முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு ஒரு வெடிகுண்டு ஒன்றை அசால்ட்டாக போட்டு விட்டு வேடிக்கை பார்த்தார்.
அவர் எதிர்பார்த்தது தான் நடந்தது.
மோடி அரசுக்கு எதிராகத்தான் பேசுவேன், எழுதுவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வாழும் அற்ப ஜீவன்கள் பாசி சொன்னதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு பரப்பத் தொடங்கினார்கள்.
ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
பாசி டவிட்டரில் எழுதியதை அப்படியே தந்து விடுகின்றேன்.
In the 8 years of Modi Government, the central government collected Rs 26,51,919 crore as fuel taxes. There are approximately 26 crore families in India. That means from every family the central government has collected, on average, Rs 1,00,000 as fuel tax!
அதாவது இவர் கூற்றுப்படி நான் கடந்த எட்டு வருடங்களில் ஒரு லட்சம் ரூபாய் மத்திய அரசுக்குப் பெட்ரோல் மற்றும் எரிவாயு உருளை வாங்கிய வகையில் வரியாக கொடுத்துள்ளேன் என்கிறார்.
சரியா? தவறா? என்று பின்னால் பார்க்கலாம்.
இந்தியாவில் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல், சமையல் உருளை உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக, பெட்ரோல், டீசல் மூலம் அரசுகள் வசூலிக்கும் வரி பற்றிய காரசாரப் பேச்சுக்களே சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, எரிபொருள் விலை உயர்விற்குக் காங்கிரஸ் ஆட்சியில் வழங்கிய எண்ணெய் கடன் பத்திரங்களை ஓர் காரணமாக ஆளும் பாஜக அரசு கூறி வருகிறது.
1.3 லட்சம் கோடி OIL BOND கதையை சொல்லியே, மோடியின் எட்டாண்டு கால அரசு, எரிபொருள் வரியாக வசூலித்துள்ள தொகை 26 லட்சத்து 51ஆயிரத்து 919 கோடி ரூபாய்!!
இதன் தொடர்ச்சியாக, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்
” கடந்த 8 ஆண்டுகளாக மோடி அரசாங்கத்தில், எரிபொருள் வரியாக ரூ.26,51,919 கோடியை வசூலித்து உள்ளது ” எனப் பதிவிட்டு இருந்தார்.
இந்தியப் பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் “Petroleum Planing & Analysis Cell ” எனும் இணையதளத்தில் 2014 முதல் 2022 வரை பெட்ரோலியப் பொருட்களின் மூலம் ஒவ்வொரு நிதியாண்டில் மத்திய அரசிற்குக் கிடைக்கும் வருவாய் தொகை குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை வைத்து தான் வயிற்றைத் தள்ளிக் கொண்டு கேமராவை நெஞ்சுக்கு மேல் வைத்துக் கொண்டு குஞ்சு நசுங்காமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் யூ டியூப் பொருளாதார வல்லுநர் ஆனந்த சீனிவாசன் அவர் பக்கத்திற்குப் பக்கவாத்தியம் வாசித்தார்.
அவர் சொன்ன தகவல் முக்கியமானது,
என்னவெனில் அவர் சொன்ன தகவல்கள் அனைத்தும் பெட்ரோலியம் அமைச்சக வலைதளத்தில் எடுத்தது என்றார்.
1.1.2022 அன்று வெளியிட்ட தரவுகளின் படி,
2014-15-ல் 1,72,065 கோடி,
2015-16-ல் 2,54,297 கோடி,
2016-17-ல் 3,35,175 கோடி,
2017-18ல் 3,36,163 கோடி,
2018-19ல் 3,48,041 கோடி,
2019-20ல் 3,34,315 கோடி,
2020-21ல் 4,55,069 கோடி,
2021-22ன் முதல் பாதியில் 2,16,794 கோடியும் வசூலாகி உள்ளது.
2021-22 ஆண்டிற்குத் தோராயமாக 4,16,794 கோடி வசூல் என குறிப்பிட்டு மொத்தம் ரூ.26,51,919 கோடி வரி வருவாய் வசூலித்து உள்ளதாக கூறியுள்ளனர்.
ஆனால், இது முழுக்க வரி எனக் கூற இயலாது. இதில், பெட்ரோலியப் பொருட்களின் வருவாயில் Dividend to government/income tax etc உடைய பங்கும் இருக்கிறது.
இதைப் பெட்ரோலியப் பொருட்களின் மூலம் கிடைத்த மொத்த வருமானம் எனக் குறிப்பிடலாம்.
இவற்றில் தனித் தனியாக பிரித்து எவையெல்லாம் என்று விளக்க யாருமில்லை. அதனை விரும்பவும் மாட்டார்கள்.
காரணம் அடுத்த 24 மாதங்களுக்கு எதையாவது பற்ற வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
ஐந்து மாநிலத் தேர்தல் முடியும் வரைக்கும் இந்த கோஷ்டிகள் என்னன்னவோ செய்து பார்த்தார்கள். மக்கள் காறித்துப்பி விட்டார்களே? மனம் வருந்தி அமைதியாக இருக்க முடியுமா? ஜூலை மாதத்துடன் பாசி அய்யா மகாராஷ்டிரா மூலம் பெற்ற ராஜ்ய சபா நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலம் முடிந்து நடுத்தெருவுக்கு வரப் போகின்றாரே? வருத்தம் இருக்கத்தானே செய்யும்?
இதன் தொடர்ச்சியாக மற்ற சில விசயங்களைப் பார்த்து விடலாம்.
பாசி அய்யா சொல்ல மறந்த தகவல்கள்
As always what he forgets is the state fuel tax.
2014 முதல் 2021 வரை மாநிலங்கள் அனைத்தும் வாட் வரி மூலம் பெற்ற தொகை 10.33 லட்சம் கோடி. அதாவது நோகாமல் நோம்பி கொண்டாடிய மகிழ்ச்சி அல்லவா?
Between 2014 & 2021, states collected ₹10.33 Lakh Crores as fuel VAT.
இது தவிர 12,5 லட்சம கோடி தனியாக
Including 2021-22, the state fuel tax will be ₹12.5 Lakh Crore.
ஏன் இவர்கள் நினைத்தால் கடைசியாக மிஞ்சி இருக்கும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எரிபொருட்கள் மூலம் வரும் வருவாய் எங்களுக்குத் தேவையில்லை. மத்திய அரசு வரி விகித்தாலும் மாநில அரசு நாங்கள் விதிக்க மாட்டோம் எனறு முன் உதாரணமாக இருக்கலாமே?
இங்கு தமிழகத்தில் டக்ளஸ் பாண்டியன் இதனைத் தொடங்கி வைக்கலாமே?
மத்திய அரசு வலைதளம் போல இவர்கள் ஏதாவது நம்மைப் போன்றவர்கள் கவனிக்க, கற்றுக் கொள்ள, புரிந்து கொள்ள வலைதளம் வைத்து இருக்கின்றார்களா?
தமிழகம் எங்கும் மனநோயாளிகளை இவர்கள் வளர்த்து வருகின்றார்கள் என்ற வருத்தம் மட்டும் எனக்கு உண்டு.
ஒரு குடும்பம் பல லட்சம் கோடி சம்பாதிக்க, பண வெறி பிடித்து அலைய, இதன் காரணமாக பல கோடி தமிழ்க்குடும்பம் மோடி வெறுப்பு பைத்தியமாக மாற்றிக் கொண்டே இருக்கின்றார்கள்.
எந்த தகுதியும் இல்லாமல்,
எந்த துறை சார்ந்த அறிவும் இல்லாமல் தகுதியில்லாத பதவியில் தரமற்ற மனிதர்கள் சுக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களின் கர்மபலன் என்ன செய்யப் போகின்றது? என்பதனை காண ஆவலுடன் இருக்கின்றேன்.
A O H K K I 5 L Views Total 32
(மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஒவ்வொன்றையும் பார்க்கவும். உங்களுக்கே பாதி புரியும்)
No comments:
Post a Comment