டிசம்பர் 7 அன்று இராமேஸ்வரம் சென்று இருந்தேன். தம்பி விஜயன் திருமணம் டிசம்பர் 8.
சென்ற வருடத்திற்கு முந்தைய வருடம்....
குடும்பத்துடன் இராமேஸ்வரம் சென்ற போது
அன்று தான்
அப்போது அவர் நிறுவன வேலை இழப்பு காரணமாக வீட்டில் இருந்தார். அவர் சொந்த ஊர் இராமேஸ்வரம் என்பதால் எங்களை ஒரு நாள் முழுக்க சீரும் சிறப்புமாக கவனித்து அனுப்பி வைத்தார்.
வாட்ஸ்அப் வாயிலாக
அதே போல இராமேஸ்வரத்திலிருந்து ஒவ்வொரு புதன் கிழமையும் கோவைக்குத் திரும்பி வரும்.
தம்பியின் திருமணம் இதே நாளில் வந்த காரணத்தால் எனக்கு வசதியாக இருந்தது.
எளிமையான சிறப்பான அழகான திருமணம்.
1985 அன்று மேல் நிலை இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருந்த போது இயற்பியல் ஆசிரியர் நாராயணன் சார் எங்களை இராமேஸ்வரம் அழைத்துச் சென்றார். அப்போது பாம்பன் பாலம் கட்டிக் கொண்டு இருந்தார்கள்.
தூண்கள் வேலைகள் மட்டும் நடந்து கொண்டு இருந்தது. அன்றைய சூழலில் இரயில் வழியே மட்டுமே இராமேஸ்வரம் வர முடியும். வேறு வாய்ப்பில்லை. ஆனால் இப்போது ரயில், பாலம் வழியாக என்று அத்துடன் மத்திய அரசு மின்சார ரயில் (இரண்டு வழிகள்) போட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். மூன்று ஷிப்ட் தொடர்ந்து வேலை நடந்து கொண்டு இருக்கின்றது. அதில் பணிபுரியும் வட இந்தியர்களின் உழைப்பை ரயிலில் இருந்தபடியே பார்த்துக் கொண்டே சென்றேன்.
அதிகாலையில் ஆறு மணிக்குச் சென்று சேர்ந்ததும் கடற்கரைப் பகுதியை நின்று நிதானமாக பார்த்து ரசிக்க முடிந்தது.
விஜயன் வீட்டில் கார்த்திக் மற்றும் வெற்றிவேல் என்ற இரண்டு தம்பிகள் அறிமுகம் ஆனார்கள்.
வெற்றி கலையார்வம் மிக்கவர். .
தன் தொழில் வாழ்க்கையில் அதனைப் பயன்படுத்திக் கொண்டு இருப்பவர் என்பதனை உணர்ந்து மகிழ்ச்சியடைந்தேன். வெற்றிவேலுடன் இராமேஸ்வரம் கோவில் உள்ளே முழுமையாக இந்த முறை நிதானமாக பொறுமையாக வலம் வந்தேன்.
4 comments:
மணமக்களுக்கு எங்கள் வாழ்த்துகளும்...
கன்யாகுமாரி, திருச்செந்தூர் - இங்கும் சென்று இருக்கலாம்...
மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
துளசிதரன், கீதா
கடல் படங்கள் அழகுதான் எப்போதுமே. பார்க்கப் பார்க்கத் திகட்டாத இடம் கடல், மலை அருவிகள் நதிகள் போன்றவை.
நின்று நிதானமாக நீங்கள் ரசித்திருக்கிறீர்கள். நல்ல விஷயம்.
கீதா
நன்றி அண்ணா. திருமணத்திற்கு தாங்கள் நேரில் வந்து வாழ்த்தியதில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
Post a Comment