Showing posts with label எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன். Show all posts
Showing posts with label எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன். Show all posts

Thursday, December 13, 2012

பிரபல்யம் - உடையும் பிம்பங்கள்


உங்களுக்கு அதியமான் என்பவரைத் தெரியுமா

முன்னொரு காலத்தில் வினவு தளத்தில் பின்னூட்ட களத்தில் தனி ஒருவராக வாள் சுழற்றிக் கொண்டிருப்பார்.  எம்.ஜி.ஆர். நம்பியார் போலவே களம் சூடாகவே இருக்கும்.

எதிரிகள் ஒரு பக்கம் இரண்டு பக்கம் இருந்து தாக்குவதில்லை.  எட்டுப் பக்கமும் வந்து தாக்கிக் கொண்டேயிருப்பார்கள்.  அத்தனை பேர்களும் கருத்தியல் ரீதியான எதிரிகள் மட்டுமே.  ஆனால் நம்ம கதாநாயகன் அதியமான் அசர மாட்டார்.  அவர் இதுவரைக்கும் வெள்ளை மாளிகை தளத்தின் இணைப்பைத் தவிர உலகத்தில் உள்ள அத்தனை லிங்குகளையும் அள்ளித் தெளித்து விடுவார் 

அவர் அள்ளி வழங்கும் லிங்கு எல்லாமே ராக்கம்மா கையைத் தட்டு என்கிற ரகமாக இருக்கும்.  கடினமான கருத்தியல் சார்ந்த பொருளாதார மேதைகள் படிக்க வேண்டிய அறபுதமான தளமாக இருக்கும்.  ஆனால் வலைபதிவில் அதற்கு மதிப்பு இருக்குமா? சொடுக்குவார்களா? மாட்டார்களோ? 

ஆனால் நம்ம கதாநாயகன் கவலைப்படவே மாட்டார். மீறிப் பேசுவர்களின் வாயை அடைக்க அடுத்தடுத்து மேலும் இரண்டு தளங்களை இலவச இணைப்பாக வழங்குவார். பாதிப் பேர்கள் கழன்று கொள்வர். மீறிப் பேசுவர்கள் பாதையை மாற்றுவர். ஆனால் அசர வேண்டுமே?

எது குறித்தும் கவலைப்படுவதில்லை.

அவரின் எழுத்தில் விமர்சனத்தில் சொந்த பெயரில் வலைதளங்களில் உலாவும் வீரம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவரின் ஆங்கில அறிவும் அதைவிட ரொம்ப பிடிக்கும். அவர் இந்நியா நாட்டின் மேல் வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையும் எனக்கு பிடிக்கும். 

ஆனால் உலகம் முன்னேறியது, இந்தியா முன்னேறப்வோவது எப்போதும் நம்ம முதலாளிக்ளால் மட்டுமே என்ற அவரின் கொள்கையை தான் பஞ்சர் கடையில் பார்க்க வேண்டியிருக்கும் என்று அவருடன் காரசாரமாக விவாதிப்பேன். .

ஆனாலும் நாங்கள் இருவரும் ரொம்ப நாளா டிகிரி தோஸ்த்.  அதற்கு மேலும் அவர் வீட்டில் அவரின் வீட்டில் வளர்ந்து கொண்டிருக்கும் இரண்டு பையன்களும் இரட்டையர். அதிலும் கொடுமையுண்டு. ஒருவர் ரஜினி ரசிகராம். மற்றொருவர் கமல் ரசிகராம்.  பாருங்க பசங்கள கூட 30 வருடத்திற்குப் பின்னால் கொண்டு போய் வச்சுக்கிட்டு இவரும் மட்டும் சூர்யா மாதிரி 7வது அறிவு போல யோசிக்கின்றார். ஆனா நம்ம வீட்ல நடிகர் விஜய் கூட வரவர சரியில்லப்பா என்கிறார்கள்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நண்பர் அதியமானைத் தெரியும். எழுத்துக்கு அப்பாற்பட்டு பரஸ்பரம் குடும்ப விசயங்களைக் கூட பேசும் அளவிற்கு நெருக்கமானவர். அதியமானுக்கும் எனக்கு விவாதம் தொடங்கினால் அதில் பாதிக்கும் மேலே நகைச்சுவை காட்சிகளாகவே இருக்கும். ஆனால் அவரின் குரல் எப்போதும் உயர்ந்தே இருக்கும். உலகத்தில் உள்ள கொட்டேஷன் அத்தனையும் மேற்கோள் காட்டி பேசுவார்.  நான் கலாய்த்துக் கொண்டே காலை வாரிவிட்டுக் கொண்டேயிருப்பேன். 

அவர் பேச்சில் முற்றுப்புள்ளியே இருக்காது. எல்லா இடத்திலும் கமா மட்டுமே இருக்கும்.  அவர் கோபத்தை கூட்ட வேண்டுமென்றால் வேலுப்பிள்ளை பிரபாரகன் போல இனி என் வாழ்நாளில் வேறொருவரின் சரித்திரத்தை படிக்க முடியாது என்று சொல்லிவிட்டு நிறுத்தி விடுவேன். ஒரு நூற்றாண்டு கதையை அப்படியே மூச்சு விடாமல் சொல்லி என்னை தாளித்து விடுவார்.

நாங்கள் பேசிக் கொள்வதை எவராவது க்ராஸ் டாக் ல் கேட்டால் ரெண்டு பேரும் அடித்துக் கொள்கிறார்களா? இல்லை பேசிக் கொண்டு இருக்கிறார்களா? என்ற குழப்பம் வந்து விடும் அவரும் மூச்சு விடாமல் பேசிக் கொண்டே போவார். நானும் இடையில் கட்டையை போட்டுக் கொண்டேயிருப்பேன்.  கடைசியில் நீங்க முதலாளியாக இருந்து கொண்டு முதலாளித்துவத்தை குருட்டாம் போக்கில் எதிர்க்கலாமாஈ என்று முடித்து வைப்பார். 

தொழிலுக்கு அப்பாற்பட்டு பல விசயங்களை அவர் மூலம் தான் ஒவ்வொரு முறையும் நான் தெரிந்து கொள்வதுண்டு. வலையுலகில் அறிமுகமான வகையில் நான் பார்த்த சிலரில் அதியமானும் சிறந்த புத்திசாலி தான். சந்தேகமே இல்லை.. இருவரும் ஒரே வயது என்பதால் கூடுதல் உரிமையில் அவரிடம் என் அறிவுக்கு எட்டாத விசயங்களை பல சமயங்களில் கேட்டு கற்றுக் கொண்டு இருக்கின்றேன்.

நானும் இந்தியாவை முன்னேற்ற புத்திசாலிகள் தான் வேண்டும் என்ற கொள்கையில் தான் இருந்தேன்.  மன்மோகன் சிங் ஆட்சிக்கு வந்த பிறகு அவரைச் சுற்றிலும் உள்ள புத்திசாலிகளை அவர்களின் செயல்பாடுகளை பார்த்தபிறகு நாம் இனி வாழ் நாள் முழுக்க முட்டாளாகவே இருந்துவிடலாம் என்று தோன்றுகின்றது
.
நண்பர் அதியமான் மூலம் தான் எனக்கு எழுத்தாளர் ஞாநி நேரிடையாக அறிமுகமானர். அது வரைக்கும் அவரின் எழுத்துக்கு தீவிர வாசகனாக மட்டுமே இருந்துள்ளேன். அதுவரையிலும் ஞாநி அவர்களுடன் தனிப்பட்ட முறையில் எந்த வகையிலும் அவருடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை.  காரணம் பிரபல்யம் என்ற நிலையில் இருப்பவர்களின் பணிச்சூழல் என்பதை அறிந்தே காரணத்தால் பெரும்பாலும் நானே தேடிச் செல்வதில்லை. மின் அஞ்சல் வழியே உறுதிப்படுத்துதல் இல்லாதபட்சத்தில் மறந்து விடுவதுண்டு. 

அதியமான் ஞாநி அவர்கள் திருப்பூர் புத்தக கண்காட்சிக்கு வருவதாக அழைத்துச் சொன்ன போது அவரை உபசரிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அலுவலக நெருக்கடியான சூழ்நிலையில் எங்களின் உரையாடல் மிகச் சுருக்கமாகவே இருந்தது.

சென்னை சென்று இருந்த போது ஞாநி அவர்களின் வீட்டுக்கு நண்பர் ராஜராஜனுடன் சென்றேன். ராஜராஜன் தான் பயந்து கொண்டே வந்தார். காரணம் பிரபல்யம் என்ற வட்டத்திற்குள் இருந்தவர்களை அவர் பார்த்த அனுபவங்கள் அந்த மாதிரி இருந்தது.  ஆனால் நான் தயக்கமில்லாமல் ஞாநி அவர்களின் வீட்டில் அவருடன் உரையாடியது, பழகியது, அந்த பெரிய வீட்டில் அதிக நேரம் இருந்தது, கேணி நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இருந்து நானும் அதியமானும் கட்டிப் புரளாத குறையாக விவாதம் செய்தது என் என் சொந்த வீடு போல உரிமை எடுத்துக் கொண்டு இருந்ததை பார்த்த ராஜராஜனுக்கு ஆச்சரியமாக இருந்தது.  அவரும் மெதுவாக கூட்டத்தில் ஐக்கியமானார்.

ஞாநி அவர்களின் இயல்பான பேச்சு பழக்க வழக்கத்தைப் பார்த்து ராஜராஜன் திரும்பி வரும் போது பல முறை ஆச்சரியமாக கேட்டார்.  

"என்ன இந்த மனுஷன் இந்த அளவுக்கு அநிநியாத்திற்கு நல்லவராக இருக்கின்றாரே?" என்றார்.  

அப்போது நான் அவரிடம் சொன்னது "எண்ணமும் சொல்லும் ஒரேமாதிரியாக இருப்பவர்களின் வாழ்க்கை எப்போதும் இப்படித்தான் எதார்த்தமாக இருக்கும்" என்றேன். இன்று வரையிலும் அதே புரிந்துண்ரவு ஞாநி அவர்களுடன் நீடிக்கின்றது. தைரியமாக தயக்கமின்றி அழைக்கலாம். மின் அஞ்சல் அனுப்பினால் அன்றே பதில் வந்து விடும். ஆலோசனை என்பதை எப்போதும் அளவாக கொடுத்து நமக்கு எதார்த்தத்தை புரியவைப்பார். எழுத்துக்கள் மூலம் மட்டுமல்ல அவர் தனிப்பட்ட வாழ்க்கை கொள்கையிலும் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கின்றேன்.

அன்று சென்னையில் புத்தக கண்காட்சியில் சுப்ரபாரதி மணியன் என்ற பெயர் போட்டுருந்த ஒரு புத்தகத்தை வாங்கி வந்தேன். பெய்ர தண்ணீர் யுத்தம். இவர் வலைதளத்தை திருப்பூர் சேர்தளம் அமைப்பில் பார்த்து இருந்த போதிலும் பெரிதான கவனம் செலுத்தியதில்லை. ஆனால் அந்த புத்தகத்தை ரயிலில் வந்த போதும், வீட்டுக்கும் வந்த போதும் படித்து முடித்த போது வெயிலான் ரமேஷ் அவர்களிடம் இவரின் அலைபேசி எண் வாங்கி ஒரு மாலை வேளையில் அவரை அழைத்த போது எனக்கு அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது.

அந்த புத்தகம் ஒரு சிறுகதை தொகுப்பு. குறிப்பாக இயற்கை சூழ்நிலை, பாதிப்புக்கள் குறித்து பலவித தாக்கங்களை, கேள்விகளை எழுப்பியது. ஆனால் அதற்கு மேலும் 90 ஆம் ஆண்டுகளில் திருப்பூரில் நிலவிய தண்ணீர் பஞ்சத்தினை மிக நுணுக்கமாக அதன் புள்ளிவிபர ஆதாரத்தோடு எழுதியிருந்ததைப் பார்த்து மனதில் வைத்துக் கொண்டே அவரிடம் பேசினேன்.

ஆனால் அவர் இருப்பது தொலை தொடர்பு துறையில் உயர் அதிகாரியாக மத்திய அரசு ஊழியாக இருப்பது தெரிய வந்தது.  

இன்னமும் என்னுள் ஆச்சரியம் அதிகமானது. ஒரு நல்ல தொடர்பு உருவானது. தொடர்ந்து பேசுவதுண்டு. அவரும் அழைப்பார்.

அத்துடன் திருப்பூருக்குள் நடக்கும் இலக்கியம் சார்ந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து குறுஞ்செய்தி மூலம் எனக்கு தெரிவிப்பார். பெரும்பாலும் என் வேலை நேர நெருக்கடியில் போக முடியாது. ஆனாலும் ஒவ்வொருமுறையும் கடமை போல அனுப்பி வைப்பார்.  எப்போதும் போல இன்று மாலை தமயந்தி அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வாங்க என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.

அப்போது தான் திருப்பூரில் டைமைண்ட் திரையரங்கம் அருகே ஒரு இலக்கிய கூட்டத்திற்காக ஒரு நூலக கட்டிடம் இருக்கிறது என்பதே எனக்குத் தெரிய வந்தது. புதிய தலைமுறையில் தற்போது பணிபுரியும் தமயந்தி அவர்களின் புத்தகம் அந்த எளிய விழாவில் அறிமுகம் செய்து வைத்து சுப்ரபாரதிமணியன் பேசினார். அந்த விழாவில் மற்றொரு ஆச்சரியத்தையும் எனக்குத் தந்தார். நினைவுப் பரிசை என் கையில் கொடுத்து தமயந்தி அவர்களிடம் வழங்கச் செய்தார்.

சின்ன உரையாடல், நாலைந்து முறை பேசிய அனுபவம் மட்டுமே, ஆனால் பரஸ்பரம் ஒரு புரிந்துணர்வு இருவரையும் ஒன்று சேர்த்தது. ஆனால் அவரின் இலக்கிய வட்டமும், நாடுகள் கடந்து பல இடங்களில் அவரின் ஆளுமையை கண்ட போது மனதிற்குள் ஒரு சின்ன வியப்பு வந்தது. 

என்னடா இந்த மனுஷன் இம்புட்டு இயல்பாக இருக்கிறாரே? என்று.

தமிழ்ச்செடி விழா என்று முடிவானவுடன் தம்பிகள் இருவரிடமும் இவரைப் பற்றி சொல்லி இவரை அழைப்போம் என்று சொன்னேன்.  

ஆனால் உண்மையிலேயே இவரின் முழு திறமையும் அப்போது கூட எனக்குத் தெரியாது. ஆனால் பசங்க பின்னங்கால் பிடறி தெறிக்க ஓடினார்கள். ஆனால் நான் சமாதானப்படுத்தி நீங்க வேணா பாருங்க. ஆச்சரியப்படுவீங்க என்றேன்.

எப்போதும் போல அலைபேசியில் விழா குறித்த விபரம் சொல்லி ஞாயிற்றுக் கிழமை வர முடியுமா? என்று ஒரு நாள் முன்னதாகத் தான் அழைத்து சொன்னேன்.

"நான் வருகின்றேன். ஆனால் அன்று நெருங்கிய உறவினர் திருமணம் இருக்கிறது. விழா குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிந்தால் அங்கிருந்தபடியே சென்று விடுவேன்" என்றார். ஆனால் விழாவிற்கு வந்தவர் நிகழ்ச்சியை மாற்றிக் கொண்டு விட்டேன் என்று சொல்லி விட்டு விழாவிற்கு முன்பும் பின்பும் பசங்களுடன் ஒன்றாக கலந்து விட்டார். 

விழா முடிந்து பசங்க அனைவருமே "சார் ரொம்ப நல்லவரா இருக்காரு என்று சொல்ல நானும் உங்ககிட்டே சொல்லிக்கிட்டே இருந்தேன்" என்றேன்.

காரணம் அவர் இதுவரை பெற்ற விருதுகளின் பட்டியல்களை பார்த்து விடவும்.


அறிய சாதனை புரிந்த எளிய மனிதர்


30 நூல்கள்
நாவல்கள்
15 சிறுகதைத் தொகுப்புகள்,
குறுநாவல் தொகுப்புகள்
,2 கட்டுரைத் தொகுப்புகள்(வெளிநாட்டுப் பயண அனுபவ நூல் உட்பட) எழுதியுள்ளார்.  

சிறந்த சிறுகதைக்கான இந்திய சனாதிபதி வழங்கிய கதா பரிசு(1993),  
சாயத்திரை என்கின்ற நாவலுக்கான தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு குமுதம் ஏர் இந்தியா நடத்திய இலக்கிய போட்டியில் சிறந்த குறுநாவலுக்கான பரிசு பெற்று இங்கிலாந்து,ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றிருக்கின்றார் 

கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 2002ம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான பரிசு. “பிணங்களின் முகங்கள்என்கின்ற நாவலுக்காக. 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை இலக்கிய பெருமன்றம் வழங்கிய பரிசுகள்
திருப்பூர் தமிழ்ச்சங்க பரிசு
இவருடைய எழுத்துகள் ஆங்கிலம்(சாயத்திரை). இந்தியிலும் மளையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
படைப்புகள் பல பல்கலைக்கழகங்களில் பாடநுல்களாகி உள்ளன. மளையாளம்,தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், மற்றும் ஹங்கேரியன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
கனவு இலக்கிய இதழை 25 வருடமாக நடத்தி வருகிறார்.
குறுப்படங்கள் திருவிழா, சோற்றுப்பொட்டலம், சுமங்கலி அதுமட்டுமின்றி சாகித்ய அகடாமியின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் உள்ளார்

தாய்த் தமிழ் மழலையர் பள்ளி ஒன்று நடத்திக் கொண்டிருப்பதாக கேள்விப்ட்டு அவர் வீட்டுக்குச் சென்றேன்.  அவர் வசிக்கும் பகுதியில் மிக குறைவான கட்டணத்தில் எளிய மக்களின் குழந்தைகளுக்கு மழலையர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரைக்கும் தமிழ்வழி கல்வி பள்ளிக்கூடத்தை பல ஆண்டுகளாக நடத்திக் கொண்டு வருகின்றார். 

நான் பார்த்தவரைக்கும் புதுக்கோட்டை ஞானாலயா நூலகத்தைப் போலவே இவரின் வீடு முழுக்க தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வரும் அரிய தனி இதழ்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. வீடு முழுக்க புத்தகங்கள். ஆனால் அலுவலக வேலை முடிந்து பெரும்பாலும் அத்தனை இதழ்களையும் ஒன்று விடாமல் வாசித்தும் விடுகின்றார். புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள எழுத்தாளர்களிடம் இண்க்கமான தொடர்பில் இருப்பதால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதமும் புதிய புதிய அறிமுகங்கள் அனுபவங்கள் இவருக்கு கிடைத்துக் கொண்டேதான் இருக்கின்றன.

ஆனால் சிலர் வாழ்க்கை எப்போதும் திறந்த புத்தகமாக இருக்கின்றது.  எழுதும் எழுத்துக்கள் போலவே அவர்களின் வாழ்க்கையும் எளிமையாக இருக்கின்றது. அந்த வகையில் ஞாநியும், சுப்ரபாரதிமணியன் அவர்களும் எனக்கு தனிப்பட்ட முறையில் கற்றுத் தரும் ஆசிரியர்களாகவே தெரிகின்றார்கள்.