Thursday, June 08, 2023

(கற்றதும் பெற்றதும் பார்த்ததும்) - 06/06/2023

 

கடந்த மே 30 தொடங்கிய அரசு கலைக்கல்லூரிகளின் கலந்தாய்வு நேற்று ஜூன் 06 இறுதிக்கட்டக் கலந்தாய்வோடு முடிந்தது.

(கற்றதும் பெற்றதும் பார்த்ததும்)




பட்டியல் பிரிவில் வரக்கூடிய மாணவிகள் அனைவரும் பொதுப்பிரிவில் போட்டியிடும் அளவிற்குத் தங்கள் திறமைகளைக் காட்டியுள்ளனர். பெரும்பாலும் 80 மதிப்பெண்கள் என்பதோடு ஒவ்வொரு பாடமும் முடிந்து விடுகின்றது.

தனியார் மக்கள் இப்போது கலைக்கல்லூரிகள் கட்டி சம்பாதிக்கத் தொடங்கி உள்ளனர். 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுதி வெளியே வரும் மாணவர்கள் மாணவியர்களைப் பள்ளி வாசல் அருகே நின்று அவர்கள் அலைபேசி எண் வாங்கத் தனியார் கல்லூரிகள் எல்லாவிதமான முஸ்தீபுகளையும் செய்து சேகரித்து விடுகின்றனர். அப்புறமென்ன சலவை தான். இத்துடன் ஒரு லட்சம் சம்பளம் வாங்கியும் போதாமல் பிசாசு போல அலையும் ஆசிரியர்களை விலைக்கு வாங்கி அவர்களை மூலம் மாணவர்கள் மாணவிகளைத் தங்கள் கல்லூரிக்கு அனுப்ப வைக்கின்றனர். ஒரு தலைக்கு இத்தனை ஆயிரம்.

நான் பலமுறை எழுதியுள்ளேன். பாதிக்குப் பாதி அரசு பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகள் இருக்காது. போதிய ஆசிரியர்கள் இருக்கமாட்டார்கள். நிர்வாகம் செய்யத் தலைமை ஆசிரியர் இருக்க மாட்டார். ஆனால் சில ஆசிரியர்கள் முயற்சியால் அங்கு பயிலும் மாணவர்கள் தங்கள் உழைப்பால் திறமையைக் காட்டி உள்ளனர். தமிழ் இலக்கியத்தின் கடைசி மதிப்பெண் 80. 79 மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்குக்கூட இடம் இல்லை என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?







ஆங்கில இலக்கியம் பாடத்திற்கு கடைசியாக 65 முதல் 70 வரை வந்து நின்றது. இதே போல ஒவ்வொரு பாடத்திலும் திருப்பூர் சுற்றியுள்ள அரசு பள்ளிக்கூட மாணவிகள் எடுத்துள்ள மதிப்பெண்கள் அனைத்தும் ஆச்சரியப்படுத்தியது. இந்த முறை 12 ஆம் வகுப்ப தமிழ்ப்பாடம் கடினமாக இருந்தது. ஆனால் மாணவிகள் சர்வசாதாரணமாக 85 க்கு மேல் எடுத்துள்ளனர். நிச்சயம் முழுமையாக பாடத்தை உள்வாங்கி படிக்காமல் மதிப்பெண்கள் எடுத்து இருக்க வாய்ப்பு இல்லை.

நான் நேற்று முழுக்க ஜெ என்ற பெண்மணியை நினைத்துக் கொண்டே இருந்தேன். காரணம் அவர் இரண்டு விதங்களில் செயல்பட்டுள்ளார் என்றே யூகித்துக் கொண்டேன். ஆண்கள் அனைவரையும் பழிவாங்கக் குடி. செத்துப் போ என்பதாகவும் பெண்களை அனைவருக்கும் படி. போராடி வென்று விடு என்பதாகவும் தான் நினைத்து இருப்பார் போல. ஒவ்வொரு மாணவ மாணவியர்களும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டின் படி தனித்தனி சாதிகள் வரைக்கும் பெற்ற ஆணைகளை அது சார்ந்த காகிதங்களைப் படிக்க வாய்ப்பு அமைந்தது.

பட்டியல் இனத்தில் உள்ள ஒவ்வொரு சாதிக்கும் உரிமை. எவரும் விட்டுப் போகாத அளவுக்கு தெளிவான பிரிவு. பார்க்கப் பார்க்க தலை சுற்றுகின்றது. ஆனால் முதல் தலைமுறை பட்டதாரி பெண்கள் உள்ளே நுழைவதைப் பார்த்து அந்த பெண்மணியை மனதிற்கு ஆராதனை செய்தேன். காரணம் அதனை உடைக்கவே முடியாத அளவுக்கு அரண் கட்டியது மிகப் பெரிய தீர்க்கதரிசி.

ஆனால் கிறுக்கு திருட்டு கொத்தடிமைகள் கருணா கழுவி விட்டார் என்று விருந்தாளிகளுக்கு பிறந்ததுகள் கும்மியடிக்கின்றது.

படித்தால் முன்னேறி விட முடியும் என்று நடுத்தரவர்க்கத்திற்கு கீழே உள்ள அத்தனை பெண்மணிகளும் உறுதியாக நம்புகின்றார்கள். ஆனால் வெளியுலக சிக்கல் நிறைந்த வலைபின்னல்கள் குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை.

இன்றைய சூழலில் பட்டியல் இனத்தில் உள்ள மாணவர்கள் மாணவியர்கள் 80 சதவிகிதம் அரசு பள்ளிக்கூடங்களில் படித்து மேலே வருகின்றார்கள். அவர்களுக்காக ஒதுக்கப்பட்டது என்பதாகவே அரசு பள்ளிக்கூடங்களை மாற்றி வைத்து உள்ளனர். பணம் இருப்பவர்கள் அனைவரும் கௌரவம் பாதுகாக்க தனியார் நோக்கி படையெடுக்கின்றனர்.

ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு மாணவர்களுக்கும் செய்முறை விளக்கத் தேர்வு ஆய்வகங்களில் நேரிடையாக பயற்சி எடுக்க வேண்டும் என்பது பள்ளிக்கல்வித்துறையில் திரு. நந்குமார் இஆப இருந்தவரைக்கும் கொள்கை முடிவாகவே கொண்டு வந்தார். மாணவர்கள் கைபட்டு உடைந்து விட்டால் நாம் பணம் கட்ட வேண்டியிருக்கும் என்று பயந்து கொண்டு எவரையும் ஆய்வகம் பக்கம் அண்ட விடுவதில்லை. நீங்கள் பணம் கட்டத் தேவையில்லை என்று மாற்றினர். கிளர்க் ஆக பணியாற்றுபவர்கள் பள்ளி தொடங்குவதற்கு முன் வர வேண்டும். பள்ளி முடிந்த பின்பு தான் வெளியே செல்ல வேண்டும் என்று ஒரு ஆப்பு சொறுகினார். அவரை தூக்கியாகி விட்டது. கொண்டாடித்தீர்க்கின்றார்கள். அந்த மாணவர்களுடன உரையாடினேன். பட்டியல் இனம் என்ற சலுகையில் ஆசிரியர் பணிக்கு வந்தவர்கள் கூட எதிர்மறையாகத்தான் செயல்படுகின்றார்கள்.

கல்லூரிக்கு வரக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரையும் அமர வைக்க இருக்கை இருந்தால் சமூகநீதியில் தப்பாகிவிடும் போல. எட்டு மணி நேரம் என்ற போது ஆடு மாடு பட்டி தொட்டி போல நடத்துவதைப் பார்த்து எவன் ஆட்சியில் இருக்க வேண்டும்? பழைய கதைகள் நினைவுக்கு வந்தது.



No comments: