Showing posts with label மக்கள் சக்தி இயக்கம். Show all posts
Showing posts with label மக்கள் சக்தி இயக்கம். Show all posts

Wednesday, January 23, 2013

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி காலமானார்



என்னுடைய பள்ளிப்பருவம் முதல் கல்லூரிப் பருவம வரையிலும் என் வாழ்க்கையில், என் சிந்தனையில் அதிகம் தாக்கத்தை உருவாக்கியவர் மதிப்பிற்குரிய எம்.எஸ் உதயமூர்த்தி அவர்கள் மாரடைப்பால் காலமானார். திரு. உதயமூர்த்தி அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும்.

மக்கள் சக்தி இயக்கம் சிவகங்கை மாவட்ட முக்கியப் பொறுப்பில் இருந்த போது மதுரையில் நடந்த மாநாட்டில் ஒரு மணி நேரம் தனிப்பட்ட உரையாடலுடன் இவர் தொடர்பு உருவானது. 

நல்லவற்றை மட்டும் சிந்தித்த, செயலில் காட்டிய, இளைஞர்களின் வாழ்க்கையில் அக்கறை செலுத்திய, தனது வசதியான அமெரிக்கா வாழ்க்கையை விட்டு வெளியே வந்து தமிழகத்திற்காக எண்ணிய இவரது எண்ணங்கள் அனைத்தும் இங்கிருக்கின்றவர்களின் தந்திர மூளைக்கு முன் எடுபடாமல் போனாலும் இன்று வரையிலும் இவர் மேல் உண்மையான அக்கறையும் அன்பும் மரியாதையும் கொண்ட ஏராளமான இளைஞர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்.

மிகப் பெரிய இழப்பு.


தமிழ் மக்களின் குமுகம் புதிய எழுச்சியுடன் வளர வேண்டும் என்று கருதிய
குமுக ஆர்வலரும் எழுத்தாளருமான எம்.எசு. உதயமூர்த்தி  அவர்கள்
மாரடைப்பால் இன்று காலமானார். 

இவர் எழுதிய தன்முன்னேற்ற உதவிநூல்கள்  புகழ்பெற்றவை.

`எண்ணங்கள்`,`உன்னால் முடியும் தம்பி`, 'நீதான் தம்பி முதலமைச்சர்`.

இவருடைய எழுத்துகளை முதன் முதல் ஆனந்தவிகடனில் படித்தேன், 

ஆனால் இவருடைய நூல்களை முழுவதுமாகப் படிக்கவில்லை. 

மிகவும் நல்ல முயற்சிகளை முன்னெடுத்தார், ஆனால் இன்று நம்மிடையே இருந்து  பிரிந்துவிட்டார். 

அவர் புகழ் வாழ்க! அவருடைய நற்தொண்டை மேலும் பரவச் செய்வோம், 

அது நம் கடமை!

குழும மின் அஞ்சலில் திரு. செல்வகுமார்.

ஆழ்ந்த இரங்கல்கள்.

இவரது முழக்கமான உன்னால் முடியும் தம்பி என்பது (கமலால்) திரைப்படம் ஆனது இவரது  உரைகளின் வெற்றிக்கு அடையாளம். 

தன்னம்பிக்கை யாளர்கள் அவரது எண்ணங்களை மேலும் பரப்புவதே அவரது தொண்டின் தொடர்ச்சிக்கு அடையாளமாக நிலைக்கும்

திருவள்ளுவன் இலக்குவனார் 


மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனர் எம்.எஸ். உதயமூர்த்தியின் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்:

அமெரிக்காவில் ஆற்றிய பணி, வசதியான வாழ்க்கையைத் துறந்து தமிழகத்தின் முன்னேற்றத்துக்குத் தன்னால் இயன்ற தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தவர் எம்.எஸ். உதயமூர்த்தி.

உன்னால் முடியும் தம்பி என்ற அவரது நூல் 1980-களில் தமிழக இளைஞர்களை வெகுவாக ஈர்த்தன. உன் திறமைகளை வளர்த்துக் கொள், பொருளாதாரத்தில் முன்னேறு, சமுதாயத்துக்கு தொண்டாற்று என்பதை வலியுறுத்தி இளைஞர்களிடம் முற்போக்குச் சிந்தனைகளை விதைத்தார்.

எண்ணங்கள், நீதான் தம்பி முதல் அமைச்சர், ஆத்ம தரிசனம் என இவர் எழுதிய 10 நூல்களும் நம்பிக்கை முத்துக்கள். 1988-ல் மக்கள் சக்தி இயக்கத்தை தொடங்கி நதிநீர் இணைப்பு, கிராம முன்னேற்றம், மதுவிலக்கு ஆகியவற்றுக்காகப் பாடுபட்டார். 

அவரது மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மக்கள் சக்தி இயக்கத்தினருக்கும் மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வைகோ தெரிவித்துள்ளார்