Showing posts with label ஊடகம். Show all posts
Showing posts with label ஊடகம். Show all posts

Wednesday, January 18, 2023

ஆளுநர் அவர் வேலையைச் செய்யட்டுமே?

 சிறைச் சாலைக்குள் முதல் முறையாக உள்ளே செல்பவர்களுக்கு மிகப் பெரிய பயம் உருவாகும். அதே போல குழப்பம் கலந்த நடுக்கமும் உருவாகும். ஒரு டைலர் இது குறித்துச் சொன்ன போது வியப்பாகவே இருந்தது.

Tuesday, September 14, 2010

நித்தி யின் சக்தியைக் காட்டும் புகைப்படங்கள்

இந்த புகைப்படங்கள் மின் அஞ்சல் வாயிலாக நண்பர் அனுப்பி இதைப் பற்றி எழுதுங்கள் என்று சொல்லியிருந்தார்.  உங்களில் பலருக்கும் இது வந்து சேர்ந்து இருக்கலாம். எனக்கு இந்த புகைப்படங்கள் சிலவற்றை உணர்த்தவும் . உறுத்தவும் செய்கின்றது.  .

ஆன்மீகம் குறித்தோ அல்லது அவசரமான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு கடவுள் மறுப்பாளர்கள் போல் நான் எதையும் சொல்லப் போவதும் இல்லை. 

இறை உணர்வு என்பது அனுபவத்தில் வருவது அல்லது அனுபவித்த பிறகு உருவாவது.  வாழ்வின் கடைசி வரைக்கும் அது போன்ற எண்ணங்கள் வரவில்லை என்று சொல்லக்கூடியவர்கள் உண்மையிலே மேன்மக்கள் தான்.. இன்று வரையிலும் நான் சந்தித்த அத்தனை பேர்களிடத்திலும் ஏதோவொரு  அச்சம் இருப்பதால் நெருக்கடியான சாலையை அடைத்துக் கொண்டுருக்கும் தெரு முனை பிள்ளையார் முதல் உண்டியல் வைத்து பிழைப்பு நடத்து ஆ சாமிகள் வரைக்கும் நன்றாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

கோடீஸ்வர்ரகள், லட்சாதிபதிகள்,அன்றாடங்காய்ச்சிகள் எவரும் விதிவிலக்கல்ல. பேரம் பேசுவது போல் கோவிலுக்குச் சென்று உள்ளே வாதாடிக்கொண்டுருப்பவர்களைக் காட்டிலும் வெளியே காத்து இருக்கும் பிச்சைகாரர்கள் தான் என் பார்வையில் சிறப்பாக தெரிகிறார்கள். நேற்றைய கவலையில்லை.  நாளைய ஏக்கமில்லை.  இன்று?  உள்ளே நுழைபவர்கள் கொடுத்தால் மகாராஜா அவர்களும் எதுவும் கொடுக்காவிட்டால் கிடைக்கும் உருண்டைச் சோறு.  துறவிக்கு அழகு மெலிதல்.  ஆனால் இன்று துறவி வேடம் போட்டவர்கள் தான் சுண்டக் காய்ச்சிய பாலில் சுக ஜீவனம் நடத்திக் கொண்டுருக்கிறார்கள்.

இங்கு ஒவ்வொரு செவ்வாய் வெள்ளியன்றும் தெருவை நாஸ்தி செய்து உடைபடும் சிதறு தேங்காய்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. திருஷ்டி கழிக்கப்பட்டவைகளின் மீது மோதி வழுக்கி இரவில் வேகமாக செல்லும் வாகனங்களில் இருந்து விழுபவர்களின் எண்ணிக்கையும் நின்றபாடில்லை.

ஆனால் நம்பிக்கைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் வித்யாசம் பார்க்கத் தெரியாத கூட்டம் பெருகிக் கொண்டுருப்பது முதல் ஆச்சரியம். ஆனால் கீழே  கூட்டத்தில் இருக்கும் அத்தனை பேர்களும் படிப்பறிவு இல்லாத பாமரன் என்று உங்களால் நினைக்கத் தோன்றுகிறதா?

மேதாவிகள்.  இது தான் ஆச்சர்யமான சோகம்.

கிராமத்து பாமரன் போற வழியில் இருக்கும் வேப்பமரத்தில் இருப்பதாக நம்பிக் கொள்ளும் முனியை நினைத்துக்கொண்டு அடுத்த வேலைக்கு போய்க் கொண்டுருக்கின்றான். அவனுக்கு நித்தியும் தேவையில்லை.  அவர் படங்களில் காட்டும் "சக்தி" யும் தேவையில்லை.,

ஆனால் ???

நித்தியின் சேவையால் பதிவுலகம் களை கட்டியது?  எல்லாவிதமான ஊடகங்களும் ரவுண்டு கட்டி இலவச தரிசனத்தை காட்டி கல்லாவை நிரப்பிக் கொண்டார்கள்.

இவரைப் பாருங்கள்?  என்ன குறை?

இபிகோ,ரஞ்சிதா,லெனின்,ரெய்டு,வெட்கம்,அவமானம், களங்கமான ஆன்மிக உணர்வு, இந்து மதம், மத காப்பாளர்கள் என்னவாயிற்று.?

"காட்டிய" அவருக்கும் வெட்கமில்லை
.
"படத்தை" காட்டியவர்களுக்கும் சொரணையில்லை,
.
மொத்த ஊடக தர்மம் ????. அப்படி ஒன்று இருக்கிறதா என்ன?

இந்த கூட்டத்தில் புதிதாக லெனின் உருவாகாத வரைக்கும் அடுத்த ரஞ்சிதாக் களின் சேவைகள் வெளிவரப்போவதும் இல்லை.  நமக்கும் அடுத்த படுக்கை அறை காட்சியைப் பார்க்க வாய்ப்பு வரப்போவதும் இல்லை.

இவர் தான் உண்மையிலேயே நண்பர் சொன்ன காமம் கடந்த ஆள்.

அப்ப நாமெல்லாம்?

















21 Ft ANANDHA LINGAM PRANA PRATHAKSHA BY PARAMAHAMSA NITHYANANDA @ BANGALORE ON 25.07.10

இதுவும் இந்தியாவில் நடந்து கொண்டுருக்கும் சிகிப்புத்தன்மை உள்ள ஆன்மிக உணர்வு உள்ள படம் தான்.