பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே.....
அனைவருக்கும் வணக்கம்.
Listen to "காந்தியை போற்றுவோம்!
கதர் ஆடையை போற்றுவோம்!!'
(BJP Anna Letter-17)" by JothiG
⚓ https://anchor.fm/jothig/episodes/BJP-Anna-Letter-17-e1853up/a-a6kbmj1
காந்தியடிகள் ஆடைகளிலேயே புரட்சிகள் செய்தார் என்று நான் முன்னரே உங்களிடம் கடிதத்தில் தெரிவித்திருந்தேன். நம் நாட்டின் கைத்தறி கதர் துணி ஆகியவற்றை நெய்யும் நெசவாளர்கள் வாழ்வில் மேம்பாடு வந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் முன்னேறும் என்று நம் காந்தியடிகள் ஒரு உறுதியான கருத்தினைக் கொண்டிருந்தார்.
ஆங்கிலேயர்கள் அயல்நாட்டு துணிகளை இங்கே கொண்டு வந்து குறைந்த விலைக்கு விற்று நம் நாட்டின் ஜவுளி துறையையே முடக்கிப் போட்டிருந்தார்கள்.
மாப்ளா கலவரம் 100வது ஆண்டு தரும் பாடங்கள்
ஆங்கிலேயருக்கு எதிராக சாட்டையை கையில் எடுக்காமல் ராட்டையை கையில் எடுத்தவர் நம் தேசத்தந்தை. அன்னிய துணிகளின் மீது இருக்கும் மோகத்தைத் தவிர்ப்போம் என்ற அவரின் முழக்கம் நமக்கு இப்போதும் தேவைப்படுகிறது.
நமக்குத் தேவையான துணிகளை ஏழை நெசவாளர்கள் உருவாக்கி, சிறு சிறு கடைகள் மூலம் விற்பனை செய்கிறார்கள். ஆனால், நம் புதிய தலைமுறையினர் ஆன்லைன் மூலம் அந்நிய துணிகளை வாங்கி குவிக்கின்றனர். இதனால் சிறு, குறு வணிகர்களும், வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதன் தொடர்ச்சியாக அந்தத் துணிகளை தயாரிக்கும் நெசவாளர்களும், பாதிக்கப்படுகிறார்கள். நெசவுத் தொழிலில், ஜவுளித்துறையில் உள்ள அனைவரின் வாழ்வியல் சுழற்சி முறை பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
மீண்டும் மகாத்மா காந்தியடிகளின் அந்நியத் துணிகளை அனுமதிக்க மாட்டோம் என்ற முழக்கத்தைக் கையில் எடுக்க வேண்டிய ஒரு தருணம் உருவாகி விட்டதாகவே நான் நினைக்கிறேன்.
நம் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கும், சுற்றுச்சூழலுக்கும், நம் வாழ்வியல் முறைகளுக்கும் ஏற்ற ஆடை என்பது நாம் பாரம்பரியமாக உடுத்தி வரும் கைத்தறி கதர் ஆடைகள் ஆகும். நாம் மீண்டும் நம் பாரம்பரிய ஆடைகளான கைத்தறி கதர் ஆடைகளை அணியத் தொடங்குவோம்.
சகோதர சகோதரிகளே நாம் நினைத்தால் முடியாதது என்பதே கிடையாது. வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் நாமெல்லாம் ஒரு சபதம் எடுப்போம், நாம் அனைவரும் இனி கைத்தறி கதர் ஆடைகளை மட்டுமே உடுத்துவோம்.
நம் செல்வாக்கும், சொல்வாக்கும் செல்லுபடியாகும் இடங்களிலெல்லாம் கைத்தறி கதர் ஆடைகளைப் பயன்படுத்த வலியுறுத்துவோம்.
இனி கமலாலயத்திற்கு என்னைச் சந்திக்க வரும் அனைவரும் கைத்தறி கதர் ஆடைகளை அணிந்து வாருங்கள். என்னைச் சந்திக்க வரும்போது பரிசுப் பொருட்களையும், மலர் மாலைகளையும், மலர்க் கொத்துகளையும், பளபளக்கும் பொன்னாடைகளையும், கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். நான் இனிமேல் கைத்தறி மற்றும் கதர் மட்டுமே ஏற்றுக் கொள்வேன் என்று உறுதியளிக்கிறேன். நீங்களும் என்னுடன் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறேன்.
எந்தத் தனி மனிதனுக்கும், கட்சிக்கும், நிறுவனத்திற்கும், அமைப்பிற்கும் சொந்தமானதல்ல. கதர் மற்றும் கைத்தறி இந்த நாட்டின் பாரம்பரிய அடையாளம். ஏழை விவசாயி-யின் உழைப்பின் சின்னம்.
கைத்தறி கதர் ஆடைகளை அணிவதன் மூலமும் கைத்தறி கதர் துண்டுகளை அணிவிப்பதன் மூலமும் கண்டிப்பாக இவர்களது வருவாயை வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் நாம் சிறப்பான பங்காற்ற முடியும்.
அக்டோபர் இரண்டாம் தேதி கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு தினம். படிக்காத மேதையாக ஏழைகளின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த கர்மவீரர் காமராஜரின் பெருமைகளை எழுத ஒரு கடிதம் போதாது. பின்னர் அவரின் பெருமைகளை விரிவாகப் பேசுவோம்.
அதற்கு முன்பாக அக்டோபர் இரண்டாம் தேதி ஆடைப் புரட்சியை ஆரம்பித்து வைப்போம்.
அன்புச் சகோதரன்
உங்க "அண்ணா"
No comments:
Post a Comment