இலங்கை என்பது இராவணன் ஆண்ட பூமி என்பது நம்பிக்கையாளர்களின் எண்ணம். ஆனால் இன்று வரையிலும் ஆட்சி நடத்திக்கொண்டுருப்பவரும் கூட இராவணன் போல சுத்த வீரனாக இருக்கவில்லை. மறைந்து கொண்டு மற்றவர்கள் பின்னால் ஒளிந்து கொண்டு தாக்கியவர்களை ஓப்பிடும் போது பிரபாகரன் எப்போதுமே மாவீரன் தான்.
இது குறித்து வாதங்கள், பிரதிவாதங்கள், அழுகை, அழுக்கு எத்தனை நம்மிடம் இருந்தாலும் இன்று கண் முன்னால் அழிந்து கொண்டுருக்கும் இனம் என்பதும் ஒரு இன விடுதலைப் போராட்டத்தின் எச்சமும் மிச்சமுமாக தெரியவில்லை. இதன் மூலம் உணர்த்தும் செய்திகள் அத்தனையும் எதிர்காலத்தில் இந்த உலகம் மொத்தமும் என்னவாகப் போகின்றது? என்பது போல் தான் இருக்கின்றது.
எங்கு இருப்பார்கள்? எப்படி அடிப்பார்கள்? என்று தெரியாத அத்தனை அதிகார வர்க்கமும் அச்சமுடன் பார்த்த இந்த விடுதலைப் போராட்டம் ஏன் இன்று தோற்றதாக உணர்த்தப்படுகிறது?
இது ஒரு தனி மனிதன் தன்னுடைய கொள்கையினால் மட்டுமே வளர்த்த இயக்கம்.
சர்வாதிகாரம்,
தன்னை மட்டும் முன்னிறுத்தல், மறைக்கப்பட்ட அல்லது பெரிது படுத்துதிய விசயங்கள் என்று எத்தனை காரணங்கள் சொன்னாலும் உலகில் உள்ள தமிழனத்திற்கு இதை விட்டால் வேறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
தீர்க்கமான கொள்கை, தீர்மானமான வாழ்க்கை, திசை திரும்பாத வழித்தடங்கள்.
ஆனால் பிரபாகரன் தொடக்கம் முதல் தான் விரும்பிய கொள்கையாளர்கள் மா சே துங், சே குவாரா முதல் இன்றைய பிடல் காஸ்ட்ரோ வரையிலும், இன்று கூட தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கும் அத்தனை போராளி இயக்கங்களையும் ஊன்றி கவனித்து, உள்வாங்கினாலும், அந்த அத்தனை கொள்கைகளும் இன்று வரையிலும் சரியான பாதையில் தான் பயணிக்கின்றதா?
அந்த கொள்கையாளர்கள் தந்த தத்துவங்கள் பின்பற்றுபவர்களாக கூறிக் கொள்பவர்கள் சரியான முறையில் தான் பின்பற்றிக் கொண்டு இருக்கிறார்களா? இப்போதைய காலத்துக்கு சரிதானா? என்று யோசிக்க மறந்தது ஏன்?
முடக்கப்பட்ட, முறியடிக்கப்பட்ட நான்காம் ஈழ யுத்தத்தில் எத்தனை பேர்களின் பங்களிப்பு.
ஆள் இல்லா வேவு (அமெரிக்கா) விமானங்கள். அச்சத்தை தரும் (சீனா) டாங்கிகளின் அணிவகுப்பு, எல்லைகளை காத்த (இந்தியா) கப்பல்கள். அரைகுறை(இலங்கை) வீரமில்லா படைகள்.
இத்தனை நாடுகள் சேர்ந்தது ஒரு பெரிய தேசத்தை பிடிக்க அல்ல.
ஒரு தனி மனித வீரத்தை மட்டும் முன்னிறித்தி, அதை முறியடித்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் முன்னால் வந்த "நேசக்கூட்டணி" .
ஐ.நா சபையில் தீர்மானங்கள் வரும் போது முறியடிக்க உதவியாய் இருக்கும் இன்றைய கியூபா, அவல வாழ்க்கையின் மிச்சமும் எச்சமுமாய் வாழ்ந்து கொண்டுருக்கும் பாகிஸ்தான், ஆசியாவை விழுங்கத் துடிக்கும் சீனா.
திருட்டுத்தனத்தை செய்து விட்டு, மறுபடியும் மீள முடியாத இந்தியா. தொடர்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் தவறான வழிகாட்டிகளை அதிகம் பெற்று இருக்கும் அன்னை பாரத பூமியின் புழுத்துப்போன பதர்கள்.
ஆனால் எத்தனை காரணங்கள் அடுக்கினாலும் இறக்கும் வரையிலும் உரத்துச் சொல்ல முடியும்?
தமிழர்களுக்கு ஜனநாயகம் என்பது தேவையில்லை. ஜனநாயகத்தின் அருமையும் தெரியாது. பெருமைகளை புரிந்து கொள்ளவும் புத்தி வேலையும் செய்யாது. வளர்ந்து கொண்டுருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் "பொழுது போக்கு" போன்ற அம்சங்கள் தேவைதானா என்று யோசித்துப் பார்த்தால் நகைச்சுவையாகத்தான் தெரிகிறது.
மேலை நாடுகளில் பணி முடிந்து உடலையும் மனத்தையும் இளைப்பாறச் செய்யும். அதுவே இங்கு மொத்த பொழுதையும் சலிக்காமல் ஊடகத்தின் முன் அமர்ந்து பொழுது இன்னமும் நீண்டு விடாதா? என்று இன்று வரையிலும் ஏக்கத்துடன் வாழும் தமிழனத்தை எதைக் கொண்டு மாற்ற முடியும்?
தவமாய் வாழ்ந்தவர்கள் அத்தனை பேர்களும் பெற்ற வரங்கள் அத்தனையும் தராதரம் இல்லாதவர்களின் கைக்கு வந்தடைந்த போதே தமிழனின் தலைவிதியும் மாற்றம் அடையத் தொடங்கி விட்டது.
மொத்தமாய் போராடிய போராட்ட களத்தில் வெற்றியை பெற்றமைக்கு முக்கிய காரணம் பிரபாகரன் ஆளுமை என்பது நம்மை எத்தனை தூரம் ஆச்சரியப்படுத்துகிறதோ? இத்தனை மாவீரர்களையும் இழந்து, இந்த போராட்டத்தை முடக்கப்பட்டதற்கான முக்கிய காரணமும் இதே இந்த பிரபாகரன் தான்.
இந்த தமிழீழ போராட்டத்தை மே மாதத்தில் நடந்த நான்காம் யுத்தத்தின் வாயிலாகத்தான் அழிக்கப்பட்டது என்றால் அது மிகப்பெரிய தவறு?
ரணில் விக்ரம சிங்கே, மகிந்த ராஜபக்சே என்ற இருவரில் எவர் வேண்டும் என்று கேட்கப்பட்டதோ?
சரியான புரிந்துணர்வும், சுட்டி காட்டாமையும், அன்று காட்டாத அக்கறையின்மையும் , அன்றே இந்த அழிவும் தொடக்கம் பெற்றது.
கருணா என்பவர் என்று இயக்கத்தில் இருந்து விலகி வெளியேற்றம் நடந்து உயிருடன் புகலிடம் சென்றாரோ அன்றே உறுதிபடுத்தப்பட்டது.
ஆனால் ராஜிவ் காந்தி படுகொலையை மிகச் சாதாரணமாக "இதுவொரு நடந்த துன்பியல் சம்பவம் தான்" என்று எதார்த்த வார்த்தைகளில் வெளிகாட்டிய போதே இந்த இயக்கத்தின் முடிவுரையும் வெளியே தெரியாமல் முற்றும் பெற்று விட்டது.
"சர்வாதிகாரம்" படைத்த அத்தனை கொடுங்கோலர்களின் வாழ்க்கையை பார்த்தீர்களேயானால் அதில் தனி மனித ஆழ் மன வக்கிரங்கள் தான் அதிகமாக இருக்கும். ஆனால் பிரபாகரன் என்பவரின் வெளியே அதிகம் தெரியாத, வராத வாழ்க்கையில் பார்த்தால் "அதிக அவசர ஆசைகள்" தான் இருக்கிறது. அவருடைய மொத்த வெளியே தெரியாத ஓழுக்கத்தைப் போல.
39 வருடங்களாக வளர்த்தெடுத்த ஒரு ஆலமரத்தை 3 நாட்களில் புடுங்கப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட தேவையில்லாத செடியாக மாற்றம் பெற்று விட்டது.
இதே பிரபாகரன் தொடக்கத்தில் அமெரிக்காவிடம் பேரம் பேசியிருக்கலாம். இடையில் சீனத்திடம் சினம் ஏதும் காட்டாமல் உறவு காட்டியிருக்கலாம்.
இந்த தமிழன் உணராத பாதையும் இறுதியில் உலகமெங்கும் ஓலமிட விட வேண்டிய மொத்த குரலுமாய் போய்விட்டது.
இந்த மொத்த ஆதிக்க சக்திகள் சேர்ந்து, ஒரு இனத்தை வெறும் சகதி போல் துடைத்து பூசி மெழுகி விட்டது.
இன்றைய தினம் நமக்கு இது வெறும் செய்தி. ஆனால் அடுத்த 50 ஆண்டு காலத்தில் நம்முடைய வழித்தோன்றலுக்கு உருவாக்கப்போகும் வலி என்பதை அன்று உங்களால் வார்த்தைகளால் கோர்க்க முடியாது. காரணம் அன்று நீங்கள் சிந்தப்போகும் கண்ணீர் என்பது இன்று நீங்கள் வெறும் காட்சிப்பொருளாக போன மனிதர்களுக்கு செலுத்தும் அஞ்சலி.
தொடக்கம் முதல் இந்தியாவில் இலங்கை என்பது வெறும் பிரச்சனைகள். இன்றோ அது வெறும் செய்திகள். இதுதான் இன்றைய மனித நாகரிகத்தின் உச்சக்கட்டம்.
எழுதுகிறவனுக்கு எழுத்து. வாழ்கின்றவனுக்கு வலி நிறைந்த வாழ்க்கை. நிறுத்த முடியாமல் வழிந்து கொண்டுருக்கும் கண்ணீரை எத்தனை கரங்கள்
கொண்டு நிறுத்த முடியும். இயக்கத்திற்கு, அதிகாரத்திற்கும், ஆசைப்பட்டவர்களுக்கும் இடையே மாட்டிக்கொண்டு மருகிக்கொண்டு இருப்பவர்களின் வாழ்வியல் தடங்கள் அது.
சாமான்யனாகவும் வாழ முடியாமல், சராசரி வாழ்க்கையும் வாழ முடியாமல் கடைசியில் இன்று சகதி மேட்டில் கட்டாத கூரைக்குள் குறைகளுடன் வாழ்ந்து கொண்டுருப்பவர்கள்.
இலங்கை என்பது எப்படி உருவானது?
பூர்வகுடிகள் யார்?
பிழைக்கப் போனவர்களின் கதி?
ஆங்கிலேயர்களின் பார்வையில் இருந்த இலங்கை?
தொடங்கிய வரலாறு?
தொடக்கத்தில் வாழ்ந்த சிங்கள தமிழ் தலைவர்கள்? என்ன தான் செய்தார்கள்?
ஏனிந்த ஆயுதப் போராட்டம்? எவ்வாறு வலுவடைந்தது?
முடிவு தான் என்ன?
உருவான அத்தனை ஒப்பந்தகளும் வெறும் பறக்க விட்ட பட்டம் தானா?
இயக்கத்தில் இருப்பவர்களும், இருந்தவர்களும் சரி, இலங்கை அரசாங்கத்தில் இருப்பவர்களும், ஆட்சிக்கு வரத்துடிப்பவர்களும் சரி,
நாம் எப்போது சாவோம்? என்று தெரியாமலே அச்சப்படும் ஆசைகள் கொண்டவர்களின் தனிப்பட்ட சொந்த வாழ்க்கை கூட சுகமாக வாழ முடியாமல் இருப்பதை உணர்ந்தவர்கள் தானா?
இவையெல்லாம் உணர்ந்தாலும் கூட மீள முடியாத சோகத்தை கொடுப்பதும், சுகத்தை அச்சத்துடன் வரவேற்பதும் ஏன்?
இத்தனைக்கும் உண்டான தேடலின் முடிவு தான் என்ன?
கதவைத் திற. காற்று வரட்டும்.
யாசகம் பெற்ற வாசகம்:
" உலகில் ஒற்றுமை இல்லாமல் வாழும் எந்த இனத்திற்கும் கடவுள் அளிக்கும் இறுதி பரிசு தான் அடிமை வாழ்க்கை"
39 comments:
//தவமாய் வாழ்ந்தவர்கள் அத்தனை பேர்களும் பெற்ற வரங்கள் அத்தனையும் தராதரம் இல்லாதவர்களின் கைக்கு வந்தடைந்த போதே தமிழனின் தலைவிதியும் மாற்றம் அடையத் தொடங்கி விட்டது. இதில் இந்தியா, இலங்கை, மேலைநாடுகளில் வாழ்பவர் என்ற எந்த வித்யாசமும் இல்லை. தமிழன் என்பவன் ஒருவன் தான். உலகில் எங்கு வாழ்ந்தாலும்.//
தினம் தினம் சிந்தனையைத் தூண்டும் கனமான எழுத்துக்கள் ஜோதிஜி
மிக நன்றாக இன்னொரு பக்கத்தையும் எழுதியுள்ளீர்கள்
தேன் போன்ற வார்த்தைகளை தேர்ந்தெடுத்த சகோதரிக்கு நன்றி.
/கருணா என்பவர் என்று இயக்கத்தில் இருந்து விலகி வெளியேற்றம் நடந்து உயிருடன் புகலிடம் சென்றாரோ அன்றே உறுதிபடுத்தப்பட்டது./
காரணம் உங்களுக்கு தெரியும்தானே! பின்புலம் யார்?
/ஆனால் பிரபாகரன் என்பவரின் வெளியே அதிகம் தெரியாத, வராத வாழ்க்கையில் பார்த்தால் "அதிக அவசர ஆசைகள்" தான் இருக்கிறது. /
அதிகம் தெரியாத, வராத ஒன்றினை வைத்து தெரிந்ததை முடிவு செய்வது தவறு தேவிஜி.
/புரிந்து கொள்ள வேண்டும். புரிந்துணர்வை ஊட்ட முயற்சிக்க வேண்டும். சிந்தனைகளை புடம் போட்டு பார்க்க வேண்டும். மாற்ற முயற்சிக்க வேண்டும். மாற்றம் அடையாத மாற்றுக் கருத்துக்களை குறைந்த பட்சம் கேட்டுத் தெரிந்து கொள்ளவவாவது வேண்டும் என்ற இல்லாத எண்ணங்களினால் 39 வருடங்களாக வளர்த்தெடுத்த ஒரு ஆலமரத்தை 3 நாட்களில் புடுங்கப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட தேவையில்லாத செடியாக மாற்றம் பெற்று விட்டது./
புரியவில்லை.
கருணா குறித்து கருணாவே சொல்லியுள்ள முழுமையாக பிரச்சனைகள் குறித்து அந்த பேட்டியை பின்னால் வரும் போது உங்களுக்கு புரியும்.
சாதாரண கொள்கைகளை கொண்டு வாழ்க்கை வாழ்பவன் எத்தனை பேர்களை சமாளித்து சமரசம் செய்து கொண்டு தான் முன்னேற முடிகின்றது.
ஆனால் தமிழீழம் என்ற கொள்கைக்கு ஊடகத்திற்கு என்று ஒரு சரியான பொருந்தக்கூடிய நபர் இல்லாத காரணம், ஆண்டன் பாலசிங்கம் போன்று பல பேர்கள் உருவாக்க முடியாத காரணம், இதைப்போலவே உள்ளேயே ஓடிக்கொண்டு இருந்து வடக்கு கிழக்கு மகாணங்கள் போன்ற பல பிரச்சனைகள் தீர்வு இல்லாமல் போய்க்கொண்டே இருந்தது?
மொத்தத்தில் எந்த ஆதிக்க சக்திகள் சகதியாக மாற்றியதோ அவர்கள் அத்தனை பேர்களுக்கும், மொத்த ஊடகத்திற்கும் இவர்களுக்கும் ஒரு பெரிய இடைவெளி. காரணங்கள் பல இருந்த போதிலும்.
நாலைந்து இடுகை படிக்கும் போது உங்கள் சிந்தனைகளில் மாற்றம் வரும். அல்லது புரிய முயற்சிக்கலாம்.
நாட்டை ஏன் துண்டாக உடைக்க முயற்சித்த காரணங்கள் அவஸ்யங்கள்.
/கருணா குறித்து கருணாவே சொல்லியுள்ள முழுமையாக பிரச்சனைகள் குறித்து அந்த பேட்டியை பின்னால் வரும் போது உங்களுக்கு புரியும்./
மன்னிக்கணும் தேவிஜி. அது அவன் சொன்னதில்லை.
மீண்டும் மன்னிக்கவும். தோப்பில் முகமது மீரான் கேட்ட அறிவுப்பூர்வமான கேள்விகள். பரபரப்பு இல்லாமல் படபடப்பு இல்லாமல் வந்த கேள்விகள் பல ஆண்டுகளுக்கு முன்னால் குமுதத்தில் வந்தது. மறு பதிப்பாக அம்ருதா இதழில் வந்தது.
இப்போதைய கருணா வாழ்க்கைக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை. அவர் நல்லவரா கெட்டவரா என்பது என்னுடைய நோக்கம் அல்ல.
இந்த மொத்தப் பிரச்சனைகளுக்கும் பின்னால் இருந்தவைகள் ஆராய்ந்து பார்ப்பதே.
இப்போது பொன்சேகா ஆரம்பித்துள்ள ஆட்டத்தின் முடிவின் கருணா நிலை உங்களுக்கு விரைவில் தெரியும் புரியும்.
தமிழனின் துயரம் நிறைந்த வாழ்க்கைக்கு தீர்வு வேண்டும். அதற்காக நிஜமாகவும், நேர்மையாகவும் நம்மால் முடிந்த அளவு பணி செய்வோம். யார் செய்தது சரி... யார் செய்தது தவறு... இனி அந்த விவாதம் ஏன். அதனால் தமிழர்களுக்கு என்ன நன்மை. இப்போது என்ன தேவை. அது தான் தேவை. சிலர் செய்து கெடுத்தார்கள். சிலர் செய்யாமல் கெடுத்தார்கள். சிலர் பேசி கெடுத்தார்கள். சிலர் பேசாமல் கெடுத்தார்கள். தமிழினம் சிறக்கும். சிதறடிக்கும் பேச்சுக்களை, செய்கைகளை துறப்போம். நமது செயல்பாடுகள், நமது பேச்சுக்கள் நம் பலவீனத்தை காட்டி விடக்கூடாது. பிறகு நாம் இன்னும் பின்னோக்கி சென்று விடுவோம்.
உண்மைகள் இன்னும் வெளிவரட்டும்.
சிலர் செய்து கெடுத்தார்கள். சிலர் செய்யாமல் கெடுத்தார்கள். சிலர் பேசி கெடுத்தார்கள். சிலர் பேசாமல் கெடுத்தார்கள். தமிழினம் சிறக்கும். சிதறடிக்கும் பேச்சுக்களை, செய்கைகளை துறப்போம்.
யாரிடம் இந்த இடுகை சென்று சேர வேண்டும் என்று நினைத்தேனே இப்போது சற்று ஆறுதல். மிக மிக அற்புதமான ஆழ்ந்த வார்த்தைகள்.
நமது செயல்பாடுகள், நமது பேச்சுக்கள் நம் பலவீனத்தை காட்டி விடக்கூடாது.
நீங்கள் உணர்த்துவது எனக்கு நன்றாக புரிகிறது. அறிவார்ந்த விசயங்களை நாம் உள்வாங்கும் போது சில பல தவறுகளை உணர்த்திக்காட்டினால் மட்டுமே எதிர்காலத்தில் உருவாகிக்கொண்டுருக்கும் புலம் பெயர்ந்த மக்களால் உருவாக்கம் பெற்றுக்கொண்டுருக்கும் உருப்படியான விசயங்கள் தீர்வாக முடியும். இல்லாவிட்டால் ருத்திரகுமாரன் அவர்களும் மற்றொரு உணர்ச்சித் தமிழன் போல் மறைந்து விடக்கூடிய அபாயம் அதிகமுண்டு.
காரணம் இந்த இடுகையின் வாயிலாக ஆதிக்கம் நிரம்பிய ஆளுமை செலுத்திக்கொண்டுருக்கும் அத்தனை விசயங்களும் இடைஇடையே தொடர்பு இல்லாமல் வந்து போகும்.
யாரிடம் தான் உலகத்தில் பலவீனம் இல்லை. ஆனால் பலவீனமே அஞ்சக்கூடிய பிரபாகரன் தோற்றது ஏன்? தோற்கடிக்கப்பட்டதாக இன்று முன் நிறுத்தப்படுவது ஏன்?
அவர் இருக்கிறார் என்று ஏன் இந்த மக்கள் இன்னமும் நம்பிக்கையில் வாழ்கிறார்கள். ஏறக்குறைய பக்கத்து வீட்டு கிழவியிடம் போய் எம்சிஆரு செத்துட்டாரு என்ற போது வாங்கிய அடி ஞாபத்தில் வருகிறது.
நீங்களே புரிந்து கொள்வீர்கள். சிந்தனைகள் தவறா? சரியா? என்று.
ஹேமா. வெளியே வந்தால் எல்லா சிக்கல்களும் தெரிந்து தீர்வா? வாழ்வா? என்று தெரியும்
பல விசயங்கள் அறியாதவையாக இருக்கிறது. நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து எழுதுங்கள் ஜோதிஜி. :)
எது எப்படி இருப்பினும் தமிழனே தமிழன் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு காரணமாயிருக்கின்றான். தமிழர்கள் என்றுதான் ஒன்றுபட்டார்கள். யார் தலைவனாகவேண்டும் என்பதே பலருக்கு இருக்கின்ற பிரச்சனை.
இன்று தமிழர்கள் இந்த அளவுக்காவது தலை நிமிர்ந்து வாழ்கின்றார்கள் என்றால் அதற்கு யார் காரணம்?
எது எப்படி இருப்பினும் தமிழனே தமிழன் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு காரணமாயிருக்கின்றான். தமிழர்கள் என்றுதான் ஒன்றுபட்டார்கள். யார் தலைவனாகவேண்டும் என்பதே பலருக்கு இருக்கின்ற பிரச்சனை.
இன்று தமிழர்கள் இந்த அளவுக்காவது தலை நிமிர்ந்து வாழ்கின்றார்கள் என்றால் அதற்கு யார் காரணம்?
கூப்பிடு தூரத்தில் இருந்த தமிழ் ஈழம் இல்லாமல்
அழிந்துபோனதற்கு முக்கிய காரணம் பிரபாகரன்
இல்லை.அழித்தபெருமை காந்திதேசத்தையே சாரும்.
ம.பரணீதரன்.
பிரபாகரன் உயிருடன் இருந்தால் அவர் அப்படியே
இருக்கட்டும் வெளியெவந்து ஆதிக்கவாதிகள் கைகளால்
அழியவேண்டாம்.காலம் கனியும் ஈழம் மலரும் அதன்
பின் அவர் வெளிவரவேண்டும்.
நன்றி செந்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு. வாழ்த்துக்கள்.
இன்று தமிழர்கள் இந்த அளவுக்காவது தலை நிமிர்ந்து வாழ்கின்றார்கள் என்றால் அதற்கு யார் காரணம்?
பிரபாகரன்,..... பிரபாகரன்.........பிரபாகரன்
மூன்று முறை அல்ல. மூச்சு நிற்கும் வரையிலும் சொல்ல முடியும்
அழிந்துபோனதற்கு முக்கிய காரணம் பிரபாகரன்
இல்லை.அழித்தபெருமை காந்திதேசத்தையே சாரும்.
ம.பரணீதரன்.
நல்ல சிந்தனை பரணீதரன்.
காந்தி முதல் ராஜிவ் காந்தி படுகொலை வரைக்கும் ஒவ்வொரு தலைவர் பின்னால் இந்த உலகத்திற்கு வெளியே சரியான முறையில் தெரியாத விசயங்கள், முன்னெடுத்துச் செல்லப்படாத விசயங்கள் ஏராளமாக உண்டு.
ஆனால் இந்த இலங்கை, பிரபாகரன் என்பதும் முற்றிலும் வேறு ஒரு வித்யாசமான தளம். ஒரு நாடு ஒரு தனிமனிதனை பார்த்து பயப்படுவது, பயப்பட்டது இது தான் முதல் முறை.
காந்தி தேசம் என்பது பிர்லா மாளிகையுடன் ஹே ராம் என்று சொல்லி கீழே விழுந்த போது போய் விட்டது. இப்போது இந்த இலங்கை பிரச்சனையை பொறுத்தவரையில் "மூம்மூர்த்தி" களின் பணி தான் முக்கியம். வெளியே தெரிந்த மூம்மூர்த்தி போல முன்னூறு மூர்த்திகளும் கீர்த்தி இல்லாத செயல்களும் உண்டு.
அருமையைச் சொல்லிருக்கீங்க...!
லெமூரியன் இதில் அருமை பெருமை என்று எதுவுமே இல்லை. வாசித்த, சேகரித்த, உள்வாங்கிய எனக்கே தாங்க முடியாமல் நான்கு முறை மருத்துவரிடம் செல்ல வேண்டிய இருந்ததே, உள்ளே இன்னும் வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு எப்படி இருக்கும்? உணர்வும் அறிவும் கூடிய தமிழ் சமூகம் உருவாக வேண்டிய கால கட்டமிது,
தமிழர்கள் என்றுதான் ஒன்றுபட்டார்கள்.
தலைவனாகவேண்டும் என்பதே?
முற்றிலும் உண்மையும் கூட. பாருங்கள் அத்தனை உண்மைகளையும் நான் வாசிப்பில் பார்த்தவன். ஆனால் இன்று உள்ளேயே வாழ்ந்து கொண்டுருக்கும் தமிழ் தலைவர்கள் இன்னமும் பொன்சேகா உத்தரவாதம் கொடுக்காத போதும் கூட, முறையான அறிவுப்பு வெளியிடாத போதும் கூட ஆர்வமாய் சில விசயங்கள் சொல்லி உள்ளார்கள். இப்போது இலங்கையில் வாழும் தமிழ்தலைவர்கள் பலருடைய எதிர்பார்ப்பு அறிக்கைகள் அத்தனை ஆச்சரியமாய் இருக்கிறது.
பிரபாகரன் உயிருடன் இருந்தால் அவர் அப்படியே
இருக்கட்டும் வெளியெவந்து ஆதிக்கவாதிகள் கைகளால்
அழியவேண்டாம்.காலம் கனியும் ஈழம் மலரும்
நீங்கள் ஒரு பிரபாகரன் குறித்து மட்டும் கவலைப்படுகிறீர்கள். ஆனால் உலகம் எங்கும் பல ஆதிக்க சக்திகளின் கையில் சிக்கி சகதியாக உழன்று கொண்டுருப்பவர்கள்.
நீங்கள் சொல்வது பலிக்க இறையருள் (பிரபாரகன் நம்பிக்கையில்லாத) உதவுமானால் இப்போது தான் இனிமேல் தான் அவருக்கு நிறைய உண்மையான சவால்களும், பேசியவர்கள் தலைவர்கள் அத்தனை பேர்களுக்கு உண்மையிலேயே உயிர் பயமும் வரும்.
ஆனால் பிரபாகரன் கூட வாழ்க்கை முழுக்க இயற்கையை மட்டும் தான் நம்பிக்கை கொண்டு வாழ்ந்த காரணத்ததை, அவரும் ஏறக்குறைய கடவுள் மறுப்பாளர் அல்லது பகுத்தறிவாளர் சிந்தனை கொண்டவர் என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
Arumaiyana soorkkal and karuthukal
If LTTE killed an US president tonight what will happen to LTTE next morning? The simple answer is "will be completely destroyed". India did not destroy LTTE, never tried. The present srilankan govt has played some brillient games. If India was not involved, Tamils would have completely destroyed (100%)with the support of China and pakistan. For China and Pakistan, Tamils neither relatatives nor friends. To irritate India, China and Pakistan would not worry to destroy Tamils. This is for sure. Keep blaming India is not the solution. If we irritate India we never move forward, we never get freedom or what so ever. Go along with India. Do not kill any more leaders including srilankan leaders. Killing political leaders is nothing but terrorism. If you want to fight for freedom you should first understand the freedom of individuals. A separate land for Tamils will be the final result. 10 years, 100 years, 1000 years? Never mind.
//தவமாய் வாழ்ந்தவர்கள் அத்தனை பேர்களும் பெற்ற வரங்கள் அத்தனையும் தராதரம் இல்லாதவர்களின் கைக்கு வந்தடைந்த போதே தமிழனின் தலைவிதியும் மாற்றம் அடையத் தொடங்கி விட்டது.//
இது தமிழ் நாட்டுக்கு வேணா பொருந்தும். ஈழத்திற்கு அல்ல.
சமீபத்துல ஒரு மன நோயாளிய அடிச்சே கொன்னாங்களே அவங்ககிட்டையா வெள்ளை கொடியோட போராட சொல்லறீங்க ?
ஒரு சுத்தமான தமிழ் இன தலைவன சாதாரணமா விமர்சனம் பண்ணாதீர்கள்.
""Go along with India. Do not kill any more leaders including srilankan leaders. Killing political leaders is nothing but terrorism. If you want to fight for freedom you should first understand the freedom of individuals.""
fighting for feedom.....
depend on fighting with who? not on who are the feedom fighter. you guys do not know the pain of a freedom fighters.
Yes, I agree with this Anonymous said. We need unity ஒற்றுமை among us to get our own land.
தோற்றதுதான் சரித்திரம் வெற்றிகளெல்லாம் வெறும் சம்பவங்களே
இன்று எம் முன்னே பல கேள்விகள் உண்டு. பிரபாகரனால் தன்னைக் காப்பாற்ற முடியாமல் போனது எப்படி? அவரால் மக்களைக் காப்பாற்ற முடியாமல் போனது எவ்வாறு? அவருடைய போராட்டத்தை அவரால் இறுதியில் இந்த நிலைக்குக் கொண்டுபோக வேண்டி வந்த காரணம் என்ன? இதுபோல ஏராளம் உண்டு. இவற்றுக்கான பதில்கள் பிரபாகரனின் கடந்தகால செயற்பாடுகளிலும் அவருடைய மனவுலகத்திலுமே இருந்தன. இருக்கின்றன.
உருவம் இல்லாமல் உணர்வோடு அளித்த இந்த கருத்து ஏறக்குறைய "வழிகாட்டி" போல் உள்ளது. ஆனாலும்,
இங்கிலீசு பீசு படித்தால் தான் எதிர்காலத்தில் எம் புள்ள உலகத்தை பீசு பீசாக மாற்றி பீட்ஸா சாப்பிடும் அளவிற்கு சம்பாரிக்க முடியும் என்று வாழும் உணர்வுள்ள தமிழனுக்கு இந்த ஆங்கில மொழி எளிமையும் நேர்மையும் நிறைய உணர்த்தும்.
உண்மையாக, அக்கறையாக, அறிவுடன், தொடர்பவர்கள் அத்தனை பேருக்கும் நன்றி.
அறிவார்ந்த தமிழினம் அறிவு அதிகம் உள்ள தமிழீழத்தை தோற்றுவிக்க வாய்ப்பு இருக்கிறது போல் தான் தெரிகின்றது. தோன்றாமலா போய்விடும்?
1. எந்த தீவிரவாதம் எண்ணம் கொண்ட, விடுதலை வேட்கை கொண்ட போராட்டத்தை எந்த மேலாதிக்கமும் அழிக்க எண்ணம் கொண்டு செயல்பட்டாலும் அது வளர்ப்பதில் தான் மறைமுகமாக செயல்படும். உண்மையான தீர்வு பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் தீர்வு காணப்படாத வரைக்கும்.
2. ஏன் இத்தனை ரத்தம்? ஏனிந்த ஆயுதப் போராட்டம்? ஏன் இத்தனை படுகொலைகள்? என்று இது போன்ற பல கேள்விகளுக்கும் சிங்கள தலைவர்களின் தனிப்பட்ட குணாதிசியங்களை, புத்தம் என்ற பெயரில் உள்ளே இருக்கும் புழுத்துப் போன எண்ணங்கள், இதனை பயன்படுத்திக்கொள்ள துடிக்கும் மேலாதிக்க சக்திகள். தொடர்ந்து வாசிக்கும் போது புரியும்.
3. எத்தனை அமெரிக்கா என்று பயத்தாலும்,பூச்சாண்டி மூலம் உலகத்திற்கு உணர்த்தினாலும் வளர்த்த பாம்பு கொத்திய இரட்டைக் கோபுரம் இந்த உலகம் உணர்ந்த உண்மைகள்?
4. இந்தியாவில், தமிழ்நாட்டில் அக்கறை உள்ளவர்கள் அநேக பேர்கள் உண்டு. ஆனால் அநீதியே தங்களது வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டுருப்பவர்களால் அம்பலத்திற்கு வராமலே அந்தரத்தில் இன்னமும் நின்று கொண்டுருக்கிறது.
5. 1000 வருடங்கள் போராடலாம். சிங்களர்களும் தமிழர்களும் ஏன் அத்தனை நாடுகளும் விரும்பும் திருகோணமலை என்ற இயற்கை கொடையும் இருக்குமா?
6. காசுக்காக தன்னை பலிக்கொடுக்க வரும் மதம் சார்ந்த இயக்கங்கள். தன்னை , தன் மகனை, மகளை, கொள்கைக்காக பலி கொடுக்க தயாராய் இருக்கும் இயக்கங்கள் எங்கினும் உண்டா?
எத்தனையோ இயக்கங்களை நீங்கள் சுட்டிக்காட்டினாலும் எல்லாவற்றிலும் இங்கு இருக்கும் உண்மையான அக்கறை என்பது எங்கினும் உண்டா?
இவர்களிடம் அடிபட்டு சாகத்தான் போகிறோம். உடம்புக்கு வரும் சாவு என்பதை விட உள்ளத்தால் முன் எடுத்து செல்ல வேண்டிய தன்னுடைய கடமை என்பதாகத்தான் அத்தனை போராளிகளுமே தன்னை அர்பணிக்கும் பெருமையை, தமிழீழ கொள்கையை, நான் பார்த்த வரையில் வேறு எங்கும் , எந்த இயக்கத்திலும் இருந்தால் எனக்கு புரிந்துணர்வை ஊட்ட முயற்சியுங்கள்.
விவேகம் இல்லாத செயல்பாடுகள் பற்றியும் கிளருவோம். காயம் ஆற வேண்டுமானால் கிழித்து தான் மருந்து போட வேண்டும். ஐயோ இது நம்முடைய பலவீனத்தை உரைப்பதா? என்று கேட்பவர்களுக்கு?
இனி என்ன பலவீனங்கள் இந்த உலகத்தில் உரைக்க வேண்டி இருக்கிறது. 90 சதவிகிதம் அத்தனையும் வெளியே வந்து விட்டது தானே?
சரியான உணர்வாளர்கள், உண்மையான சிந்தனைகளை முன் எடுத்துச் செல்லும் போது சற்று தாமதம் ஆகும். ஆனால் நிச்சயம் ஜெயிக்கும்.
தயை செய்து பெயருடன் குறைந்த பட்சம் நேர்மையாக பகிர்ந்து கொள்ளுங்கள். காரணம் கடந்த 40 நாட்களாக இதன் விசயமாக பார்த்த படித்த கேட்க விரும்பி அலைந்த, பகிர்ந்து கொள்ள பயந்த , உண்மையான நிகழ்ச்சிகள் என்று எத்தனையோ பார்த்து வந்தவன். அச்சம் எல்லாமே போய் ஆயாசம் அதிகம் வந்து விட்டது. நம்பினாலும் சரி இல்லாவிட்டாலும் சரி இந்த அளவிற்கு மன உளைச்சல் தந்த விசயங்கள் வேறு பதிவுக்காகவும் உழைக்க வில்லை. தொழில் இடையே உள்ளே ஓடிக்கொண்டுருந்தது இது குறித்த புத்தகங்கள், வலைதளங்கள். அறை குறை அறிவுடன் படைத்து ஒரு இனமான போராட்டத்தை கொச்சை படுத்தி விடக்கூடாது. அதே சமயத்தில் இதன் சாதகம் பாதகம் அத்தனை அலசி பார்க்க வேண்டும் என்று அயராது இன்று வரை பாடு பட்டுக்கொண்டுருக்கின்றேன். இது வணிகம் சார்ந்த எழுத்துக்கள் அல்ல. பணமும் என் வாழ்க்கையில் அத்தனை அவஸ்யமான நிலையிலும் நான் வாழவில்லை. இந்த இடுகைக்கு மட்டும் புரிந்துணர்வை உருவாக்க வேண்டும் என்பதற்காக செல்லும் இடங்களில் இருந்து பின்னூட்டத்தை என் பார்வையில் படைத்துக்கொண்டுருக்கின்றேன். இரண்டு மணி நேர தாமத்தில் ஏராளமான உணர்ச்சிக் கொந்தளிப்புகள் உருவாகி காலை வரை இருந்த உணர்வுத் தமிழர்கள் போய் உணர்ச்சி தமிழர்கள் அதிகமாக பெயர் இல்லாமல் வந்து விட்டது.
பிரபாகரனால் தன்னைக் காப்பாற்ற முடியாமல் போனது எப்படி?
இது குறித்து பதில் தெரியாத புரியாத கேள்விகளுக்கான பதில்கள் விரைவில் நம்மிடம் வந்து சேரும்?
இறுதியில் இந்த நிலைக்குக் கொண்டுபோக வேண்டி வந்த காரணம் என்ன?
இவர் மட்டும் காரணம் என்றால் உள்ளே உள்ள மூன்று விரல்கள் எவர்களை காட்டுகின்றன.
கடந்தகால செயற்பாடுகளிலும் அவருடைய மனவுலகத்திலுமே இருந்தன. இருக்கின்றன?
நீங்கள் பெயருடன் வந்து இருந்தால் தெளிவான சிந்தனைகளை உங்களுக்கு சுட்டிக்காட்ட முடியும்.
கொச்சை என்பது இச்சையின் தம்பி.
தோற்றதுதான் சரித்திரம் வெற்றிகளெல்லாம் வெறும் சம்பவங்களே.
ஆனால் 3000 வருடங்கள் தமிழர்கள் வாழ்வில் இந்த சம்பவங்கள் தான் சேர்ந்து சேர்ந்து நாம் இன்று சேறும் சகதியுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
இன்று அவர்கள் சகதியில்? நாளை?
We need unity ஒற்றுமை among us to get our own land.
ஒற்றுமையில் நீங்கினால் அவர்களுக்கு மட்டுமல்ல எதிர்காலத்தில் நமக்கும் தாழ்வு
""Go along with India. Do not kill any more leaders including srilankan leaders. Killing political leaders is nothing but terrorism. If you want to fight for freedom you should first understand the freedom of individuals.""
fighting for feedom.....
depend on fighting with who? not on who are the feedom fighter. you guys do not know the pain of a freedom fighters.
இதற்கு நான் அளித்துள்ள பெரிய பதில் போதுமானது என்று நிணைக்கின்றேன்
இது தமிழ் நாட்டுக்கு வேணா பொருந்தும். ஈழத்திற்கு அல்ல.
சமீபத்துல ஒரு மன நோயாளிய அடிச்சே கொன்னாங்களே அவங்ககிட்டையா வெள்ளை கொடியோட போராட சொல்லறீங்க ?
ஒரு சுத்தமான தமிழ் இன தலைவன சாதாரணமா விமர்சனம் பண்ணாதீர்கள்.
நீங்கள் விமர்சனம் என்பதை எவ்வாறு கருதுகிறீர்கள்.
கொச்சை என்பதை கச்சை போல் வாழ்ந்து கொண்டு தமிழன் அல்ல நான்.
1984 முதல் 1989 வரை செய்தியாய் படித்தவன்
1989 முதல் 1992 வரை விருப்பமாய் படித்தவன்
1992 முதல் 2000 வரை அக்கறையுடன் படித்தவன்
2000 முதல் 2007 வரை அனுபவத்துடன் பார்த்தவன்
2007 முதல் இதன் முதல் இடுகை அகதிகள் நிர்கதிகள் என்று தொடங்கிய பதிவை 40 நாட்களுக்கு முன் எழுதி முடிக்கும் வரையிலும் வலியுடன் படைத்தவன்.
நீங்கள் அங்கு வலியுடன் வாழ்ந்தவர்கள்.
நான் இங்கு இத்தனை பிரபலங்கள் பணம் சார்ந்த வணிகம் சார்ந்த பரபரப்பு சார்ந்த விசயமாக இதைப் படைத்துக்கொண்டு இருக்கிறார்களே இதை எவ்வாறு உலக தமிழர்களிடத்தில் உணர்த்துவது, உள்வாங்க வைப்பது என்ற தைரியத்தை ஆயுதமாக மட்டும் எடுத்துக்கொண்டு தினந்தோறும் 8 மணி நேரம் பல விசயங்கள் படித்து பார்த்து, கேட்டு உணர்ந்து, பகிர்ந்து கொண்டு படைக்கத் தொடங்கி உள்ளேன்.
குறைந்த பட்சம் 20 பதிவுகள் படைத்தவுடன் இதில் சிந்தனை பூர்வமான விசயங்கள். நான் தான் தவறுதலாக புரிந்து கொண்டேன் என்று சொல்லாமல் இருந்தால் என்னுடைய மின் அஞ்சல் texlords@gmail.com என்ற முகவரிக்கு நீங்கள் சொல்ல வேண்டிய மாற்றுக் கருத்தை தெரியப்படுத்துங்கள்.
அன்றே இந்த தொடர் இடுகையை நிறுத்தி விட்டு என்னுடைய ஏற்றுமதியில் மட்டும் கவனம் செலுத்துகிறேன்.
என்னுடைய நோக்கம் தவறு என்பதை சுட்டிக்காட்ட வேண்டும் அதே சமயத்தில் மொத்த தியாகத்தை வெளியே தெரிய வைக்க வேண்டும். எதிர்காலத்தில் அறிவு சார்ந்த தமிழீழ கொள்கைகளை உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் குறித்து மட்டுமல்ல எந்த தலைவர்கள் குறித்தும் அசிங்கமான நிகழ்வுகள் சுட்டிக்காட்டுவது என் நோக்கமல்ல.
இன்றைய ஊடக சுதந்திரத்தில் அத்தனையும் அணைவருக்கும் தெரிந்து தான் உள்ளது. ஆனால் கோர்வையாக உணர்த்துபவர் தான் யாருமில்லை.
அதனால் தான் தராதரம் இல்லாதவர்கள் எல்லோரும் (?)
உணர்வு பூர்வமான எழுத்து ஜோதிஜி!
நன்றி பாரா
எனக்கு நினைவு தெரிந்து இது தான் உங்கள் முதல் விமர்சனம் என்பது சரிதானே?
இத்துடன் இந்த பதிவின் விமர்சனம் முடியும் என்று நம்புகிறேன்.
தொடக்கத்தில் உள்ள அத்தனை விஞ்ஞானிகளும் சொன்ன போது நம்பாத கருத்துகளின் விளைவாக உருவான மகிழ்ச்சி தான் இன்று நம்மை இணைத்துக்கொண்டு இருக்கிறது.
ஆனால் கல்பட்டு மிதிபட்டு உதைபட்டு தான் ? சிலசமயம் இறந்து பிறகு கூட?
என் பாதை மாறாது. சிறப்பு, வெறுப்பு, உண்மை, நெகிழ்வு, ஆச்சரியம், அதிசயம், எதிர்காலம், நிகழ்காலம், இறந்த காலம், நம் முன் உள்ள கடமைகள் அத்தனையும் என் எழுத்தில் வரும். வர வேண்டும்.
உணர்ச்சியில் இருந்து உணர்வுக்கு மாற வேண்டிய காலம் இது.
யாரோ ஒருவர் ஒவ்வொரு மூலையில் இருந்து கொண்டும் இதற்காக முகம் காட்டாமல் முயற்சித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அதில் இதுவும் ஒன்று.
சரித்திரம் என்பது வெறும் தரித்திரமாக இருந்து விடக்கூடாது.
இத்தனை மன்னர்கள் 3000 ஆண்டுகளில் வாழ்ந்து இருந்தாலும் கூட ஏதாவது நல்ல சான்றுகள், நோக்கங்கள் நம்மிடம் வந்து அடைந்து உள்ளதா?
மேலைநாட்டினர் சரித்திரத்தைப் பாருங்கள்.
அம்பானி உண்மை சரித்திரத்தை கூட மேலைநாட்டினர் தான் எழுத வேண்டியதாய் உள்ளது. நாம் அணைவருக்கும் அவர் சரித்திர வியாபார அவதாரம்.
மிகை என்றால் எதிர்கால சந்ததிக்களுக்கு நாமும் நம்முடைய வாழ்க்கையும், பொய்மை நிறைந்த எழுத்துக்களும் ஒரு வகையில் பகை தான்.
எல்லோரையும் போல எழுத ஏன் இந்த தொடர் இடுகை?
மாவீரன் பிரபாகரன் ஒரு புனிதம் என்று ஒரே ஒரு இடுகை போதுமே?
அது அவருடைய வார்த்தைகளிலே சொல்ல வேண்டுமானால் "அனாவசியமாக ஒருவனை உயர்த்துவது மட்டும் தான் தமிழர்களுக்கு தெரிந்தது."
மாற முயற்சிப்போம் நண்பர்களே,
ஒரே ஒரு கருத்துக்களை வைத்து உங்களை நீங்களே சிதைத்துக்கொள்ளாதீர்கள்.
உண்மையான போராட்டங்கள் ஜெயிக்கும். எதிர்காலத்திலாவது?
தவறுகள் திருத்தப்படும் போது.
மிக அருமை நண்பரே!!! .... தொடர்கா உமது பணி...
Post a Comment