Thursday, October 14, 2021

ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்பது

உள்ளாட்சித் தேர்தல் என்பது கட்சிகளோடு தொடர்பற்றது. எந்தக் கட்சியும் வேட்பாளர்களை மிரட்ட முடியாது. பணிய வைக்கவும் முடியாது.  வேட்பு மனுத்தாக்கல் செய்ய சென்னை வா? என்று அழைக்க முடியாது. பணம் கட்டு பார்க்கலாம் என்று சம்பாதிக்க முடியாது. இது முழுக்க உண்மையான மக்களுக்கான தேர்தல். அடித்தட்டு மக்களின் ஜனநாயகப் புரட்சி சார்ந்த முன்னெடுப்பு என்று தான் சொல்ல வேண்டும். 

இந்த விசயத்தில் அமரர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு ஒவ்வொரு கிராம வாசிகளும் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.  ஆனால் அவர் ஆசைப்பட்டார். அவர் கட்சிக்காரர்கள் அவர் இருப்பதையே விரும்பவில்லை என்பது தான் கசப்பான உண்மை. ஆனால் மோடி அவர்கள் ஒவ்வொரு மாநிலமும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் தான் நிதி என்று கடிவாளம் போட்டு இன்று மாநில அரசுகள் விரும்பாத இந்தத் தேர்தல் நடக்க காரணமாக இருக்கின்றார் என்பதனை நன்றாக நினைவில் வைத்திருங்கள்.

இது சார்ந்த விதவிதமான காட்சிகளைத்தான் இப்போது நாம் தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பார்த்தோம். தனி நபர்கள், அவர்களின் செல்வாக்கு, செல்வாக்கு, பண பலம், சமூக பலம், சாதியச் சார்பு, மதம் சார்ந்த ஆதரவு இவைகள் தான் முக்கிய இடத்தைப் பிடித்தன.  

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பாரபட்சம் இல்லை. 

மாவட்டச் செயலாளர்கள் முதல் கிளை நகரச் செயலாளர்கள் வரைக்கும் பங்கு பிரித்துப் பக்குவமாக ஆட்களைப் பார்த்து, எதார்த்தம் புரிந்து, நிஜத்தை உணர்ந்து இதில் வேட்பாளராக நிறுத்த உதவி புரிந்தனர். வார்த்தைகளைக் கவனித்துக் கொள்ளுங்கள். எவரும் நீ தான் நிற்க வேண்டும் என்று சொல்லவில்லை. எனக்குத் தகுதி இருக்கிறது. நான் நிற்கிறேன் என்று வந்து சொன்னவர்களை ஒவ்வொரு கட்சியும் அரவணைத்து தங்கள் கட்சி வேட்பாளர்கள் போலக் காட்டிக் கொண்ட தேர்தல் இது.

இந்த வெற்றிக்காக திமுக எப்போதும் போது அதற்குண்டான அனைத்துக் கேவலமான ஜனநாயக நெறிமுறைகளை மீறி பணத்தை இறைத்து, ஆட்களைக் கடத்தி, மிரட்டி, பணிய வைத்து, அரசு வேலைகள் தருகிறேன், 

ஒப்பந்தம் தருகின்றோம் என்று ஒவ்வொரு நபருக்கும் விலை பேசி கடைசியில் ஊடகங்கள் மூலம் ஐந்து மாத ஆட்சிக்கு உண்டான வெற்றி என்பது கட்டியக்காரர்கள் போலக் காட்சி ஊடகங்களில் சிரிப்பு மூட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.

மதிப்பிற்குரிய தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் ஒன்று உண்டு. என் எண்ணப்படி இன்னும் சில தினங்களில் நடந்தேறும் என் உள்மனம் சொன்னாலும் நான் மனதில் நினைப்பதை இங்கே இப்போதே எழுதி வைத்து விடுகின்றேன்.

பாஜக வில் இருப்பவர்கள் மூன்று விதமான நபர்கள்.

1. திமுக வழங்கும் சலுகைக்காகக் கட்சியைக் காவு கொடுப்பவர்கள்.

2. அதிமுக வுடன் பழகிய பாவத்திற்கு அங்காளி பங்காளியாக தொழில் கூட்டாளியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

3. கட்சி வளர்ந்தால் தன் இருப்பு போய் விடும் என்ற எண்ணத்தை எவையெல்லாம் செய்யக்கூடாதோ அதையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் நபர்கள்.

4. கருத்துக்களைப் பரப்ப வேண்டிய இடத்தில் உள்ளவர்கள் பகடிப்படங்களைப் பரப்பும் நபர்களாக இருந்து கொண்டு தாங்கள் செய்யும் பாவங்களை இன்னதென்று அறியாமல் அப்படியே அதன் வழியே பயணித்து கட்சியைக் காட்சிப் பொருளாக மாற்றிக் கொண்டிருக்கும் தகுதியற்ற நபர்கள்.

இந்த நான்கு திசைகளில் உள்ள அசுத்தக் காற்றை உறிஞ்சும் குழல் ஒன்றைத் தயார் செய்யுங்கள் தலைவரே. 

தேவையில்லாதவற்றை  நீக்கினால் போதும். 
சிலை  பார்வைக்குத் தெரியும். 
காரணம் உங்கள் உழைப்பு வீணாகிப் போய் விடக்கூடாது.  
லடாக் முனை கைவசமானது போலக் குமரி முனை உங்கள் உழைப்பு சாத்தியப்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அதற்கு பாரத்தைக் குறையுங்கள். பயணம் இனி இனிதானதாக மாறும்.

வலிமையான பாரதம் மோடியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - PART -1   நிதி ஆலோசகர் திரு. ஷ்யாம் சேகர்
 

 வலிமையான பாரதம் மோடியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - PART -2    நிதி ஆலோசகர் திரு. ஷ்யாம் சேகர்

No comments: