின்றீர்கள்"
பண்டார நாயகாவுடன் மொத்த உறுப்பினர்களும் வெடிச் சிரிப்பு சிரித்தனர்.
அப்போது வரைக்கும் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையில் வாழ தகுதி அற்றவர்கள் என்று உருவாகியிருந்த குடியுரிமைச் சட்டத்தின் மூலம் அவர்களுக்கு சாவு மணி அடித்து இருந்த போதிலும்(10 லட்சம் தமிழர்கள்) முழுமையாக இலங்கையை விட்டு வெளியேறாமல் தாக்குதல்களுக்கிடையே மனம் தளராமல் அவர்கள் உள்ளேயே போராடிக்கொண்டு இருந்தார்கள்.
ஸ்ரீ என்ற எழுத்ததை வாகனத்தில் (1957) எழுத வேண்டும் என்ற அணர்த்த சட்டங்கள் உருவாக்கிய பல்முனைப் போராட்டங்கள் ஒரு பக்கம்.
பண்டார நாயகாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தில் இருந்த சிங்கள இன வாத அமைப்பு (பிலிப் குணவர்த்ணே) கொடுத்துக் கொண்டுருந்த குடைச்சல் மறுபக்கம்.
தாங்க முடியாத பண்டார நாயகா தமிழர் கட்சிகளுடன் போடக்கூடிய ஓப்பந்தம் மூலமாக தன்னை பொது மனிதனாக காட்டிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை. இறுதியில் பண்டாராய நாயகா தந்தை செல்வா (26 ஜுலை 1957) செல்வம் ஒப்பந்தம் உருவனாது.
"சிங்கள குடியேற்றங்களை நிறுத்துவது. தமிழர்கள் வாழும் பகுதியில்கு முன்னோட்டமாக மண்டல குழுக்களை நிறுவது. "
தந்தை செல்வா என்று இன்று வரையிலும் இலங்கைத் தமிழர்களால் போற்றப்படும் செல்வநாயகம் அதன் பிறகு தான் பெரிதாக அத்தனை தமிழர்களாலும் கவனிக்கப்பட்டார்.
அரசாங்கத்தில் எதிர்கட்சி வரிசையில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியில் இருந்த ஜெயவர்த்தனே கொதித்து எழுந்து கூக்குரல் இட்டர்ர்.
இப்போது அவருக்குண்டான வாய்ப்புகள் மிக அருகில் இருந்தது.
ஜெயவர்த்தேனே செயல்களைப் பார்த்ததும் பண்டார நாயகா அமைச்சரைவில் இருந்த மற்ற அமைச்சர்கள் தங்களால் முடிந்த பங்களிப்புகளை காட்ட ஆரம்பித்தனர். அத்தனை பேர்களுக்கும் பயம். தமிழ்ர்கள் ஆதரவு என்ற முத்திரை விழுந்து விடுமோ என்று.
தனக்கு எதிராக அணைவரும் ஒரே அணியில் திரண்டு நிற்க தந்தை செல்வாவுடன் போடப்பட்ட ஓப்பந்தம் வெறும் காகிதம் ஆனது.
காற்றில் பறக்க விடப்பட்டது.
அப்போது தான் பண்டாரா நாயகா விதியின் எழுத்து வெளியே தெரிய ஆரம்பித்தது.
"சிங்களர்களை ஆதரிப்பாய் என்று உன்னை அனுப்பினால் நீ தமிழர்களுக்கு ஆதரவாக மாறிக்கொண்டுருக்கிறாயே"? வீட்டுக்கு சென்ற புத்த பிக்கு குண்டு (1959 செப் 25) மொழியால் பதில் உரைத்தான்.
பண்டாரா நயகா சுட்டுக்கொல்லப்பட்டார்.
நயவஞ்சகத்தால் தமிழர்களின் இலங்கை சரித்திரத்தில் இன்று வரையிலும் நீங்காத கறைப்பக்கமாக இருந்த ஜீஜீ பொன்னம்பல கட்சியில் இருந்து வெளியேறி குடியரசு கட்சியை (1949 டிசம்பர் 18) தொடங்கி வளர்ந்து மள மளவென்று முன்னேறிக்கொண்டுருந்தார்.
தந்தை செல்வா தமிழர்களின் மொத்த உரிமையை மீட்பதற்காக திரு.மலை யாத்திரை ஒன்றை தொடங்க எதிர்கட்சி வரிசையில் இருந்த ஜெயவர்த்தேனே கண்டி யாத்திரையை புத்து பிக்குகள் தூண்டுதல்கள் மூலம் நடந்தேறியது.
செல்வா தொடங்கினார். ஜெயவர்த்தேனே முடித்து வைத்தார். இரு வேறு நோக்கங்கள். வேறு ஊர்கள். .
ஆனால் இருவர் பாதயாத்திரையின் மூலமாக, அதன் விளைவாக உருவாகிய கலவரத்தல் மொத்தமாக தமிழர்களின் சொத்துக்களும் வணிக வளாகங்களும் சூறையாடப்பட்டாலும் அம்பாறை மாவட்டத்தில் ஒரே இடத்தில் 100 க்கு மேற்பட்ட குடும்பத்தினர்களை தீ வைத்து முடித்து வைத்தனர்.
"என்னுடைய தந்தை தமிழர்களுக்காக வாக்குறுதி கொடுத்துச் சென்ற அத்தனை நல்ல விசயங்களையும் நான் உங்களுக்கு உறுதியாக செய்து நல்ல வழி காட்டுவேன்"
வாக்குறுதி கொடுத்து தமிழர்களின் ஆதரவை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த முதல் பெண் பிரதமர் பண்டார நாயகா மனைவி சிறீமாவோ பண்டாரா நாயகா
இன்றைய இலங்கை வாழ்வுரிமை பிரச்சனைகளின் மொத்தமும் 1956 முதல் 1960 வரைக்கும் சமாதன வழிக்கும் சாத்வீக வழிக்கும் இடையே கிடந்து போராடி இறுதியில் அத்தனை கதவுகளும் அடைக்கப்பட்டு தந்தை செல்வா என்றழைக்கப்படும் செல்வநாயகம் சொன்ன வாசகம் இது.
1948 டிசம்பர் 10 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றியது.
"இன்று சிங்களர்களால் மலையகத் தமிழர்களுக்கு உருவான அவலம் நாளை பூர்வகுடி தமிழர்களுக்கும் உருவாகும்."
சிங்களமே ஆட்சி மொழி என்று தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது சிங்கள இடது சாரி கட்சி தலைவரான (எல்.எல்.எஸ்.பி) ஆர்.டி.சி.சில்வா என்ற சிங்கள தலைவர் அப்போது தீர்ககசரினமாக சொன்ன வாசகம்.
"இச் சட்டத்தின் எதிர்கால விளைவு தமிழர்கள் தனி நாடு கேட்கும் சூழ்நிலை எதிர்காலத்தில் உருவாக்கும்."
4 comments:
என்ைன ேபான்றவா்கலுக்காக ெதாடா்ந்து
எழதுங்கள்,,,,,,,,,,
ஏகப்பட்ட தகவல் கூறி இருக்கீங்க.. இதில் பெரும்பாலான விஷயங்கள் எனக்கு தெரியாது. இவ்வளோ தகவல்கள் நீங்க கூறி இருப்பது கூறி வருவது மிக ஆச்சர்யமாக உள்ளது.
கூடுமானவரை இடுகையை ரொம்ப பெரியாதாக எழுதாமல் சுருக்கமாகவும் அதே சமயம் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி எழுதினால் பலர் விவாதத்தில் கலந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
என்னோட வருத்தம் நீங்கள் கஷ்டப்பட்டு எழுதுவது பலரின் பார்வைக்கு சென்று விடாமலே போய் விடக்கூடாது என்பது தான்..
நன்றி கிரி பழனி
நல்ல தகவல்கள்... நன்றி
Post a Comment