Friday, December 31, 2021

அரசு பள்ளிக்கூட மாணவர்களின் கனவு 7.5 சதவிகிதம் - திமுக ஏன் அழிக்க விரும்புகின்றது

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய மாற்றங்களுக்குப் பின்னால் உள்ள சிறிய புள்ளியைத் தொடங்கி வைத்தவர்களாக என் கண்ணுக்குத் தெரிகின்றார்கள்.  இட ஒதுக்கீடு என்ற விசயத்தில் முறையே 50 சதவிகிதம் கடைசியாக ஜெயலலிதா உருவாக்கிய 69 சதவிகிதம் என்பது இங்கே மிகப் பெரிய சமூக மாறுதல்களை உருவாக்கியது. 



எம்.ஜி.ஆர். - ஜெ. ஜெயலலிதா: 1970 - 2016 Tamil Nadu Political History

இதனை இங்கே குறிப்பிட்டு எழுதக் காரணம் கருணாநிதி போல ஒவ்வொன்றிலும் தனக்கு என்ன ஆதாயம்? என்பதனைப் பார்க்காமல் அந்தப் பிரச்சனை தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கிரிமினல் தனம் செய்யாமல் முறைப்படி சட்டப் பாதுகாப்பு செய்து வைத்த காரணத்தால் இட ஒதுக்கீடு விசயத்தை எவராலும் கை வைக்க முடியவில்லை.

இதைப் போலவே எம்ஜிஆர் தொடங்கி வைத்த கல்வித்துறையில் தனியார் பங்களிப்பு என்பதும் மிகப் பெரிய மாற்றங்களைத் தமிழகத்தில் உருவாக்கியது. மாணவர்கள் கடல் கடந்து செல்ல முக்கிய காரணமாகவும் இருந்தது.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் மிக முக்கியமான மாற்றங்கள்.  இதே போல எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கொண்டு வந்த அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவிகிதம்.  எடப்பாடியாரின் கடைசி ஆண்டின் போது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு மாணவர்கள் சேர்க்கையும் நடந்தது.  கூடுதலாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ஏழை எளிய மாணவர்களுக்கு அரசே மொத்த கல்விக் கட்டணத்தையும் கட்டுவதாக உறுதியும் அளித்து வெற்றிக் கொடி நாட்டியது. அடுத்த ஐந்து வருடங்களில் 400 மருத்துவர்கள் நிச்சயம் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றுவார்கள்.

ஆனால் இதனை அறிமுகம் செய்து வைத்த போது எழுதினேன்.  நிச்சயம் அடுத்து ஆட்சி மாறினால் இதனை அனுமதிக்கமாட்டார்கள் என்றேன்.  அதுவே தான் இப்போது நடக்கத் தொடங்கியுள்ளது.  காரணம் கருணாநிதி ஆட்சி காலத்தில் அதிகமான தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் அதிகமான சாராய உற்பத்தி அனுமதியும் வழங்கப்பட்டது.  எங்கு தொட்டாலும் காசு.

இனி முழுமையான விபரங்களைப் பார்ப்போம்.

மருத்துவ சேர்கையில் அரசு பள்ளி மாணவர்களின் இடஒதுக்கீட்டைக் காவு வாங்குகிறதா ஸ்டாலின் அரசாங்கம்??

நம் அனைவருக்கும் தெரிந்த செய்தி இன்று மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு உள்ளது

அந்த ஒதுக்கீடு June 8, 2020 நீதியரசர் கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீடு அச்சமயம் நீதியரசர் கலையரசன் குழு பரிந்துரை செய்தது அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு. ஆனால் அன்றைய ஆளும் அதிமுக அரசு சில சட்ட சிக்கல்களை மேற்கோள் காட்டி 7.5% இடஒதுக்கீட்டை கொடுத்தது.

உடனடியாக இன்றைய முதல்வர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் “அரசு பள்ளி மாணவர்களை வஞ்சிக்கிறது தமிழக அரசு. உடனடியாக 10% இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்” என்று கண்டன அறிக்கை கொடுக்கிறார், ஒரு படி மேலே போயி 

தேர்தல் நமக்கு அவ்வாய்ப்பை(10% ஆக இட ஒதுக்கீட்டை உயர்த்தும்)  கொடுத்துள்ளது  நம் அதை செய்து முடிப்போம்" என்கிறார் 

ஆதாரம்

https://www.thehindu.com/news/national/tamil-nadu/aiadmk-government-reduced-neet-reservation-to-75-says-stalin/article32943663.ece

இது தொடர்பாக ஸ்டாலின் அவர்கள் பேசியது அன்றைய நாளேடுகளில் 

10% இட ஒதுக்கீட்டை 7.5% ஆகக் குறைத்தது ஏன்?’ - தி.மு.க Vs அ.தி.மு.க மோதல்! 

ஆதாரம்

https://www.vikatan.com/government-and-politics/politics/why-government-reduce-the-10-reservation-to-75-in-medical-education-for-government-school-students

நீதிபதி கலையரசன் பரிந்துரை 10%- ஒதுக்கீட்டை  7.5% ஆக குறைத்தது ஏன்?- முதல்வர் என் மீது பாய்வதை விடுத்து ஆளுநரிடம் உரிமையை கோரட்டும்: ஸ்டாலின் விமர்சனம்

https://www.hindutamil.in/news/tamilnadu/594711-judge-kalaiyarasan-s-recommendation-is-10-why-did-he-reduce-the-quota-to-7-5-let-the-chief-minister-stop-pouring-menu=%22popmenu1_110%22%3Eon-me-and-demand-the-right-from-the-governor-ss=%22err%22

உரிமைகளைப் பறி கொடுக்கும் அ.தி.மு.க. அரசு நீடிக்கப்போவதில்லை - ஸ்டாலின், தி.மு.க. தலைவர்

https://www.youtube.com/watch?v=daY0EPBD2kI&t=4s

அதன் பின்னர் ஸ்டாலின் அவர்கள் அளித்த வாக்குறுதி திமுக தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றது (திமுக ஆட்சி அமைந்தால் மருத்துவ சேர்க்கைகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு 7.5%  இருந்து 10% ஆக உயர்த்தப்படும்)

தேர்தல் முடிந்து திமுக அரசு பொறுப்பேற்றவுடன் பேட்டி அளித்த  பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி 10% ஆக உயர்த்தி சட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறினார் 

"மருத்துவ படிப்பில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% ஒதுக்கீடு" - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல் 

https://www.thanthitv.com//News/TamilNadu/2021/06/09162008/2466695/anbil-mahesh-poyyamozhi-announcement.vpf.vpf

பேட்டி கொடுத்துவிட்டு சட்டமன்றத்துக்குள் சென்று சட்டம்  இயற்றுவதை விட்டு விட்டு உதயநிதி யின் புகழ்பாடிக் கொண்டிருக்கிறார்.

உதயநிதிக்கு செங்கலதிகாரம் பாட தெரிந்த திமுக MLA களுக்கு ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு ஒதுக்கீட்டை அதிகரித்துக் கொடுப்பதாக சொன்ன வாக்குறுதி மறந்து போனது!

அது சிலப்பதிகாரம்.. இது செங்கலதிகாரம்.. உதயநிதியைப் புகழ்ந்து தள்ளிய அமைச்சர்..! | 

Udhayanidhi Stalin  https://www.youtube.com/vword2_27" 

இதைத் தட்டிக்கேட்க வேண்டிய ஊடகங்கள் ஒத்து ஊதிக்கொண்டு இருக்கின்றன "விடியல்" வந்து விட்டதாக!! நாமாவது எளிய மக்களின் குரலாக கேட்போம்.

முதல்வர் ஸ்டாலின்  எப்பொழுது மருத்துவச் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களின் இடஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்த போகிறீர்கள்?

இதோ 2021 மெடிக்கல் அட்மிஷன் ஆரம்பித்து விட்டது!!

2 comments:

Manivannan Kamaraj said...

10 வருடம் ஆட்சியில் இல்லாமல் சம்பாதிக்காமல் இருந்தவர்களிடம் அதாவது திமுகவிடம் குறைந்தபட்ச நேர்மை கூட இருக்காது என்பது என் கருத்து.

Unknown said...

Arumaiyana Pathivu