Showing posts with label Fake Journalisam. Show all posts
Showing posts with label Fake Journalisam. Show all posts

Friday, December 16, 2022

யாருக்கும் வெட்கமில்லை.

 @ சிலருக்கு உள்ளரங்கில் நடந்த பல விபரங்கள் தெரியும். ஆனால் அவர்கள் எழுதுவதில்லை. பலரும் எதுவும் தெரியாமல் தொடர்ந்து எழுதுகின்றனர்.

@ வார இதழ்கள், தினசரிகள் எவரும் படிப்பதில்லை. அதிக பட்சம் பேஸ்புக் கூடுதலாக டிவிட்டர் இதற்குள் தான் உலகம் இருக்கின்றது என்று நம்புகின்றார்கள்.

@ இன்றைய சூழலில் நான்கு தமிழ் தினசரிகள் இரண்டு ஆங்கில தினசரிகள் வாரம் நாலைந்து வார இதழ்கள் இத்துடன் சமூக வலைதளங்களில் காணொளி வடிவில் வரக்கூடிய பல்வேறு பேட்டிகள், காட்சிகள், பேச்சுகள் என்று மொத்தமாக (உங்கள் நேரம் இருக்குமா? என்று எனக்குத் தெரியாது) ஒரு சட்டியில் போட்டு அவித்தால் உங்களுக்கு மிஞ்சுவது ஐந்து சதவிகித உண்மை மட்டுமே.