Showing posts with label Tamil Nadu CM. Show all posts
Showing posts with label Tamil Nadu CM. Show all posts

Saturday, January 21, 2023

காலம் கழிவுகளைச் சல்லடை போட்டுச் சலித்து விடும்

 கு. காமராஜர், சிஎன், அண்ணாதுரை, மு, கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா

இந்த ஐந்து முதல்வர்களில் தனித்த தலைவனுக்குரிய அடையாளக் குணம் கொண்டவர்களில் முழுமையான ஒரே தலைவர் கு. காமராஜர் மட்டுமே.

சங்க இலக்கியம் முதல் சாமானியன் விரும்பும் பாமர அரசியல் எண்ணம் கொண்டவர்கள் வரைக்கும் விரும்பக்கூடிய தலைவனுக்குரிய அனைத்து தகுதிகளும் அய்யாவிடம் இருந்தது. இவருக்குக் காலம் அனைத்து வாய்ப்புகளையும் வழங்கியது. செய்து காட்டி ஒதுங்கி விட்டார்.

இரண்டாவது இடத்தில் இருப்பவர் சிஎன். அண்ணாதுரை அவர்கள்.