திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் செய்த மகத்தான சாதனையாக நான் பார்ப்பது இங்குள்ள தேசிய கட்சியில் கீழே உள்ள அல்லக்கைகள் முதல் மேலே உள்ள நொள்ளக்கைகள் வரைக்கும் தாங்கள் போடும் எலும்புத் துண்டுகளுக்காக வாலாட்டும் ஜீவன்களாக மாற்றி வைத்திருப்பதைச் சொல்லலாம்.
பாஜக கூட விதிவிலக்கல்ல.
முருகன், அண்ணாமலை களம் இறக்கப்பட்ட பின்பு தான் பாஜக ஓரளவுக்கு அதன் இயல்புநிலைக்கே திரும்பியது.
இந்த நிமிடம் வரைக்கும் பாஜக வில் "லூஸ் டாக்" என்பது எந்த இடத்திலும் இல்லை. எஸ்வி சேகர், ராஜாவெல்லாம் எந்தப் பொந்துக்குள் இருக்கின்றார்கள் என்பதே தெரியவில்லை.
பேசியே கெடுத்தவர்களும், வாங்கியே தின்று பழக்கப்பட்டவர்களுமாக இருந்து கட்சியை வைப்புத்தொகைக்கு அஞ்சும் கட்சியாக மாற்றி வைத்திருந்தார்கள்.
முன்பு இருந்த அத்தனை பேர்களும் கிடைத்த வரைக்கும் லாபம் என்று தங்களை வசதியாக்கிக் கொண்டார்களே தவிர கட்சி வளர்ச்சி குறித்து ஒரு துளி கூடக் கவலைப்படவில்லை. நன்றாக ஆங்கிலம் தெரிந்த பீட்டர் அல்போன்ஸ் அவர்களை ஏன் ராகுல் பக்கம் நெருங்கவிடவில்லை என்பதற்கு ஒரே காரணம் அவர் பெயருக்குத்தான் காங்கிரஸ். அன்று முதல் இன்று வரை உண்மையான உடன்பிறப்பு என்கிறார்கள்.
இது போல பலரும் பட்டியலில் வருவார்கள்.
நீ ஒரு துண்டு போட்டால் நான் ஓராயிரம் முறை வாலாட்டுவேன். இப்போது ஆறு துண்டு போட்டு இருக்கிறீர்கள். நான் ஆறாயிரம் முறை ஃபர்பாமெண்ஸ் காட்டுகிறேன் என்று இன்று திருமாவளவன் நிரூபித்துள்ளார்.
அறிவாலயத்தின் உள்ளே இருந்து கொண்டு துரைமுருகன் வருகின்ற அத்தனை பேர்களையையும் கலாய்ப்பது, சீண்டுவது தொடங்கி, பேரம் பேசுகின்றேன் என்ற விதத்தில் அவரவர் தன்மானத்தைச் சீண்டி சிண்டு முடிக்கும் அரிய பணியைச் செய்து கொண்டிருப்பதை மனதில் வைத்துக் கொண்டு தப்பித்தவர் இப்போது தினேஷ் குண்டு ராவ் மட்டுமே.
68 இடங்கள் 41 இடமாக மாறி இப்போது 18 இடங்களில் வந்து நிற்க தனியாக நிற்கலாமா அல்லது வேறு கூட்டணி அமைக்கலாமா? (காதல் மன்னன் கிரகம் உச்சத்தில் இருக்குமா? என்று தெரியவில்லை) என்பதில் காங்கிரஸ் வந்து நிற்கின்றது.
நிச்சயம் கிறிஸ்தவர்களின் ஓட்டு அடிவாங்கும். இஸ்லாமியர்கள் திமுக வை நம்புவது போல கிறிஸ்துவம் காங்கிரஸ் கட்சியைத் தான் தங்கள் கட்சியாக இன்று வரையிலும் நம்புகின்றார்கள் என்பது தான் எதார்த்தம்.
அறுபது வயதுக்கு மேற்பட்ட காங்கிரஸ் பாரம்பரியம் விரும்பும் சீனியர் சிட்டிசன்களின் ஓட்டு பிரியும். ராகுல் இப்போது பரவலாகக் கவனம் பெற்றுள்ளார். முதல் தலைமுறை வாக்கு கொஞ்சம் சேரும். இவையெல்லாம் இப்போது மாறும் சூழ்நிலை.
இங்குள்ள நான்கு கால் பிராணிகளை நம்ப முடியாது என்று ராகுல் நேரிடையாக கர்நாடகாவைச் சேர்ந்த தினேஷ் குண்டு ராவ் இடம் பொறுப்பு வழங்கப்பட அழகிரி திருச்சி பக்கம் ஓடிவிட்டார். உள்ளூர் தலைகள் என்றால் துரைமுருகன் ஒரு காட்டு காட்டியிருப்பார். இது அதர் ஸ்டேட். அதர் லாங்குவேஜ். கூடவே சேட்டன் உம்மன்சாண்டி வேறு இருப்பதால் வேறு வழியில் சீண்டிய போதும் பேரம் மசியவில்லை. நாளை மூன்றாவது பேச்சு வார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
கம்யூ தோழர்கள் அடக்க முடியாத கோபத்தில் வாகனத்தில் ஏறி விரைந்து பறந்து விட்டனர்.
திருட்டு வங்கியை வழிக்கு கொண்டு வந்தவரின் கதை
ஆனால் திருமா விலாவாரியாகத் தியாகத்தலைவி அரசியலை விட்டு சென்று சென்றதற்குக் காரணம் பாஜக என்று நீட்டி முழங்குவதைப் பார்க்கும் போது அவர் எந்தக் காலத்திலும் அவரை நம்பியுள்ள சமூகத்திற்கு எந்த நல்லதும் செய்ய வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகவே தெரிகின்றது.
2 comments:
முதல்வராவதற்கோ, ஆட்சியைப் பிடிப்பதற்காகவோ கட்சி ஆரம்பிப்பது ஒருவகை. அதுவே மக்கள் சேவை எல்லாம் இல்லை என்பது காலப்போக்கில் கண் கூடானது. இப்போதெல்லாம் கட்சி ஆரம்பித்து கொஞ்சம் ஓட்டைப் பிரிக்க முடிந்தால் பெட்டி பெட்டி யாக பணம் பார்க்கலாம் என்று தெரிந்து கொண்டார்கள். நல்ல பிஸினஸ்.
100 கோடி ஒரே சமயத்தில் பெறுவது என்பது நமக்கு எத்தனை ஜென்மங்கள் வேண்டும். அதுவும் எவ்வித உழைப்பும் இல்லாமல்?
Post a Comment