Wednesday, November 20, 2019

மதுரை சம்பத் பார்வையில் 5 முதலாளிகளை கதை

Sampath Srinivasan

4 November at 21:58 ·

Kindle E book 5 Muthalaleegalin Kathai Review

புத்தக விமர்சனம்

நண்பர் ஜோதி கணேசன் ஏற்கனவே காரைக்குடியிலிருந்து புலம் பெயர்ந்து திருப்பூர் வந்தது முதல் ஒரு சாதாரண தொழிலாளியாக கால்பதித்து பின்னலாடை நிறுவனத்தில் பொதுமேலாளராக நிலை நின்றது வரை டாலர் நகரம் என்ற புத்தகத்தில் சொல்லி வந்த போது, அந்த தொழில் சார்ந்து பணிகள், இயந்திரங்கள், பணியாளர்கள், உற்பத்தி முதல் விற்பனை வரை என பல விபரங்களை கட்டுரைகளாக சொல்லிச் சென்றிருப்பார்.

அத்தகைய நகரத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி, மீண்டெழுதல், மீண்டும் வளர்ச்சி என காலச்சக்கரமாக சுற்றிக் கொண்டிருக்கிற அந்த தொழிலைப் பற்றி இன்னும் ஆவணப்படுத்த வேண்டிய செய்திகள் ஏராளமாக உள்ளது என்ற அடிப்படையில் தற்போது சில முதலாளிகளை அவர்களின் குணாம்சங்கள், தனிமனித ஒழுக்கங்கள் சார்ந்து நின்று, அதோடு பின்னலாடை தொழில் சார்ந்து மேலும் பல செய்திகளை சுவாரசியமாக அடுக்கிக் கொண்டே சென்றுள்ளார்.




Tuesday, November 19, 2019

Kindle சின்னச் சின்ன விளையாட்டு


அமேசான் போட்டியில் என் வெற்றி தோல்வியை விட யாருடன் மோதுகின்றோம் என்பதனைத் தான் அதிகம் பார்க்கிறேன். இவரை நேற்று தான எனக்குத் தெரியும். இரண்டாம் இடத்தில் நேற்று இருந்தார். மதியம் பார்த்த போது 18 இடத்தில் இருந்தார். ஆனால் இவர் புத்தகத்திற்கு கொடுத்த முன்னுரை மிக கிளாஸ் ஆக இருந்தது. அப்போதே முடிவு செய்தேன். இவரை முழுமையாக உள் வாங்க வேண்டும் என்று. ஸ்டாக் மார்க்கெட் போல நம்நிலை மேலே ஏறுகின்றது. மாலை அதளபாதாளத்தில் சென்று சேர்கிறது.

ஆனாலும் நம் மக்கள் இடைவிடாமல் புனிதப் பணியை செய்து கொண்டே இருக்கின்றார்கள். தொழில் நுட்ப அறிவு அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக இருப்பதால் அவர்கள் களத்தில் புகுந்கு விளையாடுகின்றார்கள். என் புத்தகத்திலும்? இவர் சொல்லும் குற்றச்சாட்டை செய்து இருந்தார்கள். ஆனால் மறைமுகமாக அவர்கள் நல்லது தான் செய்கின்றார்கள் என்றே எடுத்துக் கொண்டேன். திருத்தி வெளியிட்டேன். யார்? என்பது வரைக்கும் என்னால் யூகிக்க முடிந்தது.





Monday, November 18, 2019

பிறந்த ஊர் நினைவுகள் 2

வாழ்ந்த ஊரில்
வசதியான வீடுகள்
உள்ளது.
ஆட்கள் யாருமில்லை.
ஆட்கள் இருக்கின்றார்கள்.
அவர்களுக்கு சொந்தமான
வீடுகள் இல்லை.